Friday, April 28, 2017

அகத்தியப்பெருமான் அருளிய ஜீவநாதச்சுவடி 28/04/2017

சுவடியாசான் சாது சுப்ரமணி அவர்களூடாக அகத்தியப்பெருமான்  அருளிய ஜீவநாதச் சுவடி 28/04/2017. அன்பர்களே! திருச்சி மாவட்டம் துறையூர், ஓங்காரகுடில் முருகன் அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் ஆறுமுகஅரங்கமகாதேசிக சுவாமிகள், மே 1 , 2017 இரவு முருகன் ஜோதி வடிவாய் காட்சி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறித்து அகத்தியச் சித்தர் எமக்கு அருளிய அருள்வாக்கினை இன்று நான் பகிரவுள்ளேன். கலியுகத்தில் தமிழ் மண்ணை சுயநல அரசியல்வாதிகளிடம் இருந்து காக்கவும் , மக்களைத் தொண்டு மார்கத்தில் வழிநடத்திச் செல்லவும், பழனி மலை முருகன் தமிழ்மண்ணில் அவதாரம் எடுத்துவிட்டார். 

அகத்தியப்பெருமானின் 
செய்யுள்களுக்கான  பொழிப்புரை
அகத்திய ஜீவநாதச்சுவடி பாடலின் பதவுரைச் சுருக்கம். 

எல்லாவற்றிலும் அணுவுக்குள் அணுவாக அருட்பெருஞ் சோதி இறைவன் உறைகிறான். கலியுக மக்களின் சுயநலம் அழித்து, அரசியல் ஒழித்து, பக்தியும் யாகங்களும் பெருக சக்தியாய் வருகிறான்.

நிலையில்லா வாழ்க்கை என தெரிந்தும் மதியிழந்த மக்கள் பேராசை கொள்கிறார்கள், நவகோள்களின் சக்தியால் விதி மூலம் நிறைவேற்ற, தமிழக மண்ணில் தர்மநெறியும் தெய்வீகமும் ஒங்க, தலைவன் முருகன் மலை உச்சியில் அன்காரமூர்த்தியாக (பழனி தலத்திற்கும் அங்காரகன் (எ) செவ்வாய்க்கும் தொடர்பு உண்டு) அமர்ந்துள்ளான்.

முருகன் ஜோதி ரூபமாய் வெளிப்பட்டு நிற்பவன், தமிழ் நாட்டையும் மக்களை காக்க சுவாமிமலையில் தகப்பன் சுவாமியாய் திருவேரகம் அமர்ந்தவன், மருத்துவனுமான அவன் மகர ஜோதி போல வெளிப்படுவான்.

ஜோதி வெளிப்படும் நாளில் இளைஞர்கள் மெய்ஞானத்தில் லயிக்கவும், அரசியல் துலாகோல் வழுவாது இருக்கவும், விகாரமாக நடக்கும் நடப்பினை சரிசெய்ய முருகன் முழுமையாய் பணியாற்றுகிறான். 

சோம்பேறிகளுக்கு இடமின்றி, பொருள் விரயமாகாமல், பணியோய்வு பெற்றவர் முதல் அனைவருமே ஏகோபித்த கருத்துடன் மக்கள்சேவை தொண்டாற்றி பணிசெய்திடல் வேண்டும்.

அந்த ஜோதியை காண்பதும் அவரவர் கிரகப் பயனாக வாய்க்கும், மக்கள் மனதை ஈர்த்து, அவர்களை நல்வழிபடுத்த அந்த குறிப்பிட்ட நாழிகையில் பார்வையில் சோதி படுவது இந்த தமழ் மண்ணுக்குப் புத்துணர்வு தரும்.

அன்று பக்தி சிந்தனையில் நம்பிக்கை உணர்வோடு, அனைவரும் முருகனை வணங்கி, பேராசைகள் அறுத்து, மௌனத்தில் அந்த மெய்ஞான வடிவனின் அருளைப்பெற வேண்டும். எல்லோரும் அருள்பெற ஆசிர்வாதம்.


சுவடியாசான் சாது சுப்ரமணி

No comments:

Post a Comment