நாட்டமென்ற பூரணத்தைக்
காண வென்றால்
நன்மையுள்ள சற்குருவாற்
காண வேண்டும்..!
ஓட்டமென்ற வோட்டமெல்லாம்
வோடா தேநீ
ஒருமனதாய் சுழிமுனையிலு
கந்து நில்லு..!
ஆட்டமென்ற திருநடன
மங்கே யுண்டு
ஐம்பத்தோ ரெழுத்து
முதலெல்லா முண்டு
பாட்டைமிக பதத்தினா
லென்ன வுண்டு
பத்திமுத்தி வைராக்கிய
மாகப் பாரே..!
- அகத்தியர் பரிபூரணம் 400
பூரணமாகிய பரம்பொருளைக் காணவேண்டும் என்றால் நல்ல குருவின் துணை வேண்டும். அதைவிடுத்து ஓடாத ஓட்டமெல்லாம் ஓடவேண்டாம். மனதை ஒரு நிலைப்படுத்தி சுழிமுனையில் நிறுத்த வேண்டும். சுழிமுனையில் திருநடனத்தை காணலாம்..ஐம்பத்தொரு எழுத்துக்களையும் நீ அறியலாம் பாடல்களினால் என்னவுண்டு பக்தியுடன் வைராக்கியமாக இருந்து பரம் பொருளைக் காணவேண்டும்.
ஓங்காரக்குடில் Ongarakudil
ஓம் அகத்தீசாய நம


Wisdom of Siddhas சித்தரியல்
No comments:
Post a Comment