உன்னை நான் உணர
என்னை உன்னுள்ளும்
உன்னை என்னுள்ளும்
காட்டுவாய் குகனே..!
நான் வேறு நீ வேறு
எனும் நிலைமாறி
நான் நீயாகி நீ நானாகி
கலப்பாய் கந்தனே..!
நான் நீயாக நீ நானாக
இரண்டறக் கலந்தபின்
உன்னை என்னில் கண்டு
வணங்கி நிற்பேனே வடிவேலனே..!
05/11/2016
--Nàthàn கண்ணன் Suryà
<3 Aum Muruga ஓம் முருகா <3
No comments:
Post a Comment