Sunday, August 28, 2016

சீனர்களின் கடவுள் ஒரு தமிழன்!!

சீனர்களின் கடவுள் ஒரு தமிழன்!! வரலாற்றின் அதிரடி! ஆனால், தமிழர்களின் இன்றைய நிலை..?!

பிறப்பு : கிபி 475
தந்தை : கந்தவர்மன் என்ற பல்லவ மன்னன்..
தோன்றல் :
பல்லவ மன்னன் கந்தவர்மனின் மூன்றாவது மகன் போதி தர்மன் ( ஆதாரம் டான்லின் பதிவுகள் ( Tanlin historical notes) மற்றும் டௌசுவன் வரலாற்றுப் பதிவுகள் ( Dauxuon historical notes) .
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
தமிழ் பாரம்பரிய கல்வியான தற்காப்பு கலை,மற்றும் மருத்துவத்தை சிறுவயதிலே கற்றுதேர்ந்தார்
பயணம் :
17ம் வயதில் சீன நாட்டுக்கு பயணம்.. புறப்பட்டார். 21ம் வயதில் சீனாவை அடைந்தார்
வாழ்க்கை வரலாறு :
சீனாவில் குங்ஃபூ கலையை சீனர்களுக்கு பயிற்றுவித்தார். மருத்துவ பாடங்களும் எடுத்தார்.
ஆதாரம் :
சீனாவில் சாவ்லின் புத்த கோவிலில் உள்ள ( shaolin temple ) கல்வெட்டு .
வாழ்க்கை சாதனை :
சீன மத குருமார்களில் கடைசி குருமார் ஆக ( 28ம் குருமார் ஆக ) போதி தர்மன் கருதப்படுகிறார். ( ஆதாரம் – சீன யங்க்சியா பாட்டு )
வாழ்ந்த வருடங்கள் :
75 (கிபி 550 )
இதிலிருந்து போதி தர்மன் என்ற தமிழன் தான் உலகின் சிறந்த தற்காப்பு கலையான குங்க்ஃபூவை சீனர்களுக்கு சொல்லித் தந்தார் என்றும் சீனர்களால் இன்றுவரை தெய்வமாக போற்றப்படுகிறார் என்பதும் தெரிகிறது…
https://www.facebook.com/groups/siddhar.science/

Monday, August 15, 2016

ஓங்காரம்(பிரணவம்)


ௐ ஓங்காரம்(பிரணவம்)

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.

வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.

ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,

"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)

"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)

என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-

என்பவற்றாலும் அறியலாம்.

உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:

அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.

இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

முதல் எழுத்து:

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "

என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "

என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,

அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,

அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "

என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.

ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"

- மச்சைமுனி தீட்சை ஞானம்

உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி

விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை

- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.

இதை விளக்கும்படி திருமூலர்,

ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.

ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.

அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.

குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.

ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.

போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.

அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.

வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.

“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”

ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.

படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.

ௐ/ஓம்/om/ॐ/aum/ओं/唵 is the cosmological sound of creations. Scientifically it's known as the sound of 'big bang'
ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars
 Aum Muruga ஓம் முருகா 





கடைத்தேறும் உபாயம்



யாமிருக்க பயமேன்
 Aum Muruga ஓம் முருகா 
கடைத்தேறும் உபாயம் 
கண்ட முருகனை 
இடைவிடாது பூசிக்க 
இன்பம் உண்டாம்!!
https://www.facebook.com/groups/ongarakudil/

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களே அனைத்து ஜீவர்கள், ஜடப்பொருட்கள் என இப்பிரபஞ்சத்தில் எல்லா வகையும் தோன்றுதற்கு காரணம் என்றும், அதுவே அவை வளர்வதற்கும், அழிவதற்கும் காரணமாக ஆகி இயற்கையாய் பரிமளித்தது என்று அறிந்து பஞ்ச பூதமானது தோற்ற உருவாகிய பருப்பொருளாய் உள்ளவரை அது இயற்கையின் நியதிக்கு உட்படும் என்றும், அதுவே நுண்பொருளாய் கண்ணுக்கு புலனாகா அரூப நிலையாய் உள்ளபோது அரூபமாய் உள்ள இயற்கை போல ஆகி பரிணாம வளர்ச்சிக்கு ஆட்படாமல் என்றும் இளமையாகவே இருப்பதையும் கண்டு கொண்டார் முருகப்பெருமான்.

தோற்றமாக உள்ள இந்த மனித தேகத்திலேதான் அதற்கான உபாயம் இருப்பதையும் வேறெந்த உடலிலும் அந்த உபாயம் இல்லாததையும் அறிந்து இந்த தேகம் பஞ்ச பூத தேகம், பஞ்சபூதமே ஆன்மாவை சுற்றி மும்மலச் சேறாக நாம் இதன்முன் செய்திட்ட பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப மலக்குற்றமாக மாறி ஆன்மாவை மாசுபடுத்தி நம்மை வஞ்சித்து கொல்கிறதையும் அறிந்தான்.

மாசு நீங்க வேண்டுமாயின் எந்த உயிர்களுக்கு துன்பம் செய்ததால் மாசு ஏற்பட்டதோ அந்த ஜீவர்களுக்கு அதாவது இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரிந்தால் எல்லா உயிர்களும் இதம் செய்கின்ற உயிரை வாழ்த்துவதினால் எல்லா உயிர்களின் வாழ்த்தே ஆன்மாவை ஒளிபெறச் செய்து ஆன்மாவைப் பற்றியுள்ள மாசை நீக்குகிறதையும் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி எல்லா ஜீவர்களுக்கும் இரங்கி இதம் புரிவதற்கு வன்மனம் நீங்க வேண்டும். வன்மனம் நீங்க முருகனது ஆசியினால் அன்றி வன்மனம் நீங்காது. முருகனது திருவடி பற்றி பூசிக்க பூசிக்க நம்முள் அறிவு பெருகிடும். அறிவு பெருகினால் மட்டும் போதுமா, போதாது. வெறும் அறிவு நமது சிந்தனையை வளர்க்குமே தவிர ஆன்ம தெளிவை உண்டாக்காது, ஜென்மத்தைக் கடைத்தேற்றாது, பிற ஜீவர்களுக்கு உபகாரம் செய்து செய்து புண்ணிய பலத்தை பெருக்க வேண்டும்.

புண்ணியம் பெருக பெருக தெளிந்த அறிவு ஞானஅறிவாக மாறி ஆன்மா மாசுபட்டுள்ளதை உணர்த்தும். ஆன்மா மாசு நீங்கவும், ஜீவதயவைப் பெருக்கிடவும், தேவையான பொருளாதாரத்தை முருகனது திருவடி பற்றி பூஜை செய்ய செய்ய அதற்கும் அருள்வான் முருகன். பொருள் பெருகினால் போதாது, புண்ணியங்கள் செய்ய வாய்ப்பை அருள்வான் முருகன்.

புண்ணியம் செய்து செய்து ஜீவதயவை பெருக்கி பெருக்கி தூய ஞானஅறிவை பெறபெற பஞ்சபூதக்கட்டு படிப்படியாக உடைந்து விடும்.

பஞ்சபூதக் கட்டு உடைய வேண்டுமாயின் எந்த இயற்கை பருப்பொருளாக உண்டானதோ அந்த பருப்பொருளை உடைப்பதற்கும் இந்த பஞ்ச பூத சக்திகளே உதவியாய் உள்ளது.

காற்றாகிய பஞ்சபூதத்தின் உதவியால் அனலாகிய பஞ்சபூத சக்தியும் சேர்ந்து பெரும் மாற்றங்களை நமது தேகத்தினுள் ஏற்படுத்தும். அதை தெளிந்த குருநாதன் முன்னிலையில் ஒன்றிணைத்து ஒரு சிறப்பான வேதியியல் பொருளாய் செய்ய பஞ்சபூதக்கட்டு உடைந்து படிப்படியாக பருப்பொருளாய் உள்ள தூலதேகம் ஒளி பொருந்திய நுண்பொருள் ஒளிதேகமாக மாறிவிடும்.

இது மிகப்பெரும் ஞான இரகசியமாகும். இதை வழி நடத்த யாராலும் முடியாது. அந்த ஆதி ஞானத்தலைவன் முருகனே நம்மைச் சார்ந்து வழி நடத்தி நம்மை வாசி வசப்பட செய்து தேகத்திலுள்ள மும்மலக்கசடை நீக்கி ஆன்மாவை ஆக்கம் பெற செய்து தூலதேகத்திலே மறையதுள்ள சூட்சும தேகமாகிய ஒளி உடம்பை ஆக்கம் பெற செய்து செய்து இறுதியில் அருட்பெருஞ்ஜோதி வடிவமான ஒளிதேகத்தை பெற வேண்டும். இது தலைவன் முருகனால்தான் முடியும் என்பதையும் அறியலாம். வேறு எதனாலும் ஆகாது என்பது உறுதியான உண்மையாகும்.

அப்படி ஆதிஞானத்தலைவன் நம்மை சார்ந்து வழி நடத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றி ஒளி தேகத்தை அளிக்க வேண்டுமாயின் அதற்கு ஏராளமான புண்ணிய பலம் வேண்டும், பூஜை பலம் வேண்டும். வெறும் நூலறிவோ, ஏட்டுக் கல்வியோ, பயிற்சிகளோ ஒருபோதும் உதவாது.
- மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
https://www.facebook.com/groups/ongarakudil/
ஓங்காரக்குடில் Ongarakudil

சித்தர்கள் சித்தரிக்கும் போலிக்குருமார்



பாம்பாட்டிச்சித்தர் கூறும் போலிக்குரு

பொய்ம் மதங்கள்
போதனை செய்
பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி
நன்னெறியில்
போக விடுக்கும்
மெய்ம் மதந்தான்
இன்னதென்று
மேவ விளம்பும்
மெய்க் குருவின்
பதம் போற்றி
ஆடுபாம்பே!


கண்டவர்கள் ஒருக்காலும்
விண்டி டார்களே :
விண்டவர்கள் ஒருக்காலும்
கண்டி டார்களே !
கொண்ட கோலம் உள்ளவர்கள்
கோன் நிலை காணார் ;
கூத்தாடிக்கூத் தாடியே
நீ ஆடு பாம்பே !
-ஆசான் #பாம்பாட்டிச்சித்தர்

காகபுசண்டர் கூறும் போலிக்குரு

பாரப்பா சீடர்களை
அழைப்பான் பாவி
பணம்பறிக்க வுபதேசம்
பகர்வோ மென்பான்
ஆரப்பா பிரமநிலை
காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு
மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்குப்
பாவ மாச்சு
நிட்டை சொல்லுங்
குருக்களுக்குத்
தோட மாச்சு
வீரப்பா அடங்குகின்ற
இடத்தைப் பாரான்
விதிபோலே முடிந்ததென்று
விளம்பு வானே ! 
-ஆசான் #காகபுசண்டர்

காகபுசண்டர் கூறும் போலிக்குரு

புகலுவார் வேதமெல்லாம்
வந்த தென்று
பொய்பேசிச் சாத்திரங்கள்
மிகவுங் கற்றே
அகலுவார் பெண்ணாசை
விட்டோ மென்றே
அறிவுகெட்டே ஊர்தோறுஞ்
சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர்போல்
வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந்
தன்னைச் சாற்றி
இகலுமான மடங்காமல்
நினைவு வேறாய்
எண்ணமெலாம் பெண்ணாசை
பூசை தானே.

பூசையது செய்வமென்று
கூட்டங் கூடிப்
புத்திகெட்டுக் கைம்முறையின்
போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப்
பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின்
பயனைக் காணார் :
ஆசையிலே பெண்ணாசை
மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப்
பங்கு போட்டுப்
பேசையிலே மனம்வேறாய்
நினைப்பான் பாவி
புரட்டுரூட்டாய் நினைவுதப்ப
பேசு வானே.


பேச்சென்றால்
வாய்ச்சமர்த்தாய்
பேசிப் பேசிப்
பின்னுமுன்னும்
பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பென்றும்
ஏதுங் காணார்
நிர்மூட ரனேகவித
சாலங் கற்றே
ஆச்சென்றா லதனாலே
வருவ தேது..?!
ஆத்தாளைப்
பூசித்தோ னவனே சித்தன்
மூச்சென்ன செய்யுமடா
நரகிற் றள்ளும் :
மோசமது போகாதே
முக்கால் பாரே !
-ஆசான் #கருவூர்ச்சித்தர்

சிவவாக்கியர் கூறும் போலிக்குரு

யோகசாடை காட்டுவார்
உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து
வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின்
மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல்
பேருலகில் சாவரே.

ஞானிஞானி என்றுரைத்த
நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற
வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின்
தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி
முன்னிறந்த தென்பரே

காயகாயம் உண்பதாகக்
கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு
மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து
நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி
நாட்டினில் அலைவரே.

நீரினில் குமிழிஒத்த
நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து
ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான
சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை
நீளவும்கைப் பற்றுவார்

காவியும் சடைமுடி
கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக
தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத்
தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம்
பருக்கைகேட்டு அலைவரே

முத்திசேரச் சித்திஇங்கு
முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும்
சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க
நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப்
பாழ்நரகில் வீழ்வரே

மனவுறுதி தானிலாத
மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச்
சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும்
சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும்
இன்பம் அற்ற பாவிகள்
-ஆசான் #சிவவாக்கியர்

திருமூலர் கூறும் போலிக்குரு

குருடர்க்குக் கோல்காட்டிச்
செல்லும் குருடர்
முரணும் பழங்குழி
வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள்
முன்பின் அறவே
குருடரும் வீழ்வார்
குருடரோடு ஆகியே

ஆடம் பரங்கொண்
டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு
வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும்
அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர்
சிவனவன் தாள்களே

ஞானமில் லேர்வேடம்
பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய்
திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும்
வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங்
கழிப்பித்தல் இன்பமே

பொய்த்தவஞ் செய்வார்
புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர்
புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம் மெய்த்தவம்
போகத்துட்போக்கிய
சத்திய ஞானத்தால்
தங்குந் தவங்களே

பொய்வேடம் பூண்பர்
போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு
பிச்சைகைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம்
போலவே பூணினும்
உய்வேட மாகும்
உணர்ந்தறிந் தோர்க்கே

குருட்டினை நீக்குங்
குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக்
குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங்
குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங்
குழிவிழு மாறே

மனத்தில் எழுந்ததோர்
மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின்
நிழலையுங் காணார்
வினைப்பயன் போக
விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப்
போகின்ற வாறே
-ஆசான் #திருமூலர்

கொங்கணச்சித்தர் கூறும் போலிக்குரு

பூணராய்ப் பூண்பார்கள்
மூலத்துள்ளே
பெண்ணாசை பொன்னாசை
மண்ணினாசை
ஆணராய்க் காமியத்தைச்
சுழன்று நின்றே
யாச்சரியம் வேதாந்த
மனைத்தும் பார்ப்பார்
காணராய்க் கண்டுவிட்டோம்
ஞானமென்பார்
கழுதைகள்தான் மெத்தவுண்டு
கண்டு கொள்ளே.
-ஆசான் #கொங்கணச்சித்தர்

அகத்தீசர் கூறும் போலிக்குரு

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்யவேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்க ளப்பனே அனேகங் கூடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே

பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது
பாழ்த்த பிணங் கிடக்கு தென்பார் உயிர்போச் சென்பார்
ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை
ஆகாய சிவத்துடனே சேரும் மென்பார்
காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்
கருவரியா மானிடர்கள் கூட்ட மப்பா
சீரப்பா காமிகள் தா மொன்றாய்ச் சேர்ந்து
தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு
மனிதனுக் கோ அவ்வளவுந் தெரியா தப்பா
நாடுமெத்த நரகமென்பார்: சொர்க்க மென்பார்
நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்
ஆடுகின்ற தேவதைகள் அப்பா கேளு
அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோனார்
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்
தளமான தீயில் விழத் தயங்கி னாரே
-ஆசான் #அகத்தீசர்

சட்டைமுனியார் கூறும் போலிக்குரு

உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே
ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்
பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்
பரந்துநின்ற திரோதாயி வலையிற் சிக்கிக்
கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்
கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்
மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற
மாட்டார்கள் அறுசமய மாடு தானே

மாறான பெண்ணாசை விட்டேன் னென்பார்
மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்
தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்
சதாசிவனால் முடியாது, மற்றோ ரேது ?
கூறான விந்துவிடக் கோப மோகங்
குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று
விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே
-ஆசான் #சட்டைமுனி

பதஞ்சலியார் கூறும் போலிக்குரு

கருதினர் சிலபேர்கள் குருத்தான்வந்து
காட்டுவா ரென்று சொல்லிச் சூஸ்திரத்தை
யுரிவியே கிழித்தெறிந்து வீண்வாய்ப்பேசி
யுழன்றுதவிப் பார்களிதி லநந்தம்பேர்கள்
மருகினர் சிலபேர்கள் வாதவித்தை
வந்தவர்போற் சொல்லியவர் பிழைப்போமென்று
முருகினார் யோகதண்டங் காஷாயங்கள்
யோகநிஷ்டை பெற்றவர்போ லுருக்கொள்வாரே

கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
குரடமிட்டு நடைநடப்பர் குகையிற்கப்பால்
விள்ளுவார் வாதமொடு யோகம்ஞானம்
வேதாந்ததீதமுமே விசாரித்தோர்போல்
துள்ளுவாருபதேசம் செய்வோமென்பார்
சூதமணிகட்டுகிறேன் தொழில்பாரென்பார்
தள்ளுவார்பொருளாச் நமக்கேனென்பார்
சவர்க்காரம் குருமுடிக்கில் தனமென்பாரே

தனமென்ன வாலைமனேன்மணிதா னென்பார்
சாராயம்பூசிக்கத் தண்ணீரென்பார்
கனமென்ன காந்தசத்துக் கிண்ணம்பண்ணிக்
கற்பமென்று பெண்ணாசை கடந்தோமென்பார்
மனமென்ன வாய்ப்புரட்டால் கைப்புரட்டால்
வாதவித்தை போற்காட்டி மயக்கஞ்செய்வார்
தினமிந்தப்படிதான் யுலகத்துள்ளே
சீவனங்கள் செய்வார்கள் சிலபேராமே
--ஆசான் #பதஞ்சலியார்

சித்தர் அறிவியல் 




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 




                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

Thursday, August 11, 2016

"சாதி, மதவெறியர்க்கு மன்னிப்பு இல்லவேயில்லை!"



சைவம் என்றால் பிறவுயிர்களுக்கு உணவில், சிந்தையில், செயலில், சொல்லில், பார்வையில் என்றுமே தீங்கு செய்யாதிருத்தலாகும். இன்று சிலர் உணவில் சைவமாக இருந்துகொண்டு சகமனிதரையே தீண்டத்தகாதவர் என சாதி, மதவெறியுடன் செயற்படுகின்றனர். இவர்களும், இவர்களோடு இசைந்து போவர்களுக்கும் மிகுந்த வேதனையான நரகவாழ்வே ஞானச்சித்தர் காலத்தில் அமையுமென ஞானபண்டிதரான எல்லாம்வல்ல முருகப்பெருமான் அறிவித்துள்ளார். இனியாவது திருந்தி நடவுங்கள். தவறின் சாதி, மதவெறியர்க்கு மன்னிப்பு இல்லவேயில்லை என்பது கலியுகவரதன் முருகப்பெருமானின் சத்தியவாக்காகும்.

உணவிலே சைவம் : தாவர உணவினை மட்டும் மேற்கொள்ளுதல். 

சிந்தையில் சைவம் : எந்த வகையிலும் பிறஉயிர்களுக்கு சிந்தையில் கூட தீங்கு எண்ணாதிருப்பதே சிந்தையிலே சைவமாகும்

செயலிலே சைவம் : தன் செயலால் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் தீமை பயக்காமல் நன்மையே தருவதாக அமைகின்ற செயல்களை செய்வதேயாகும். 

சொல்லிலே சைவம் : எந்த வகையிலும் நமது சொற்களால் பிறர் மனம் புண்படாமல் நடப்பதே சொல்லிலே சைவமாம். 

பார்வையிலே சைவம் : பிற உயிர்களைக் கருணையுடன் இனிமையாகப் பார்த்தல் 

இப்படி உணவில் சைவம், சிந்தையில் சைவம், செயலிலே சைவம், சொல்லிலே சைவம், பார்வையிலே சைவம் அனைத்தையும் அறிந்து கடைப்பிடிப்பதற்கு சைவத்தலைவன், சைவமே வடிவான ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானின் திருவடிகளே துணையாகும்.

உலகோரை ஒரு தாய்ப்பிள்ளைகளாக கருதி கலியுகவரதன் முருகப்பெருமான் தலைமையில் முற்றுப்பெற்ற சித்தர்கள் வழிகாட்டலில் சகல அதர்மங்களும் அழிக்கப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும் காலம் கனிந்துவிட்டது.


சுவடிகள் மூலம் அறிவிப்பு.

https://twitter.com/Ongarakudil



ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars
 Aum Muruga ஓம் முருகா 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 

Tuesday, August 9, 2016

சூட்சமம் திறந்த திருமந்திரம்


திருமந்திரம்..!
https://www.facebook.com/groups/siddhar.science

திருமூல நாதர் சித்தர் தன் மோனத்தில் இருந்து வருடம் ஒரு முறை உதித்து, ஒரு பாடலை இயற்றி பின் நிட்டையில் சென்றார் என்று செவி வழி கதைகள் கூறுகிறது. இவ்வாறு அய்யன் 3000 ஆண்டுகள் இயற்றி மந்திர பாடல்களே பின் "திருமந்திரம்" என்ற பெயரை கொண்டு தொகுக்க பெற்றது. வேதங்களுக்கும் உபநிஷட்களுகும் இணையான ஒரு தமிழ் மறை நூலாக இப்பாடல்கள் விளங்குகிறது. இந்த சம்பவம் நடந்த இடம் ஆடுதுறை ஆகும். இதன் அருகே வுள்ள திருவாவடுதுறை கோவிலில் அக்கால வனமாகவும். அதன் ஒரு மரத்தின் அடியில் தவம் இயற்றி வரைந்த நூலே திருமந்திரம்.

யோக சூத்திரங்களில் இந்நூல் பதஞ்சலி முனிவரின் வடமொழி பாடல்களுக்கு இணையானது. இறைவன் என்னை நன்றாக படைதான் தன்னை நன்றாக தமிழ் செய்ய என்று கூறுகிறார்

"பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"

அய்யன் மற்றும் இதர சித்தர்கள் எழுதும் மந்திரங்கள் அகத்தில் இருந்து வருவது. அகத்திலிருந்து வரும் போதமே அகவல். புறத்திலிருந்து வரும் கருத்துக்கள் வெறும் தகவலே.

இவ்வாறு அகத்தில் கண்ட அனுபவத்தை திருமூலர் சித்த பெருமான் நமக்கு இங்ஙனம் உரைக்கிறார்..

"உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளபுலன் ஐந்தும் காணா மணி விளக்கே"


இது பாடல் மற்றும் அல்ல இதனை கோவில் வடிவமாகவும் தில்லையில் காணலாம். அய்யன் சீவ தலமான சிதம்பரத்தில் கோவில் கட்டுமானமே நம்மை நமக்கு உணர்த்தும் தத்துவமாக விளங்குகிறது. பொன்னம்பலம் மேல் உள்ள தங்க ஓடுகளின் எண்ணிக்கை 21,600. இது நமது சுவாச காற்று இனையாக உள்ளது. அதன் மேல் பொருந்திய தங்க ஆணிகள் கணக்கு 72000. இது நமது நாடி கணக்கு. வெட்டவெளி என்னும் ஆகாய தலத்தில்பொன்னம்பல மேடையில் சிவசக்தி தாரணை பிரதானரகசியமாய் வெளியாகிறது.இதே நம்முள் இருக்கும் சொர்ண தத்துவம்.

இப்படி பட்ட சொர்ணமான உத்தமன் உள்ளிருக்க அவனை வெளியே
விடாமல் பலகாலம் வேண்ட வழிகளை கீழே அய்யன் சொல்கிறார்
 https://www.facebook.com/groups/siddhar.science

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"


இவ்வாறு உயிர் வளர்த்து நாம் காணும் இறைவன் என்ன உணர்வுடன் இருக்கிறான்? அவனும் அன்பும் ஒன்று தான் வேறு இல்லையென்று அய்யன் தெளிவாக கூறுகிறார்

"அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"


ஆகையால் நாம் உயர் நிலை வந்தால் தான் அன்பு வருமா ? அல்லது அன்பு வந்தால் தான் உயர் நிலை வருமா ? குழப்பம் வேண்டாம் கீழே பாருங்கள்.

"யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே."


வில்வதையோ, துளசியை , அருகம்புல்லை வைத்து கூட இறைவனுக்கு அன்பை செலுத்துங்கள். பசுவிற்கு ஒரு வாய் புல் அன்புடன் கொடுங்கள். உண்ணும் பொது ஒரு கவளத்தை முன் வாசலிலோ பின்புறமோ மற்ற உயிரினத்துக்கு அன்போடு அளியுங்கள். சுற்றி இருக்கும் பிறர்க்கு அன்புடன் இன்சொல் கூறுங்கள்.

இது பேர் அன்பு. இதை செய்தால் தெய்வத்தின் அருள் கிட்டும். அது கிட்டினால் பிரபஞ்சம் மற்றும் சித்தர்கள் அன்பு நமக்கு நேரிடையாக கிடைக்கும். அது கிடைத்தால் தன்னை தான் அறியும் ஆசியும் வழியும் கிட்டும். அதுவே சாகா கலைக்கும் வழி வகுக்கும்.
 https://www.facebook.com/groups/siddhar.science


Monday, August 8, 2016

மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டுபிடிப்பு


மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டுபிடிப்பு
https://www.facebook.com/groups/siddhar.science

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"


புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,
https://www.facebook.com/groups/siddhar.science

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.
https://www.facebook.com/groups/siddhar.science

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.
https://www.facebook.com/groups/siddhar.science

comment: "சங்க" தமிழ்ச்சொல் அல்ல. ஆதலால், சங்கத்தமிழும் தமிழல்ல என்பீர்கள் போலிருக்கே..?! 51 அட்சரங்களாலான கிரந்தத்தமிழில் இருந்து  சித்தர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளே இன்றைய செந்தமிழும் சம(ஸ்)கிருதமும். நன்றி.



கடவுள் துகள் / HIGGS BOSON


பாகம் 1:
கடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன?
https://www.facebook.com/groups/siddhar.science

இன்று உலகம் தேடிக்கொண்டிருக்கும், ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அரிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.

"அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்-

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே
-ஆசான் திருமூலர்-

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-ஆசான் திருமூலர்-


இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)

இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)

இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)

ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.

https://www.facebook.com/groups/siddhar.science

நன்றி:
கி. கோகுல கிருட்டிணன்.

பாகம் 2:

ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன?!

என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்??

அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா! இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்:

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-ஆசான் திருமூலர்-

இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும், கலக்காமலும் இருப்பவன், கண்ணனுக்குத் தெரியாதவன், பரந்த சடையுடையவன், பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவன், அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே என்கின்றார் ஆசான் திருமூலர்.

இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பார்ப்போம்...!

பொதுவாகச் சிவபெருமானை நாம் சடாமுடியன், சடையான் என்று கூறுவோம். அதே போல், அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார். இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சடையுடன் நினைத்து கொள்ளுங்கள். நாம் பேச்சு வழக்கில் பரட்டைத்தலை என்று சொல்லுவோம் அல்லவா; அதைபோன்று, அனால் சற்றுப் பெரிய அளவில்! .

பின்பு அந்த உருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாகக் காணும் சிவபெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த உருவத்தை கண்ணுக்குப் புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அணு அளவிற்கு..!

இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று..?! இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே.

https://www.facebook.com/groups/siddhar.science
நன்றி:
கி. கோகுல கிருட்டிணன்.
------------------------------------------

Part 2

Summarised in English for the benefit of English readers:

What is the Higgs size and structure :

"Thirumoolar" who lived century's(Approx 2-6th AD) ago had written "Thirumanthiram" in which he wrote about human life and how to achieve his life ambition and secret of this world in 3041 versus. As iam a reader of it i have found something unusual in it , and here iam sharing it

மேவிய சிவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்

In the above line said in Tamil is translated here, The Lord Shivan (PARAMANU) also called as Atom's atom, or a sub Atomic particle , to explain his size , he consider a human hair which should be divided into 100 and then again dividing a single particle with 1000 and then divinding resulting single particle into 4000 results in the size of Lord Shivan (PARAMANU)or Atom's Atom.. now lets go in simple calculation.....

An Human Hair which is about 30-80 Micron and now for this case considering it as 50 Micron

converting 50 Micron in mm

50 Micron = 0.05mm
now the human hair = 0.05 mm

now as per his saying just divide this with 100 as a first step

0.05 / 100 = 0.0005 mm

now considering a single particle (i.e.,) 0.0005 mm , and dividing it with 1000 results in second step of it

0.0005 / 1000 = 0.0000005 mm

now again considering a resulting single part (i.e.,) 0.0000005 mm , divinding it with 4000 as per his saying results in the size of Shivan (PARAMANU- the master atom) or a Atom's atom .

0.0000005 mm / 4000 = 0.000000000125 mm

Now as per his saying , Lord Shivan or PARAMANU is about 0.000000000125mm in size does it is nearly equalent to higgs Particle ??

As Extending my research , Thirumoolar who said about the size of Lord Shivan (Anupiran) as considered as Atom's Atom. nearly about the size of Higgs Boson particle which is around 10^-17 m , and now Thirumoolar would have also explained about the structure of Shivan (Anupiran). as in my search i found this exclusive lines from the "Thirumanthiram"

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-திருமூலர்

The above tamil statement mean that , the one who is dissolved in everything in this world and seem as if he is not there anywhere and even not visible to common eyes , who Looks in golden colour with shaggedness of hair, he will not be visible until unthen some one in deep search of him, who will attract everyone like a glittering White moon.

This is his Translated form and here lord shivan who is also called a Sadamudiyan, sadaiyan(Shaggedness of hair) and even he mentioned that shaggedness of hair, and now what we do is just imagine a person in our eyes with shaggedness of hair, and we will colour him up with golden yellow , and now we will shrink him up nearly to an atomic level now imagine how he look like ok, now start browsing in internet about the images of Higgs Boson particle . everywhere you see is a Golden flame which look like shagged hair around it , if it is the structure of higgs boson in the internet, Does Thirumoolar saw him century's Ago ????

https://www.facebook.com/groups/siddhar.science