சித்தர்கள் வகுத்த #காயத்திரி
காயம்+திரி=காயத்திரி. காயமாகிய பொய்யுடலை கபங்கள் நீக்கி(திரித்து) மெய்யுடல் ஆக்கல்.
"உருத்தரித்த நாடியில்
ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே
கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்
மேனியும் சிவந்திடும்"
-ஆசான் சிவவாக்கியர்
இடது, வலது மூச்சுத் (மூக்கு) துவாரங்கள் ஊடாக ஓடும் காற்றை(வாயுவை) கபாலத்திலுள்ள சுழிமுனையில் (உருத்தரித்த நாடி) ஓடுங்கினால், வயோதிபரும்(விருத்தர்) பாலகராக மாறி, மேனியும் பளபளப்பாக ஒளிதேகம் பெற்று சிவந்திடும்.
வயது முதிர்ந்த கிழவரும் ஞானபண்டிதனான முருகப்பெருமான் துணைகொண்டு சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை சுழிமுனையாகிய 'உருத்தரித்த நாடி'யில் ரேசித்துப் பூரித்துக் கும்பித்து நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என்கிறார் ஆசான் சிவவாக்கியர். இவ்வாறு காயத்தைத் திரித்து சூட்சுமதேகமாகிய ஒளியுடலைப் பெறலே சித்தர்கள் வகுத்த காயத்திரி ஆகும்.
காற்றை/பிராணனை/வாயுவை தசநாடியான சுழிமுனையில் பூரித்து, கும்பித்து தங்கச் செய்துவிட்டால் பொய்யுடலில் உள்ள கபங்கள் நீங்கி ஒளியுடம்பைப் பெறறு அருட்பெருஞ்சோதியாகிய சிவத்துடன் இரண்டறக் கலக்கலாம்.
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.
இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை பத்தாவது நாடியான சுழிமுனையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுலகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு-இறப்புச் சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.
பிறவிப்பிணியை வென்று என்றுமே வாழுங்கலை (சாகாக்கலை/ மரணமிலாப் பெருவாழ்வு) என்று மனிதரை என்றுமே இறையுடன் நீக்கமற வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :
"பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே"
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது, பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
சாகாதவனே சன்மார்க்கி!
சாகாதவனே சற்குரு!
சாகாதவனே முற்றுப்பெற்ற சித்தன்!
06/04/2015
ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
<3 Aum Muruga ஓம் முருகா <3

Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html
Posted By Nathan Surya
No comments:
Post a Comment