Friday, March 24, 2017

திருமந்திரம் கூறும் கடவுள்துகள் (HIGGS BOSON)

பாகம் 1:
கடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன?
https://www.facebook.com/groups/siddhar.science
இன்று உலகம் தேடிக்கொண்டிருக்கும், ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அரிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.
"அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்-
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே
-ஆசான் திருமூலர்-
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-ஆசான் திருமூலர்-
இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.
இப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..
0 .000000212 mm - ஹைட்ரோஜென்
சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்
மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )
100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)
இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்
0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்
0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)
இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்
0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)
ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).
இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.
https://www.facebook.com/groups/siddhar.science
நன்றி:
கி. கோகுல கிருட்டிணன்.
பாகம் 2:
ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன?!
என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்??
அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா! இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்:
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-ஆசான் திருமூலர்-
இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும், கலக்காமலும் இருப்பவன், கண்ணனுக்குத் தெரியாதவன், பரந்த சடையுடையவன், பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவன், அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே என்கின்றார் ஆசான் திருமூலர்.
இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பார்ப்போம்...!
பொதுவாகச் சிவபெருமானை நாம் சடாமுடியன், சடையான் என்று கூறுவோம். அதே போல், அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார். இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சடையுடன் நினைத்து கொள்ளுங்கள். நாம் பேச்சு வழக்கில் பரட்டைத்தலை என்று சொல்லுவோம் அல்லவா; அதைபோன்று, அனால் சற்றுப் பெரிய அளவில்! .
பின்பு அந்த உருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாகக் காணும் சிவபெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த உருவத்தை கண்ணுக்குப் புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அணு அளவிற்கு..!
இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று..?! இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே.
https://www.facebook.com/groups/siddhar.science
நன்றி:
கி. கோகுல கிருட்டிணன்.
------------------------------------------

ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
Aum Muruga ஓம் மு௫கா


சித்தர் அறிவியல் Wisdom of Siththars


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


No comments:

Post a Comment