Wednesday, May 8, 2019

வெங்காயத்தின் ஆற்றல்

இந்தக் கட்டுரை தொடர் ஆய்வுக்குரிது என்பதைக் கூறிக்கொள்கிறோம்

வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைத்த ஏழை குடும்பத்தினால் ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! வியக்க வைத்த ஆச்சரியம்! ஆனால் இவ்வாய்வு இன்னும் விஞஞான ரீதியாக ஏறறுக்கொள்ளப்படவில்லை.

Scientific report: Both garlic and onions exert their effects on human health via multiple different functions, including antioxidant, anti-inflammatory, and antibacterial properties. The organosulphur compounds in these spices scavenge oxidizing agents, inhibit the oxidation of fatty acids, thereby preventing the formation of pro-inflammatory messengers, and inhibit bacterial growth, via interaction with sulphur-containing enzymes. However, the fact that onions may hold some demonstrable medicinal properties, does not in any way validate the fanciful notion that an onion can collect and store bacteria and viruses in a room.

அந்த அரிந்த வெங்காயத்தில் எக்கச்சக்க பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த மருத்துவ ஆய்வாளர்கள், வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து, ஆய்வு செய்ததில், அந்த வெங்காயமானது அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றை ஈர்த்து தன்னுள் வைத்து கொள்வதாக தெரிய வந்தது. இதனால் தான் அந்த விவசாயின் குடும்பம் ஆரோக்கியமாக இருந்ததும் தெரிய வந்தது.

பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம்.


இந்த வெங்காயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மாற்றமடைந்ததாக இல்லை என்பது தான் உண்மை.

இந்த பகுதியில் வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்.

1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் யோசித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு ஏழை விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.


எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர்.

மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள்.

ஒரு முறை அந்த ஏழை விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை.

பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு தூண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எடுத்து எரிந்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.

ஆச்சரியம்!

பின்னர் மருத்துவர் ஒருவர் அந்த வீட்டில் இருந்த வெங்காயத்தை எடுத்து சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் ஒரு ஆச்சரியமான உண்மை வெளிப்பட்டது.

அந்த அரிந்த வெங்காயத்தில் எக்கச்சக்க பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த மருத்துவ ஆய்வாளர்கள், வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து, ஆய்வு செய்ததில், அந்த வெங்காயமானது அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றை ஈர்த்து தன்னுள் வைத்து கொள்வதாக தெரிய வந்தது. இதனால் தான் அந்த விவசாயின் குடும்பம் ஆரோக்கியமாக இருந்ததும் தெரிய வந்தது.

இதனை பயன்படுத்திய சிலரும் தான் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். தினமும் இரவு உறங்கும் போது, எனது படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து படுத்து உறங்குவேன்.

இதனால் சில நாட்களிலேயே நான் எனது நோயில் இருந்து விடுபட்டேன், நான் காலையில் எழுந்து பார்க்கும் போது நான் அரிந்து வைத்த வெங்காயமானது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும், அதனை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.


இந்த கருப்பு நிறமானது, எனது உடலில் இருந்து கிருமிகளை வெங்காயம் ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது என்பதை அறிந்தேன், எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமானது.

பயன்படுத்தும் முறை

நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன்னர், பெரிய வெங்காயத்தை இரண்டாக அரிந்து, உங்களது தலை மேட்டில் வைத்து உறங்குவதால், அது அந்த அறையில் இருக்கும் அனைத்து தீய பாக்டீரியாக்களையும் ஈர்த்து தன்னுள் அடங்கிக் கொள்ளும். நீங்கள் இதனை காலையில் எடுத்து வெளியில் எரிந்து விட வேண்டும்.

குறிப்பு

நாம் பெரும்பாலும், பாதி வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்தி விட்டு மீதி வெங்காயத்தை மறுமுறை உணவு சமைக்கும் போது பயன்படுத்துவது உண்டு.

ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நீங்கள் அரிந்து வைத்த வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விட வேண்டியது அவசியம்.

அவ்வாறு இல்லை என்றால், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் புகுந்து விடும். இதனை நீங்கள் உபயோகப்படுத்தினால், உணவுப் பொருள் ஒவ்வாமை ஏற்படும்.

இது உடலுக்கு மிகவும் தீங்கானது. மீஞ்சிய வெங்காயத்தினை பாலித்தின் பைகள் அல்லது பிளாஸ்டிக் சாமான்களினுள் அடைத்து, அதனை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் கூட இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 





                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

பிரண்டை மருத்துவ குணங்கள்



பிரண்டை உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும்; மாதவிலக்கைத் தூண்டும்; மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.

வாதம்-பித்தம்- கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன .வாதம் அதிகரித்தால் உடல் வலி- பித்தம் அதிகரித்தால் கிறுகிறுப்பு ,வாந்தி, தூக்கம் இன்மை , கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு .

இந்த மூன்றையுமே கட்டுப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம் பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன் மிளகாய் ,காயம் ,உளுந்தம் பருப்பு வறுத்து வைத்துப் புளி,உப்பு சேர்த்துத் துவையல் அரைக்கவும்.இது இட்லி,தோசை,மோர் சோறு/சாதம் ஆகியவற்றுக்கு சிறந்த கூட்டணி - சோறு/சாதத்தில் பிசைந்து எண்ணெய் விட்டுச் சாப்பிடலாம் .

வாய்வு-பித்தம்-கபம் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை இது.இதனை வாரம் ஒருமுறை சாபிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.எனவேதான் பண்டைய நாளில் அப்பளம் செய்யும் போது பிரண்டைச் சாறு சேர்த்துச் செய்தார்கள் .உணவே மருந்து என்று உண்டார்கள் வென்றார்கள்.

பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம்.  மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு.

பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.

பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.

பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.

நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.

பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.

பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.

மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும். வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.

அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்

சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||


Tuesday, May 7, 2019

வாழையிலைக் குளியல்: உயிர் போகும் நிலையில் பிணியிருந்தாலும் மீட்க முடியும்

உயிர் போகும் நிலையில் பிணியிருந்தாலும் மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள். உடலில் பிராணசக்தியை தூய்மையடையச் செய்யும் வாழை இலைக் குளியல்.

வாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.
வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமில வாயுவை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.!

வாழை இலைக்குளியல் செய்முறை 1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!
2.தரையில் ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.
3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால் லேசாக சதைத்து போடவேண்டும்.!
4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!
6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!
7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.
8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!
9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து தேன் மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!


வாழைகுளியல் பலன்கள்
""''"'''"''"""""""'"'"'" 1.உடல் எடை சீராக இருக்கும் 2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும் 3.தோல் நோய்கள் குணமாகும் 4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும் 5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும் 6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும் 7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும் 8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும் 9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும் 10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.! இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!


குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!
கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.! வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!
அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.!
வாழ்க வளமுடன்.! நலம் பெருகட்டும் ....
Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

Monday, May 6, 2019

வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்…!!

இலங்கையின் வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்… பலரும் அறியாத நம்ப முடியாத ஆலயத்தின் கதை…!!



அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். அவரின் முயற்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், கலைப்பீடாதி ஆகியோர் வழங்கிய ஆதரவும், உதவிகளும் ஆய்வுக் குழுவினரைப் பெரிதும் உற்சாகப்படுத்தியது.
இந்த ஆய்வுக்குழுவில் வரலாற்றுத் துறை தலைவர் எஸ். சிவகணேசன், மற்றும் விரிவுரையாளர் செல்வி கிறிஸ்ரினா நிரோசினி, வரலாற்றுப் பட்டதாரி திரு.வை.சத்தியமாறன் ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல்துறைத் தலைவர் கலாநிதி தில்லைநாதன் அவர்களும் இணைந்து கொண்டமை ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தின் சமூக நிலமைகளை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியது. இவ்வாலயம் அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி, குடுவில் ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய ஆலங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.இவ்வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்து வரும் பல இடப்பெயர்கள் பண்டுதொட்டு இங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்ததன் அடையாளங்களாகக் காணப்படுகின்றன. ஆயினும் தற்போது இங்கு ஒரு தமிழ்க் குடியிருப்பைத் தானும் காணமுடியவில்லை.இந்நிலையில், ஆலயத்தைச் சுற்றாடலில் பரந்த அளவில் வாழ்ந்து வரும் ஏனைய இன மக்கள் தமிழர்கள் இங்கு வாழவில்லை எனவும், அவர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இங்கு வந்த போது அவர்களின் வழிபாட்டிற்காகவே முன்பொரு காலத்தில் கட்டப்பட்ட ஆலயமே தற்போது அழிவடைந்த நிலையில், காணப்படுகிறது என அவர்கள் எம்மிடம் கூறிய புதுக்கதை எமக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.ஏனெனில், இற்றைக்கு ஐந்து சகாப்தங்களுக்கு முன்னரே குடுவில் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களை ஆய்வு செய்த பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டுக்களில் ஒன்றை ஆதாரமாகக் காட்டி இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்விடத்தில் வாழ்ந்த ‘திஸ’ என்ற தமிழ்ப் பெண்ணின் தலைமையில் தமிழ் வணிகர்கள் ஒன்று சேர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தி இருந்தார்.பேராசிரியர் இந்திரபாலா இலங்கையில் 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மொழியால் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கியதற்கு, இக்கல்வெட்டையும் முக்கிய ஆதாரமாகக் காட்டுகின்றார். அண்மையில் கிழக்கிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வில் எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இச்சாசனங்கள் தமிழ் மொழியில், தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் நாகன், ணாகன், தம்பன், வண்ணக்கன் முதலான பெயர்கள் பொறித்த சாசனங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இச்சாசனங்கள் பற்றி பேராசிரியர் பத்மநாதன் அண்மையில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.இவ்வகையான மட்பாண்டச் சாசனங்கள் தமிழகத்தை அடுத்து கிழக்கிலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கிழக்கிலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றுக்கு புதுவெளிச்சமூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பெருங்கற்காலப் பண்பாடு என்ற புதிய நாகரிகத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகின்றனர்.


இப்பண்பாட்டு மக்கள் கிழக்கிலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் நாகன், ணாகன் முதலான பெயர்கள் இடம்பெற்றிருப்பது கிழக்கிலங்கையில் வாழ்ந்த பூர்வீக தமிழர்கள் நாக இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை மேலும் உறுதி செய்வதாக உள்ளது. இவ்வரலாற்றுப் பின்னணியிலேயே அம்பாறை ஆலங்குள ஆலயத்தின் தோற்றத்திற்கான காரணங்களை நோக்குவது பொருத்தமாகும்.நீண்ட காலத்திற்கு முன்னரே ஆலங்கேணியில் வாழ்ந்த தமிழர்கள் இவ்வாலயத்தைக் கைவிட்டதன் காரணமாக தற்போது இவ்வாலயம் பெருமளவுக்கு அழிவடைந்து ஆலமரங்களுக்கு மத்தியில் வழிபடப்பட முடியாத ஆபத்தைத் தரும் வெறும் கட்டிடமாகக் காணப்படுகின்றது.
ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வளர்ந்துள்ள பெரிய ஆலமரங்களின் கிளைகளும், வேர்களும் ஆலயச் சுவர்கள் சிலவற்றிற்கு பாதுகாப்பு அரண்களாக உள்ளன.இவ்வாலயம் சிறிய விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகம் அந்தராளம் முன்மண்டபம் பலிபீடம் கொடிக்கம்பம் என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்டதை ஆய்வுக் குழுவினரால் அடையாளப்படுத்த முடிந்தது.நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கும் இவ்வாலயம் பிற்காலத்தில் சீமேந்து கொண்டு மீள் உருவாக்கம் செய்யப்பட்டதை ஆலயத்தின் கட்டிட வடிவங்களும் விமானத்தின் கலை வடிவங்களும் உறுதி செய்கின்றன. ஆயினும் இவ்வாலயம் மிகத் தொன்மையானதென்பதை ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் புதையுண்டு காணப்படும் பெருமளவு செங்கற்கள் உறுதிசெய்கின்றன. அதிலும் கற்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றின் உட்பாகங்கள் முழுக்க செங்கற்களால் கட்டப்பட்டவையாகக் காணப்படுகின்றன.
செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அந்தராளத்தின் முன்பக்கச் சுவர் சீமேந்து கொண்டு பூசப்பட்ட நிலையில் செங்கற் சுவர் தெளிவாகக் காணப்படுகிறது.இந்த வேறுபாடுகளைக் கொண்டு செங்கற்களால் கட்டப்பட்ட கர்பக்கிரகம், அந்தராளம் ஆலயத்தின் தொடக்ககால நிலையில், அதன் வெளிப்புறம் மட்டும் பிற்காலத்தில் சீமேந்து கொண்டு மீள் உருவாகம் செய்யப்பட்டதாகவும், முன் மண்டபம், பலிபீடம் முதலான கட்டிடங்கள் ஆலயம் தோன்றிய கால அத்திவாரங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாக அல்லது ஆலயத்தை விரிவுபடுத்த பிற்காலத்தில் சீமேந்து கொண்டு கட்டப்பட்ட ஆலய பாகங்களாக இருக்கலாம் எனக் கூறமுடியும்.இவ்வாலயத்தின் தோற்றகாலத்தை உறுதியாகக் கூறக்கூடிய கல்வெட்டுக்களோ, விக்கிரகங்களோ இதுவரை கிடைக்கவில்லை.ஆலயத்தின் கர்பக்கிரகம் அந்தராளம் என்பவற்றிற்கு உள் நுளைய முடியாதவாறு பெரிய ஆலமர வேர்கள் காணப்படுகின்றன. அதற்குள் கொடிய விசப்பாம்புகள் குடியிருப்பதற்குரிய தடயங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. இதனால், அச்சமின்றி அக்கட்டிடப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வினை மேற்கொள்ள முடியவில்லை.
இருப்பினும் வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு கர்பக்கிரகத்தில் தெய்வ விக்கிரகங்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பீடம் முழுமையாக சிதைவடைந்துள்ளமை தெரிகின்றது. அவ்விடம் ஆழமாகத் தோண்டப்பட்டு பீடம் இருந்த இடம் பெரும் குழியாகக் காணப்படுகின்றது.
பீடத்தின் பின்பக்கச் சுவரில் இருக்கும் திருவாசி புகைபடர்ந்த நிலையில் அதன் கலைவடிவங்கள் தெளிவற்றுக் காணப்படுகின்றன. இருப்பினும் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு இவ்வாலயம் மிகப் பழமையானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
அவற்றுள் கர்பக்கிரகத்தின் மேற்பக்கச் சுவரில் குறுக்காகவைக்கப்பட்ட நான்கு கற்பலகைகள் மீது மேல் நோக்கி வட்டமாக இரு தளங்களில் கட்டப்பட்ட விமானத்தின் அமைப்பு விமானம் அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் அமைப்பும் அவற்றின் நீள அகலங்கள் கர்பக்கிரம், அந்தராளம், என்பவற்றின் வடிவமைப்பு அவற்றின் நீள அகலங்கள் வாசற்பகுதிகளில் அமைக்கப்பட்ட அகலமான கற்தூண்கள் என்பன 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொலநறுவை, திருமங்களாய் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சோழர் கால ஆலயங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன.
எதிர்காலத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதியுடன் இவ்வாலயப் பகுதியில் விரிவான தொல்லியல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால், இவ்வாலயத்தின் தோற்றகாலம், அதன் கலைமரபுகள், வழிபடப்பட்ட தெய்வங்கள், காலரீதியான ஆலய வளர்ச்சி, மாற்றம், ஆலயத்திற்கு சொந்தமாக இருந்த அசையும், அசையாத சொத்துக்கள், ஆலயத்தைப் பராமரித்த மக்கள் வழிபாட்டு மரபுகள், தொடர்பான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை.
சிரேஸ்ர பேராசிரியர்
ப.புஸ்பரட்ணம்
தொல்லியல் – வரலாற்றுத் துறைத் தலைவர்
யாழ் பல்கலைக்கழகம்

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya














Tuesday, November 6, 2018

March on fearlessly



"I wish to help you through the pitfalls of your minds. Allow me to enter your hearts as Love. Feel that I am real; I am here. I have come down from my kingdom to help. Trust, feel and know the joy of freedom."

"When your mind would wander, think on my Vel, which I hold high, and march on fearlessly."

"I, Skanda, Son of Siva, have spoken."
Aum Muruga ஓம் மு௫கா
-Hilda Charlton





Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html




Posted By Nathan Surya