Tuesday, December 17, 2019

கலிகாலத்தில் தீமை செய்பவன் இலகுவாக உயர்வது ஏன்..?

அகத்தியப்பெருமான் அருள்வாக்கு
இறைவனுக்கு அருகில் இருப்பவர்களைத்தான் சோதிக்கிறார். கலிகாலத்தில் தீமை செய்பவன் இலகுவாக உயர்வது ஏன்..? https://www.facebook.com/groups/305917699863621
தள்ளி நிற்பவர்களை இறைவன் கண்டுகொள்வதில்லை, என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதுவல்ல உண்மை. இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தால் எளிதான பாதிப்பு வரும். சற்றே வேகமான வாகனத்திலிருந்து விழுந்தால் கொஞ்சம் பலமான பாதிப்பு வரும். ஆனால் உயரமான இடத்திலிருந்து விழுந்தால், உயிருக்கே அபாயம் தான். அது போல் தான், கெடுதல் செய்பவர்கள், பகவானை துதிப்பது போல் நாடகமாடி பெரும் பொருள் சம்பாதித்தாலும், மிக விரைவில் அவர் உயரத்திலிருந்து விழப்போகிறார் என்று அர்த்தம். இறைவன் அப்படிப்பட்டவர்களுக்கு எளிதான பாதிப்பை கொடுக்காமல், உயரமான இடத்திற்கு ஏற்றிக்கொண்டிருக்கிறார் என்பது, சித்தர்களுக்கும், மகான்களுக்கும், ஞானிகளுக்கும் மட்டும்தான் தெரியும். மூன்று உலகத்தையும் ஆண்ட ராவணனுக்கு, ஒரு சாதாரணப் பெண்ணான, பதிவிரதையான சீதாபிராட்டியால் அழிவு ஏற்பட்டதைத்தான் சுந்தரகாண்டம் எடுத்துக்காட்டுகிறது, என்கிற முக்கியமான செய்தியை, இவ்வுலக மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும்" கலிகாலத்திலே, பூசைகள் கடினம் என்றுதான், தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இயன்றவர்கள், இயன்றவருக்கு, தக்கதொரு தர்மத்தை இயன்ற அளவுக்கு செய்து கொண்டே வரவேண்டும். ஒருநாள் போய்விட்டால், வாழ்க்கையில் அது நாள் அல்ல. வெட்டும் வாள். எனவே, ஒவ்வொரு தினமும் கழியும் போதும், அன்றைய தினத்தில், நாம், எத்தனை பேருக்கு உதவி செய்தோம்? எத்தனை மனிதனுக்கு நம்மால் பயன் ஏற்பட்டது? எத்தனை மனிதனுக்கு நாம் ஆறுதலாயிருந்தோம்? எத்தனை மனிதனுக்கு நாம், உடலால் உபகாரம் செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தைகளால், எண்ணங்களால், பொருட்களால், மருத்துவ உதவி செய்தோம்? எத்தனை பேருக்கு பசி தீர்த்து உதவினோம்? கல்வி கற்க உதவினோம்? என்றெல்லாம் சிந்தித்து, சிந்தித்து, அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த, அதிகப்படுத்த, கூடவே, இறையருளும், எமது ஆசியும் தொடரும். இறை காத்திருக்கிறது. ஆனால், இறையிடமிருந்து அருளைப் பெரும் பக்குவம்தான் மனிதனுக்கு இல்லை. முதலில் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும், அது இன்பமோ, துன்பமோ, ஒரு மாய வலைதான். இதனைத் தாண்டி இறைவனிடம் போகும்போது, "எனக்கு உன்னை தவிர வேறு எதுவும் தேவையில்லை. நீதான் வேண்டும்" என்று, உளமார ஒரு மனிதன் வேண்டத் தொடங்கி விட்டாலே, அவனை விட்டு வினைகள் ஒவ்வொன்றாக ஒடத் துவங்கும். பிறகு அவனுக்கு தேவைகள் என்று எதுவும் இருக்காது. தேவைகளுக்காக இறைவனை அணுகினால், கடைசிவரை ஒரு தேவை போக, இன்னொரு தேவை இருந்து கொண்டேதான் இருக்கும். தேவைகளுக்காக வழிபாடு என்பதை விட, ஒரு மனிதன் இறை மறுப்புக் கொள்கையிலேயே இருந்து விடலாம்
https://www.facebook.com/groups/305917699863621

சித்தர் அறிவியல்

Saturday, December 14, 2019

இசைத்தூண்கள்.. இசைத் தூண்கள்..

முருகப்பெருமானின் முதன்மைச் சீடர்களான சித்தர்கள் வகுத்த ஆயகலைகள் 64ல் கட்டிடக்கலை மற்றும் இசைக்கலையின் உச்சம்.

https://www.facebook.com/groups/305917699863621 உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " ! இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது . அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது . இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைக்கற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால், இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை. இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது. ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம். தேடல் தொடரும்... படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண். ஆனால் இதை போன்ற இசை தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

நன்றி: சசிதரன்
https://www.facebook.com/groups/305917699863621

சித்தர் அறிவியல்



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

Saturday, December 7, 2019

கேட்டால் பிறப்பெனும் பெருங்கடலைக் கடக்கலாம்

கேட்டால் பிறப்பெனும் பெருங்கடலைக் கடக்கலாம்

கேள் #பிறவாமை எனும் பெருஞ்ஞானம். கட பிறப்பு #அறியாமை எனும் பெருங்கடல்.
“பிறப்பெனும் பேதமை நீங்கச் சிறபென்னும்
செம்பொருள் காண்ப தறிவு”

-ஆசான் திருவள்ளுவர்.
ஆத்மா ஏற்றுக்கொண்ட கர்ம விளையாட்டில் #பிறந்து-இறந்து அவதிப்படுகின்றது. பிறப்பு-இறப்புச் சக்கரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க "பிறவாமை" எனும் பெருஞ்ஞானத்தை #வேண்டுதல்-வேண்டாமை கொண்ட #வாலறிவனிடம் ஆரம்பப்புள்ளியாக வழிபாட்டில் வேண்டுதல் வை. தொடர் பிறப்பை அறுப்பதற்கு அவன் வழி காட்டுவான். கேட்கும்வரை பிறவிப்பிணி தொடரும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை..!!!

முற்றுப்பெற்ற மகான் திருவள்ளுவப் பெருந்தகை கூறுகிறார் நாம் எதற்காவது ஆசைப்பட வேண்டும் என்றால் அது மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து வாழும் பிறப்பு-இறப்பு சக்கர நிலையிலிருந்து விலகிப் பிறவாநிலை கிடைக்கவே ஆசைப்பட வேண்டும். அதற்காக முற்றுப்பெற்றவர்களை (இறைநிலை அடைந்தோரை) வேண்டுதல் செய்ய வேண்டும். ஏனெனில், முற்றுப்பெற்ற ஞானிகளான ஆசான் திருவள்ளுவப் பெருமான் போன்றோரின் கருத்துப்படி பிறப்பே நரகம். இந்தப் பிறவியை முற்றுப்பெற்ற சித்தபெருமக்கள் வழிகாட்டலின் கீழ் வெல்வதே சொர்க்கம். அதுவே பேரறிவு, பேரின்பம், வீடு பேறடைதல், மோட்சம், ஆன்ம விடுதலை, இறையுடன் இரண்டறக் கலத்தல், ஜோதி உடம்பு பெறல், மரணமிலாப் பெருவாழ்வு எனப் பலவிதமாக அழைக்கப்படுகிறது. பிறவிப்பிணியை வென்ற மாபெரும் தலைவன், பொதுமறை தந்த அண்ணல் ஆசான் திருவள்ளுவப்பெருமானை வேண்டிப் பிறப்பென்னும் நரகத்தை வெல்வோம்.
“பிறப்பெனும் பேதமை நீங்கச் சிறபென்னும்
செம்பொருள் காண்ப தறிவு”
-ஆசான் திருவள்ளுவர்.

ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி.
சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவார், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
(எ.கா)
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)

திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் தலைமையில் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

ஆதி அகத்தியர் Aathi Agathiar

சித்தர் அறிவியல்





நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 


                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

Monday, November 25, 2019

தமிழ்ச்சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்....

முருகப்பெருமானின் முதன்மைச் சீடர்களான #தமிழ்ச்சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்.... https://www.facebook.com/groups/305917699863621 * ௧ = 1 * ௨ = 2 * ௩ = 3 * ௪ = 4 * ௫ = 5 * ௬ = 6 * ௭ = 7 * ௮ = 8 * ௯ = 9 * ௰ = 10 * ௰௧ = 11 * ௰௨ = 12 * ௰௩ = 13 * ௰௪ = 14 * ௰௫ = 15 * ௰௬ = 16 * ௰௭ = 17 * ௰௮ = 18 * ௰௯ = 19 * ௨௰ = 20 * ௱ = 100 * ௱௫௰௬ = 156 * ௨௱ = 200 * ௩௱ = 300 * ௲ = 1000 * ௲௧ = 1001 * ௲௪௰ = 1040 * ௮௲ = 8000 * ௰௲ = 10,000 * ௭௰௲ = 70,000 * ௯௰௲ = 90,000 * ௱௲ = 100,000 (lakh) * ௮௱௲ = 800,000 * ௰௱௲ = 1,000,000 (10 lakhs) * ௯௰௱௲ = 9,000,000 * ௱௱௲ = 10,000,000 (crore) * ௰௱௱௲ = 100,000,000 (10 crore) * ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore) * ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore) * ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore) * ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore) * ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore) ௳ = நாள் ௴ = மாதம் ௵ = வருடம் தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும் ஏறுமுக எண்கள் ************** 1 = ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thousand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் - one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 10000000000000000 = வெல்லம் -ten zillion 100000000000000000 = அன்னியம் -hundred zillion 1000000000000000000 = அர்த்தம் -? 10000000000000000000 = பரார்த்தம் —? 100000000000000000000 = பூரியம் -? 1000000000000000000000 = முக்கோடி -? 10000000000000000000000 = மஹாயுகம் -???????????????? இறங்குமுக எண்கள் ***************** 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முனை 1/9585244364800000 - குரல்வளைப்படி 1/575114661888000000 - வெள்ளம் 1/57511466188800000000 - நுண்மணல் 1/2323824530227200000000 - தேர்த்துகள் அளவைகள் ---------------- நீட்டலளவு ********** 10 கோன் - 1 நுண்ணணு 10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!! 8 அணு - 1 கதிர்த்துகள் 8 கதிர்த்துகள் - 1 துசும்பு 8 துசும்பு - 1 மயிர்நுணி 8 மயிர்நுணி - 1 நுண்மணல் 8 நுண்மணல் - 1 சிறுகடுகு 8 சிறுகடுகு - 1 எள் 8 எள் - 1 நெல் 8 நெல் - 1 விரல் 12 விரல் - 1 சாண் 2 சாண் - 1 முழம் 4 முழம் - 1 பாகம் 6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்) 4 காதம் - 1 யோசனை பொன்நிறுத்தல் ************ 4 நெல் எடை - 1 குன்றிமணி 2 குன்றிமணி - 1 மஞ்சாடி 2 மஞ்சாடி - 1 பணவெடை 5 பணவெடை - 1 கழஞ்சு 8 பணவெடை - 1 வராகனெடை 4 கழஞ்சு - 1 கஃசு 4 கஃசு - 1 பலம் பண்டங்கள் நிறுத்தல் ***************** 32 குன்றிமணி - 1 வராகனெடை 10 வராகனெடை - 1 பலம் 40 பலம் - 1 வீசை 6 வீசை - 1 தூலாம் 8 வீசை - 1 மணங்கு 20 மணங்கு - 1 பாரம் முகத்தல் அளவு ************* 5 செவிடு - 1 ஆழாக்கு 2 ஆழாக்கு - 1 உழக்கு 2 உழக்கு - 1 உரி 2 உரி - 1 படி 8 படி - 1 மரக்கால் 2 குறுணி - 1 பதக்கு 2 பதக்கு - 1 தூணி பெய்தல் அளவு ************* 300 நெல் - 1 செவிடு 5 செவிடு - 1 ஆழாக்கு 2 ஆழாக்கு - 1 உழக்கு 2 உழக்கு - 1 உரி 2 உரி - 1 படி 8 படி - 1 மரக்கால் 2 குறுணி - 1 பதக்கு 2 பதக்கு - 1 தூணி 5 மரக்கால் - 1 பறை 80 பறை - 1 கரிசை 96 படி - 1 கலம் 120 படி - 1 பொதி. சித்தர்கள் வகுத்த காலக் கணிப்பு - Lunar metrics of Siddha(Ciththars/Masters) Thamil & Sanskrit are languages of Ciththars(Siddha/Masters). Both languages were created & developed by Ciththars. It's Ciththars who developed lunar metrics of years.







நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 


                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

Friday, November 15, 2019

கட்டற்ற களஞ்சியம் தமிழ்மொழி

ஞானபண்டிதரான முருகப்பெருமான் அருளி, அகத்தியப்பெருமானால் இலக்கணம் வகுக்கப்பட்டு, சித்தர்களால் காத்துப் போற்றப்படும் தமிழ்மொழி, தோண்டத்தோண்ட தெகட்டாத வற்றா அருவி, அறிவுசார் கலைபல தன்னகத்தே கொண்ட கட்டற்ற களஞ்சியமாகும். https://www.facebook.com/groups/305917699863621 *போதாது போதாது....* *அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!* 1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....! 1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...! 1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... ! 1.அகத்தியம் 2.தொல்காப்பியம் 3.புறப்பொருள் வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும் 6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..! 1.கம்பராமாயணம்-வழிநூல். 1.தேவாரம் 2.திருவாசகம், 3.திருவருட்பா, 4.திருப்பாவை 5.திருவெம்பாவை 6..நாச்சியார் திருமொழி 7. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..! 1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி 5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...! ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதி களைக் கொண்டிருப்பதுதான்.. 1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை 7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..! தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..! ------------------------------------------------------------ அகம்பன் மாலாதனார் அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சில் ஆந்தையார் அடைநெடுங்கல்வியார் அணிலாடு முன்றிலார் அண்டர் மகன் குறுவழுதியார் அதியன் விண்ணத்தனார் அதி இளங்கீரனார் அம்மூவனார் அம்மெய்நாகனார் அரிசில் கிழார் அல்லங்கீரனார் அழிசி நச்சாத்தனார் அள்ளூர் நன்முல்லையார் அறிவுடைநம்பி ஆரியன் பெருங்கண்ணன் ஆடுதுறை மாசாத்தனார் ஆதிமந்தி ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார் ஆலங்குடி வங்கனார் ஆலத்தூர் கிழார் ஆலம்பேரி சாத்தனார் ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் ஆவூர் காவிதிகள் சகாதேவனார் ஆவூர்கிழார் ஆலியார் ஆவூர் மூலங்கீரனார் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் இடைக்காடனார் இடைக்குன்றூர்கிழார் இடையன் சேந்தன் கொற்றனார் இடையன் நெடுங்கீரனார் இம்மென்கீரனார் இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார் இருந்தையூர்க் கொற்றன் புலவன் இரும்பிடர்தலையார் இளங்கீரந்தையார் இளங்கீரனார் இளநாகனார் இளந்திரையன் இளந்தேவனார் இளம்புல்லூர்க் காவிதி இளம்பூதனார் இளம்பெருவழுதி இளம்போதியார் இளவெயினனார் இறங்குடிக் குன்றநாடன் இறையனார் இனிசந்த நாகனார் ஈழத்துப் பூதந்தேவனார் உகாய்க் குடிகிழார் உக்கிரப் பெருவழுதி உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் உம்பற்காட்டு இளங்கண்ணனார் உருத்திரனார் உலோச்சனார் உவர்கண்ணூர் புல்லங்கீரனார் உழுந்தினைம் புலவர் உறையனார் உறையூர் இளம்பொன் வாணிகனார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் உறையூர்ச் சல்லியங் குமரனார் உறையூர்ச் சிறுகந்தனார் உறையூர்ப் பல்காயனார் உறையூர் மருத்துவன் தாமோதரனார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் ஊட்டியார் ஊண்பித்தை ஊண்பொதி பசுங்குடையார் எயிற்றியனார் எயினந்தையார் எருமை வெளியனார் எருமை வெளியனார் மகனார் கடலனார் எழூப்பன்றி நாகன் குமரனார் ஐயாதி சிறு வெண்ரையார் ஐயூர் முடவனார் ஐயூர் மூலங்கீரனார் ஒக்கூர் மாசாத்தனார் ஒக்கூர் மாசாத்தியார் ஒருசிறைப் பெரியனார் ஒரூத்தனார் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஓதஞானி ஓதலாந்தையார் ஓரம்போகியார் ஓரிற்பிச்சையார் ஓரேர் உழவர் ஔவையார் கங்குல் வெள்ளத்தார் கச்சிப்பேடு இளந்தச்சன் கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார் கச்சிப்பேடு பெருந்தச்சனார் கடம்பனூர்ச் சாண்டில்யன் கடலூர்ப் பல்கண்ணனார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கடுந்தொடைக் காவினார் கோவர்த்தனர் கோவூர்க் கிழார் கோவேங்கைப் பெருங்கதவனார் கோழிக் கொற்றனார் கோளியூர்க் கிழார் மகனார் செழியனார் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன் சங்கவருணர் என்னும் நாகரியர் சத்திநாதனார் சல்லியங்குமரனார் சாகலாசனார் சாத்தந்தந்தையார் சாத்தனார் சிறுமோலிகனார் சிறுவெண்டேரையார் சிறைக்குடி ஆந்தையார் சீத்தலைச் சாத்தனார் செங்கண்ணனார் செம்பியனார் செம்புலப்பெயல்நீரார் செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார் செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன் செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார் செல்லூர்க்கோசிகன் கண்ணனார் சேந்தங்கண்ணனார் சேந்தம்பூதனார் சேந்தங்கீரனார் சேரமானெந்தை சேரமான் இளங்குட்டுவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழன் நலங்கிள்ளி சோழன் நல்லுருத்திரன் தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் தனிமகனார் தாமாப்பல் கண்ணனார் தாமோதரனார் தாயங்கண்ணனார் தாயங்கண்ணியார் தாயுமானவர் திப்புத்தோளார் திருத்தாமனார் தீன்மதிநாகனார் தும்பிசேர்கீரனார் துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார் துறையூர்ஓடைக்கிழார் தூங்கலோரியார் தேய்புரி பழங்கயிற்றினார் தேரதரன் தேவகுலத்தார் தேவனார் தொடித்தலை விழுத்தண்டினர் தொண்டி ஆமூர்ச்சாத்தனார் தொல்கபிலர் நக்கண்ணையார் நக்கீரர் நப்பசலையார் நப்பண்ணனார் நப்பாலத்தனார் நம்பிகுட்டுவன் நரிவெரூத்தலையார் நரைமுடி நெட்டையார் நல்லச்சுதனார் நல்லந்துவனார் நல்லழிசியார் நல்லாவூர்க் கிழார் நல்லிறையனார் நல்லுருத்திரனார் நல்லூர்ச் சிறுமேதாவியார் நல்லெழுநியார் நல்வழுதியார் நல்விளக்கனார் நல்வெள்ளியார் நல்வேட்டனார் நற்சேந்தனார் நற்றங்கொற்றனார் நற்றமனார் நன்பலூர்ச் சிறுமேதாவியார் நன்னாகனார் நன்னாகையார் நாகம்போத்தன் நாமலார் மகன் இளங்கண்ணன் நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் நெடுங்கழுத்துப் பரணர் நெடும்பல்லியத்தனார் நெடும்பல்லியத்தை நெடுவெண்ணிலவினார் நெட்டிமையார் நெய்தற் கார்க்கியார் நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார் நெய்தற்றத்தனார் நொச்சி நியமங்கிழார் நோய்பாடியார் பக்குடுக்கை நன்கணியார் படுமரத்து மோசிகீரனார் படுமரத்து மோசிக்கொற்றனார் பதடிவைகலார் பதுமனார் பரணர் கடுந்தொடைக் கரவீரன் கடுவன் இளமள்ளனார் கடுவன் இளவெயினனார் கடுவன் மள்ளனார் கணக்காயன் தத்தனார் கணியன் பூங்குன்றனார் கண்ணகனார் கண்ணகாரன் கொற்றனார் கண்ணங்கொற்றனார் கண்ணம் புல்லனார் கண்ணனார் கதக்கண்ணனார் கதப்பிள்ளையார் கந்தரத்தனார் கபிலர் கம்பர் கயத்தூர்கிழார் கயமனார் கருங்குழலாதனார் கரும்பிள்ளைப் பூதனார் கருவூர்க்கிழார் கருவூர் கண்ணம்பாளனார் கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் கருவூர் கலிங்கத்தார் கருவூர் கோசனார் கருவூர் சேரமான் சாத்தன் கருவூர் நன்மார்பனார் கருவூர் பவுத்திரனார் கருவூர் பூதஞ்சாத்தனார் கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார் கல்பொருசிறுநுரையார் கல்லாடனார் கவைமகன் கழாத்தலையார் கழார்க் கீரனெயிற்றியனார் கழார்க் கீரனெயிற்றியார் கழைதின் யானையார் கள்ளிக்குடிப்பூதம்புல்லனார் கள்ளில் ஆத்திரையனார் காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார் காசிபன் கீரன் காட்டூர்கிழார் மகனார் கண்ணனார் காப்பியஞ்சேந்தனார் காப்பியாற்றுக் காப்பியனார் காமஞ்சேர் குளத்தார் காரிக்கிழார் காலெறி கடிகையார் காவட்டனார் காவற்பெண்டு காவன்முல்லையார் காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார் கிடங்கில் குலபதி நக்கண்ணனார் கிள்ளிமங்கலங்கிழார் கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார் கீரங்கீரனார் கீரந்தையார் குடபுலவியனார் குடவாயிற் கீரத்தனார் குட்டுவன் கண்ணனார் குட்டுவன் கீரனார் குண்டுகட் பாலியாதனார் குதிரைத் தறியனார் குப்பைக் கோழியார் குமட்டூர் கண்ணனார் குமுழிஞாழலார் நப்பசலையார் குழற்றத்தனார் குளம்பனார் குளம்பாதாயனார் குறமகள் இளவெயினி குறமகள் குறியெயினி குறியிறையார் குறுங்கீரனார் குறுங்குடி மருதனார் குறுங்கோழியூர் கிழார் குன்றம் பூதனார் குன்றியனார் குன்றூர்க் கிழார் மகனார் கூகைக் கோழியார் கூடலூர்க் கிழார் கூடலூர்ப பல்கண்ணனார் கூவன்மைந்தன் கூற்றங்குமரனார் கேசவனார் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் கொட்டம்பலவனார் கொல்லன் அழிசி கொல்லிக் கண்ணன் கொள்ளம்பக்கனார் கொற்றங்கொற்றனார் கோக்குளமுற்றனார் கோடைபாடிய பெரும்பூதன் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் கோட்டியூர் நல்லந்தையார் கோண்மா நெடுங்கோட்டனார் கோப்பெருஞ்சோழன் பராயனார் பரூஉமோவாய்ப் பதுமனார் பறநாட்டுப் பெருங்கொற்றனார் பனம்பாரனார் பாண்டரங்கண்ணனார் பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் பன்னாடு தந்தான் பாண்டியன் மாறன் வழுதி பாரதம் பாடிய பெருந்தேவனார் பாரிமகளிர் பார்காப்பான் பாலைக் கௌதமனார் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாவைக் கொட்டிலார் பிசிராந்தையார் பிரமசாரி பிரமனார் பிரான் சாத்தனார் புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார் புல்லாற்றூர் எயிற்றியனார் பூங்கணுத் திரையார் பூங்கண்ணன் பூதங்கண்ணனார் பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பூதம்புல்லனார் பூதனார் பூதந்தேவனார் பெருங்கண்ணனார் பெருங்குன்றூர்க் கிழார் பெருங்கௌசிகனார் பெருஞ்சாத்தனார் பெருஞ்சித்திரனார் பெருந்தலைச்சாத்தனார் பெருந்தேவனார் பெருந்தோட் குறுஞ்சாத்தன் பெரும் பதுமனார் பெரும்பாக்கன் பெருவழுதி பேயனார் பேய்மகள் இளவெயினி பேராலவாயர் பேரிசாத்தனார் பேரெயின்முறுவலார் பொதுக்கயத்துக் கீரந்தை பொதும்பில் கிழார் பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி பொதும்பிற் புல்லாளல் கண்ணியார் பொத்தியார் பொய்கையார் பொருந்தில் இளங்கீரனார் பொன்மணியார் பொன்முடியார் பொன்னாகன் போதனார் போந்தைப் பசலையார் மடல் பாடிய மாதங்கீரனார் மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் மதுரை இனங்கௌசிகனார் மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் மதுரைக் கணக்காயனார் மதுரைக் கண்டராதித்தனார் மதுரைக் கண்ணத்தனார் மதுரைக் கவுணியன் பூதத்தனார் மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் மதுரைக் காருலவியங் கூத்தனார் மதுரைக் கூத்தனார் மதுரைக் கொல்லன் புல்லன் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் மதுரைச் சுள்ளம் போதனார் மதுரைத் தத்தங்கண்ணனார் மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார் மதுரைத் தமிழக் கூத்தனார் மதுரைப் படைமங்க மன்னியார் மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார் மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் மதுரைப் புல்லங்கண்ணனார் மதுரைப் பூதனிள நாகனார் மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் மதுரைப் பெருங்கொல்லன் மதுரைப் பெருமருதனார் மதுரைப் பெருமருதிளநாகனார் மதுரைப் போத்தனார் மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் மதுரை வேளாசன் மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார் மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார் மருதம் பாடிய இளங்கடுங்கோ மருதனிளநாகனார் மலையனார் மள்ளனார் மாங்குடிமருதனார் மாடலூர் கிழார் மாதீர்த்தன் மாமிலாடன் மாமூலனார் மாயேண்டன் மார்க்கண்டேயனார் மாலைமாறன் மாவளத்தன் மாறோக்கத்துக் காமக்கண்ணியார் மாறோக்கத்து நப்பசலையார் மாற்பித்தியார் மிளைக் கந்தன் மிளைப் பெருங்கந்தன் மிளைவேள் பித்தன் மீனெறி தூண்டிலார் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் முடத்தாமக்கண்ணியார் முடத்திருமாறன் முதுகூத்தனார் முதுவெங்கண்ணனார் முப்பேர் நாகனார் முரஞ்சியயூர் முடிநாகராயர் முள்ளியூர்ப் பூதியார் முலங்கீரனார் மையோடக் கோவனார் மோசிக்கண்ணத்தனார் மோசிக்கீரனார் மோசிக்கொற்றன் மோசிக்கரையனார் மோசிசாத்தனார் மோசிதாசனார் வடநெடுந்தத்தனார் வடவண்ணக்கன் தாமோதரன் வடமோதங்கிழார் வருமுலையாரித்தி வன்பரணர் வண்ணக்கன் சோருமருங்குமரனார் வண்ணப்புறக் கந்தரத்தனார் வாடாப்பிராந்தன் வாயிலான் தேவன் வாயிலிலங்கண்ணன் வான்மீகியார் விட்டகுதிரையார் விரிச்சியூர் நன்னாகனார் விரியூர் நன்னாகனார் வில்லக விரலினார் விழிகட்பேதை பெருங்கண்ணனார் விற்றூற்று மூதெயினனார் விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் வினைத் தொழில் சோகீரனார் வீரை வெளியனார் வீரை வெளியன் தித்தனார் வெண்கண்ணனார் வெண்கொற்றன் வெண்ணிக் குயத்தியார் வெண்பூதன் வெண்பூதியார் வெண்மணிப்பூதி வெள்ளாடியனார் வெள்ளியந்தின்னனார் வெள்ளிவீதியார் வெள்வெருக்கிலையார் வெள்ளைக்குடி நாகனார் வெள்ளைமாளர் வெறிபாடிய காமக்கண்ணியார் வேட்டகண்ணன் வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன் வேம்பற்றுக் குமரன் மற்றும் பெண்பாற்புலவர்கள்: --------------------------------------------------- அச்சியத்தை மகள் நாகையார் அள்ளுரர் நன்முல்லை ஆதிமந்தி - குறுந் 3 இளவெயினி - புறம் 157 உப்பை ஃ உறுவை ஒக்கூர் மாசாத்தியார் கரீனா கண்கணையார் கவியரசி கழார் கீரன் எயிற்றியார் கள்ளில் ஆத்திரையனார் காக்கை பாடினியார் நச்செள்ளையார் காமக்கணிப் பசலையார் காரைக்காலம்மையார் காவற்பெண்டு காவற்பெண்டு கிழார் கீரனெயிற்றியார் குட புலவியனார் குமிழிநாழல் நாப்பசலையார் குமுழி ஞாழல் நப்பசையார் குறமகள் ஃ இளவெயினி குறமகள் ஃ குறிஎயினி குற மகள் இளவெயினியார் கூகைக்கோழியார் தமிழறியும் பெருமாள் தாயங்கண்ணி - புறம் 250 நக்கண்ணையார் நல்லிசைப் புலமை மெல்லியார் நல்வெள்ளியார் நெட்டிமையார் நெடும்பல்லியத்தை பசலையார் பாரிமகளிர் பூங்கண்ணுத்திரையார் பூங்கண் உத்திரையார் பூதபாண்டியன் தேவியார் பெண்மணிப் பூதியார் பெருங்கோப்பெண்டு பேய்மகள் இளவெயினி பேயனார் பேரெயென் முறுவலார் பொத்தியார் பொன்மணியார் பொன்முடியார் போந்தலைப் பசலையார் மதுவோலைக் கடையத்தார் மாற்பித்தியார் மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி மாறோக்கத்து நாப்பசலையார் முள்ளியூர் பூதியார் முன்னியூப் பூதியார் வரதுங்க ராமன் தேவியார் வருமுலையாருத்தி வில்லிபுத்தூர்க் கோதையார் வெண்ணிக் குயத்தியார் வெள்ளி வீதியார் வெறிபாடிய காமக்கண்ணியர். சித்தர்கள்: பதினெண் சித்தர்: 1. திருமூலர், 2. இராமதேவர், 3. கும்பமுனி, 4. இடைக்காடர், 5. தன்வந்திரி, 6. வான்மீகி, 7. கமலமுனி, 8. போகநாதர், 9. குதம்பைச் சித்தர், 10. மச்சமுனி, 11. கொங்கணர், 12, பதஞ்சலி, 13. நந்திதேவர், 14. போதகுரு, 15. பாம்பாட்டிச் சித்தர். 16. சட்டைமுனி, 17. சுந்தரானந்த தேவர், 18. கோரக்கர். இது ஒரு பட்டியல். 1. அகப்பேய் சித்தர், 2. அழுகணிச் சித்தர், 3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், 4. சதோகநாதர், 5.இடைக்காட்டுச் சித்தர், 6. குதம்பைச் சித்தர், 7. புண்ணாக்குச் சித்தர். 8. ஞானச்சித்தர், 9.மௌனச் சித்தர், 10. பாம்பாட்டிச் சித்தர், 11. கல்லுளி சித்தர், 12, கஞ்சமலைச் சித்தர். 13. நொண்டிச் சித்தர், 14. விளையாட்டுச் சித்தர், 15. பிரமானந்த சித்தர், 16. கடுவெளிச் சித்தர், 17. சங்கிலிச் சித்தர், 18.திரிகோணச்சித்தர். இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர். 1. வான்மீகர், 2. பதஞ்சலியார், 3. துர்வாசர், 4. ஊர்வசி, 5. சூதமுனி, 6. வரரிஷி, 7. வேதமுனி, 8. கஞ்ச முனி, 9. வியாசர், 10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல். பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது. 1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணா னந்தர், 6. போகர், 7. சட்டைநாதர், 8. பதஞ்சலியார், 9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி 12.அழுகணி.13. பாம்பாட்டி, 14. இடைக்காட்டுச் சித்தர், 15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர், 22. நந்தீசர், 23, அகப்பேய், 24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31. காகபுசுண்டர், 32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்ட வசுக்கள், 42. சப்த ரிஷிகள். ஆறுமுக அரங்கரால் அருளப்பட்ட சித்தர்கள் போற்றித் தொகுப்பு ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி ஓம் அநுமான் திருவடிகள் போற்றி ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10 ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20 ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி ஓம் கபிலர் திருவடிகள் போற்றி ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30 ஓம் கனராமர் திருவடிகள் போற்றி ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி ஓம் காசிபர் திருவடிகள் போற்றி ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40 ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50 ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60 ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70 ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 80 ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் தேரையர் திருவடிகள் போற்றி ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி ஓம் நாரதர் திருவடிகள் போற்றி ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90 ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100 ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110 ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி ஓம் யாகோபு திருவடிகள் போற்றி ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 120 ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131 இப்படிச் சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உலகில் "இந்தி"என்ற ஒரு மொழியே இல்லை. ஆனால் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய மொழி என் தாய்மொழி தமிழ்..! இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது , நாமாக அழித்தால் தான் உண்டு. பெருமை கொள்வோம் தமிழரென்று.! https://www.facebook.com/groups/305917699863621 சித்தர் அறிவியல்



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 


                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||