முருகனை வணங்க வணங்க, அவர் தம்முள்ளே ஒருவன் படுகின்ற எந்தத் துன்பத்திற்கும் அவன் முன்சென்மங்களிலே செய்திட்ட பாவமே இச்சென்மத்திலே துன்பமாய் வருகின்றது என்பதையும், வந்த துன்பத்தினைப் போக்கிச் சுகமடைய இச்சென்மத்திலேயாவது புண்ணியங்கள் செய்திட வேண்டும் என்ற உணர்வும் பெறுவான், பெற்றே அவர்களெல்லாம் முருகனடியைத் தொழுது தொழுது முருகன் நாமம் செபித்து செபித்து முருகன் அருள் கூடிட, வினை ஒழிந்து சுகமான வாழ்வைப் பெறுவார்கள். குகனே குருவாக வந்து பிறவாமையெனும் ஞானோபதேசம் அருள்வான். ஞானபண்டிதன் அருளாசியால் அவன் வேறு யாம் வேறல்ல என்ற உயர் ஞானநிலையை எய்தலாம்.
போற்றுவோம் முருகன் திருவடியை!
பெறுவோம் வினை நீங்கிய
முற்றுப்பெற்ற ஞானவாழ்வை!!
Aum Muruga ஓம் மு௫கா
-அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்
https://www.facebook.com/
ஓங்காரக்குடில் Ongarakudil


No comments:
Post a Comment