Monday, February 27, 2017

எந்தை அகத்தீசர்


என் அகந்தையுணர்த்தி
என்னுளம் ஆட்கொண்டு 
என்னுள இருள்நீக்கி
எனக்கு ஈந்து
எனதுயிர் உய்ய
எனது ஊழையறிவித்து
என்னூழ் எரித்து
என்னாத்மா ஏற்றம்பெற
என்னிலிருந்த ஐயமிறக்கி
என்னுயிருனுள் ஒருவனாகி
எனதருமை ஓங்காரனாகி
என் பிறவிப்பிணியின் ஔடதமாகி
என்னய்யன் குருமேவிய கும்பரே
என்னாசான் எனதாத்மாவின் தந்தையே
என்னை எனக்கறிவித்த விந்தையே
எந்தை விந்தைமிகு சத்சித் கடந்த சித்தரே
என்னகம் வாழ வழிதந்த குருமுனிவரே
என்னகத்தீசரே சரணம்., சரணம், சரணமப்பா..!
-Nàthàn கண்ணன் Suryà
15/03/2016
ஓம் அகத்தீசாய நம
<3 Aum Muruga ஓம் முருகா <3

No comments:

Post a Comment