கோபுரக் கலசம்- ஊரைக் காக்கும் இடிதாங்கி.
பிரமிப்பூட்டும் சித்தர்களின் விஞ்ஞானம் !!!
மன்னராட்சிக் காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது எனத் தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
------------------------------------------------------------------------------
TOWER ENERGY RECEPTORS }O{ கோபுரக் கலசங்கள் :
------------------------------------------------------------------------------
கோயில் கோபுரங்களும் - அதன் மேல் இருக்கும் கலசங்களும் - ஊரைக் காக்கும் இடிதாங்கிகளும், அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மீகமும் !!!!!
-------------------------------------------
கலசத்தில் இருப்பது என்ன ?
-------------------------------------------
கோபுரக் கலசங்கள் சக்தி வாய்ந்தவை. மனித உடலுக்கு தலை உச்சி போன்று கோவிலுக்கு கோபுரக் கலசங்கள் உள்ளன. இந்தக் கலசங்களில் வரகரிசியை போட்டு வைத்திருப்பார்கள். அது உள்ளே இருக்கும் நவ தானியங்களையும், கட்டைகளையும் கெடாமல் பாதுகாக்கும். கலசங்களில் சுற்றிக் கட்டப்படும் நூல் நமது நாடி, நரம்புகளை பிரதிபலிக்கிறது.
முக்கிய பூஜைகளின் போது தர்ப்பைப் புல் பயன்படுத்தவார்கள். தர்ப்பைப் புல்களுக்கு கிரகணத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிடும் ஆற்றல் உண்டு. எனவே தான் கோவில் விழாக்களில் தவறாமல் தர்ப்பைப் புல் பயன்படுத்தப்படுகிறது.
-------------
கோபுரம் :
-------------
மழை, வெய்யில் உட்பட இயற்கைச் சீற்றங்களில் இருந்து விக்ரகங்கள் பாதிக்கபடாமல் இருக்க வேண்டும். அதற்காக அழகிய விமானங்களை அமைத்தனர். விமானத்தில் கலசங்கள் வைக்கப்பட்டன .இந்த கலசங்கள் இடிதாங்கியாக செய்யல பட்டு ஆலயத்தைப் பாதுகாக்கின்றன.
தொலைவில் இருந்தே கோயில் இருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே மிக உயரமாக கோபுரங்களைக் கட்டினர்.கோபுரத்தைத் தரிசித்தாலே கோயிலுக்குச் சென்று இறைவனை வழிப்பட்டதற்கு சமம் என்று கூறி கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பழமொழியை உண்டாக்கி வைத்தனர் .
கோயிலுக்கு உள்ளே சென்று தரிசிக்க முடியாதவர்கள் கூட கோபுரத்தைத் தரிசித்தாலே போதும்.கடவுளைத் தரிசித்த மன நிறைவு ஏற்படுவதோடு ,கடவுள் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது உறுதி .
கோபுரத்தில் நியமப்படி ஒவ்வொரு தெய்வ பொம்மையும் அதனதன் இருப்பிடத்தில் அமைக்கப்படும் .கோபுரத்தில் எல்லா உருவங்களும் அமைக்கபட்டிருப்பதில் தத்துவ விளக்கங்கள் உள்ளன .இவ்வுலகத்தில் எல்லா உயிரினங்களுக்கும் இடமுண்டு என்பதே அத்தத்துவ விளக்கம்.
எல்லா உயிரினங்களிலும் இறைவன் இருக்கிறான் .ஈ ,எறும்பு, பறவைகள், விலங்குகள் ஆகியவற்றில் கூட இறைவன் இருக்கிறான்.இதை உணர்த்துவதற்காகவே கோபுரத்தில் அவற்றுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது .
ராஜகோபுரத்தின் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படை என்னில் அமைந்திருக்கும்.மூன்று ,ஐந்து ,ஏழு ,ஒன்பது , பதினொன்று இதே போல் அதிகம் அமைந்துள்ள வாயில்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பெருகிக் கொண்டே போகும்.அத்தகைய வாயில்கள்,த்துவத்திருக்கு விளக்கமாக அமைந்துள்ளன.மூன்று வாயில்கள் உள்ளவிடத்து ஜாக்கிரத, சொப்பன,சுஷுப்தி என்னும் மூன்று அவஸ்தைகளை அவை குறிக்கின்றன.ஐந்து வாயில்கள் உள்ளவிடத்து ஐம்பொறிகளை அவை குறிக்கின்றன.ஏழு வாயில்கள் உள்ளவிடத்து மனம்,புத்தி என்னும் இன்னும் இரண்டு தத்துவங்கள் சேர்க்கபடுகின்றன.ஒன்பது வாயில்கள் உள்ளவிடத்து சித்தம்,அகங்காரம் என்னும் இன்னும் இரண்டு தத்துவங்கள் சேர்க்கபடுகின்றன.இது போல நம்முடைய அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்குக் கோபுர வாயில்கள் சின்னங்களாக அமைந்திருக்கின்றன.
தமிழக கோவில்களில் உள்ள கலசங்களில் ஒரு சில கலசங்கள் இரிடியம் என்னும் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. அரிய மற்றும் மிக மிக அதிக விலைமதிப்புமிக்க இரிடியம் ஒரு அரிதான உலோகம் மிக மிக வலிமையானது. இரிடியம் ராக்கெட் செய்ய பயன்படுகிறது. இரிடியம் எவ்வளவு சூடு., தாக்குதல்களையும் இலகுவாக தாங்கும். எனவேதான் இரிடியம் மூலம் ராக்கெட் செய்யப்படுகிறது..
அவைகளும் சூரியக்குடும்பத்தையே இன்று தாண்டி தங்களது பயணத்தை தொடர்கிறது..( ஓயேஜர் என்ற பெயரில் அமெரிக்க ராக்கெட் )
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!
அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.