Saturday, September 22, 2018

எலி மிச்சம் வைத்த ஒரே பழம் – எலுமிச்சை.

எலுமிச்சை ஒரு தேவகனி. இந்த பழத்தின் பெயர் காரணமே ஒரு அற்புதமாகும்.
Ayurveda and Siddha Medicine ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
எலி மிச்சம் வைத்த ஒரே பழம் – எலுமிச்சை. 



அதாவது, எலுமிச்சையின் மணம் எலிக்கு ஆகாது. மீதி உள்ள எல்லா பழங்களையும் எலி கடித்து குதறி விடும், எலுமிச்சை தவிர்த்து. பெயரிலேயே இத்தனை சக்தி வாய்ந்த இந்த பழம் ஒரு அற்புதம். புளிப்பு சுவை உடைய எளிமிச்சை சிட்ரஸ் குடும்ப காய் கனி வகைகளை சேர்ந்தது.

எலுமிச்சை பல்வேறு வகையில் மருந்தாக வேலை செய்கிறது. அதனை சிறு குறிப்புகள் மூலம் இப்போது பார்க்கலாம்.

வாந்தி மற்றும் வயிற்றுப்பிரட்டலுக்கு சிறந்த கைமருந்து எலுமிச்சை. நல்ல வாசமுள்ள எலுமிச்சையை முகர்ந்தாலே குமட்டுல் நின்று விடும்.

வயிற்று பொருமல், வாயு தொல்லை, அஜீரணம், உப்பசம் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகிய தொந்தரவுகளுக்கு எலுமிச்சை சிறந்த மருந்தாகும். ஒரு டம்ப்ளர் எலுமிச்சை சாறு அருந்தினால் போதும். வயிறு தொடர்பான தொந்தரவுகள் யாவும் காணாமல் போகும்.

எலுமிச்சை சாருடன் சிறிது தேன் கலந்து வெது வெதுப்பான நீரை காலை வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் பருமன் குறையும்.

உடலின் அமிலத்தன்மையும் காரத்தன்மையும் எலுமிச்சை சமன் செய்கிறது.

எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஒரு பழம். இதனால் சருமம் மேம்படும். மேலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலுமிச்சை சாறினை முகத்தில் தேய்த்தால் கரும்புள்ளிகள் மறையும்.

கிருமித்தொற்றில் இருந்து பெரிதும் காக்க எலுமிச்சை உதவுகிறது.

உடல் சூடு சார்ந்த எல்லா தொந்தரவுகளுக்கு எலுமிச்சை சிறந்த மருந்தாகும். உதரணாமாக, வேட்டை, நீர்ச் சத்து குறைபாடு, கண் நோய், போன்றவை.

எலுமிச்சை பழம் சாறினை தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும் மற்றிம் பித்தம் குறையும்.
ரத்தக் கொதிப்பை தடுப்பதிலும், சமன் படுத்துவதிலும் எலுமிச்சை பெரும் பங்கு வகிக்கிறது.

எலுமிச்சை குளிர்ச்சியானது, தனமும் உணவில் சேர்த்தாலோ அல்லது சாறு பருகினாலோ சளி மற்றும் காய்ச்சல் வரும் என்ற தவறான எண்ணத்தை மறந்து விடுங்கள்.

சிறு குறிப்பு: எலுமிச்சை சாறு அருந்தும் போது சிறிது உப்பு சேர்த்து கொண்டால் சுவை கூடும்.




Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html







Posted By Nathan Surya

Friday, September 21, 2018

திருமந்திரம்

தமிழ்மறை திருமந்திரம் கற்போம்



வேற்றுமையை ஒழிப்போம்!
ஒற்றுமையை வளர்ப்போம்!

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.'

- ஆசான் திருமூலர்.

பிறப்பால் எவரும் பிராமணர் ஆகமுடியாது.

எவ்வுயிரையும் தன்னுயிர் போலப் போற்றி, தன் எண்ணம், தான் செய்கின்ற செயல் எதிலும் அறவழியைக் கடைப்பிடைத்து, இறையை அடைந்த ஞானிகள் / சித்தர்களே மெஞ்ஞான அந்தணர் ஆவர். இன்று மனிதரில் சிறு கூட்டம் பிற மனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறிச் சில வேத, ஆகமங்களைப் பொருளுணராது கற்றுத் தம்மைத் தாமே அந்தணர் என்றும், உயர்குலத்தோர் என்றும் பொய்யுரைக்கின்றனர். இவர்கள் முத்திநெறி அறவே அறியாத மூர்க்கர் கூட்டம் ஆகும். இவர்கள் சொல்லும், செயலும் படுபாதகம் ஆகும்.

"பேர் கொண்ட பார்ப்பான்
பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப்
பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப்
பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி
தெரிந்து உரைத்தானே."

- ஆசான் திருமூலர் -

தம் பெயரில் மட்டுமே(பிறப்பால்) பார்ப்பான்/ பிராமணன்/ அந்தணன் என்போர் எம்பிரானை அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள். அப்படி அவர்கள் செய்தால் அந்த நாட்டுக்கும், அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும், நாட்டு மக்களுக்கும் பொல்லாத வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை தன்னாசானான சித்தபெருமான் நந்தீசர் உரைத்ததாகக் கூறுகிறார் ஆசான் திருமூலர். இதன் மூலம் ஆசான் திருமூலர் சொல்வது பிறப்பால் / பெயரால் யாரும் இறையை அர்ச்சிக்கும் தகுதியைப் பெறமாட்டார். மெய்யாக அறவழியில் நிற்கும் அனைவருக்கும் இறையை அர்ச்சிக்கும்(பூசிக்கும்) தகுதியுண்டு. அவர்களே ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலக்க வல்ல 'அறவாழி அந்தணர்' (சித்தர்/ஞானிகள்) ஆவார்கள்.

இங்கு யாருமே பிராமணர் கிடையாது. பிறப்பால் யாரும் பிராமணர் ஆகமுடியாது

"சத்தியம் இன்றித்
தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும்
உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப்
பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர்
பிராமணர் தாம்அன்றே. "

-ஆசான் திருமூலர்-

சத்தியம், ஞானம், இறையுணர்வு, இறையன்பு எதுவுமே இருக்காது. ஆனால், தம்மைத் தாமே உயர்ந்த பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் ஆசான் திருமூலர். இது பிறப்பில் தாமே பிராமணர் என்றும், வார்த்தையில் மட்டும் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகக் கூறிச் சகமனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறி உலகை ஏமாற்றும் பித்தேறிய மூடருக்காகக் கூறப்பட்டுள்ளது.

பிறவாநெறி (சகாக்கல்வி / மரணமில்லாப் பெருவாழ்வு) அறிந்த ஆசான் திருமூலரின் குருவாகிய ஆசான் நந்தீசர் போன்ற, ஆதியாகிய இறையுடன் இரண்டறக் கலந்த ஞானிகள்/ சித்தர்களே 'அறவாழி அந்தணர்கள்' ஆவார்கள்.

"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."

-ஆசான் திருமூலர்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
-ஆசான் திருவள்ளுவர்

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு அறவழி வாழ்பவர் எவரோ, அவரே அந்தணர்.

யாரையும் நோகடிப்பதல்ல எமது நோக்கம். தமிழர் வேதங்களான திருமந்திரம், திருக்குறள், திருவாசகம், திருவருட்பா போன்ற எண்ணற்ற தமிழ்மறை நூல்களில் மனிதரில் எந்தவிதப் பிரிவினையும் பிறப்பால் இருப்பதாக இல்லை. உண்மையை உரக்கச் சொல்வதே நம் பணி.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" 

- ஆசான் திருமூலர்.

வேற்றுமையை ஒழிப்போம்!
ஒற்றுமையை வளர்ப்போம்!

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.'

- ஆசான் திருமூலர்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் என்றார். எல்லா தெய்வத்தையும், ஒன்றாக பார்க்கக்கூடிய அறிவை உனக்கு தலைவன் தந்திருக்கின்றார்.

தலைவனை அறிமுகப்படுத்த வேண்டும். தலைவன் ஆசான் ஞானபண்டிதன்தான் என்றும், ஒருமுறை ஆசானை நினைத்தாலே போதும், செய்த பாவங்களையெல்லாம் பொடியாக்கி, வாழ்க்கையில் வெற்றி பெறச்செய்வான்.

ஆன்மா ஆக்கம் பெற ஞானபண்டிதன் சுப்பிரமணியர் நாமத்தை ஜெபிப்போம். ஒருவன் பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தினால் மட்டுமே ஞானிகள் திருவடிகளை பற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு கோடி தவம் செய்த மக்கள்தான் ஆசான் அகத்தீசரை வணங்கி ஆசி பெறலாம். ஞானிகளை நினைக்க முடியும். இல்லையென்றால் அறிய முடியாது.

மரணமில்லாப்பெருவாழ்வை தரக்கூடிய ஆசான் ஞானபண்டிதனை நீ அறிந்திருந்தாலும், அவர்களுக்கு அது புரியக்கூடிய காலம் வரவில்லை. அந்த வாய்ப்பு அவனுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஆசான் திருமூலர் திருவடிகள் போற்றி.


Contact Book Stall: +919095633344




Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

Wednesday, September 19, 2018

பிறவிப்பிணியை வென்ற மகான் திருவள்ளுவர்.



பிறவிப்பிணியை வென்ற மகான் திருவள்ளுவர்.
சித்தர்கள் The Ascended Masters

அகத்தியச்சித்தர் ஜீவநாடி மூலம் கூறிய திருவள்ளுவரைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்:

பொதுவாக திருவள்ளுவர் என்றாலே, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மிகப்பெரும் புலவர் என்றும், உலக மக்கள் அனைவரும் நலம்பெற, வாழ்க்கைக்கு தேவையான எல்லா கருத்துக்களை கொண்ட நூலான திருக்குறளை உருவாக்கியவர் என்றும்தான் இதுவரை இவரைப்பற்றி நாம் அறிந்தது... என்ன நான் சொல்வது சரிதானே..?

இப்ப இங்க நாங்க சொல்லவந்த திடுக்கிடும் தகவல்கள் என்னன்னா? திருவள்ளுவர் அய்யா இன்னும் சாகவில்லை என்பதுதான்... ஆம் அவரும் ஆசான் முருகப்பெருமான், ஆசான் அகத்தியர் போன்று மரணமில்லா பெருவாழ்வு பெற்ற ஒன்பது கோடிப் பேர்களுள் ஒருவர்தான். நம் உடம்பில் உயிர் என்று இருக்கும் இயற்கை அன்னையை கண்டவர்தான் என்கிறார் அகத்தியச் சித்தர்.

மற்ற மற்ற உயிரினமாக பிறந்த துன்பத்தையெல்லாம் நீக்கி, மரணத்தை வெல்வதற்கே மனிதன் என்ற உயிரினம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை அறிந்து, ஆசான் அகத்தியரின் திருவடியை உருகி தியானித்து, ஞானத் தலைவன் ஆசான் முருகப்பெருமானால் வாசி நடத்தப்பட்டு அதில் வெற்றி கண்டவரே ஆசான் திருவள்ளுவர் ஆவார்.

அப்படி, நாமும் அவரைபோன்றே மரணத்தை வெல்ல உருவாக்கப்பட்டதே திருக்குறள் ஆகும். தன் தேகத்தை ஒளி உடம்பாக மாற்றுவதற்கு முன், காலையில் ஆரம்பித்து மாலையில் முடிக்கப்பட்டதுதான், நாம் இப்பொழுது பள்ளியில் பயிலும் 1330 திருக்குறள்கள் ஆகும்.

மனிதன் மரணமில்லா பெருவாழ்வு அடைய, மேலும் திருக்குறளின் உண்மை அறிய ஆசான் திருவள்ளுவரின் திருவடியை அழைத்து அய்யா நீர் அறிந்த உண்மையை அடியேன் நானும் அறியவேண்டும் என அழைத்தாலே போதும்.

“ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி...”

- Thiruloga Sundari
சித்தர் அறிவியல் Wisdom of Siththars

****feedback****
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை..!!!

முற்றுப்பெற்ற மகான் திருவள்ளுவப் பெருந்தகை கூறுகிறார் நாம் எதற்காவது ஆசைப்பட வேண்டும் என்றால் அது மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து வாழும் பிறப்பு-இறப்பு சக்கர நிலையிலிருந்து விலகிப் பிறவாநிலை கிடைக்கவே ஆசைப்பட வேண்டும். அதற்காக முற்றுப்பெற்றவர்களை (இறைநிலை அடைந்தோரை) வேண்டுதல் செய்ய வேண்டும்.

ஏனெனில், முற்றுப்பெற்ற ஞானிகளான ஆசான் திருவள்ளுவப் பெருமான் போன்றோரின் கருத்துப்படி பிறப்பே நரகம். இந்தப் பிறவியை முற்றுப்பெற்ற சித்தபெருமக்கள் வழிகாட்டலின் கீழ் வெல்வதே சொர்க்கம். அதுவே பேரறிவு, பேரின்பம், வீடு பேறடைதல், மோட்சம், ஆன்ம விடுதலை, இறையுடன் இரண்டறக் கலத்தல், ஜோதி உடம்பு பெறல், மரணமிலாப் பெருவாழ்வு எனப் பலவிதமாக அழைக்கப்படுகிறது.

பிறவிப்பிணியை வென்ற மாபெரும் தலைவன், பொதுமறை தந்த அண்ணல் ஆசான் திருவள்ளுவப்பெருமானை வேண்டிப் பிறப்பென்னும் நரகத்தை வெல்வோம்.

“பிறப்பெனும் பேதமை நீங்கச் சிறபென்னும்
செம்பொருள் காண்ப தறிவு”

-ஆசான் திருவள்ளுவர்.

ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி.

சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவார், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.

(எ.கா)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)


திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூஸ்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூஸ்திரம் - 30
11. வாத சூஸ்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51


சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்

தமிழ் எண்கள்

* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம்
10000000000000000000 = பரார்த்தம்
100000000000000000000 = பூரியம்
1000000000000000000000 = முக்கோடி
10000000000000000000000 = மகாயுகம்

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

-Nàthàn கண்ணன் Suryà
2011
ஓங்காரக்குடில் Ongarakudil

நன்றி 

Nàthàn கண்ணன் Suryà
20/06/2014
ஓங்காரக்குடில் Ongarakudil




Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html







Posted By Nathan Surya

Tuesday, September 18, 2018

தமிழ்ச்சித்தர்கள் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்.

நம் முன்னோர்களான தமிழ்ச்சித்தர்கள் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.

சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்களான தமிழ்ச்சித்தர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - புத்தாண்டு.
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

நமது முன்னோர்களான தமிழ்ச்சித்தர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.





Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

சித்தர்கள் வகுத்த அறிவியல் உண்மை !

சித்தர்கள் வகுத்த அறிவியல் உண்மை !

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.
குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.


ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுரமீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..




Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

Monday, September 17, 2018

முருகப்பெருமான் அருள்வாக்கு

முருகப்பெருமான் துணை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

தற்காலம் ஆன்மீகவாதிகளின் செயல்பாடுகளும் அறிவுரை ஆசியும்
மகான் சுப்பிரமணியர் நடைமுறை அறிவுரை ஆசி நூல்


அருட்சுவடி பாடல்களும் விளக்கமும்

12.09.2018, புதன்கிழமை


அருட்கனலை கொண்டிட்ட அரங்கனுக்கு
ஆறுமுகன் வாக்குதான் ஆசியோடு
ஒருமனதாய் அரங்கன் வாழ நடைமுறை ஆசி
உலகத்திற்கும் மக்களுக்கும் ஆசி சொல்வேன்


சொல்லுகிறேன் கலியுகத்தில் மெய் ஆன்மீகம்
சொல்லும்படி இல்லையப்பா பிழையே கண்டேன்
நல்லதொரு ஞானம் சொல்லா பிழைகளை சொல்லி
நாள்நாளும் பிழை செய்து வாழ்கின்றார்கள்

வாழ்கின்றோர் மத்தியில் வந்துதித்த
வள்ளல் நீ அரங்கன் நீ வாழிய என்றேன்
ஊழ்வினையால் உழன்றிட்ட மக்களுக்கு
உன்னுடைய வழிகாட்டல் தெளிவு தந்து

தந்ததப்பா ஞானத்தில் நிலைத்திருக்க
தரணியிலே குரு யார் என அறிய வேண்டும்
சுந்திரனே குருவால் மட்டும் தெய்வத்தை காணலாம்
சுத்த ஞானம் குருவால் மட்டும் காணலாகும்

காணவே கு என்றால் வெளிச்சம் ஆகும்
கண்டுரைக்க ரு என்றால் அறிவும் ஆகும்
காணுவாய் குருவைக் கண்டால் அறிவும் ஜோதி
காணாவிட்டால் அவனுக்கு முக்தி ஏது?

முக்தி பெற வழி சொல்வான் முனை திறப்பான்
மூர்க்கத்தை அழித்துதான் வாழ வைப்பான்
சக்திதனை தந்திடுவான் சன்மார்க்கம் தந்திடுவான்
சாகாக்கலை என்னவென்று எடுத்துரைப்பான்

உரைத்திடுவான் மரணமற்ற வாழ்வு தன்னை
உரைத்திடுவான் சிவத்தினை அறிவதற்கு
உரைத்திடுவான் சிவத்தோடு சிவமுமாக
உரைத்திடுவான் சிவநிலையை அடையும் மார்க்கம்

மார்க்கத்தை சொல்பவனே மகா குருவும் ஆகும்
மாந்தர்களும் குருபதத்தை பிடிக்க வேண்டும்
சார்ந்திருத்தல் அவசியமே குருஅடி தன்னை
சன்மார்க்க நிலைமாறா சார்ந்திருக்க வேண்டும்

சார்ந்திருத்தல் எளிதல்ல கடினமப்பா
சஞ்சலங்கள் இடையிடையே வந்து ஆட்டும்
பார்க்க வேண்டும் குருபதத்தை இறுக்கமாக
பாங்காக குருவாக்கை அறிய வேண்டும்

அறிந்துதான் தர்மத்தினை செய்திட வேண்டும்
ஆசானை ஈசனாய் அறிய வேண்டும்
அறிவதுடன் தெளிந்துதான் நிற்க வேண்டும்
ஆசானே சிவவடிவம் என்று உணர வேண்டும்

உணர்ந்து உணர்ந்து வணங்கியோரே உயர்நிலை கண்டார்
உத்தமமாய் குருதேகம் பார்ப்பது நன்று
குணவான்கள் பார்த்தவுடன் பணிந்து கொள்வார்
குருதொண்டை சிவதொண்டாய் கருதி நிற்பார்

நிற்க வேண்டும் அரங்கனை ஆறுமுகனாய் எண்ணி
நிர்மலம் ஆனதொரு சண்முகன் என்று
அற்புதமாய் எண்ணிதான் வணங்க வேண்டும்
அரங்கனும் சுப்பிரமணியரும் வேறல்ல என்றேன்

என்றுமே குருவழி நடக்க வேண்டும்
இல்லையென்றால் அஞ்ஞானம் பற்றிக் கொள்ளும்
நன்றான குருநாமம் சொல்ல வேண்டும்
நாள்நாளும் ஜெபமும் செய்ய நமனும் இல்லை

நமனேது துன்பமேது அவர்தமக்கு
நாள்நாளும் அவர் அடைவார் பேரின்பத்தை
சுமையேது குருநாமம் சொல்வோர்க்குத்தான்
சுப்பிரமணியம் சுப்பிரமணியம் என்று உரைக்கும்போது

உரைக்கும்போது சிவத்தின் அருள் கிட்டும்
ஓங்காரக்குடில் ஆசான் வாழ்கவென்றால்
குறையேது அவன் வாழ்வில் அவனே ஞானி
குடில் பெருமை பேசுவதே தொண்டர் சேவை

தொண்டர்களுக்கு இது எந்தன் கட்டளையாகும்
தொண்டர்களை கேட்கின்றேன் என் மகன் பெருமை
கண்டு பேசல் குற்றமோ சொல்லுங்கள் இப்போ
கந்தனின் பெருமையை குடில் வந்து பார்ப்பீர்

பார்க்கவே ஆசானை சுப்பிரமணியமாய்
பாங்கான அரங்கன்தான் என் வடிவமாகும்
சார்ந்துதான் இருக்கின்றேன் சண்முகம் அரங்கனை
சஞ்சலங்கள் தீர்க்கத்தான் வாருங்கள் இங்கே

இங்கு வந்து குடில் பெருமை குடில் உணவைப்பற்றி
எடுத்துரைக்க வேண்டுமே சேவையாக
இங்கு வந்து ஓங்காரக்குடில் பெருமை அறிந்து
இவ்வுலகம் அறியவே எடுத்துரைக்க வேண்டும்

உரைக்க வேண்டும் குடில் உணவு மருந்து என்று
உரைக்க வேண்டும் குடில் உணவு அருள் உணவு என்று
உரைக்க வேண்டும் குடில் தொண்டு மகேசன் தொண்டு என்று
உரைக்க வேண்டும் குடில் தொண்டு வள்ளல் தொண்டு என்று

வள்ளல்பின் மாந்தர்கட்கு அன்னம் தன்னை
வழங்கியது யாரப்பா? நீதான் அரங்கா
வள்ளலும் அருள்கின்றார் இக்கணத்தில்
வாழ்கவென்று உன்னையும் வாழ்த்துகின்றார்

வாழ்த்தை நீ பெற்றுவிட்டாய் இக்கணம் தொட்டே
வள்ளலையும் அகத்தியரையும் என்னையும் கண்டாய்
ஊழ் அகல உனைக் காண வேண்டுமப்பா
ஒவ்வொரு தொண்டர்கட்கும் கட்டளையாய் சொல்வேன்

சொல்கின்றேன் குடில் தொண்டை செய்யுங்கள் என்று
சுத்த சேவை செய்யும்போது சுப்பிரமணியர் சேவை
பொல்லாத வினை அகல புண்ணிய சேவை
பொருந்தியே செய்வோர்க்கு புண்ணியம் கிட்டும்

கிட்டுமென்றே சுப்பிரமணியர் சொல்லி விட்டேன்
கூறுகிறேன் தேகத்தில் கனல் கூடி நிற்குதப்பா
சட்டென்று தேகத்தில் வலி தோன்றுமப்பா
சஞ்சலமே வேண்டாம் விலகிப் போகும்

விலகிவிடும் முருகன் என் அருள் பலத்தால்
விளம்புகிறேன் அகவல்தனை பாடிக் கேளு
நலமடைவாய் என்றுதான் வாக்குரைத்தேன்
நானிலத்தில் சுத்த ஞானக் குடிலமைத்து

அமைத்துதான் மாந்தர் சேவை செய்யும் உனக்கு
அருளோடு பொருள் தருவார் வாழ்வார் வாழ்வார்
சுமை நீங்க குடிலிற்கு தனம் தருவீர்
சுப்பிரமணியன் அருள் பெறவே தனம் தருவீர்

தனம் தந்து அருள் பெறுவீர் அழைக்கின்றேன் வேலன்
தவசியான அரங்கனை வந்து காண்பீர்
மனம்மகிழ ஞானம் பெற வந்து காண்பீர்
மாந்தர்களை அழைக்கிறேன் வேலவன் இன்றே

வேலனும் அரங்கனும் ஒன்றுதானே
வேறல்ல ஈசனும் அரங்கனும் ஒன்றே
மேலான குருஅரங்கன் ஈசன் அவதாரமாகும்
மேன்மையாய் நடைமுறையில் குருசேவை செய்ய வேண்டும்

குரு சேவை கோடி புண்ணியம் தந்திடும்தான்
குருதீட்சை பிறவியை அளித்திடும்தான்
குருவாக்கு விதியையே மாற்றி நிற்கும்
குரு ஆசி பெறுவதற்கு அழைக்கின்றேன் வேலன்

அழைக்கின்றேன் வாரீர் வாரீர் மக்களே இன்று
அரங்கர் மூலம் கண்டுதான் செய்வீர் இங்கே
அழைக்கின்றோம் நடைமுறையை சொல்லி விட்டேன்
அரங்கனே வாழிய வாழிய என்றேன் முற்றே.

-சுபம்-

முருகப்பெருமான் துணை

மகான் சுப்பிரமணியர் அருளிய தற்கால ஆன்மீகவாதிகளின் செயல்பாடுகளும் உண்மை ஆன்மீகவாதிகளுக்கான நடைமுறை அறிவுரையும் ஆசியும் சிறப்பு நூல் :

ஞானம் அளிக்கும் யோகக்கனலாம் அருட்கனலை கொண்டிட்ட ஆறுமுக அரங்கமகா தேசிகனுக்கு முருகப்பெருமான் யான் ஆசிகளோடு சொல்லும் அருள் வாக்குதான் இதுவப்பா. ஆறுமுக அரங்கனும், அவர்தம் தொண்டர்களும், உலகோரும் ஒற்றுமையுடன் சிறப்பாய் வாழ்ந்திட கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை ஆசி அறிவுரை நூலாக கூறுகிறேன் முருகப்பெருமான் யானுமே எனக் கூறுகிறார் மகான் முருகப்பெருமான். (நூல் வாசித்தளித்த நாள் விளம்பி வருடம் ஆவணி மாதம் 27ம் நாள் 12.09.2018, புதன்கிழமை). தற்காலம் இவ்வுலகினில் உண்மை நெறிப்படி நடந்து கொள்கின்ற உண்மை ஆன்மீகமும் உண்மை ஆன்மீகவாதிகளும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. யாவரிடத்தும் குற்றம் உள்ளது எங்கு பார்த்தாலும் பிழையாகத்தான் இருக்கிறதப்பா. நல்ஞானம்தனை உண்மை ஞானம்தனை, தம்மை நம்பி வரும் அன்பர்களுக்கு சொல்லித்தராமல் அவரவரும் பிழைப்பிற்காக பிழையான ஆன்மீகத்தைச் சொல்லிக் கொடுத்து பிழையான ஆன்மீகவாதிகளாக ஆகி பிழைபட்ட ஆன்மீகத்தைதான் வளர்த்து வருகின்றார்கள்.

இப்படிப்பட்ட பொருள் பற்றும், காமுக எண்ணம் உடைய ஆன்மீகவாதிகள், பிழையான பொய் ஆன்மீகவாதிகளுக்கு மத்தியில் உண்மை ஆன்மீகம் போதித்து மக்களை வழிநடத்திடவே அவதாரமாக அவதரித்திட்ட வள்ளல் ஞானி ஆறுமுக அரங்கனே உம்மை முருகப்பெருமான் யானும் வாழ்த்துகின்றேனப்பா.

ஊழ்வினைகள் காரணமாக மனஉளைச்சலிற்கு ஆட்பட்டு, ஊழ்வினை துன்பங்களால் அவதியுறும் மக்களுக்கு அரங்கா உமது வழிகாட்டல்கள் தெளிவு தந்து காத்திடும். உமது வழிகாட்டல்கள் மக்களுக்கு ஞானத்தை தந்ததப்பா. இவ்வுலகினில் ஞானத்தில் நிலைத்திருக்க வேண்டுமாயின் முதலில் குரு என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் அன்பர்கள் எல்லாம். ஏனெனில் குருவினால் மட்டுமே, குருவின் மூலமாக மட்டுமே தெய்வத்தைப் பற்றி அறியவும், காணவும் முடியும். குருவின் துணையால் மட்டுமே சுத்த ஞானத்தை அறியவோ உணரவோ முடியுமப்பா.

குரு என்பது யார்? குரு என்றால் என்ன? எனில் குரு என்ற சொல்லில் உள்ள ‘கு’ என்ற எழுத்து வெளிச்சம் என்பதை குறிக்கும் எழுத்தாகும். ‘ரு’ என்ற எழுத்து அறிவினைக் குறிப்பதாகும். ஆக குரு என்பது பிரகாசமான அறிவு என்பதாகும். அதாவது ஜோதி வடிவான அறிவு அல்லது அறிவும் ஜோதியும் என்பதாகும். குருவை தரிசனம் செய்தால் அவனது அறிவு ஜோதி வடிவாக, அதாவது அறிவு விளக்கம் பெற்று செம்பொருள் அறிவாகும். குருவை காணாவிட்டால் அவனது அறிவு மலஅறிவாக மூடஅறிவாகப் போய் அறியாமைக்கு உள்ளாகி முக்தி அடையும் பேற்றினை இழந்து விடுவான். குரு இல்லையேல் முக்தி என்பது இல்லையப்பா.

குரு என்பவர் என்ன செய்வார்? குரு எனப்படும் அறிவுச் சுடரானவர் தம்மை நம்பி குருவாய் ஏற்று பணிந்தவர்க்கு அவர்தம் வினைகளை போக்கி முக்தியை அடையும் வழியை உணர்த்தி வழி நடத்துவார். பத்தாம் வாசலாகிய புருவமத்தியை திறந்து அவனை வாசிவசப்படச் செய்து வாசி நடத்திக் கொடுப்பான். அவனுக்கு வாசி நடத்திக் கொடுத்து அவனுள் இருக்கும் ஆன்ம குற்றமாகிய மூர்க்கத்தனத்தை, தான் எனும் ஆணவத்தை, மும்மலக்குற்றத்தை நீக்கி அவனை மனிதனாய், தேவனாய், தெய்வமாய் வாழ வைப்பாரப்பா குருவெனும் பெருந்தாய்.

நம்பிய பக்தனுக்கு சகலமும் தந்து கடைத்தேற்றிக் கொள்ளும் சக்தியும் தந்து கடைத்தேற்றுவான். சகமார்க்கமாகிய எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரியும் சன்மார்க்க நெறியினை போதித்து சாகாக்கலை எனும் மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றியும் அதை அடைந்திடும் முறையையும் உணர்த்திடுவான்.

மரணமிலாப் பெருவாழ்வை கூறி அதை அடைய துணை புரிந்து சிவத்தினை அறிவதற்கும், சிவத்தோடு தம்மை நம்பிய சீடனையும் சிவமாக ஆக்கிய சிவத்தோடு சிவமாக குருவே ஆகி உரைத்திடுவான், சிவநிலையை அச்சீடன் அடையும் வழிமுறைகளை. இப்படிப்பட்ட வல்லமை மிக்கவரும் சிவத்தை அடையும் மார்க்கத்தை தெள்ளத்தெளிவாக சொல்பவனே உண்மை குரு ஆவார். அவனே மகா குருவும் ஆவார்.

அப்படிப்பட்ட வல்லமையுள்ள மகா குருவின் திருவடிகளைப் பற்றி சரணடைந்தால் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். அப்படிப்பட்ட உண்மை குருவை அவசியம் ஆன்மீகவாதிகளும் இல்லறவாசிகளும் துறவு மேற்கொள்பவர்களும் சார்ந்திருக்க வேண்டுமப்பா. 

உண்மை குருவின் திருவடி பற்றினோர் குரு உபதேசிக்கும் உபதேசமாகிய சன்மார்க்க நெறியினின்று வழுவாமல் நடந்திட வேண்டுமப்பா. ஒரு மனிதன் சன்மார்க்க நெறியினில் வழுவாது நடப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, கடினமான செயலாகும். ஏனெனில் கலியுகத்தின் மாமாயையினால் அந்த சீடனோ, அன்பரோ ஆட்பட்டு சஞ்சலங்களுக்கு ஆளாகிட நேரிடும். இடையிடையே தாம் செல்லும் பாதை சரியானதா? தவறா? என தடுமாற்றமும் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தாம் ஏற்ற உண்மை குருவின் திருவடிகளை மானசீகமாகப் பற்றிக் கொண்டு மனம் உருகி பிரார்த்தனைகள் செய்திட வேண்டும்.

“எம்பெருமானே குருநாதா நான் பாவிதானப்பா, சந்தேகம் என்னை ஆட்கொண்டு வாட்டுகிறது. இந்த பாவி மீது இரக்கம் காண்பித்து எம்மையும் ஒரு பொருட்டாக மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என குருவடி பணிந்து மனம் உருகி பிரார்த்தனைகள் செய்து குருவினை விட்டும், சன்மார்க்கத்தை விட்டும் நீங்காமல் தொடர்ந்து முயற்சிகள் செய்து குருவையும் குருவின் தன்மையையும், சன்மார்க்கத்தையும் அறிந்து செயல்பட வேண்டும்.

உங்களைத் தடுக்கும் மாயையினின்று விடுபடவும், வினைகளின் துன்பங்களில் இருந்து விடுபடவும், நீங்கள் புண்ணியவானாக இருக்க வேண்டும். ஆதலினால் உங்களது புண்ணியத்தை பெருக்கும் வகையிலே தானதருமங்களை தளராது தொடர்ந்து செய்தால்தான் நீங்கள் செய்திட்ட தர்மபலன் உங்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவித்து நற்கதியில் செலுத்தும். புண்ணியங்களையும், பூஜைகளையும் குருமுகாந்திரமாக தொடர்ந்து செய்து செய்து ஆசானாகிய குருவை ஈசனாக அதாவது சிவமாக அறிந்து கொண்டு தெளிவடைய வேண்டும். “குருவே சிவம்” என்பதையும் ஆசானே சிவம், சிவமே ஆசான் என்பதை உள்ளார்ந்து உண்மையுடன் உணர வேண்டும்.

குருவே சிவமென உணர்ந்து உணர்ந்து வணங்கி வருபவர்களே உயர்நிலையை அடைவார்கள். குருவின் திருமேனியை காண்பதே நன்மை தரும் என்பதை உணர்ந்து குருவினை பார்த்தவுடன் பணிந்து நிற்பார்கள். பண்புள்ளவர்கள் குருவிற்கு செய்யும் சேவைகள் அனைத்தையும் சிவதொண்டாக அவரெல்லாம் கருதி தொண்டினை திறம்பட செய்து வருவார்கள் பண்புடையோர். 

ஆதலினால் ஆறுமுக அரங்கமகா தேசிகனை முருகப்பெருமானாக எண்ணி வணங்கி வர வேண்டும். மும்மலக்குற்றம் அற்ற நிர்மலனாகிய சண்முகப்பெருமானே அரங்கன் என்றே அற்புதமாய் எண்ணி வணங்கி வர வேண்டும். ஆறுமுக அரங்கமகா தேசிகனும் சுப்பிரமணியராகிய யானும் ஒன்றன்றி வேறல்ல என்பதை உணர்ந்திட வேண்டும்.

எனவே உலக மக்களே நீங்கள் என்றுமே குருவின் திருவடிகளைப் பற்றி குரு உபதேசத்தின் வழியினைப் பின்பற்றி நடந்திட வேண்டும். இல்லையெனில் அவர்களை அஞ்ஞானம் ஆகிய அறியாமை பற்றிக் கொள்ளும். நன்மையே தருகின்ற குருவின் நாமங்களை பயபக்தியுடன் நாமஜெபமாக நாளும் சொல்லி வருவதுடன் பணிந்து வணங்கி வர அவர்களை எமனாகிய மரணமும் தீண்டாது விலகிப் போகும். அவர்களுக்கு எமபயம் இல்லை, அவர்கள் என்றும் மாறா பேரின்பத்தை அடைவர், குருவின் திருநாமங்களை சொல்வோர்க்கு சுமைகள் ஏதும் இல்லையப்பா.

சுப்பிரமணியம் சுப்பிரமணியம் என்று உரைக்கும்போது அவர்களுக்கு சிவத்தின் அருள் பூரணமாக கிடைத்திடும். ஓங்காரக்குடிலாசான் வாழ்க வாழ்க என்று சொல்லிட அவர்களது வாழ்வினில் குறைகள் ஏதும் வராது. அவர்கள் ஞானிகளாகவும் ஆகிடும் வாய்ப்பை பெறுவர்.

உத்தம மகா ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனின் பெருமைகளையும், ஏழாம் படை வீடு அரங்கன் வாழும் ஓங்காரக்குடிலின் பெருமையையும் பேசுவதே தொண்டர்களின் முக்கிய தொண்டாகும். இது முருகப்பெருமான் யான் தொண்டர்களுக்கு கூறும் கட்டளையாகும். 

தொண்டர்களே உங்களை முருகப்பெருமான் யானும் கேட்கிறேன் என் மகன் அரங்கன் பெருமைகளை உலகறிய பேசுவது குற்றமோ? சொல்லுங்கள் தொண்டர்களே! அரங்கன் புகழை அறிய வேண்டுமாயின் முருகப்பெருமானின் பெருமையை குடிலிற்கு வந்து பாருங்கள் கண்டு கொள்வீர்கள். 

ஓங்காரக்குடிலிற்கு வந்து பாருங்கள் உலக மக்களே ஆங்கே வீற்றிருக்கும் குடில் ஆசான் அரங்கமகா தேசிகனை சுப்பிரமணியராய் பாருங்கள். அரங்கனே நான்தானப்பா, அரங்கனே என் வடிவமப்பா, அரங்கனை சண்முகம் யானும் அற்புதமாய் சார்ந்துள்ளேனப்பா. 

ஆன்மீக தொண்டர்களே, அன்பர்களே வாருங்கள் ஓங்காரக்குடிலிற்கு உங்களது சஞ்சலங்களை குடில் வந்து தீர்த்துக் கொள்ளுங்கள். குடிலை நாடி வந்து குடில் பெருமை உணர்ந்து குடில் உணவின் அற்புதம் உணர்ந்து சொல்லுங்கள் உலகிற்கு, உலகறிய எடுத்துரையுங்கள் குடில் பெருமையையும் குடில் உணவின் அற்புதத்தையும். தொண்டர்களே அன்பர்களே உலகமெலாம் அறியவே உரக்க கூறிடுங்கள், குடில் உணவு நோய் தீர்க்கும் மருந்து என்று, குடில் உணவு அருள் தரும் அருள் உணவு என்று சொல்லுங்கள். குடிலில் செய்யும் தொண்டு மகேசனுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லுங்கள். குடிலில் செய்யும் தொண்டு வள்ளல் தன்மையுடையது என்று, வள்ளல் பெருமான் ராமலிங்கசுவாமிகளுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லுங்கள்.

இவ்வுலகினில் வள்ளல் ராமலிங்கசுவாமிகளுக்கு பின் அன்னதானத்தினை இவ்வுலகினில் சிறப்புடன் வழங்கியது யார்? வள்ளலுக்கு பின் அன்னதானத்தினை அற்புதமாய் வழங்கியது அரங்கமகா தேசிகா நீதானப்பா. வள்ளல் பெருமான் ராமலிங்கமும் அன்புடன் அருள் செய்து அரங்கா உம்மை வாழ்த்துகின்றாரப்பா. வாழ்த்தினை பெற்றுவிட்டாய் அரங்கா நீயும், வள்ளல் ராமலிங்கத்தையும், அகத்தியம்பெருமானையும் முருகப்பெருமான் எம்மையும் கண்டுவிட்டாய் அரங்கா இக்கணம் முதலாய். உலகினில் உள்ள தொண்டர்களே முருகப்பெருமான் யானும் உங்களுக்கு கட்டளையாய் சொல்லுகின்றேன் இப்போது, உங்களது ஊழ்வினைகளை அகற்றிக் கொள்ள வேண்டுமாயின் அவசியம் அரங்கமகா தேசிகனை காண வேண்டும். அரங்கனை கண்டு பயபக்தியுடன் பணிந்து அரங்கன் ஆற்றும் தானதரும பணிகளுக்கு தொண்டுகளை செய்திடுங்கள். தூய்மையான தொண்டுகள் செய்திட அது சுப்பிரமணியர் எனக்கு செய்யும் சேவையாக மாறிடும். அது பொல்லாத வினைகளை புண்ணிய சேவையாக மாறிடும். பொல்லாத வினை அகற்றும் வல்லமைமிக்க அரங்கனின் சேவைகளை மனம் விரும்பி செய்வோர்க்கு புண்ணியங்கள் பலவாறாய் கிட்டுமப்பா.

அரங்கா சுப்பிரமணியர் யானும் உரைக்கின்றேன் இப்போ. இந்த காலச் சூழ்நிலையில் அரங்கா உமது ஞானதேகமதில் மூலக்கனல் பெருகி நிற்குதப்பா. ஆதலினால் தேகத்தினில் சட்டென்று வலி தோன்றுமப்பா. சஞ்சலப்பட வேண்டாம் அரங்கனே அது தானே விலகிப் போய்விடும். முருகப்பெருமான் எனது அருள்பலத்தினாலே அரங்கா உம்முள் தோன்றிய வலிகள் விலகிடும். வள்ளல் பெருமானாரின் அகவல் பாராயணத்தினை பாடிடக் கேட்டால் விரைந்து உமக்கு நலம் உண்டாகும். 

இவ்வுலகினில் உலக நன்மைக்காக உலகப் பெருமாற்றத்திற்காக முற்றுப்பெற்ற முனிவன் அரங்கனே நீ மீண்டும் அவதரித்து மக்கள் நலன் கருதி மக்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள ஏதுவாக ஏழாம் படை வீடாய் ஓங்காரக்குடிலினை சுத்த ஞானக்குடிலாக அமைத்து உலகினர்க்கு சேவைகள் செய்து வருகின்றாய். உலகோர்க்கு தொண்டு செய்யும் உமது அறப்பணிகளுக்கு மனம் விரும்பி பொருள் தருகின்ற மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து வளம் பெறுவார்களப்பா.

ஆதலினால் மக்களே உங்களது பாவச்சுமை நீங்கிட குடிலிற்கு தானம்தனை அளித்து புண்ணியம் பெறுவீர் சுப்பிரமணியர் எனது அருளைப் பெற்றிட பொருளினை அளிப்பீர் அரங்கனுக்கு. பொருள் அளித்து எமது அருளை பெற்றிடவே அழைப்பு விடுகின்றேன் முருகப்பெருமான் யானுமே, உலகோரே எனது அழைப்பை ஏற்று ஏழாம் படை வீடு ஓங்காரக்குடிலினை நாடி வந்து அரங்கனை கண்டு தரிசியுங்கள். மனம் மகிழ ஞானம் பெற்றிட வந்து காணுங்கள் அரங்கமகா தேசிகனை. இன்றே உடன் வந்து காண அழைக்கின்றேன் உலகோரே, உங்களை அன்புடன் முருகப்பெருமான் யானுமே! மகா ஞானி அரங்கனும் முருகப்பெருமானும் யானும் ஒன்றுதானப்பா. ஈசனும் அரங்கனும் வேறல்ல ஒன்றுதானப்பா. மேன்மைமிக்க குரு அரங்கமகா தேசிகன் ஈசனின் அவதாரமாகும். 

ஆதலினால் பயபக்தியுடன் மேன்மையாய் குருவின் சேவைகளை தொண்டுகளை செய்து வர வேண்டும் தொண்டர்களே. குருவிற்கு செய்யும் தொண்டு கோடி புண்ணியங்களை தந்திடும். குருவிடம் பெறும் தீட்சை உபதேசம் பிறவித் துன்பத்தை போக்கிடும். குருவின் வாக்கு உங்களது மாறாத விதியையே மாற்றி நிற்கும். 

ஆதலினால் மக்களே உடன் விரைந்து வாருங்கள் ஓங்காரக்குடிலிற்கு முருகப்பெருமான் அழைக்கின்றேன் அன்போடு, வாரீர் வாரீர் மக்களே இன்றே விரைந்து வாரீர். ஓங்காரக்குடில் நாடி வந்துமே அரங்கதரிசனம் பெற்று ஆசி தீட்சை ஏற்று குடில் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து அரங்கனுக்கு உத்தம சீடர்களாக தொண்டுகளைச் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள் என்றே வழிமுறை உரைத்திட்டேன் முருகப்பெருமான் யானுமே. எம் அவதாரமே ஆறுமுக அரங்கமகா தேசிகனே வாழிய வாழி எனக் கூறுகிறார் மகான் சுப்பிரமணியராகிய முருகப்பெருமான்.
-சுபம்-







Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya