சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு
- ஆசான் கொங்கணச்சித்தர்
தமிழ்ச் சமுதாயத்தில் இன்றும் பெரு நோயாக உள்ள சாதியை சித்தர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். மேல் சாதி கீழ் சாதி, சாதிக்குள் சாதி இவற்றை அன்றே பொய் எனத் துணிந்து சாடிய நெறி சித்தர்களது என்பது குறிப்பிடத்தக்கது.
'சாதி குலமில்லை, சற்குருவறிந்தால்''
"சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்''
"சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே"
எனப் பலர் சித்தர்கள் சாதிக் கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்கள்.
சாதிப்பிரிவை மிகுதிப்படுத்தி வளர்க்கும் சடங்கு, ஆசார, சாத்திரக் குப்பைகளால் தீமையேயன்றி அணுவளவும் நன்மை இல்லை என்றார்கள். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து சித்தர்கள் குரல் எழுப்பினர்.
"தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்;
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்"
என்பார் ஆசான் அகத்தியர்.
'மூர்க்கருடன் பழகாதே பொய் சொல்லாதே;
பின்னே நீ திரியாதே பிணங்கிடாதே'
என்பது ஆசான் நக்கீரர் கூற்று.
பறைச்சியாவது ஏதடா?
பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும்
இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ
பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும்
பகுத்துபாரும் உம்முளே!
வாயிலே குடித்தநீரை
எச்சில் என்று சொல்கிறீர்;
வாயிலே குதப்புவேத
மெனப்படக் கடவதோ?
வாயில் எச்சில் போகஎன்று
நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போனவண்ணம்
வந்திருந்து சொல்லுமே!
- ஆசான் சிவவாக்கியர்
https://www.facebook.com/
bbb3
No comments:
Post a Comment