Monday, September 16, 2019

போகர் நோயாளிகளுக்குத் தீர்வு கூறல் - Boghar 7000 போகர் ஏழாயிரம் 6-72


போகர் நோயாளிகளுக்குத் தீர்வு கூறல்

Boghar 7000 போகர் ஏழாயிரம் 6-72

(Bogar kayakarpam for diseases)

மூலிகை காய கற்பம் (herbal kayakarpam)

(குறிப்பு: போகர் 7000 பாகம் 6 பக்கம் 72)

1).பூமி சர்க்கரைக் கிழங்கு

( Maerua oblongifolia)

2).பரங்கிப்பட்டை

3).ஜடாமாஞ்சில் ( மாஞ்சில்)

4).தண்ணீர்விட்டான் கிழங்கு

5).சத்திச்சாரணை வேர்

(முச்சரணை மூலம்)

6).சித்திர மூலம்

(கொடிவேலி மூலம்)

7).ஆவாரை வேர்

8).நிலப்பனைக் கிழங்கு

9).பனங்கிழங்கு

(கற்பகமாம் தருவின் மூலம்)

10).ஆகாசகருடன் கிழங்கு

(வெந்தோன்றி மூலம்)

11).நன்னாரி வேர்

12).வெள்ளை குன்றிமணி வேர் ( அதிமதுரம்)

செய்முறை:

இவை எல்லாவற்றையும் சம அளவு

எடுத்து, வெயிலில் உலர்த்தி கல் உரலில் இட்டு பொடியாக்கி,

மலை தேன் சேர்த்து, மெழுகு பதமாக இடித்து பாத்திரத்தில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.

அளவு:

2 கிராம் (1 டீஸ்பூன்)

காலை மாலை

உணவிற்கு 1 மணி நேரம் முன்பு

காலம் :

48 நாட்கள் (1 மண்டலம்) சாப்பிடவேண்டும்.

அனுபானம்:

மருந்து சாப்பிட்டு

பால் 1 டம்ளர் சாப்பிடவும்.

தீரும் வியாதிகள்:

நோயின் தாக்கம் குறையும்,

தேகம் முன்போல் நோயில்லாமல் ஆகும்,

தேகம் நல்ல நிறமாக மாறும்,

தேகம் இறுகும்,

கண் பார்வை சிறப்படையும்,

நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டாகும்.


ஒவ்வொரு இல்லத்திலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய நூல் "போகர் 7000"
Link to download

https://t.co/P2DNCa3ct2





நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 


                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

போகர் ஏழாயிரம் Boghar 7000

 ஒவ்வொரு இல்லத்திலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய நூல் "போகர் 7000"

bogar7000pattukal


போகர்-7000 த்தின் 101 முதல் 200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 201 முதல் 300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 301 முதல் 400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 401 முதல் 500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 501 முதல் 600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 601 முதல் 700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 701 முதல் 800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 801 முதல் 900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 901 முதல் 1000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1001 முதல் 1100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1101 முதல் 1200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1201 முதல் 1300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1301 முதல் 1400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1401 முதல் 1500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1501 முதல் 1600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1601 முதல் 1700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1701 முதல் 1800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1801 முதல் 1900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1901 முதல் 2000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2001 முதல் 2100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2101 முதல் 2200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2201 முதல் 2300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2301 முதல் 2400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2401 முதல் 2500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2501 முதல் 2600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2601 முதல் 2700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2701 முதல் 2800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2801 முதல் 2900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2901 முதல் 3000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3001 முதல் 3100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3101 முதல் 3200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3201 முதல் 3300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3301 முதல் 3400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3401 முதல் 3500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3501 முதல் 3600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3601 முதல் 3700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3701 முதல் 3800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3801 முதல் 3900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3901 முதல் 4000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4001 முதல் 4100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4101 முதல் 4200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4201 முதல் 4300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4301 முதல் 4400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4401 முதல் 4500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4501 முதல் 4600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4601 முதல் 4700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4701 முதல் 4800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4801 முதல் 4900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4901 முதல் 5000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5001 முதல் 5100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5101 முதல் 5200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5201 முதல் 5300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5301 முதல் 5400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5401 முதல் 5500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5501 முதல் 5600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5601 முதல் 5700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5701 முதல் 5800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5801 முதல் 5900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5901 முதல் 6000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6001 முதல் 6100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6101 முதல் 6200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6201 முதல் 6300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6301 முதல் 6400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6401 முதல் 6500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6501 முதல் 6600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6601 முதல் 6700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6701 முதல் 6800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6801 முதல் 6900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6901 முதல் 7000 பாடல்கள்


bogar7000songs

போகர்-7000 த்தின் 1 முதல் 100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 101 முதல் 200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 201 முதல் 300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 301 முதல் 400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 401 முதல் 500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 501 முதல் 600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 601 முதல் 700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 701 முதல் 800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 801 முதல் 900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 901 முதல் 1000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1001 முதல் 1100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1101 முதல் 1200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1201 முதல் 1300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1301 முதல் 1400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1401 முதல் 1500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1501 முதல் 1600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1601 முதல் 1700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1701 முதல் 1800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1801 முதல் 1900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 1901 முதல் 2000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2001 முதல் 2100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2101 முதல் 2200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2201 முதல் 2300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2301 முதல் 2400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2401 முதல் 2500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2501 முதல் 2600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2601 முதல் 2700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2701 முதல் 2800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2801 முதல் 2900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 2901 முதல் 3000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3001 முதல் 3100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3101 முதல் 3200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3201 முதல் 3300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3301 முதல் 3400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3401 முதல் 3500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3501 முதல் 3600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3601 முதல் 3700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3701 முதல் 3800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3801 முதல் 3900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 3901 முதல் 4000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4001 முதல் 4100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4101 முதல் 4200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4201 முதல் 4300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4301 முதல் 4400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4401 முதல் 4500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4501 முதல் 4600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4601 முதல் 4700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4701 முதல் 4800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4801 முதல் 4900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 4901 முதல் 5000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5001 முதல் 5100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5101 முதல் 5200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5201 முதல் 5300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5301 முதல் 5400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5401 முதல் 5500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5501 முதல் 5600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5601 முதல் 5700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5701 முதல் 5800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5801 முதல் 5900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 5901 முதல் 6000 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6001 முதல் 6100 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6101 முதல் 6200 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6201 முதல் 6300 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6301 முதல் 6400 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6401 முதல் 6500 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6501 முதல் 6600 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6601 முதல் 6700 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6701 முதல் 6800 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6801 முதல் 6900 பாடல்கள்
போகர்-7000 த்தின் 6901 முதல் 7000 பாடல்கள்

bogar69017000

போகரின் சப்த காண்டம் - 7000
6901.
கெதியென்று காலாங்கி கேட்குங்காலம் கெடியான பலராமர் ரிஷியார்தாமும்
பதிதனையைத் தேடிவந்த ரிஷியாருக்கு பட்சமுடன் ஞானோப தேசங்கூறி
மதிபோன்ற மகதேவர் காலாங்கிக்கு மார்க்கமுடன் உலகவதி சயங்களெல்லாம்
இதிகாச புராணமென்னும் மறைப்பையெல்லாம் யிஷ்டமுடன் மனதுவந்து போதித்தாரே
6902.
போதிக்க வின்னமொரு வயணஞ்சொல்வேன் பொங்கமுடன் புலிப்பாணி புகழுள்ளானே
ஆதித்தன் சந்திரன்போல் பௌத்மசித்து அரகரா யென்னசொல்வேன் கிரியிலப்பா
ஜோதிபிர காசமென்ற காலாங்கிநாதர் சொர்ணமென்ற கிரியைதனில் செல்லும்போது
சாதியிலா தவனார் பௌத்மசித்து சட்டமுடன் நெடுந்தவசி பார்த்திட்டாரே
6903.
பார்த்தாரே யென்தேவர் காலாங்கிநாதர் பாரான மலைதனிலே தவசியாரை
சார்த்தகையாள் வார்போல தவங்கள்பூண்டு சட்டமுடன் நெடுங்கால சித்துதம்மை
கோர்த்துமே சுரமெத்து அஞ்சலித்து கொப்பெனவே காலாங்கி வணக்கஞ்செய்தார்
தீர்த்தமுடன் பத்திரமாந் துளபமாலை தீர்க்கமுடன் தான்கொடுத்து வர்ணித்தாரே
6904.
வசனிக்கா ஞானோப தேசந்தன்னை வளமுடனே பௌத்மமகா ரிஷியார்தாமும்
நிசமுடனே மனங்களித்து மனதுவந்து நிட்சயமாம் ஞானமென்ற இதிகாசத்தை
வசனமதாய் யுபதேச வுண்மையாக வாக்களித்தார் காலாங்கி நாதருக்கு
தசமுடனே பஞ்தசா காயமாக்கி சட்டமுடன் மனதுவந்து கொடுத்திட்டாரே
6905.
கொடுக்கவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கோளாறு தானகற்றி மைந்தாகேளு
விடுக்கவே காலாங்கி நாதர்தாமும் விட்டகுறை இருந்ததொரு தன்மையாலே
படுகளம் போல்பத்தாவ தாரந்தன்னை பாற்கடல்கள் சுற்றிவந்து பான்மைகொண்டார்
தொடுகுறிபோல் கலிக்கமகா ரிஷியார்தம்மை தோறாமல் கிரிதனையே கண்டார்தானே
6906.
தானான கலிக்கமகா ரிஷியார்தன்னை தகமையுள்ள காலாங்கி நாதர்தாமும்
பானான கிரேதாயி னுகத்திலப்பா பாங்கான மலைதனிலே கண்டாரங்கே
தேனான பிரளயங்கள் வந்தபோது தேற்றமுடன் மலைதனிலே நின்றசித்து
கோனான கொடுந்தவசி யானசித்து கொப்பெனவே சித்துமகா பத்துமாமே
6907.
பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே
6908.
பாரேதான் காலாங்கி நாதர்தாமும் பட்சமுடன் எந்தனுக்குச் சொன்னநீதி
நேரேதான் அவர்களுந்தான் மனிதரன்றி நெடிதான தேவர் அவதாரமல்ல
சீரேதான் கலியுகத்து மாண்பரெல்லாம் சிறப்புடனே தசாவதாரக் கடவுளென்று
வேரேதான் இன்னமொரு தெய்வமுண்டோ வித்தகனே என்றல்லோ விதிக்கின்றாரே
6909.
வித்தகனே இவர்களெல்லாம் தெய்வமல்ல விண்ணுலகம் பதிப்பதற்கு கூடுமோதான்
செத்தவர்கள் கோடிமனு மாண்பருண்டு தேவாதி தேவரிஷி யானபேரும்
கைத்தவங்கள் தான்மறந்து மண்ணாய்ப்போனார் காசினியில் யாவருந்தான் இப்படியேபோனார்
மெய்த்தவங்கள் செய்துமல்லோ காரம்பூண்டு வெகுகோடி மாண்பர்களும் இருக்கின்றாரே
6910.
இருக்கவே இன்னம்வெகு மகத்துவங்கள் எழிலான புலிப்பாணி கண்ணியவானே
பொருக்கவே வையகத்தின் மகிமையெல்லாம் பகட்டினேன் கணக்குண்டோ லக்கோயில்லை
பெருக்கவே துகைகண்டு விதிகண்டு பேரான ஸ்தலமகிமை யாவுங்கண்டு
குருக்கவே திசையெட்டும் மதிக்கும்நான்கும் கூரான தேவகோட்டை கூறுவேனே
6911.
கூறுவேன் புலிப்பாணி மன்னாகேளு கொற்றவனார் காலாங்கி சொன்னநீதி
பேறுடைய வையகத்தின் ஸ்தலங்களெல்லாம் பேர்வகுத்துச் சீர்வகுத்துப் பிரித்துச்சொன்னார்
ஆறுதலம் பஞ்சபூத ஸ்தலத்தைக்கண்டு வப்பனே எந்தனுக்கு ஓதினார்காண்
மாறுபடா ஸ்தலமகிமை யுந்தனுக்கு மார்க்கமுடன் வகைபிரித்து சொல்வேன்தானே
6912.
தானான பஞ்சபூத ஸ்தலமேதென்றால் தாக்கான காளஸ்திரி காஞ்சியாகும்
தேனான திருக்காசி சிதம்பரந்தான் தெளிவான திருவருணை ஸ்தலமுமாகும்
பானான ஸ்தலத்தினது சேர்வைசொன்னேன் பாங்கான ஆராதாரங்கள் சொல்வேன்
மானான மகதேவர் மதுரையைத்தான் மகத்தான ஸ்தலமென்று மதிப்பிட்டாரே
6913.
மதிப்பான ஸ்தலத்தினது கோர்வைசொல்வேன் மகத்தான மதுரைக்குள் எண்பத்துநாலு
துதிப்புடைய சிதம்பரங் கோர்வைசொல்வேன் துப்புரவாய் பதினாறு ரெண்டுயெட்டு
யிதிலான வருணைக்குக் கோர்வைசொல்வேன் விற்பனனே சோடசமா மொன்றுநான்கு
மதிப்போன்ற காளஸ்திரி கோர்வைசொல்வேன் மார்க்கமுடன் கலைரெண்டு தசங்களொன்றே
6914.
ஒன்றான காசியின்றன் கோர்வைசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மறைத்தகூத்து
சென்றதொரு கோர்வையது யாதென்றாக்கால் செம்மலுடன் ஒன்றுபத்து நான்குஎட்டு
நன்றான திருக்காஞ்சி கோர்வைசொல்வேன் நலமான பஞ்சம்ரண்டு சத்தம்நாலு
குன்றான கணக்குவகை யின்னஞ்சொல்வேன் குணமுள்ள புலிப்பாணி மன்னாகேளு
6915.
மன்னாகேள் திருவானைக் காவலப்பா மகத்தான ஸ்தலத்தினது கோர்வைசொல்வேன்
நன்னயமாய் யதைச்சார்ந்த தேவஸ்தானம் நலமான ஈறாறு ஸ்தலமேயாகும்
தென்னாடன் கும்பமுனி அகஸ்தியன்தான் தேவதா கிரியுடனே ஸ்தலமுஞ்சொல்வேன்
முன்னேதான் பெரியோர்கள் உரைத்தவண்ணம் முனியான கோயில்வகை கூறுவேனே
6916.
வரையான வகஸ்தியனார் ஸ்தலமொன்றுண்டு வளமான கோர்வையது இன்னஞ்சொல்வேன்
திறையான சத்தமது மூன்றேயாகும் திகழான வட்டமது நான்கேயாகும்
குறையாத நந்தியது கோட்டையப்பா கொற்றவனார் மலயருகே சுற்றியுண்டு
முறையான வகஸ்தியனார் தேவஸ்தானம் முனையான லக்கமிது சொல்லொண்ணாதே
6917.
ஒண்ணாது திருக்கடையூர் தேவஸ்தானம் வுத்தமனே கோர்வையது என்னசொல்வேன்
திண்ணமுடன் கலைநானகு இருமூன்றாறு திகழான மண்டபங்கள் பதினெட்டாகும்
வண்ணமுடன் சீர்காழி தேவஸ்தானம் மகத்தான கோர்வையது என்னசொல்வேன்
தண்ணமுடன் கலைநான்கு பதிகளெட்டு தாக்கான மண்டபமும் பதினாலாமே
6918.
நாலான சேதுபதி தலமுஞ்சொல்வேன் நலமான கோர்வையது என்னசொல்வேன்
காலான வறுபத்து நாலுமாகும் கருவான மண்டபந்தான் முப்பத்திரண்டு
மாலான மகதேவர் எந்தன்நாதர் மார்க்கமுடன் கண்டறிந்த தலமுமாகும்
பாலான மனோன்மணியாள் கடாட்சத்தாலே பாங்கான புதுமை யின்னங்கூறுவேனே
6919.
கூறுவேன் தணிகையது தலமுமாகும் கூரான கோர்வையது என்னசொல்வேன்
ஆறுதலங் கோட்டையது மலைமேலப்பா வப்பனே தசம்ரெண்டு சத்தம்நாலு
வேறுண்டோ வையகத்தில் சொன்னாரில்லை வெட்டவெளி யானதொரு தலமுமில்லை
நாறுண்டோ பூவதுபோல் மணமுமாகி நானிலத்தில் கோடிதலங் கண்டேன்பாரே
6920.
பாரேதான் கோணமது நவகோணந்தான் பாங்கான கும்பமென்ற கோணமப்பா
நேரேதான் தேவதா தலமுமாகும் நெடிதான கோர்வையது என்னசொல்வேன்
கூரேதான் கலையாறு ருசிகையெட்டு குணமான தேவுதா தலமுமாகும்
நீரேதான் வகுத்தறிய யின்னஞ்சொல்வேன் நிஷ்களங்க மாயவர் தலமுமாமே
6921.
தலமான தேவதா தலமுமாகும் தாக்கான கோர்வையது என்னசொல்வேன்
பிலமான கோயிலது முப்பத்திரண்டு பேரான மண்டபந்தான் அறுபத்துநான்கு
வலமான பாஞ்சால தேசமப்பா வளமான தேவதா தலமுமாகும்
நலமான கோர்வையது என்னசொல்வேன் நாட்டிலே நவில்வதற்கு நாவில்லைதானே
6922.
நாவில்லைப்பா வில்லையென்ன சொல்வேன் நன்மையுள்ள வறுபத்து நாலுசத்தம்
காவிலா நேபாள தேசமப்பா கருவான தேவதா தலமுமாகும்
பூவிலுயர் கோர்வையது யென்னசொல்வேன் புகழான சத்தமது பரிசமெட்டு
தாவுபுகழ் ஆவுடையார் தலமுமாகும் தகமையுள்ள கோர்வையது சொல்லக்கேளே
6923.
சொல்லவென்றால் நாற்பத்தி யாறேயாகும் சுத்தமுள்ள சத்தமது நாலேயாகும்
வெல்லவே பழனிமகா தலமுமாகும் வேதாந்த தலத்தினது கோர்வைசொல்வேன்
புல்லவே சதுரெட்டு திசைகள்நான்கு புகழான கோணமது வறுபத்துநான்கு
வெல்லவே கழுக்குன்ற பதிதானப்பா மேன்மையுள்ள தலமென்று செப்பலாமே
6924.
செப்பவென்றால் கோர்வையது என்னசொல்வேன் ஜெகதலத்தில் யாராலும் சொல்லப்போமோ
ஒப்பமுடன் இருபத்து நாலுமாகும் ஓகோகோ நாதாக்கள் மறைத்தகூத்து
எப்படியும் ஈரைந்தாய்ப் பதினாறாக எழிலான மண்டபமும் கூறலாகும்
தப்பிதங்கள் இல்லாமல் தயவுள்ளானே சாற்றுகிறேன் திருவொற்றி யூரைத்தானே
6925.
தானான துவாபரமாம் யுகத்திலப்பா தகமையுடன் பிரளயங்கள் வந்தபோது
கோனான திருவொற்றி யூர்தானப்பா கொற்றவனே கடலிலே நெடுந்தூரந்தான்
தேனான மாபுரமுங் கோபுரந்தான் தோறாமல் பிரளயங்கள் வந்துமல்லோ
மானான தலமதுவும் மூழ்கியல்லோ மன்னவனே சமுத்திரமும் மேவலாச்சே
6926.
மேவவென்றால் கோர்வையது என்னசொல்வேன் மேன்மையுள்ள நாற்பத்தி யெட்டேயாகும்
தாவுகட லலையதுவு மிஞ்சியேதான் சட்டமுடன் பூமியல்லோ முழுகலாச்சே
ஆவலுடன் குளிகைகொண்டு சென்றேனப்பா வப்பனே திருப்புவனங் கண்டேன்யானும்
நாவதனில் கூறுதற்கு நளினமில்லை நலமான தலமதுவும் மகிமையாச்சே
6927.
ஆச்சப்பா கோர்வையது என்னசொல்வேன் வப்பனே பதினெட்டு ரெண்டுபத்து
பாச்சலென்ற திருப்பழனி தலமுமாகும் பாங்கான மகிமையது என்னசொல்வேன்
மாச்சலென்ற கோர்வையது முப்பத்திரண்டு மகத்தான மண்டபமும் எட்டுநாலு
வீச்சுடனே குளிகைகொண்டு பார்த்துவந்தேன் விதக்கவே புலிப்பாணி இன்னங்கேளே
6928.
கேளப்பா பிணிதீர்த்த வைத்தியநாதர் கெடியான தலமென்ற தொன்றுவுண்டு
ஆளப்பா கோர்வையது என்னசொல்வேன் வப்பனே பதினாறு திக்குநாலு
யாளப்பா திருப்பரமாங் குன்றந்தானும் வளமையுள்ள கெடிஸ்தலமாம் அதற்குப்பேரு
சூளப்பா கோர்வையது என்னசொல்வேன் துப்புறவாய் இருமூன்று சதரமெட்டே
6929.
எட்டான திருவாரூர் என்னலாகும் எழிலான கோர்வையது என்னசொல்வேன்
சட்டமுடன் திருவாசல் அறுபத்துநான்கு தகமையுள்ள கலையாறு சத்தமெட்டு
திட்டமுடன் திருவிடையா மருதூரப்பா தேவதா தலமென்று செப்பலாகும்
வட்டமுடன் கோர்வையது வன்பத்தாறு வப்பனே பரிசமது நாலுதானே
6930.
நாலான திருவிருஞ்சி தலமுமப்பா நலமான மலைநாடு கள்ளர்தேசம்
பாலான கோர்வையது என்னசொல்வேன் பாங்கான விளையாட்டு சத்தமெட்டு
காலான திருச்சோழ தலமுமாகும் கருவான மகிமையது என்னசொல்வேன்
நூலான கோர்வையது நாலுபத்து நுட்பமுடன் கலையாறு பாசமெட்டே
6931.
எட்டான சேரனது தலமுமப்பா எழிலான மகிமையது என்னசொல்வேன்
மட்டான தலபதியின் மகிமைசொல்வேன் மகத்தான கோர்வையது தொண்ணூற்றாறு
திட்டமுடன் பாண்டியனார் தலமுமப்பா திகழான வைகைவள நாடேயாகும்
வட்டமுடன் கோர்வையது என்னசொல்வேன் வண்மையுள்ள கலைரெண்டு சோடசமுமேழே
6932.
ஏழான காசியது எட்டேயாகும் எழிலான மகிமையது என்னசொல்வேன்
பாழான கோர்வையது நூற்றிரண்டுபத்து சட்டமுடன் மகிமையது மெத்தவுண்டு
காழான நாகார்ச்சுன தலமுமாகும் கருவான கோர்வையது எழுபத்திரண்டு
தாழான டில்லியது மகிமைமெத்த தாக்கான கோர்வையது எண்பத்திரண்டே
6933.
ரெண்டான சீனபதி தன்னிற்சென்று எழிலான குளிகையது யானும்பூண்டு
குண்டலியாம் வாசிதனை பூட்டியல்லோ கொற்றவனே சீனபதி யானிருந்து
சண்டமா ருதம்போலே சிலநாட்சென்று சாங்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
வண்ணமுடன் தீர்த்தவரை காணுதற்கு வளமுடனே சென்றதொரு மகிமைபாரே
6934.
பாரேதான் படிகமாந் தீர்த்தங்கண்டேன் பாங்கான ஜம்புவென்ற தீர்த்தங்கண்டேன்
நேரேதான் செந்தாமரை தீர்த்தங்கண்டேன் நெடிதான மனோன்மணியாள் தீர்த்தங்கண்டேன்
கூரேதான் மஹேஸ்வரனார் தீர்த்தங்கண்டேன் குறிப்பான மச்சமென்ற தீர்த்தங்கண்டேன்
சீரேதான் மானிடவ தீர்த்தங்கண்டேன் சிறப்பான கோபருவ தீர்த்தங்கண்டேனே
6935.
காணவே பட்சியென்ற தீர்த்தங்கண்டேன் கருவான சங்லினுட தீர்த்தங்கண்டேன்
பூணவே சந்தனமாந் தீர்த்தங்கண்டேன் புகழான வியாசமுனி தீர்த்தங் கண்டேன்
மாணவே மகதேவர் தீர்த்தங்கண்டேன் மகத்தான பச்சையென்ற தீர்த்தங்கண்டேன்
கோணவே திருப்பாலின் தீர்த்தங்கண்டேன் தோறாத வண்டூரன் தீர்த்தமாமே
6936.
தீர்த்தமாங் கரியமால் தீர்த்தங்கண்டேன் திறமான நாகேஸ்வர தீர்த்தங்கண்டேன்
பூர்த்தியாய் பரமசிவ தீர்த்தங்கண்டேன் புகழான பாகவத தீர்த்தங்கண்டேன்
கீர்த்தியுள்ள செங்கண்மால் தீர்த்தங்கண்டேன் கெடியான புண்ணியத் தீர்த்தங்கண்டேன்
பார்த்தேனே சடாயுவென்ற தீர்த்தங்கண்டேன் பாங்கான வச்சிரவல்லி தீர்த்தந்தானே
6937.
தானான குசலமென்ற தீர்த்தங்கண்டேன் தாக்கான யமுனையென்ற தீர்த்தங்கண்டேன்
கோனான வகஸ்தியனார் தீர்த்தங்கண்டேன் குணமான வன்னியனார் தீர்த்தங்கண்டேன்
தேனான மல்லியென்ற தீர்த்தங்கண்டேன் தெளிவான வனுமாரின் தீர்த்தங்கண்டேன்
பானான காசியென்ற தீர்த்தங்கண்டேன் பாங்கான கைலங்கிரி தீர்த்தம்பாரே
6938.
பாரேதான் செண்பகத்தின் தீர்த்தங்கண்டேன் பாங்கான கைகேசி தீர்த்தங்கண்டேன்
நேரேதான் கறுப்பண்ணர் தீர்த்தங்கண்டேன் நெடிதான கிட்கிந்தா தீர்த்தங்கண்டேன்
கூரேதான் அஷ்டமென்ற தீர்த்தங் கண்டேன் குணமான ஜெகமோகினி தீர்த்தங்கண்டேன்
திரேதாயின் திருவல்லி தீர்த்தங்கண்டேன் திறமான கற்பத்தின் தீர்த்தங்கண்டேனே
6939.
காணவே இன்னம்வெகு தீர்த்தமுண்டு கண்மணியே விலாடமென்ற தீர்த்தங்கண்டேன்
பூணவே இரணியனார் தீர்த்தங்கண்டேன் புகழான புஜண்டரிட தீர்த்தங்கண்டேன்
வேணபடி திருமாலின் தீர்த்தங்கண்டேன் விருளான கும்பமென்ற தீர்த்தங்கண்டேன்
நீணவே காளிங்க தீர்த்தங்கண்டேன் நிஷ்களங்க சொர்ணமென்ற தீர்த்தந்தானே
6940.
தானான தீர்த்தமது என்னசொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி தம்பிரானே
மானான தாமரையின் தீர்த்தங்கண்டேன் மகத்தான ஞானமென்ற தீர்த்தங்கண்டேன்
வேனான யாதவமாந் தீர்த்தங்கண்டேன் வெளியான வமுர்தமென்ற தீர்த்தங்கண்டேன்
பானான வசுவனியாந் தீர்த்தங்கண்டேன் பாங்கான வற்புதமாம் தீர்த்தமாமே
6941.
ஆமேதான் புலிப்பாணி யன்புள்ளானே வப்பனே வனாகதத்தின் தீர்த்தங்கண்டேன்
நாமேதான் காலாங்கி நாதர்தம்மால் நலமான குளிகையது பூண்டுகொண்டு
தாமேதான் காலாங்கி சொன்னநீதி தண்மையுடன் வாக்கதுவும் செய்யாமற்றான்
போமேதான் அஷ்டதிசை யான்கடந்து பொங்கமுடன் தீர்த்தமதைக் கண்டிட்டேனே
6942.
கண்டேனே வெகுகோடி தீர்த்தந்தன்னை காசினியில் ஆர்கண்டார் என்னைப்போல
உண்டான சித்துமுனி ரிஷிகள்தேவர் வுலகமெலாம் குளிகைகொண்டு சென்றதுண்டே
ஒண்டொடியாய் மரம்பொந்து சமாதிபீடம் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
சண்டமா ருதம்போலே குளிகைபூண்டு சட்டமுடன் அஷ்டதிசை கண்டிட்டேனே
6943.
இட்டேனே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் யெளிதான நாதாந்த சித்துதாமும்
பட்டமாம் விட்டலவோ பாரின்மீது பாருலகில் அதிசயத்தைக் கண்டிதில்லை
விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் வேதாந்தத் தாயினது மகத்துவத்தால்
சட்டமுடன் வையகத்து மகிமையெல்லாம் தாரணியில் கண்டறிந்த மகிமைபாரே
6944.
புதுமையாம் வெகுகோடி சித்தர்தாமும் புகழான வுலகுதனில் கோடாகோடி
கதுமையுள்ள தேவரிஷி இருந்தாரல்லோ காசினியில் அதிசயங்கள் கண்டேனென்றும்
பதுமைமுகம் அஷ்டதிக்கு பரிசம்யாவும் பார்த்துவந்த வுறுதியதும் கூறவில்லை
வதுவைபுரி சுரக்காயங் கரிக்காயென்ற வார்த்தையது போலலைவாய் நவின்றிட்டாரே
6945.
நவின்றாரே சித்துமுனி கோடாகோடி நாற்பத்து எட்டுலட்ச கிரந்தந்தன்னை
குவின்றதொரு சாத்திரங்கள் மலைபோலாக குணமுடனே பாடிவைத்தார் லக்கோயில்லை
கவிந்ததொரு குறுக்குவழி சுறுக்குமார்க்கம் கண்டுமனது வந்தல்லோ வுளவாராய்ந்து
அவிந்ததொரு விளக்கதனை ஏற்றினார்போல் வப்பனே சத்தகாண்டம் பாடினேனே
6946.
பாடினேன் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாலகனே புலிப்பாணி பகரக்கேளாய்
நீடியதோர் காலாங்கி கிருபையாலே நீதியுடன் நெடுங்கால மிருந்தேனங்கே
தேடியே காலாங்கி நாதர்தாமும் தேற்றமுடன் தன்தனக்கு உகந்தசீஷன்
நாடியே வேண்டுமென்று நன்மையாலே நானவற்கு நற்சீஷ னாகினேனே
6947.
ஆகினேன் நெடுங்காலம் பணிதிசெய்து வப்பனே சமாதிக்குப் பூசைசெய்தேன்
பாலில்விழும் ஈயைப்போல பரிதவித்தேன் பட்சமுடன் என்மீதில் மனதுவந்து
சாகின்ற சடலமது காயந்தந்து சட்டமுடன் எந்தனுக்கு இதவுகூறி
மேதிடவே ஞானோப தேசஞ்சொல்லி மேன்மையுடன் எந்தனை யாசீர்மித்தாரே
6948.
எந்தனையும் ஆசீர்மம் மிகவுஞ்செய்து எழிலான வுபதேச வுண்மைகூறி
அந்தமுடன் ஆதியந்த முடிவுஞ்சொல்லி வப்பனே யோகமென்ற வழியுங்காட்டி
விந்தையுடன் வையகத்து மகிமைகூறி விட்டகுறை யாவனைத்து மொழிந்துமல்லோ
சொந்தமுடன் எந்நாளும் சீஷனாக்கி சுந்தரனே மகத்துவங்கள் கூறினாரே
6949.
கூறினார் வெகுகோடி இதிகாசங்கள் கொற்றவனே சமாதிமுறை பாடுஞ்சொல்லி
தேறியே சிலகாலம் அங்கிருந்து தேற்றமுடன் வையகத்து வதிசயங்கள்
மீறியே தானுணர்ந்து குளிகைபூண்டு மிக்கான நாடுபதி தேசமெல்லாம்
கோறியே தேசமெல்லாம் மகிதம்பூண்டு கொற்றவனே எந்தனுக்கு வருள்தந்தாரே
6950.
தந்தாரே எந்தனுக்குக் கோடியாக சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும்
அந்தமுடன் எந்தனுக்கு வதிதமார்க்கம் வப்பனே தாமுரைத்துப் போகவென்று
இந்தமா னிலத்திலுள்ள மகிமையெல்லாம் ஏற்றமுள்ள குளிகையினால் அறிந்துகொண்டு
விந்தையுடன் பாடிவைப்பேன் சத்தகாண்டம் விண்ணுலகம் மண்ணுலகம் விடங்கொள்ளாதே
6951.
கொள்ளாது போகரே ழாயிரந்தான் கொற்றவனே நாதாக்கள் கூறவில்லை
எள்ளளவும் பிசகாது இந்நூலப்பா யிணையான நூலுக்கு எதுவேதென்றால்
கள்ளமிலாக் கும்பமுனி சொன்னநூலாம் காசினியில் பெருநூலாம் பேதமுண்டோ
தள்ளளவுந் தான்போகாத காண்டமப்பா தருவான பன்னீ ராயிரந்தானே
6952.
பன்னீராயிரம் என்னும் நூல்தானப்பா பயிலான காண்டமது பனிரெண்டுமாகும்
சொன்னமொழி தவறாது துய்யபாலா துகளகற்றி பன்னீராயிரந்தான் சொன்னார்
கன்னியமாய்ப் பன்னிரண்டு காண்டஞ்சொன்னார் கண்மணியே வாயிரத்துக் கொருகாண்டந்தான்
உன்னிதமாய் இந்நூலுக்கு உவமைகூறி வுத்தமனார் பாடிவைத்தார் உண்மைதானே
6953.
உண்மையாம் எந்நூலைக் கண்டறிந்து வுத்தமனே கும்பமுனி நூலைப்பாரு
திண்ணமுடன் பனிரெண்டு காண்டம்பாரு தீர்க்கமுடன் ரகசியங்கள் எல்லாம்விள்ளும்
நன்மைபெற மோட்சவழி கதியேகொள்வார் நாதாந்த கும்பமுனி முன்னேநிற்பார்
தண்மையுள்ள சாத்திரந்தான் பெருநூலப்பா தகமையுள்ள பனிரெண்டு காண்டம்பாரே
6954.
பாரேதான் அகஸ்தியனார் கோடிநூல்கள் பாருலகில் பாடிவைத்தார் மறைப்புமெத்த
நேரேதான் பெருநூலின் மார்க்கமெல்லாம் நேர்மையுள்ள வென்னூல்போல் விள்ளலாகும்
சீரேதான் பனிரெண்டு காண்டமாக சிறப்புடனே பாடிவைத்தார் புலஸ்தியற்கு
வேரேதான் சாஸ்திரங்கள் பார்ப்பதுண்டோ பார்த்தாலும் பெருநூலுக் கொவ்வாதன்றே
6955.
அன்றான சாத்திரங்கள் அனந்தங்கோடி வளவில்லா சூத்திரங்கள் கணக்கோயில்லை
குன்றான மலைபோலே குவித்துவைத்தார் கொடிதான சாத்திரத்தின் மகிமையெல்லாம்
தென்றிசையில் கும்பமுனி செய்தநூல்கள் தேசத்தில் பாதியுண்டு ஆயுர்வேதம்
வென்றிடவே பதினெண்பேர் செய்தநூல்கள் வேட்கமுடன் மறுபாதி என்னலாமே
6956.
என்னவே கும்பமுனி என்றநாமம் எழிலான வகஸ்தியரின் நாமமாகும்
பன்னவே யகஸ்தியனார் யென்றநாமம் பலபலவாஞ் சாத்திரத்தில் முறைபாடாக
துன்னவே கும்பமுனி யென்றுமேதான் துப்புரவாய் எப்போதும் வழக்கம்பாரு
சொன்னதொரு நூல்களிலே மகிமைகோடி தோறாமல் பாடிவைத்தார் முனிவர்தாமே
6957.
முனியான சாத்திரங்கள் பலநூல்கோர்வை மூதுலகில் பாடிவைத்தார் சித்தரெல்லாம்
கனியான நவகனியாம் நூல்தானப்பா கருத்துடனே பனிரெண்டு காண்டஞ்சொன்னார்
பனியதுதான் சூரியனைக் கண்டாற்போல பறக்குமடா பனிரெண்டு காண்டமுன்னே
தொனிபோன்ற சாத்திரங்கள் களவுமார்க்கம் துப்புரவாய்க் காவியத்துக் கொவ்வாதன்றே
6958.
அன்றான சாத்திரமாங் கோர்வையப்பா வப்பனே பனிரெண்டு காண்டஞ்சொன்னார்
குன்றான மலைபோலே கோடித்தங்கம் கொட்டினார் பனிரெண்டு காண்டத்துள்ளே
சென்றிடவே வைத்தியமும் வாதமார்க்கம் செயலான யோகமுதல் ஞானமார்க்கம்
வென்றிடவே மாந்திரீக மாரணவேதம் வேண்டியதோர் கருமானம் மிகவுண்டாமே
6959.
உண்டான சாத்திரத்தில் இல்லாமார்க்கம் வுத்தமனே பெருநூலிற் காணலாகும்
கண்டாலும் விடுவாரோ பெருநூலப்பா காசினியில் பனிரெண்டு காண்டந்தன்னை
விண்டதொரு பொருளெல்லாம் அதிலேதோயும் வித்தகனே மற்றோர்நூல் காண்பதில்லை
சண்டமா ருதம்போலே பனிரெண்டுகாண்டம் சங்கையற வாயிரத்துக் கொருகாண்டந்தானே
6960.
சங்கையில்லா பெருநூலை பார்த்தபேர்கள் சாயுச்சிய பதவிதனைப் பெறவேயாகும்
இங்கிதமாய்ப் பெருநூலைப் பார்க்காமாண்பர் எழிலான சாலோக சாபமீந்தான்
அங்கமுடன் சாரூப பதவிமூன்றும் வப்பனே கிட்டுவதும் அரிதேயாகும்
புங்கசித்தி எட்டுவித போகந்தன்னை புகழுடனே பெருநூலோர் காண்பார்தானே
6961.
தானான இன்னமொரு தண்மைசொல்வேன் தாக்கான புலிப்பாணி தயவுள்ளானே
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனே எந்தனுக்குச் சொன்னநீதி
பானான பார்லோக மிடங்கொள்ளாது பாலகனே சொல்வதற்கு நாளுமில்லை
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் கோடிமுறை சொல்வேன்பாரே
6962.
பாரேதான் கலியுகம் பிறக்கலாச்சு பாலகனே சத்தியமும் விழலாய்ப்போச்சு
ஆரேதான் உனக்கு மதிசொல்வார் அப்பனே யுபதேசம் பெற்றமட்டும்
பேரிருக்க வூரிருக்க பிதாவிருக்க பேரான மகுத்துவத்தை வெளியிடாதே
சீரழிந்த மாண்பரெல்லாஞ் ஜெனிப்பாரப்பா ஜெகதலத்தில் கருமியென்ற கோடிபேரே
6963.
கோடியாம் நல்லவர்போ லிருப்பாரப்பா கொற்றவனே யுந்தனுக்கு யுபதேசித்த
தேடியதோர் பொருளப்பா சத்தகாண்டம் தெளிவான யேழாயிரங் காவியத்தை
பாடியே யுந்தனுக்கு தத்தமாக பட்சமுடன் யான்கொடுத்த பெருநூலப்பா
வாடியே மயங்காதே மனம்விடாதே மதிகெட்டு நில்லாதே நூல்கொடாதே
6964.
கொடுத்தாலும் விதியாளி பார்த்தறிந்து கொற்றவனே கொடுத்தாலும் புண்ணியமெய்தும்
கெடுத்ததொரு குடிகெடுக்கும் பாவிகட்கும் கெடியான சண்டாள மாண்பருக்கும்
அடுத்துறவு நயம்பேசி புரணிகூறும் வனியாயக் காரருக்கும் வறிவிலார்க்கும்
தொடுத்ததொரு பெருநூலாஞ் சத்தகாண்டம் துப்புரவாய்க் கொடுத்தாலே பாவமாமே
6965.
பாவமாம் நூலதனைப் பதனம்பண்ணு பாலகனே சமாதிமுகம் வைத்துப்போற்று
ஆவலுடன் விதியாளி வந்துகேட்டால் வப்பனே நீகொடுத்து மதிகள்கூறு
சாவதுவும் தலைமேலே இருக்குமப்பா சாங்கமுடன் நூல்கொடுத்தால் மெத்தநன்று
போவதுமெய் இருப்பதுபொய் என்றவாக்கியம் பொங்கமுடன் வேதமது நுணுக்கமாமே
6966.
வேதங்கள் நுணுக்கறிந்து யீயாவிட்டால் வெகுபாவம் வெகுசாபம் நரகமெய்தும்
நீதமுடன் பரிசுத்த வாளருக்கு நீதியுடன் கொடுப்பதுவே கர்மமாகும்
தோதமுடன் விதியாளி வந்துகேட்டால் தோறாமல் சமாதிமுகம் இருந்தநூலை
ஆதவமாம் அருளினது விசுவாசத்தால் வப்பனே நூல்கொடுத்து மதிகள்கூறே
6967.
கூறவென்றால் புலிப்பாணி குணமுள்ளானே கொற்றவனே கலியுகமும் பிறந்துபோச்சு
மாறலுடன் வையகத்தில் வெகுபாடப்பா மாண்பர்களும் வெகுகேடு படுவாரப்பா
சீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிதமார்க்கம்
மீறவே தானடக்குங் கலியுகத்தில் மிக்கான வுண்மையது வறிந்துகொள்ளே
6968.
கொள்ளப்பா யொருவரையும் நம்பவேண்டாம் கொற்றவனே கலியுகத்தில் அனியாயங்கள்
தள்ளவே போகாது தரணிமீதில் சட்டமுடன் அனேகவித தெய்வமென்பார்
விள்ளவே விசுவாசம் பாவமுண்டு வித்தகனே யனேகவித சாத்திரங்கள்
உள்ளபடி கூறுவார் மாந்தரப்பா வுத்தமனே மயங்காதே புத்திவானே
6969.
புத்தியாய் கலியுகத்தில் சிலதுகாலம் புகழுடனே தாமிருந்து சமாதிகொள்வாய்
சத்தியத்தைத் தவறாதே தம்பிரானே சதகோடி சூரியன்போல் ஞானங்கொள்ளு
வித்தகனே விற்பனனே விண்ணுள்ளானே விட்டகுறை நேருமட்டும் வையகத்தில்
புத்தியாய் நெடுங்காலந் தாமிருந்து புண்ணியனே சமாதிமுகம் புரிவீர்தானே
6970.
தானான புலிப்பாணி தகமையோனே தாக்கான என்தேவர் சொன்னநீதி
கோனான காலாங்கி வாக்குபோலே கொற்றவனே சமாதிமுகஞ் செல்வேனப்பா
மானான மனோன்மணியாள் கடாட்சத்தாலும் மகதேவர் காலாங்கி கிருபையாலும்
பானான பாரிலுள்ளோர் புண்ணியத்தால் பாலகனே சமாதிமுகஞ் செல்வேன்தானே
6971.
செல்கவென்றால் எந்தன்முறை பாடுபோலே ஜெகதலத்தில் சிலகாலம் நீரிருந்து
புல்கவே வையகத்தைத் தான்மறந்து புகழான சமாதிமுகம் ஏவநன்று
வில்கவே கலியுகத்தில் இருந்துமென்ன விட்டகுறை இருந்தாலும் என்னலாபம்
அல்லலது நெடுநாளு மிருந்தாலுந்தான் வப்பனே தேகமது மண்ணாய்போமே
6972.
மண்ணான தேகமது இருந்துமென்ன மகிதலத்தில் நெடுங்காலம் வாழ்ந்துமென்ன
வண்ணமுடன் கலியுகத்தில் அனியாயங்கள் வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு
எண்ணமது கலியுகத்து மாண்பருக்கு எழிலான கோடிமுறை தத்துவங்கள்
கண்ணவிந்த மாண்பரப்பா கலியுகத்தார் காசினியை மறப்பதுவும் மெத்தநன்றே
6973.
நன்றான காசினியை மறந்துமல்லோ நான்போகுஞ் சமாதிமுகந் தன்னைப்போல
குன்றான கலியுகத்தில் நீயுமப்பா கொற்றவனே சமாதிமுகஞ் செல்கநன்று
என்றைக்கும் வையகத்தின் வாழ்க்கையெல்லாம் எழிலுடனே மறப்பதுவும் மெத்தநன்று
தென்றிசையில் கும்பமுனி சமாதிபக்கல் தேற்றமுடன் சமாதிமுகங் கொள்வீர்தானே
6974.
தானான வகஸ்தியர்க்கு சரணஞ்சொன்னேன் தாக்கான வவர்பாதம் போற்றிபோற்றி
கோனான வரரிஷியார் தாள்பணிந்தேன் கொற்றவனே யவர்பாதம் போற்றிபோற்றி
தொழுதுமே சிவவாக்கியர் சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
விழுந்துமே நந்தீசர் சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே
6975.
தொழுதேனே ரோமரிஷி சரணஞ்சொன்னேன் தோறாமல் அவர்பாதம் பணிந்துபோற்றி
பழுதுபடா மச்சமுனி சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதம் போற்றிபோற்றி
தொழுதுமே சிவவாக்கியர் சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
விழுந்துமே நந்தீசர் சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே
6976.
பணிந்தேனே தன்வந்திரி சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதந் தொழுதுபோற்றி
அணியான ராமருக்குச் சரணஞ்சொன்னேன் வப்பனே யவர்பாதம் போற்றிபோற்றி
துணிந்துமே கௌபாலர் தாள்பணிந்தேன் துப்புரவாய்ச் சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
மணியான சுந்தரா னந்தருக்கு மகத்தான சரணங்கள் போற்றிதானே
6977.
போற்றியே தேறையர் சரணஞ்சொன்னேன் புகழுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
ஆற்றலுடன் பூதனா நந்தருக்கு வப்பனே யவர்பாதந் தொழுதுபோற்றி
மாற்றலுடன் புண்ணாக்கு ஈசருக்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
தேற்றமுடன் இடைக்காடர் சரணஞ்சொன்னேன் தெளிவுடனே யவர்பாதந் தொழுதேன்தானே
6978.
தானான டமரகா னந்தருக்கு தண்மையுடன் மிகநோக்கி சரணஞ்சொன்னேன்
கோனான தட்சணா நாயருக்கு கோடிமுறை சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
பானான வகப்பேய் சித்தருக்கு பட்சமுடன் வெகுகோடி சரணஞ்சொன்னேன்
மானான யாக்கோபு பாதம்போற்றி மார்க்கமுடன் சரணங்கள் கூறினேனே
6979.
கூறினேன் குறும்பரென்ற சித்தருக்கு கோடான கோடியது சரணஞ்சொன்னேன்
தேறியே யவர்பாதந் தொழுதுபோற்றி தேற்றமுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
மாறுபடா சோதியென்ற முனிவருக்கு மகத்தான சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
ஆறுநதி தீர்த்தமது கொண்டுமல்லோ வவர்பாதம் அர்ச்சனைகள் செய்திட்டேனே
6980.
செய்தேனே யின்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி செல்லவானே
துய்யநல்ல வூர்வசியாள் சரணஞ்சொன்னேன் துப்புரவாய் என்மீதிற் கடாட்சம்வைத்து
வெய்யபுகழ் காலாங்கி கடாட்சத்தாலே விருப்பமுடன் என்மீதில் மனதுவந்து
தையலெனும் வூர்வசியாள் கடாட்சத்தாலே சட்டமுடன் சத்தகாண்டம் பாடினேனே
6981.
பாடினேன் புலிப்பாணி மைந்தாகேளு பாலகனே வியாசமுனி நாதருக்கு
தேடியே யவர்பாதந் தொழுதேனப்பா தேற்றமுடன் சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
கூடியே கௌதம ரிஷியாரின்தன் கொற்றவனே யவர்பாதந் தொழுதுபோற்றி
நீடியே வஞ்சலிகள் மிகவுஞ்செய்து நீதியுடன் அவர்பதத்தை பணிந்திட்டேனே
6982.
இட்டேனே திருமூலர் சரணஞ்சொன்னேன் எழிலுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
சட்டமுடன் பாம்பாட்டி சித்தருக்கு சதகோடி நமஸ்காரம் செய்தேன்யானும்
திட்டமுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி தீர்க்கமுடன் மேலுமஞ்சலிகள் செய்தேன்
பட்டமுடன் கடுவெளியார் சித்தருக்கு பாலகனே நமஸ்காரஞ் செய்தேன்பாரே
6983.
பாரேதான் கமலமென்ற முனியாருக்கு பட்சமுடன் சதகோடி சரணஞ்சொன்னேன்
சீரேதான் அவர்பாதந் தொழுதுபோற்றி சிறப்புடனே வஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
நேரேதான் கைலாச ரிஷியாருக்கு நேர்மையுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
கூரேதான் நமஸ்காரம் மிகவுஞ்சொன்னேன் கொற்றவனே புலிப்பாணி பண்புள்ளானே
6984.
பண்பான வஞ்சனமாம் ரிஷியாருக்கு பாலகனே சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
நண்புடனே தான்பணிந்து முடிகள்சாய்த்து நன்மையுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
வண்பான நவகண்டர் பாதம்போற்றி வளமுடனே யவர்தனக்கு சரணஞ்சொன்னேன்
திண்பான வஞ்சலிகள் மிகவுஞ்செய்து தீர்க்கமுடன் கரங்குவித்து வணங்கினேனே
6985.
வணங்கவே இன்னம்வெகு சித்தருண்டு வளமான நாதாந்த ரிஷியாரப்பா
இணங்கினேன் ஜமதக்னி முனியாருக்கு எழிலான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
சுணங்கமது வாராமல் ரிஷியாருக்கு சுத்தமுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
மணங்கமழுந் திரணாக்கிய முனிவருக்கு மார்க்கமுடன் அவர்பாதந் தொழுதிட்டேனே
6986.
தொழுதேனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தொல்லையெனும் பிறவியது மயக்கறுத்த
பழுதுபடா புலிப்பாணி பகர்வேனப்பா பாலகனே இன்னம்வெகு சித்தருண்டு
முழுதுமே மூதுலகில் கீர்த்திபெற்ற முனையான வசுவினியாந் தேவருக்கு
தொழுதுமே யவர்பாதம் போற்றிபோற்றி தோற்றமுடன் அஞ்சலிகள் பகருவேனே
6987.
பகரவே புஜண்டமகா ரிஷியாருக்கு பண்புடனே வெகுகோடி சரணஞ்சொன்னேன்
நிகரவே யவர்பாதந் தொழுதுபோற்றி நீதியுடன் தலைகுனிந்து முடிகள்சாய்த்தேன்
சகராஜ பரிட்சித்து மன்னனுக்கு சட்டமுடன் சோதிடங்கள் தாமுரைத்த
சுகரென்ற ரிஷியார்க்குச் சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் பணிந்திட்டேனே
6988.
பணிந்தேனே பலிப்பாணி மன்னவாகேள் பாருலகில் கும்பமென்ற யீசருக்கு
துணிந்துமே யவர்பாதந் தொழுதுபோற்றி துப்புரவாய் சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
கணிதமென்ற மூலத்தின் ஈசருக்கு கனகாபி ஷேகமுடன் சரணஞ்சொன்னேன்
மணிபோன்ற பாதமதைத் தொழுதுபோற்றி மன்னவனே சதாகாலம் நினைப்பேன்காணே
6989.
காணவே கருவூரார் சித்தருக்கு கனகாபி ஷேகமது மிகவுஞ்செய்து
தோணவே யவர்தனக்கு சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் போற்றிபோற்றி
மாணமருங் கல்வியுள்ள கொங்கணர்க்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
நீணவே வாலையா னந்தருக்கு நீதியுடன் பாதமது பணிந்தேன்தானே
6990.
தானான புலஸ்தியர்க்கு சரணஞ்சொன்னேன் தாக்கான வால்மீகர் பாதம்போற்றி
கோனான சுப்பிரமணியர் சரணஞ்சொன்னேன் கூரான வவர்பாதந் தொழுதுபோற்றி
தேனான ஜெயகண்டி பாதம்போற்றி செங்கமல வள்ளுவனார் சரணஞ்சொன்னேன்
மானான மகதேவர் காலதூதர் மகத்தான பாதமது பணிந்திட்டேனே
6991.
இட்டேனே நவகோடி ரிஷியாருக்கு எழிலான பதினெண்பேர் சித்தருக்கும்
சட்டமுடன் நாற்பத்தி எட்டுபேர்கள் சதுரான முனிவருக்கு சரணஞ்சொன்னேன்
திட்டமுடன் மனோன்மணியாள் பாதம்போற்றி திகழான சுடரொளியாஞ் சோதிபோற்றி
அட்டதிசை தான்புகழுங் காலாங்கிநாதர் வையனே யுன்பாதம் போற்றிதானே
6992.
தானான சித்துமகா ரிஷியாருக்கு தண்மையுள்ள மனுவொன்று சொல்வேனப்பா
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் சீனபதி தேசந்தன்னில்
மானான வையகத்து மகிமையெல்லாம் மார்க்கமுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
பானான சதகோடி சூரியன்போல் பாடினேன் சத்தகாண்டம் பண்பாய்த்தானே
6993.
பண்பான லோகவதி சயங்களெல்லாம் பாருலகில் நாதாக்கள் மறைத்ததாலே
நண்பான மாண்பர்களும் பிழைக்கவேதான் நலமான புலிப்பாணி பாலனுக்கு
திண்ணமுடன் இதிகாச வித்தையெல்லாம் தீர்க்கமுடன் சத்தசாக ரத்தைப்போலே
உண்மையாம் போகரே ழாயிரந்தான் வுகமையுடன் பாடிவைத்தேன் காண்டம்பாரே
6994.
பாரேதான் மகுத்துவங்கள் வெளியாச்சென்று பண்புள்ள நாதாக்கள் நீங்களெல்லாம்
வேரேதான் கோபமது கொள்ளாமற்றான் வேழ்க்கமுடன் எந்தன்மேல் கிருபைவைத்து
சீரேதான் சிறுபாலன் என்னையுந்தான் சிறப்புடனே மனதுவந்து வஞ்சலித்து
நேரேதான் என்மீதிற் சினங்கொள்ளாமல் நேர்மையுடன் கொண்டணைத்தல் பாரமாமே
6995.
பாரமாம் எந்நூலிற் துகளுண்டானால் பாலகனே சிக்கறுத்து மனங்களித்து
தூரான வார்த்தையது மிகக்கொள்ளாமல் துப்புரவாய்ச் செந்தமிழைச் சீர்திருத்தி
கூறான விதிபாடு முறைபாடோடு குணபாடு வழிபாடு தானமர்த்தி
சீறான போகரே ழாயிரத்தை சிறப்புடனே யுகந்துமனங் கொள்வீர்தாமே
6996.
தாமான சித்துமுனி ரிஷியார்முன்னே தகமையுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
ஆமேதான் பசுங்கிள்ளை முன்னே வப்பனே யருங்காக்கை சத்தம்போலும்
வேமேதான் செந்தமிழாற் சித்தர்முன்னே வேட்கையுடன் யான்செய்த சத்தகாண்டம்
தாமேதான் புல்லறிவா லுரைத்ததாலே தண்மையுடன் பெரியோர் புன்னகையுமாமே
6997.
நகையான போகரே ழாயிரந்தான் நலமான சித்தர்முனி நாதருக்கு
தகமையுள்ள காண்டமது பெருமையோசொல் தாரணியில் அனேகம்பேர் சித்தர்கூடி
குகைதனிலே வெகுநூல்கள் பாடியல்லோ கொற்றவனே சமாதிமுகம் வைத்தாரப்பா
வகையான சாத்திரத்துக் கொப்புசொல்ல வல்லவனே எந்நாளும் முடியாதன்றே
6998.
அன்றான ஆதிசேடன் தன்னினாலும் வப்பனே வினவிடவும் போகாதப்பா
குன்றான மலைபோலே சாத்திரங்கள் கொட்டினார் சித்தரெல்லாம் லக்கோயில்லை
வென்றிடவே கும்பமுனி வர்க்கத்தோரும் வேதாந்த திருமூல வர்க்கத்தோரும்
நன்றாகப் பாடிவைத்தார் கோடிநூல்கள் நலமாகப் பாடிவைத்தேன் இந்நூலாமே
6999.
சின்னூலாம் என்றதொரு இந்தநூலை சினமதுவுங் கொள்ளாமல் மனதுவந்து
பன்னூலும் பெருநூலா யிருந்திட்டாலும் பட்சமுடன் மனங்களித்து வாசீர்மித்து
என்னூலைக் குற்றமது கூறாமற்றான் எழிலான சிறியேன்மேல் அன்புகூர்ந்து
நன்னூலா யிதம்பூண்டு யின்னூல்தன்னை நன்மையுடன் அனுசரித்து கொள்ளநன்றே
7000.
கொள்ளவே போகரே ழாயிரந்தான் கொற்றவனே நெடுங்காலந் தவமிருந்து
உள்ளபடி யுடல்பொருள்கள் ஆவியெல்லாம் வுத்தமனே இந்நூலுக் கொப்பிவைத்தேன்
கள்ளமிலா சாத்திரமாம் சத்தகாண்டம் கலியுகத்தார் தான்பிழைக்க பாடிவைத்தேன்
உள்ளபடி சாபமது இந்நூற்கில்லை வுத்தமனே காண்டமது யேழுதானே
7001.
தானான காண்டமது ஏழுக்குள்ளே சதகோடி சூரியன்போல் மகத்துவங்கள்
கோனான காலாங்கி கடாட்சத்தாலே கொற்றவனே பெருநூலாம் குருநூலாக
தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேஜொளிவின் சின்மயத்தின் அருளினாலும்
மானான போகரே ழாயிரந்தான் மார்க்கமுடன் பெருநூலும் முற்றதாமே



ஒவ்வொரு இல்லத்திலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய நூல் "போகர் 7000"
*********************
*போகர் ஏழாயிரம்*
*********************
போகர் எழுதியிருக்கும் நூல்களில் மிகவும் புகழ் வாய்ந்த நூல் "போகர் ஏழாயிரம்"
ஆகும்.
இந்த "போகர் 7000" நூலை, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, சல்லி சல்லியாகச் சலித்து, மிகத் துல்லியமாக ஆராய்ந்து,
சக்கையாகப் பிழிந்து சாறெடுத்து, 176 பக்கங்களில், வழிய வழிய நிரப்பப்பட்டிருக்கும்
புத்தகமே, "போகர் 7000" ஆகும்.
ஆன்மீக அன்பர்கள், சிவனடியார்கள்,
சித்தர்களைக் குருவாகக் கொண்டு வணங்கி,
வாழ்ந்து வருபவர்கள், பழனி மலையில், நவ
பாசாணத்தால், தண்டாயுதபாணி முருகரை
தாபித்த, போகர் சித்தரைப் போற்றி வணங்கும் அன்பர்கள்....
சித்த மருத்துவர்கள், மூலிகை
ஆராய்ச்சியாளர்கள், அதிசயமான -அபூர்வமான மூலிகைகளைத் தேடிக்கொண்டிருப்பவர்கள்,
அதிசயமான -அபூர்வமான மூலிகைகளைப்
பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், ரசமணி-ரசவாதம் செய்து கொண்டிருப்பவர்கள்,
மற்றும் ரசமணி -ரசவாதத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகிய....
ஒவ்வொருவரும் படித்தே ஆகவேண்டிய - ஒவ்வொருவர் இல்லத்திலும் கண்டிப்பாக
இருந்தே ஆக வேண்டிய, இந்த "போகர் 7000"
via Shankar








நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 


                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||