ஏற்பட போகர் மீண்டும் பூமிக்கு திரும்பி வர
போகிறார். நம்பிக்கை இல்லையானால் முற்றாக
இந்தப் பதிவை படியுங்கள் . உங்களுக்கே புரியும் . }
-S.Shankar
https://www.facebook.com/groups/siddhar.science
கலியுகமும், சந்திர ரேகையும்!
**************************
சமீபத்தில் எனது புத்தக அலமாரியை
ஒழுங்கு செய்து கொண்டிருந்த
போது...அநேகமாய் அழிந்து விட்ட நிலையில்
இருந்த நூலொன்று கிடைத்தது.
புத்தகத்தின்
பெரும் பகுதி அழிந்துவிட்ட நிலையில்
மிச்சமிருந்த நூலின் பாடல்களை சேகரிக்க
முயற்சித்த போது, அது கோரக்க சித்தர்
அருளிய ”சந்திர ரேகை” என்று தெரிந்தது.
என்னிடம் இருக்கும் இந்த புத்தகம் 1826ம்
ஆண்டில் அச்சில் பதிப்பிக்கப் பட்ட நூல்.
இன்றைக்கு அந்த நூல் முழுமையான
வடிவில் கிடைக்கிறதா என தெரியவில்லை.
விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்தால்
பேருதவியாக இருக்கும்.
நாம் வாழ்ந்து வரும் இந்த கலியுகத்தின்
பிறப்பு முதல் கடைசிவரையிலான
நிகழ்வுகளை விவரித்திருக்கிறார்.
ஒவ்வொரு
கால கட்டத்திலும் என்னென்ன நிகழ்வுகள்
நிகழும் என்பதை என்றைக்கோ கோரக்கர்
தனது நூலில் விவரித்திருப்பது ஆச்சர்யமான
ஒன்று. இந்த நூலில் நான் சேகரித்த சில
பாடல்களையும் அதன் தெளிவுகளையும்
பகிர்ந்து கொள்கிறேன்.
கலியுகத்தின் தோற்றம்..
**************************
"யோகி பரமானந்த கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமதபேதம் மெத்த
பாகிதமாய் பிரபலங்கள் பெண்பால்விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட
மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில்
பூவுலகில் கலியினுடை பான்மை கேளே"
- சந்திர ரேகை -
"கேளேநன் மனுக்கள் நூற்றுக் கொன்று
கொடியாகப் பிறந்திருந்தல் அரிதேயாகும்
நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க
நரங்கிடுவர் மனிதர்களும் உயரம் கட்டை
வாளே முன்பின் வயது ஆண்டு நூறு
வழங்கிடுவேன் கலியுதிக்கும் இடத்தை -
தென்பால்
சூளேமெய்க் கம்பல பட்டன் வைணவ தத்தன்
கொல்லை புன்னை மரத்தின் கீழ்ப்பிரமாதி
ஆண்டு
ஆனசித்திரைவெள்ளி நவமிமூலம்
கலிசெனிப்பே"
- சந்திர ரேகை -
பிரமாதி ஆண்டு, சித்திரை மாதம், வெள்ளிக்
கிழமை, நவமி திதியுடன் மூல நட்சத்திரம்
சேர்ந்த நாளில் ”கம்பல பட்டன் வைணவ
தத்தன்” கொல்லையில் புன்னை மரத்தின் கீழ்
யோகி பரமானந்த கலிபுருஷன் பிறந்தான்
என்று சொல்லும் கோரக்கர் மேலும்,
கலியுகத்தின் தன்மை சொல்கிறேன் கேள்
என்று தொடர்கிறார்...
கலியுகத்தில் சாதி மத பேதம் அதிகமாக
இருப்பதுடன், சனத் தொகையில் பெண்களின்
எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்கள்
குறைவாகவும், இருப்பார்கள்...., காமவெறி
அதிகரித்து பெற்ற தாயைப் பெண்டாளும்
மகனும் இருப்பதுடன், நல்லவர்கள் நூற்றுக்கு
ஒருவர் பிறந்திருந்தால் அரிதாக இருக்கும்
என்கிறார். அத்துடன் கலியுகம் வளரவளர
மனிதர்களின் உயரம் குறைந்து கொண்டே
போகும் என்றும் நூறுவயதுக்கு மேல்
வாழ்பவர்கள் மிக அரிதாகிவிடுவர் என்கிறார்.
கலியுகமும், மனிதர்களின் குண நலன்களும்...!
**************************
கலியுகம் துவங்கிய நாள் முதல், இறுதி நாள்
வரையிலான விவரங்களை கோரக்கர் தனது
”சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார்.
கலியுலத்தின் அரசியல், சமூகம், வாழும்
மனிதர்களின் குண நலன்கள் பற்றிய
தகவல்களும் இந்த நூலில் காணக்
கிடைக்கின்றன.
மனிதர்களின் குண நலன்களை பற்றி
பின்வருமாறு கூறுகிறார்.
"சின்னம் மிக ஆகிடுமே செகம் பிறந்து
சீரியதோர் நாகம்போல மாந்தரெல்லாம்
பின்னமுற்றும் பேதமையால் மயக்கம்
கொள்வார்
பிரபலமாம் அரசர்கட்கும் ஆனிமெத்த
இந்நிலத்தில் எங்கெங்கும் சங்கம் கூட்டி
இதமுடனே நிலைநாட்டி ஈசன்தன்னை
நன்னயமாய் வழிபடுவர் நாட்டில் எங்கும்
நற்சமய வாதிகளும் அநேகம் உண்டே "
- சந்திர ரேகை -
உலகமே மாற்றங்களுக்கு உள்ளாகி, மக்கள்
நாகம் போல் சீறிக் கொண்டு, ஏற்றத்தாழ்வு
பேசி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள
முற்படுவர். இந்த நிலத்தில் அரசர்களுக்கு
இடையில் சங்கங்களும் பிரிவினைகளும்
உண்டாகும். ஈசனை வழிபடுபவர்களும்,
நற்சமய வாதிகளும் அதிகம் இருப்பார்கள்
என்கிறார்.
இத்தகைய கலியுகத்தில், பாரத தேசத்தை
யாரெல்லாம் ஆள்வார்கள் என்றும் கூட
விவரமாய் குறித்திருக்கிறார்.
கலியுகம் - இந்தியாவின் வரலாறு!
**************************
கலியுகம் பிறந்த பின்னர் பாரத நாட்டை யார்
யார் எல்லாம் ஆள்வார்கள், எத்தனை
ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள் என்கிற
விவரங்களைக் கூட கோரக்கர் தனது நூலில்
விளக்கியிருக்கிறார்.
"பழியில்லா பரீட்சித்து ஐந்நூறே ஆண்டான்
பரிவாக சனமேசெயன் முந்நூறாண்டான்
இழிவில்லா நரேந்திரனாம் என்ற மன்னன்
இரண்டு நூற்றெண்பத் தெட்டாக ஆண்டான்
செழிப்பாக சாரங்கன் எண்பத் தைந்து
செகமுழுவதும் விக்கிரமாதித்த வேந்தன்
வேந்தனவன் இரெண்டாயிரம் ஆண்டதப்பால்
வினயமுற்றுச் சாலிவாகனனும் தோன்றிப்
பாந்தமிகு முன்னூற்று நாற்பத்தொன்பது
ஆண்டுஅகிலம் அரசுரிய செங்கோலோச்சி
எந்துகங்குல் நற்போசன் ஐநூ றாண்டான்
சுப்பராயலு அறுநூற்றுத்
தொண்ணூற்றைந்து
போந்தவே கர்த்தாக்கள் எண்பத் தைந்து
பிறைஇசுலாம் அறுபத்து இரெண்டாண்டு"
- சந்திர ரேகை -
"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு
அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
பெருமாவ்யுடன் எழுபத்து மூன்றதாண்டு
பேதமற ஆண்டிடவே இவன் சார்புற்றோன்
கருமையில்ல வெள்ளை நிறமாகத்தானே
கபடுற்று கவர்ந்து தொண்ணுற்றுறாறதாண்டு
வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன்போன்றோர் அரசன்
தோன்றி ஈருறவு நாற்பது வருடமாகும்
துறைதவறா முறைபிசகா திருந்துஓங்கும்
மேன்மை பெற இதுகடந்த நாள்துய்ய
ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்
அகிலசக்கர கொடியுடனே அழியாமல்
பான்மையுடன் அரசாள நான் மட்டல்ல
பகரவில்லை சிவனேந்திரமாமுனியும்
சொன்னார்"
- சந்திர ரேகை -
இந்த பாடல்களின் படி பாரத தேசத்தை ஆட்சி
செய்தவர்களின் பெயரையும்,
ஆண்டுகளையும் பட்டியலிட்டால்......
ஆட்சியாளர்கள் ஆண்டு
பரீட்சித்து
மன்னன் 500
சனமேசெயன் 300
நரேந்திரன் 288
சாரங்கன் 85
விக்கிரமாதித்தன் 2000
சாலிவாகனன் 349
போசனராசன் 500
சுப்பராயலு 695
கர்த்தாக்கள் 85
இஸ்லாமியர் 62
பறட்டையன்
செம்மூஞ்சி
சுக்கன்
73
பறட்டையன்
செம்மூஞ்சி
சுக்கன்
96
பறட்டையன்
செம்மூஞ்சி
சுக்கன்
40
இதன் பின்னர் கிள்ளுநாமக்காரர் கலி
முடியும்வரை ஆட்சி செய்வர் என்கிறார்....
இந்த பட்டியலில்..
"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு
அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்"
73 ஆண்டுகள்
"இவன் சார்புற்றோன்கருமையில்ல வெள்ளை
நிறமாகத்தானே கபடுற்று கவர்ந்து
வறுமைசெய்து ஆண்டபின்" 96 ஆண்டுகள்
"வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன் போன்றோர் அரசன்" 40
ஆண்டுகள்
இவ்வாறு குறிக்கப்படும் ஆட்சிக்காலம்
ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலமாகக்
கொள்ளலாம், மொத்தமாக 209 ஆண்டுகள்
என்று கோரக்கர் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை எறத்தாழ
200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டமை
எல்லொருக்கும் தெரிந்ததே..
கோரக்கர்
கூறியுள்ள கணக்கின் படி இந்தியா சுதந்திரம்
அடைந்த போது கலியுகத்தின் வயது 5073
ஆண்டுகளாகும்.
கடைசியாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குப்
பின்னர் "ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்
அகிலசக்கர கொடியுடனே அழியாமல்
பான்மையுடன் அரசாள" என்று
குறிப்பிட்டுள்ளார். இங்கே "ஆன்மநலம்
அறிந்த கிள்ளுநாமக்காரர்" என்பது அநேகமாய்
மகாத்மா காந்தியையும் "அகிலசக்கர
கொடியுடனே" என்பதை அசோகச்சக்கரம்
பொறித்த இந்தியக் கொடி என்பதாக
அனுமானிக்கலாம்.
இந்தச் எதிர்வு கூறல்களை தான்
மட்டுமல்லாது சிவனேந்திரமாமுனியும்
சொல்லியுள்ளார் என்று கோரக்கர்
குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆக பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள்
இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் முதல்,
சுதந்திரம் பெற்ற இந்தியாவை மகாத்மா
காந்தியும், அவர் வழியில் வந்தவர்களும்
அதாவது சனநாயக ஆட்சி முறையில் ஆள்வர்
என்று எதிர்வு கூறியிருப்பது ஆச்சர்யமான
செய்தி!
போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள் !
**************************
பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில்
ஜீவ சமாதியாகி இருப்பவருமான ”போகநாதர்”
பூமிக்கு மீண்டும் வருவதாக
கூறியிருப்பதாகவும், எத்தகைய
சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு
திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர்
தனது “சந்திரரேகை” நூலில்
விவரித்திருக்கிறார்.
"தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்"
- சந்திர ரேகை
பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள்
விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும்,
போர்களாலும் மக்கள் பெரும் அளவில்
மாண்டுபோவார்கள், இதனால் பெரும்
பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும்.
கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து
தெய்வ அருள் குறைவடையும் கால
கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி
விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி
கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக
நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில்
பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி
(கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம்
ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன்
பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும்
என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச்
செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.
இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின்
இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில்
நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.
இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும்
பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை
கிடைக்கும்.கோரக்கர் மட்டுமல்லாது
அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர
மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள்
போன்றோரும் இம்மாதிரியான் ”எதிர்
கூறல்களை” கூறியுள்ளதாகக் குறிப்புகள்
காணக் கிடைக்கின்றன. குருவருளால் அவை
பற்றிய தகவல்கள் கிட்டும் போது பகிர்ந்து
கொள்கிறேன்.
-S.Shankar
https://www.facebook.com/
No comments:
Post a Comment