தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த/வாழும் பழங்குடி மக்களுக்கும் குமரிக்கண்டத்து பழந்தமிழருக்கும், முற்காலச் சோழருக்கும் உள்ள அற்புதத் தொடர்புகள் .
என்னை எழுத வைத்த ஆன்ம சக்தியான என் குருநாதன் அகத்தியனுக்கும்,அந்தஇந்திரனுக்கும், ’உலகின் அனைத்து மொழிகளுக்கும் தாய் தமிழே.அதன் வேர்ச் சொல்லில் இருந்து உலக வரலாற்றை எடுக்கலாம்’ என எனக்குத் தன் தமிழால் உணர்த்திய முகம் தெரியாதத் தமிழ் சிந்தனையாளர் பேரவை திரு.பாண்டியன் அவர்களுக்கும்,என்னை எழுதத் தூண்டிய திரு.ஒரிசா பாலு அவர்களுக்கும் என் முன்னோர்களானச் சோழருக்கும் என் இந்த முதல் படைப்பைச் சமர்பிக்கிறேன்.
முன்னுரை: ANDES/அந்திஸ்/அந்தி/ ஆண்டி மலைத் தொடர் தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்கும் தெற்குமாக கொலம்பியா,வெனிசுலா, எகுவத்தோர் ,பேரு ,பொலிவியா,அர்ஜன்டினா,சிலி என்று ஏழு நாடுகளைக் கொண்ட உலகின் மிக நீளமான மலைத் தொடராகக் காட்சியளிக்கிறது.
தென் அமெரிக்கா |
இத் தொடர், கண்டத்தின் மேற்குக் கரையோரமாக ஓடுவதால் இதை ‘அந்தி’மலைத்தொடராகக் கொள்ளலாம்.அல்லது ஆண்டி மலைத்தொடர் என்றும் கூறலாம். கனிம வளங்கள் முக்கியமாக இதைத் தங்க பூமி என்று சொல்லும் அளவுக்கு தங்கம் கொட்டி கிடந்ததாலேயே ஸ்பானிஷ்/இசுப்பானியர் இங்கு வாழ்ந்த மக்களைக் கொன்று ஒழித்தனர்.
இங்கு பல பழங்குடிகள் பலக் காலக் கட்டத்தில் வாழ்ந்திருந்தாலும் சில குறிப்பிட்டப் பழங்குடிஇனத்தவரையும் அவரின் பெயர்கள்,ஊர்கள் ,இடங்களின் பெயர்களில் தமிழின் ஒற்றுமைகள் மட்டும் இல்லாது நமது சோழர்கள் ஆண்ட பூமி இது என்றும் ,அச்சோழர்களாக இங்கு ஆண்டது நம் நாட்டின் தேவேந்திரகுல வேளாண் சமூகம் என்றும் இங்கு ஆராய்ந்து ஆதாரங்களுடன் கூறியுள்ளேன்.
அது மட்டும் இல்லாது மெக்ஸிகோ மற்றும் மெசோ அமெரிக்கா (MESO AMERICA)வில் வாழ்ந்தமாயன் மக்களே சோளம் விளைவித்த ஆதி சோழர்களான மண்டோதரியின் தந்தைமயன்(மாயோன் ) வம்சம் என்று அங்குள்ள மாயன் சோளக் கடவுள் சிலைகள் மற்றும் கதைகள் மூலம் நிரூபித்துள்ளேன்.
மற்றும் சோழர்களின் முன்னோர்களான வேளிர் குலத்தவரும், பொதிகை முனி அகத்தியரின் வழிவந்தவருமான கடை ஏழு வள்ளல்களான பாரி,காரி,ஓரி,ஆய் அண்டிரன் இவர்களின் பெயர்களில் இங்கு உள்ள நாகரீகங்களும், இவர்களே PRE-INCA எனும் முற்கால INCA(எங்க) தேச மக்கள் என்ற அங்கு நிலவும் கருத்துக்களும் என் கருத்தை உறுதி செய்கிறது.
இங்கு வாழ்ந்த INCA/INKA(எங்க ) KINGDOM (எங்க/இங்க/அங்க தேசம் )மக்கள் மற்றும் அதற்கும் முன் வாழ்ந்த PRE INCA CIVILIZATION/முற்கால “எங்க” நாகரீகம்.
VIRAKOCHA/வீரக்கோச்சன்
”எங்க” தேச மூத்த பழங்குடி மக்களின் தலைவன்/தெய்வம் பெயர் வீரக்கோச்சன். இங்கு நிலவி வரும் இவர் கதை சுருக்கமாக:
முற்காலம் கடவுள் பெரிய உருவமுடைய மனிதரைப் படைத்தார். பின் கடல் பொங்கி அனைவரும் அழிந்தனர் .இருவர் மட்டும் வம்ச விருத்திக்காக பிழைக்க வைத்தார் கடவுள்.இவர்கள் தம் நிலத்தில் இருந்தும் பிரிந்தனர்.இவர்கள் தலைவன் வீரகோச்சன் மற்றும் அவர் இரு மகன்கள் இவர்களைத் தேடி இங்குள்ள கடல் போலுள்ள புனித ஏரியான LAKE THITHIKAKA/திதிகாக்க வில் வந்து சேர்கின்றனர்.
இருளில் இருந்த இவர்கள் உலகத்துக்கு சூரிய சந்திரரைப் படைத்தார். வாழும் கலை ,உணவு முறை அனைத்தும் சொல்லிக் கொடுத்து விட்டு “ஒரு நாள் வருவேன்” என்று சொல்லி நுரையாக பசிபிக் பெருங்கடலில் மறைகின்றார்.
| |
VIRAKOCHA/வீரக்கோச்சன்
|
இவ்விடம் பின்னர் பலப் பழங்குடிகள் வந்து சேர்கின்றனர். இதைப் போன்ற கடல் ஊழி வந்தக் கதைகள் உலகின் பல பாகங்களில் பேசப் படுவதும் அவர்களுக்கு 7 சித்தர்களைப் போன்றோர்வாழ வழி கட்டிய கதைகளும் , குமரிக் கண்டம் (லெமுரியா)கடல் கொண்டதை உறுதி படுத்துகிறது.வெள்ளையர் தற்பொழுது வெண்ணிற தாடி வளர்த்த வெள்ளை நிற சாமியார் இவர் என்றுப் பரப்பி வருகின்றனர்.இவரைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது?
ஆனால் வீரம் என்பது பழந்தமிழர் மரபு. ஆநிரை காத்த வீரர்களுக்கும் மக்களைக் காத்தவீரர்களுக்கும் நடுகல் வணக்கம் செய்வதும் லெமுரியா எனப்படும் குமரிக் கண்டபழந்தமிழருக்கே உள்ள பண்பாடு.
மற்றும் இந்த கோச்சன் காலம் நிச்சயம் 10000 அல்லது அதற்கும் முன்பு பல வருடங்கள் முற்பட்ட காலமாக இருக்கலாம் .ஆதலால் இவரை சாதி குலங்களில் இணைக்க முடியாது..இவர் காலத்தில் மதம் இல்லை.சாதி இல்லை.ஆனால் வீர வணக்கமும் அதன் மண்ணான தமிழ் குமரிக்கண்டம் இருந்ததிற்கும், இவர் தன் மக்களைக் காண இங்கிருந்து சென்றவரே என்பதற்கும் இதுவே சாட்சி.
இவர்களது முன்னோர் வழிபாடும் ,இவர்கள் பூமியை,மலையை,சூரியனை ,சந்திரனை,கடலை தெய்வமாக வணங்குவதும் பழந்தமிழர் வாழ்க்கையை நினைவுருகிறது..PACHAIMAMA/பச்சையம்மா
பச்சையம்மாவை வணங்கும் பழங்குடி
அந்தி மலை வாழ்ந்த அனைத்து நாட்டு பழங்குடி மக்களின் மிக முக்கிமான தெய்வம் பூமித் தாயான “PACHAIMAMA “எனப்படும் பச்சையம்மா.இவருக்கு உருவம் கிடையாது.ஏன் எனில் இப்புவியைத் தான் தெய்வமாகப் போற்றி பாதுகாத்தனர். நம்மை போல் பூமியை வணங்கி படையல் வைக்கிறார்கள்.
பச்சயம்மாவை அவர்கள் வருடம் முழுதும் வணங்கி நன்றி கூறினாலும் ,நமது ஆடி மாத விதைப்பு போல ஆகஸ்ட் மாதம் பச்சையம்மாவுக்கு விழா எடுத்து விதைப்பு தொடங்குவர்.அறுவடை நாளிளும் விழா எடுத்து ஆடிப் பாடி நன்றி தெரிவிப்பார்.அரிசி ,சோளம்,மொச்சை,கடலை ,கிழங்கு வகைகள் பயிரிடுகிறார்கள். https://en.wikipedia.org/wiki/Pachamamaநமது மதுரை மீனாட்சியும் பச்சையம்மாவே. பூமியையும் ,விவசாயத்தை குறிக்கும் சொல் இது..தமிழர் மரபில் “பச்சையம்மா” என்று இன்றும் கிராமப்புரங்களில் பெயர் வைப்பதுண்டு. இவர்களின் இசையில் பறை ,புல்லாங்குழல்,சங்கு,சிறிய யாழ் முக்கியமாக இடம் பெறுகிறது.விதவிதமான புல்லாங்குழல் இசை மயக்க வைக்கிறது.
INTI/இந்தி
INTI/இந்தி THE SUN GOD |
இவர்களது அடுத்த வெகு முக்கியமான கடவுள் “ INTI” (இந்திரன்)எனப்படும் சூரியக் கடவுள்.அந்தி மலையின் பெரு /PERU நாட்டில் “ மச்சு பிச்சு” எனும் மலை நகரின் உச்சியில் உள்ள ஒற்றை லிங்கக் கல்.(மச்சு என்பது நமது வழக்கில் உயரத்தில் அல்லது மேலே என்பது பொருள் ).இக்கல்லின் அமைப்பு அந்தி மலையின் நான்கு புறத்திற்கும் நடுவே மிகத் துல்லியமாக அமைக்கப் பட்டுள்ளது.
எங்க தேச ‘இந்தி’ லிங்கம் உள்ள மச்சுபிச்சு
சூரியனின் பாதையை துல்லியமாக கணித்து ஞாயிற்றியக் கோடுகள் காலம் அன்று சூரிய கதிர்கள் இக்கல்லில் படும்படி அமைத்துள்ளது நம்மை ஆச்சரியப் படுத்துகிறது .இவர் வீரகோச்சன் மகன் என்ற கதையும் உண்டு.INTI ILLAPA/இந்தி இல்லப்பன் (இருளப்பன்-இருளை விலக்கி வரும் மின்னல்) என்னும் கடவுளும் மழைக் கடவுளாகவும் ,மின்னல்( THUNDER) கடவுளாகவும் போற்றப் படுகிறார்.வேளாண் மக்கள் வணங்கும் இந்திரனும் மழை,மின்னல் கடவுளே .
இந்தி ராய்மி –நம் உழவர் குடிகளின் (இந்திரத்திரு விழா)வெண்கொற்றத் திருவிழா போல் இவர்களும் இந்திரனுக்கு விழா எடுக்கும் காட்சி
இன்று “இந்தியா “என்ற வார்த்தையில் பலர் குழம்பி உள்ளார்கள்.ராவணனின் மகன் இந்திர சித்தன் (இந்திர ஜித்தன் அல்ல.’ஜி’ எனும் கிரந்தம் தமிழில் இல்லை .) ஆண்ட இந்த புண்ணிய பூமி இது என்பதாலேயே இந்தியா என்று ஆனது.இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்துகுஷ் மலைஎன்றும் அதன் எல்லைகள் கூறப்பட்டன.
மூன்று கடல்கள் கூடும் குமரி முனைக்குத் தெற்கே பக்ருளி ஆறு என்று கடல்கோளுக்கு முன் இருந்தது .இன்று கன்னியாகுமரியில் உள்ள பரளி ஆற்றின் தொடர்ச்சியாக இருக்கலாம்.இதன் கழிமுகத்தில் பழந்தமிழர் இந்திரனுக்கு முந்நீர் விழா எடுத்தனர்.நெய்தல் நில வேந்தனாக மட்டும் இல்லாது மருத நில வேளாண் குடிகளின் வேந்தனாகவும் இந்திரன் விளங்கினான்.அதனாலேயே பழந்தமிழர் வருட வருடம் இந்திரனுக்கு வெண் கொற்றக் கொடைத் திரு விழா எடுத்தனர்.
இன்றும் தேவேந்திரகுல வேளாண் பள்ளச் சமுதாயம் இதைக் கடைபிடிக்கின்றனர்.கரிகாலன் காலத்தில் கொண்டாடப் பட்ட மாபெரும் இந்திரத் திரு விழாவை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அழகாக சித்தரிக்கிறது.
இவனே அயிந்திரங்களை எழுதிய ஆய்+இந்திரன் ஆன அயிந்திரன் .இந்திரன் .இயந்திரங்களைக் வடிவமைத்தவன்.
இந்திரியங்களை அடக்கியதில் இந்திரனுக்கு நிகர் எவரும் இல்லை என்று வள்ளுவர் பெருமான் இவனையே போற்றுகிறார்.
வேதங்கள் இவனையே போற்றுகிறது.இவன் இந்தியாவை ஆண்டத் தமிழனே .
நல்லதெல்லாம் தனதாக்கிக் கொண்ட ஆரியர்கள் இந்திரனையும் புராணங்களில் 'தேவர்களின் தலைவன் ‘ என்று கூறி தனதாக்கி நாம் அவரை வெறுக்கும் படி பல கதைகள் கூறினார்கள்.
PACHAIKUTTI THE GREAT INCA/பச்சைகுட்டி
INTI / ”இந்தி/இந்திரன் ” என்ற சூரியக் கடவுளை நிர்மாணித்தது யார் எனத் தெரியவில்லை என்றாலும் ’எங்க/INCA ‘ தேச ஒன்பதாவது சபை மன்னர் ‘பச்சை குட்டி ‘ (இந்தத் தமிழ் பெயரைப் பார்த்தாலே புரியும் .இந்திரன் யார் தலைவன்/வேந்தன் என்று) இந்திர லிங்கம் இருந்த மலையை மற்றும் வழிபாடு தலத்தை புணரமைத்தான்.
பச்சை குட்டியின் காலத்தில் CURICONCHA/சூரி காஞ்சா(சூரிய காந்தா) எனும் இடத்தில் இருந்த இந்திரக் கடவுளின் கோவிலை சீரமைத்து தங்கத் தகடுகளால் கோவிலை அலங்கரித்துபொற்கோவில் ஆக்கினான்.தங்கத்தால் ,வெள்ளியால் சூரியனுக்கும் ,சந்திரனுக்கும் கோவில் எழுப்பினான். பெரிய தங்க லாமா சிலைகள்,ஆளுயர மனித சிலைகள் ,தங்க தோட்டங்கள்அமைத்தான்.
எங்க தேசம் /INCA EMPIRE
இவர் காலத்தில்(தோராயமாக 1438-1471AD) மொத்த அந்தி மலையின் (3800 KM) பழங்குடி மக்கள் அனைவரையும் “THE GREAT INKA EMPIRE “ ஆக இவர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து “உலகின் சக்கரவர்த்தி“ (THE GREATEST EMPEROR OF THE WORLD )ஆக அந்தி மலையை ஆண்டார்.அன்றைய உலகின் மிகப் பெரிய சாம்ராசியமாக “இன்கா /எங்க பேரரசு” திகழ்ந்தது .மக்கள் மிக ஆனந்தமாக வாழ்ந்தனர்.
http://www.newworldencyclopedia.org/entry/Pachacuti
இவர் மிக பெரிய கட்டிட கலை நிபுணர்.இசைப் பிரியர்.இவர் கட்டிய 200 க்கும் மேற்பட்டக் கல் கட்டிடங்கள்,பிரமேடுகள் மிரள வைக்கின்றன .இவரின் நீர் மேலாண்மை மற்றும் வேளாண் திறன் மேலை நாட்டு அறிஞர்களை வாய் பிளக்க வைக்கிறது.அவர்களால் நம்ப முடியவில்லை.மச்சு பிச்சு காலத்துக்கும் அழியாது என்று வல்லுனர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள்.http://www.newworldencyclopedia.org/entry/Pachacuti
முக்கியமாக மலை வேளாண்மையில் (TERRACE FARMING) இவர்களை மிஞ்ச இன்றும் உலகில் யாரும் இல்லை .
https://www.bing.com/videos/search?q=matchu+pitchu+decoded+utube&view=detail&mid=BB513E848E5F1C59A6C6BB513E848E5F1C59A6C6&FORM=VIRE
இவர்கள் தானியங்களை மற்றும் பிற உணவுகளை நம்மைப் போல் quolqa or QULLCA/குளுக்கை எனும் தானியங்கி கிடங்குகளில் சேர்த்து வைத்தார்கள்.தங்கத்தில் புரண்டார்கள்.தங்கத் தட்டில் உண்டார்கள். இவர்கள் தலைநகரம் PERU/பேரு நகரில் உள்ள குஸ்கோ என்னும் நகரம்.JAGUARஎனும் புலி இவர்களின் விலங்காக இருந்தது.
பச்சைகுட்டி( 1438-1471)AD |
இந்திரனுக்கு பச்சைகுட்டி அமைத்த தங்கக் கோவிலின் கணினி வடிவம்(ஸ்பானிஷ் படையெடுப்பில் அனைத்துத் தங்கமும் கொள்ளை அடிக்கப் பட்டு பின் இவ்விடம் கிறித்துவ ஆலயமாக மாற்றப்பட்டது . |
மிக ஆச்சரியமான விடயம் என்ன என்றால் எங்க தேச மக்களுக்கு பணப் புழக்க முறை இல்லை.மற்ற பழங்குடிகளுடன் பண்ட மாற்று மட்டும் உண்டு ..சக்கர வண்டிகள் இல்லை.இரும்பு உபயோகம் இல்லை. இசுப்பானியர் இவர்களை ஆளும் வரை இவை எதுவும் இல்லை.இவை இல்லாமல் இப்பிரமாண்டமான பிரமிடுகள் எப்படி கட்டியிருப்பார் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிர்.https://www.youtube.com/watch?v=TqipjHdPYM8
தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்கில் இருந்து தெற்கு வரை அந்தி மலையில் நடை பாதைஅமைத்தவர் பச்சை குட்டி என்பது ஆச்சர்யமான விடயம்.இன்றும் இது உள்ளது. லாமாக்களை பாரம் சுமக்கப் பயன்படுத்தினர். இவர்கள் அரச முறையை SAPA/சபா/சபை என்றார்கள் .இவர் காலத்தில் மக்கள் மிக ஆனந்தமாக வாழ்ந்தனர்.
மச்சு பிச்சு நகரம்
|
quipa/கூபா நூல் முடுச்சுக் குறிப்புகள்
இந்த INCA/INKA/ “எங்க தேசம் “ பிற்காலத்தில் வலுவிழந்தது . SPANISH/இசுப்பானியரின்அறநெறி சாரா போர் முறை,(BIOATTACK) அவர்கள் பரப்பிய அம்மை,காலாரா போன்ற நோய்கள்,அவர்களுக்கு கனிம வளங்கள் மேல் உள்ள பேராசை INCA/எங்க தேச இனத்தை கூண்டோடு அழித்தது.
INCA/எங்க தேசம் ஒரு சோழ தேசம்
இவர்களின் கடைசி இளவரசிகளில் ஒருவரான பல்லா சிம்பு ஒக்களோ/OCLLO வை SPANISH CONQUESTATOR SEBASTIN GARSELASA என்ற ஸ்பானிஷ்/இசுப்பானியத் தளபதி கட்டாயமாக மணந்து கொண்டான் என்று கூறும் அவர் மகன் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர்.
GARSELASA DE LA VEGA/கார் சே லாசா டி வேகா (1539-1616) என்னும் இவர் தன்னை “சோழா” என்றும் இன்காக்கள் சூரிய வம்சம் என்றும் இன்காக்கள் பற்றித் தான் எழுதிய “COMENTARIOS REALES DE LOS INCAS “ எனும் தன் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
இவர்களை “ EL INKA “ என்றும் சொல்வர்.”எல்”என்றால் வெளிச்சம் அதாவது சூரியன். (தமிழில் அல்/AL என்றால் இருள் எல் /EL என்றால் வெளிச்சம் )(எ –கா )சோழ அரசன் எல்+லாளன் .
EL GARCELASA DE VEGA
இவர்கள் குடும்பன் மற்றும் பள்ளன் வகையினர் என்றும் இவரின் வம்சாவளியினர் GENI RECORD பெயர்கள் தெரிவிக்கிறது.
|
இவர்கள் குடும்பன் மற்றும் பள்ளன் வகையினர். |
இதன் மூலம் ,இம் மக்களின் பூமி குமரியில் இருந்து பிரிந்திருந்தாலும் ,கடலோடிகளாக வந்த சோழர்கள் ஏற்கனவே இங்குள்ள பழம் குடியினரான தமிழ் ,மங்கோலிய கலப்பின’ஆய் குடி‘ மக்களோடு (பின்வரும் குறிப்புகளில் இதை தெளிவாகக் கூறியுள்ளேன்)மறுபடி கலந்திருக்க கூடும் என உறுதியாகத் தெரிகிறது.
ஆனால் இவர்கள் மொழியில் தமிழின் கூறுகள்,எச்சங்கள் உண்டே ஒழிய தமிழ் முழுமையாக இல்லை. ஆதலால் இவர்கள் புலம் பெயர்ந்தது மிகவும் முற்பட்டக் காலமாக இருக்க வேண்டும்.
இப்பள்ள இனத்தவர் வம்சம் இன்னும் இங்கு வாழ்கிறார்கள்.PERU நாட்டின் PALLASCA எனும் நகரமும் தென் அமெரிக்காவில் பள்ளா/மள்ளா எனும் பெயர்கள் இதனை உறுதி செய்கிறது.
கரையாளர்களாக இருந்து பின் மலை விவசாயம் செய்து அதன்பின்னும் பள்ளம் தோண்டி பயிர் செய்த பள்ளர் என்ற உழவுக்குடியில் இருந்தே பல குடிகள் உலகெல்லாம் பிரிந்து ஆற்றங்கரை நாகரீகங்கள் தோன்றின. நம் நாட்டில் தலை நிமிர்த்து ஆண்ட வேளாண் குடிகள், கீழ் மக்கள் ஆக்கப் பட்டதும் ,இன்று தற்கொலை செய்து கொள்வதும் இந்தியாவின் சாபம் என்றே வேதனைப் பட வைக்கிறது.
இவர்கள் சோழர் என்பதற்கு இன்னும் ஒரு ஆதாரம் பச்சைகுட்டி நிர்மாணித்த/சீர்படுத்தியதங்கக் கோவிலில் இருந்த தங்க/வெள்ளி சோள வயல் .
இந்தி என்ற சூரியக் கடவுளுக்கும் பிற கடவுளருக்கும் QUORICONCHA/குரிகாஞ்ச( சூரியகாந்தம்)எனும் கோவிலில் தங்க மற்றும் வெள்ளி சிலைகள் ,தங்கத் தோட்டம்,1- ½ ஹெக்டேரில் தங்கத்திலான சோள வயல்வெளி ,jaguar எனப்படும் புலி வகை,தங்க லாமாக்கள் ,ஆளுயர மனித ஆயர் தங்கச் சிலைகள் மற்றும் யானை,பல வகை உயிரினங்கள்,வண்ணத்துப்பூச்சிகள் சிலை செய்து வைத்துள்ளனர்.https://www.ancient.eu/Coricancha
இன்று இருப்பதோ வெள்ளியிலான சில சோளத் தட்டைகள் மட்டுமே என்பது வேதனையான விடயம்.மூன்று அமெரிக்க அருங்காட்சியகங்களில் ஆராய்ச்சிக்காக வைக்கப் பட்டுள்ளது.https://denverartmuseum.org/article/staff-blogs/science-museum-analyzing-fifteenth-century-inca-corn-stalk-part-1
சுவரில் தொங்கும் தங்கத்திலான சூரியக் கடவுளின் முகமூடி ,வெள்ளி சோளம்(டென்வர் அருங்காட்சியகம்,அமெரிக்கா).. சூரிய வம்ச சோழர் என நிரூபிக்கிறது.
அரச பரம்பரையினரின் உடல்களை எளிதாகப் பதப்படுத்தி திருவிழாக்களில் ஊர்வலமாக எடுத்து வந்துள்ளனர்.எகிப்தியினரைப் போல பதப்படுத்தப்பட்ட மம்மி உடல்கள் இங்கும் பிற பழங்குடி இனத்திலும் ஏராளம் .சூரியகோவிலின் அருகில் வெள்ளியில் ஆன சந்திரக்கோவில்உண்டு . இவர்கள் வழக்கிலும் சந்திரன் தாயைக் குறிக்கிறது.
இவ்விடம் நம் இந்தியப் புலிகள் கிடையாது.ஆனால் JAGUAR மற்றும் பூமா எனப்படும் புலி வகைகள்(அங்குள்ள தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாரு உயிரின மரபணுக்கள் /DNA மாறும். )இவர்கள் சின்னமாக உள்ளது.சோளம் வளர்த்த மற்றும் புலியைச் சின்னமாக வைத்திருந்த சோழர்கள் இவர்கள் என்பது உறுதி ஆகிறது.இவர்கள் மொழி,பழக்கம் எல்லாம் மாறிப் போனது வருத்தமானது. பழங்குடிகள் மட்டும் QUCHEVA/கொச்சுவ மற்றும் ஆய்மாரா மொழிகள் பேசுகின்றனர்.ஆனால் இசுபானியர் மொழி கண்டிப்பாக்கப் பட்டதால் தன் மொழி மறந்தனர்.
|
|
|
|
QUARICANCHA /குரிகந்தா /(சூரிய காந்தம்) கோவில்
உலகின் மொழிகளுக்கெல்லாம் வேர்ச் சொல் நம் தமிழே என்பதால் இப்பெயர் சூரியகாந்தாவில் இருந்து காஞ்சாவாக மருவி இருக்கக்கூடும் மற்றும் சூரியகாந்தக் கல்லினால் எழுப்பப் பட்ட கோவிலாக இருக்க வேண்டும் என்று தான் நான் உணர்கிறேன்.
GATE OF THE SUN/சூரியக் கதவு
இது 10 டன் எடையுள்ள ஒரு ஒற்றை கிராநைட் கல்லால் ஆனது. வீர கோச்சனை மையமாக வைத்து வருடத்தின் 12 மாதங்களைதுள்ளியமாகக் கணக்கிடும் குறிப்புகள் மற்றும்
சூரியனின் பாதை பற்றிய அளவீடுகள் இதில் உள்ளன .இசுப்பனியரால்/SPANISH சிதைந்து பின் பார்வையாளருக்காக வைக்கப்பட்டுள்ளது .
|
AYMARA/ஆய்மார்
கடல்கோள் வந்த பின் ஆயர் எட்டு பேர்(4 ஆண், 4 பெண் ஆயர்கள் )அந்தி மலையின் ஒரு பகுதிக்கு அங்கு உள்ள மூன்று குகைகளில் நடு குகை வழி வருகின்றனர்.மூத்த ஆயர் பெயர்மாங்கோ/MANCO CAPAC /மாங்கோ கோபன் ஆயர். இவர் கையில் தங்கத்திலான ஒரு மாயக் கோலோடு வருகிறார்.அது எங்கு ஊணப்படுகிறதோ அங்கு அவர்கள் ஆட்சி அமைய வேண்டும்.
அவர்கள் வரும் முன் இங்கு சங்கா எனும் மக்கள் இருந்துள்ளனர்.ஆய்மாராக்கள் அவர்களுடன் சண்டை செய்து வெற்றி கொள்கின்றனர்.மாடுகளை பிடிக்க உதவும் போலா வை வைத்து திறம்பட சண்டை செய்கிறார் ஒரு ஆயி.
MANGO AYAR /மாங்கோல் ஆயர்
|
வென்றப் பின் மங்கோ ஆயர்/ MANCO AYAR (மன்கோ கோபக் ஆயர் /மன்கோ கோபன் ),முதலில் பெரு /PERU நாட்டின் CUSCO/கோசா என்னும் இடத்தில் INCAவின் ஆட்சி அமைக்கிறார் .இவர்களின் காலம் 5000 -வருடங்கள் மேல் என்று சிலர் கணித்தாலும் அதிகம் சொல்லலாம்.இவர்களே முற்கால முதல் இன்காக்கள் .
ஆய் குடி என்ற மிகப் பெரிய முல்லை நிலம் குமரியில் கடல் கோளில் இருந்து சிதைந்து அதன் ஒரு பகுதி நிலப் பரப்பு தமிழகத்தின் தென் மூலையில் ஆயி அரசு /AY KINGDOM ஆக சிறிய நிலப் பரப்பாக இருந்தது.பின்னர் பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் காலத்தில் இது பாண்டியரோடு இணைந்தது.
குமரி கண்டம் ஆய்வு செய்த கடல் ஆராய்ச்சியாளர் திரு.ஒரிசா பாலு அவர்கள் இந்த ஆயிகுடியில் இருந்தே பாண்டிய இளவரசி கொரியா சென்றார் என்று நிறுவியுள்ளார்.
தற்போது இதன் அருகில் உள்ள ஆதினிச்சனல்லூரின் தொல்லியல் தரவுகள், இங்குமங்கோலியர் வாழ்ந்ததிற்கு DNA சான்றுகள் கூறுவதாலும் இவர் பெயர் ஒற்றுமை மாங்கோல் +ஆயர்=மங்கோலியர்(மாடு,ஆடு மேய்க்கும் ஆயர் எப்பொழும் கோல் வைத்திருப்பது மரபு ) என்பதாலும் இவர்களும் இங்கிருந்து அந்தி மலையில் பிரிந்த குமரிக் கண்ட ஆயர் குடி மக்கள்என உறுதி ஆகிறது .
மங்கோலியரும் அடிப்படையில் ஆநிரைகள் வைத்து மேய்த்த நாடோடி சமூகம் தான்.ஆகவே இவர்களின் ஒரு குழுவினரே வடகிழக்கில் பரவி MANGOLIAR(மாங்கோல் +AYAR )ஆக STEPPE புல்வெளிகளில் சாம்ராசியம் அமைத்து பிற்காலம் குப்லாய் கான் காலத்தில் மறுபடிபாண்டியரோடு நட்புறவாகி இருக்கலாம்.மங்கோலியர் பாண்டிய வம்சமாக இருக்கலாம் என ஒரு சந்தேகமும் உண்டு.
MOCHE/மொச்சை TRIBE
இவர்கள் காலம் தெரியவில்லை என்றாலும் கிமு 300 இல் எடுக்கப்பட்ட பதப்படுத்தப் பட்டமம்மி/MUMMY உடல்கள் இவர்கள் நாகரீகம் பற்றி தெளிவாக்குகிறது . அடிப்படையில் வேளாண் மக்கள். இவர்கள் வேளாண் திறன்,நீர்ப் பாசனம் ,போர் திறன் இவற்றில் வல்லவர்.மீன்பிடித் தொழிலும் உண்டு.
இவ்விடம் வீரு வெளி/VIRU VALLEYஎன்னும் இடமும் வீரு நாகரீகம் /VIRU CULTURE என்ற நாகரீகம் உள்ளது. அமெரிக்காவின் ஸ்மித்சோனியன்/SMITHSONIAN அரும்காட்சி தொல்லியல் நிபுணர் GORDON R WILLY இவர்களின் நாகரீகங்கள் ஆராய்ந்து இவ்விடத்தில் உள்ள மிக மூத்த வேளாண் குடி மக்கள் இவர்கள் என தன் ஆய்வில் கூறினார்.
இவர்கள் சோளம்,மொச்சை ,கிழங்கு வகைகள் மற்றும் பல திணை வகைகள் பயிரிட்டனர் என்றாலும் இவர்கள் மனம் கடலை நோக்கியே இருந்தது எனக் குறிப்பிடுகிறார்கள்..இவர்கள்கடலோடிகளாக வந்தவர் என்பது தெளிவாகிறது.
மொச்ச இன மக்களின் கலைநயம் மிக்க மண்பாண்டங்களில் உள்ள சித்தர்கள் போன்ற அவர்கள் கடவுள்கள் |
https://www.youtube.com/watch?v=QcSLK0u4eBE
இவ்விடத்தின் பெயரான மொச்சே என்ற ஊரின் பெயரிலேயே இவர்களை அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.இவர்களின் உண்மை பெயர் தெரியவில்லை.
அதே போல் கடலோடிகளின் உணவான கடலை,சோளம்,சீனிக் கிழங்கு ,கசாவா கிழங்கு,சுரைக்காய் இவை எல்லாம் இவர்கள் ஆதியில் அதிகம் பயன்படுத்தி உள்ளனர் .
மொக்கையன் என்ற பெயரும் நம் வேளாண் குடி மக்கள் வைக்கும் பெயரே. மொச்சை உணவும் அவர்களின் பிரதான உணவே .
மொக்கையன் என்ற பெயரும் நம் வேளாண் குடி மக்கள் வைக்கும் பெயரே. மொச்சை உணவும் அவர்களின் பிரதான உணவே .
MOCHE /மொச்சை இனத்தவரின் கல்லறை (தீபம் வைக்கும் மாடம்)நமது தமிழர் முறையை நினைவூட்டுகிறது .
|
LAKE TITICACA/ திதிகாக்க
மிகப் பெரிய கப்பல் வந்து போகும் அளவு உள்ள புனித ஏரி. இன்காகளின் புனிதக் கோவில்கள் மற்றும் சூரியத் தீவு ,சந்திரத் தீவு இங்கு உள்ளது.இவ்வேரியின்பல புனித கட்டிடங்கள் மற்றும் தங்கப் புதையல்கள்,இரகசிய குகைகள் உள்ளன என்று ஒரு பேச்சு நிலவுகிறது.சிலர் நீரின் உள்ளே போய் கட்டிடங்களைப் பார்த்துள்ளனர்.
LAKE TITICACA/ திதிகாக்க ஏரி .TOTORA PADAGU/தருப்பை அல்லது கோரைப் புல்லினால் செய்த படகு
அமரு மேரு / Amaru Meru
திதிகாக்க ஏரி அருகில் அமருமேரு என்ற மலையில் ஒரு பெரிய சதுர வாசல் ஒன்று உள்ளது.அதில் நடுவே சிறு வாசலும் ஒரு வட்ட குழியும் உண்டு.இது அவர்களின் கடவுள்களின் வாசல் மற்றும் ஏழு கதிர்களின் கோவில் எனக் கூறுகிறார்கள்.
அதன் வாசலைத் திறக்க உள்ள சாவியான ஒரு தங்கச் சக்கரத்தை (GOLDEN DISK) அல்லது சில ரகசியக் குறிப்புகளை இவர்கள் கடவுளான ‘அமர மேரு ‘ லெமுரியாவில்/(LEMURIA )வில் இருந்து கொண்டு வந்து இங்குள்ள பூசாரியிடம் (SHAMAN) கொடுத்து விட்டு மறைந்து விட்டார்என கர்ண வழிக் கதைகள் உண்டு.
பெரிய மலைபாம்பு வடிவ பாறைகள் மலையைச் சுற்றி படுத்து இருப்பது போல் உள்ள காட்சி இப்பாம்புகள் இவ்விடத்தைக் காவல் காப்பது போல் உள்ளது.இந்த அமரு வில் இருந்தே அமரு+இன்கா =அமெரின்க்கா=அமெரிக்கா என்ற பெயர் வந்திருக்க வேண்டும்.ஐரோப்பியன் வெச்புகிக்கு ‘ அமெரிகோ’ என பெயர் கூட்டி வைத்து அவன் பெயரில் வந்தது என்று பொய் சொன்னான்.
பெரிய மலைபாம்பு வடிவ பாறைகள் மலையைச் சுற்றி படுத்து இருப்பது போல் உள்ள காட்சி இப்பாம்புகள் இவ்விடத்தைக் காவல் காப்பது போல் உள்ளது.இந்த அமரு வில் இருந்தே அமரு+இன்கா =அமெரின்க்கா=அமெரிக்கா என்ற பெயர் வந்திருக்க வேண்டும்.ஐரோப்பியன் வெச்புகிக்கு ‘ அமெரிகோ’ என பெயர் கூட்டி வைத்து அவன் பெயரில் வந்தது என்று பொய் சொன்னான்.
வேளிர்குல வள்ளல்கள் பாரி(PARI),ஓரி(HUARI) ,காரி(KARI),கிள்ளி(KILLIWA),ஆய்(AY),அதிகன் (ARTHIGAS),கம்சா (KAMSA)பெயர்கள் இங்கு உள்ளது மிக ஆச்சரியமான விடயம்.ஆதலால் இவர்கள் காலத்தால் மிக முற்பட்டவர்கள் எனப் புலப்படுகிறது.இவர்களை 2000 வருடங்களில் அடக்குவது முறை அன்று.
அந்தி மலை வாழும் வேறு இனங்கள் மற்றும் இடங்களில் தமிழ்ப் பெயர் ஒற்றுமைகள்
https://en.wikipedia.org/wiki/List_of_Indigenous_peoples_of_South_America
https://en.wikipedia.org/wiki/List_of_Indigenous_peoples_of_South_America
பாரி (பகரம் வகரம் ஆகவும் வகரம் பகரம் ஆகவும் திரிவது இயல்பு )
|
WARI CULTURE,PERU
|
பாரி
|
PARIA,VENEZULA,
|
ஊரு
|
URU
|
பேரு
|
PERU COUNTRY
|
காரி
|
KARI,KARIPUNA,BRAZIL
|
அமரகாரி
|
AMARAKARI
|
ஓரி
|
HUARI
|
சடையவர்மன்
|
SAKSAIVAMAN
|
சங்கா
|
SANGAS
|
வங்கா
|
WANKAS
|
கம்சன்
|
KAMSA
|
யானைமமா
|
YANAMAMA
|
கொச்ச பம்பா
|
KOCHAPAMBA
|
ஊரு பம்பா-ஊரின் பெயர்.
|
URU PAMBA
|
ஊரோஸ் மக்கள். திதிகாக்கவில் வாழும் மக்கள் .
|
UROS
|
ஊரு பம்பா -நதி
|
URU PAMBA.ஊரைச் சுற்றி ஓடும் பெரிய நதி.
(நம் கேரளா வின் பம்பை நதி போல்)
|
வில்வ பம்பா
|
VILCAPAMBA
|
பொலிவு
|
BOLIVIA
|
அமரு
|
AMARU
|
பள்ளா
|
PALLASCA
|
கொல்லா
|
KOLLA
|
கிள்ளி
|
KILLKI,KILLIWA,
|
சாலினர்
|
SALINAR IN ECUATOR
|
தேவநாகா
|
TIWANAKU
|
மாபடுங்கன்-மொழி
|
MAPADUNGAN
|
கருப்பு
|
KURUPI-PROTECTOR OF JUNGLE
|
அடகாமன்
|
ATACAMA
|
யானயான மக்கள்
|
YANAYANA
|
குருவையா/குருவாயு
|
KURUAYA,BRAZIL
|
மபுச்சி/
|
MAPUCHI PEOPLE(CHILE AND ARGENTINA)
|
நாகுவா, மெக்ஸிகோ
|
NAGUVA(ONE WHO SPEAKS CORRECT)
|
தாயினம்
|
THAINO
|
அரவான்
|
ARAWAK
|
மச்சாளா(மச்ச+ஆளும் )
|
MACHALA(IMPORTANT PORT IN ECUATOR)
|
கரிய மன்கா/கரியமன்க(லம் )
|
KARIAMANGA IN ECUATOR
|
MEZOAMERICAN/மெசோ அமெரிக்கன் நாகரீகங்கள்
கவுத்தமலா-இங்கு வாழ்ந்தவர் வேடுவர்கள் .18000 வருட ஒப்சிடியன் அம்புகள் கண்டெடுக்கப் பட்டது.
|
QAUTEMALLA,MEXICO
|
மொச்சகாய்
|
MEXICO
|
மாயன் நகரங்கள்
| |
திகழ்
|
THIGAL
|
கோபன்
|
COPAN
|
பளிங்கு
|
PALANQUE
|
மாயப்பன்
|
MAYAPAN
|
நாகுவா/(நாகர் இன மக்கள் )/NAGUவா மக்கள்
மெக்ஸிகோ மற்றும் EL SALVADOR ரில் வாழும் இவர்கள் தங்களை மிகத் தெளிவாகப் பேசும்,அறிவார்ந்த மக்கள் எனப் பொருள் கொள்கின்றனர்..’நா’வன்மை மற்றும் சொல்லழகு கொண்டு பேசுபவர்.
நாகுவா சிலைகள்
MAAYAN/மாயன் /மயன் /மாயோன்
மெசோ மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள MEXICO,BELIZE,EL SALVEDOR,GAUTIMALA,HONDURAS ஆகிய இடங்களில் உள்ள மாயன்/MAYAN நாகரீகமே , இலங்கையை மற்றும் சோழர்களின் காவிரிப்பூம்பட்டினத்தை உருவாக்கிய மயன்(மயமுனி)எனப்படும் பெரும் தச்சன் நாகரீகம்.பேரண்ட சக்தியை பூமிக்கு கொண்டு வர அவன் எழுப்பிய மிகப் பெரிய கட்டிட சாத்திரக் கலைகளே ‘பிரமிடுகள்’ என்ற பரண் +மேடுகள் .
மாயன் கட்டிடக்கலை மற்றும் வானவியல்,கணிதங்கள் ,(தமிழரின் கணக்கியல்) யாவராலும் புரிய முடியாத மிரள வைக்கும் சாத்திரங்கள்.இவர்கள் வீனஸ் /VENUS கிரகத்தை ஆராய்ந்துள்ளனர்.விண்வெளிப் பயணங்களும் செய்திருக்கலாம் என நம்பப் படுகிறது.
மாயன் CHICHEN ITZA பிரமிடு
எந்த ஒரு தாவரமும் ஒரு இடம் விட்டு வேறு இடம் வளர மரபணுக்கள் மாறப் பல ஆயிரம் வருடங்கள் ஆகும்.ஆனால் சோளம் விதைத்த நம் தமிழரின் மரபு தென் அமெரிக்காவில் இருக்கிறது என்றால் 2 காரணங்கள்.ஒன்று இப்பூமி குமரிக் கண்டத்தில் இருந்து பிரிந்திருக்க வேண்டும்.இரண்டு பின்னாலில் வந்த கடலோடிகளின் உணவுகளில் ஒன்றான சோளம் இவர்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் தங்களை சோளத்தில் இருந்து உருவான இனம் என்று கூறுவதால் இவர்களேஆதி சோழர்கள் ஆன மயன் வம்சம் என்றும் பின்னர் இவர்கள் பூமியான தென் அமெரிக்கா ,ஊழி வெள்ளத்தால் பிரிந்து அல்லது இவர்கள் ஏதோ காரணத்தில் தன் மண்ணில் இருந்து பிரிந்து கடலோடிகளாக இங்கு வந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.இவர்கள் சோழர்களே என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்கள் தேவை இல்லை.
ஆனால் இவர்கள் தங்களை சோளத்தில் இருந்து உருவான இனம் என்று கூறுவதால் இவர்களேஆதி சோழர்கள் ஆன மயன் வம்சம் என்றும் பின்னர் இவர்கள் பூமியான தென் அமெரிக்கா ,ஊழி வெள்ளத்தால் பிரிந்து அல்லது இவர்கள் ஏதோ காரணத்தில் தன் மண்ணில் இருந்து பிரிந்து கடலோடிகளாக இங்கு வந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.இவர்கள் சோழர்களே என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்கள் தேவை இல்லை.
சோளங்களுடன் மாயன் சிலை
|
INCA/எங்க தேச மக்களைப் போல் மட்டும் அல்ல அவர்களுக்கும் மேலாக இவர்களும்சோளத்தையும்,JAGUAR புலியையும் கடவுளாக வணங்கி உள்ளனர்.இவ்விடம் பல மிருகங்கள் வாழ்ந்தாலும் மாயன்களின் நூல்களில் மற்றும் மூதாதையர் கதைகளில் இடம் பெரும் மிக முக்கியமான மிருகம் JAGUAR எனும் புலி (THE COMPANION SPIRIT!).பூமியின் கடவுள் என இதனை அழைக்கின்றனர். ஆகாயக் கடவுளாக HOPI EAGLE/கோபிப் பருந்தை வணங்குகின்றனர்.
MEXICO/மெக்சிகோவில் உள்ள இவர்களின் குகுல்கன்/KUKULCAN (கோகுலன்) கோவிலை EL CASTILLO என்று அழைக்கின்றனர்.இது இருக்கும் நகரத்தின் பெயர் ’ MAYAPAN’ . இந்த ” எல்“எனும் வார்த்தை தென் மற்றும் மீசோ,மத்திய அமெரிக்கக் கண்டம் முழுதும் பல இடங்களின் பெயர்களில் வருகிறது.இது சூரிய குலத்தையே குறிக்கும் .இங்கும் இன்காக்களைப் போல் சோளம் முக்கியமான தேவ உணவாக உள்ளது .
இவர்களே மாயோன் எனப்படும் விட்ணுவின் வம்சம் என்பதற்கு அவர்களின் “மாயப்பன்” என்ற இப்பெயரும், ”கோபன்” கோவிலும் கோபி பருந்துமே சாட்சி.இவர்கள் பருந்து போன்ற அமைப்புள்ள ஒரு புட்பக விமானத்தில்(அகத்தியர் ஒரு மனிதனையே பத்து அடி உயரப் பறக்க வைக்கும் மின்சாரம் கண்டு பிடித்தார் என தற்பொழுது ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள்.) அல்லது மரக்கலனில் உயிர் பிழைத்து வந்திருக்கலாம் .
GULF OF MEXICO வில் கண்டெடுத்த 11000 வருட பழமை வாய்ந்த இரு மரக்கலன்கள் நம்மை யோசிக்க வைக்கிறது.
இவர்கள் வழக்கிலும் சூரியனை வணங்குகிறார்கள். ஆதலால் இவர்கள் குமரியில் இருந்து பிரிந்த முற்காலச் சூரிய குல சோழர்களின் வம்சமே .இலங்கையிலும் கேரளாவிலும்,இயக்கர்,நாகர்,வேடர் என மூன்று பழங்குடிகள் இன்றும் உண்டு.மெக்ஸிகோ நாட்டிலும் அப்பழங்குடிகள் வாழுகின்றனர்.
MEXICO/மெக்ஸிகோ வில் தமிழின் கூறுகள்
GULF OF MEXICO/மெக்ஸிகோ வளை குடாவில் நீருக்குள் இரண்டு பெரிய மரக்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தினர்.அவை சுமார் 11600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் 12000-10000 வருடங்கள் முன்பு (LAST ICE AGE)உலக அளவிலான பனி வயது ஊழி வெள்ளம் நடந்துள்ளதில் சிறிதளவும் சந்தேகம் இல்லைஎன MIYAMI,RHODE ISLAND,மற்றும் CAMBRIDGE பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முடிவாகக் கூறுகிறார்கள்.
மெக்ஸிகோவில் உள்ள தமழின்/TAMALIN , தமியாஹுவ /THAMIAHUA, தமுளிபாஸ் /TAMULIPAS என்ற துறைமுக ஊரின் பெயர்கள் தமிழை நினைவுறுத்துகிறது.THAMIAHUA இருப்பது VERACRUZ என்ற நகரத்தில். (CRUZ என்பது ஆங்கிலேயனின் கிராஸ் ல் இருந்து பெயர் வைத்தது.)VERA CRUZ ஒரு முக்கியமான பழமை வாய்ந்த வரலாற்று முக்கியத்துவமான துறைமுக நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோ/MEXICO ல் உள்ள தம்பிகோ எனும் இடத்தில உள்ள முதல் துறைமுக மாநிலம் TAUMULIPAS/தமுழிப்பாஸ் .8000 வருடங்கள் முன்பே குடிஏற்றம் ஆனது.மெக்ஸிகோ மக்களின் முக்கியமான உணவாக சோள மாவில் செய்யும் பல பதார்த்தங்களில் தமாழி /TAMALI எனும் தமிழைச் சுமந்து நிற்கும் உணவு குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள YUCATAN, UXMAL எனும் இடத்தில் ஆமைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.NAGUVA /நாகர் இனத்தில் இவர்களின் சோளக் கடவுள் ஆமை ஓட்டில் இருந்தே உருவானார் என்ற நம்பிக்கை உண்டு.
ஆமை சிலை
|
இங்கு வாழ்ந்த மாயன்களின் நாகரீகத்தில் குமரிக் கண்ட மயன் நாகரீகம்ஒளிர்கிறது.சுரைக்காய் பயன்பாடு இங்கும் அதிகம் உள்ளது என்றாலும் இது 'ஆசியாவில் இருந்து கடலோடிகளோடு வந்திருக்கக் கூடும்.இது இங்குள்ள வகை உணவு அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்'.இதன் குடுவையில் நம்மை போலவே பல பாத்திரங்கள்,இசைக் கருவிகள் செய்திருக்கிறார்கள்.
கோபன்/COPAN,HONDURAS
GAUTEMALA வை ஒட்டி உள்ள மேற்கு HONDURAS இல் உள்ள கோபன் எனும் அகழாய்வு பகுதிகளில் எண்ணற்ற பிரமேடுகள் ,மௌனக் கதைகள் சொல்லும் பல சிலைகள் MONKEY GODS என்று சொல்லும் நம் அனுமார் போன்ற இரண்டு வானரங்கள்,STELAE/ஸ்தல எனப்படும் கல்வெட்டு (அ) சிலைநடுகற்கள் அதில் முக்கியமான 7 STELAE க்கள் என பல விடயங்கள் நமக்கு பரிட்சியமானதாக உள்ளது .
கோபன் இல் உள்ள தாடி வைத்த சிலைகள் (மாயன் தாடி வைப்பதில்லை ) வலது புறம் அகத்தியர் போன்ற உருவம் கையில் விரல் முத்திரையுடன் .
மாயா MONKEY GOD
இவ்விடம் MONKEY GODS என்று சொல்லப்படும் இரு வானரங்கள் உள்ள சிலைகள் உண்டு.கையில் அனுமனைப் போல் கதை ஏந்தி உள்ளது.அதை கிளிகிளுப்பை என்றும் ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகிறார்கள்.ஏன்எனில் இது ஒரு சங்கீத நகரம்.
மாயன் சிலைகளில் உள்ள யானை போன்ற அமைப்புகள்.அதன் மேல் சவாரி செய்யும் மாயன்கள் .
அமெரிக்கக் கண்டத்தில் யானைகள் கிடையாது.MASTODAN போன்ற யானைகள் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் முன் வாழ்ந்து அழிந்து விட்டன.அவைகளின் எலும்புகள் அகழ்வாராய்சிகளில் கிடைத்துள்ளது.ஆனால் இவர்களுக்கு நமது ஆசிய யானைகள் போன்ற அமைப்புள்ள விலங்கினை எப்படித் தெரியும்?https://uncoveredhistory.com/honduras/copan/the-elephants-of-copan/
GUATEMALA/கவுத்தமலா
GUATAMALA/கவுத்தமலா /கவுத்தி மலை என்பது மத்திய அமெரிக்காவில் மாயன் பழங்குடிகள் வாழ்ந்த நாடுகளில் ஒன்று .GAUTLI என்றால் அங்குள்ள NAGUVA/நாகர் மொழியில் ‘மரங்கள்’ என்றும்( காடு எனவும் பொருள் கொள்ளலாம்), மல்லா என்பது மல்லன் என்றும் பொருள்.
’காட்டுமல்லன்’ அல்லது ‘காட்டுமலை ‘என்று பொருள் கொள்ளும் அளவுக்கு அடர்ந்த காட்டுக்குள்வேடர்களாக விளங்கிய மாயன்கன் மிகப் பெரிய சிற்பிகளாகவும் விளங்கியுள்ளது நமது மயனின் வம்சாவளிகள் என்று நிரூபிக்கிறது.(அல்லது கவுத்த +மல்லன் =கவுத்தமல்லன்=கவுத்தமன் என்றும் பொருள் கொள்ளலாம்.)
அங்குள்ள TEMPLE OF JAGUAR எனும் இடத்தில் புலிகளுக்கு பிரத்தியேகமாக கோவில் மற்றும் மன்னனுக்கு புலியின் சிம்மாசனம் உள்ளது.
இவ்விடம் நூற்றுகணக்கான பிரமிட் கள் உள்ளன.அதில் THIKAL/ திகள் எனும் இடத்தில் உள்ள பிரமேடுகள்ஆயிரக்கணக்கான வருடங்கள் காடுகளில் மறைந்து புதைந்து கிடந்த அற்புதங்கள். QURICUAA என்பது முக்கியமான துறைமுகமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.
திகழ்/THIKAL கோவில்/GUATEMALA
JAGUAR எனப்படும் புலியின் கோவில் இது.
TEMPLE OF JAGUAR/திகள்/TIKAL/GAUTIMALLA
QURINCA/குரின்கா , GUATEMALA/குடமலா
நமது கோவில் சிற்பங்கள் போன்ற சிலைகள்
KILLIWA/கிள்ளி மக்கள்
இவர்களின் உடல்களின் கார்பன் டேடிங் 11000 வருட முந்தய பழமையைக் கா ட்டுகிறது.ஆண்களுக்கு 15 வயதில் மூக்கு குத்தும் சடங்கு,பெண்கள் பூப்படைந்தால் உடலில் சாம்பல் தேய்த்து குளிக்க வைத்து 5 நாட்கள் சடங்குசெய்கிறார்கள்.குமாரா/GAUMARE /கௌமாரா மக்கள்(MEXICO)
இவர்கள் முருகனின் படை போலவே மிக உக்கிரமாக சண்டை போடும் இனம்.ஸ்பானிஷ் படை இவர்களை எதிர்கொள்ள முடியாமல் இவர்களை மகிழ்வித்து பரிசுகள் கொடுத்து நட்பாக்கியது.சீனிகிழங்கை குமாரா என்கிறார்கள்.கொலம்பியா பழங்குடி மக்கள்
கொலம்பியா வில் உள்ள காளி எனும் மக்கள் இனம் ,மற்றும் காளி ஆறு ,சாமுண்டீஸ்/சாமுண்டி மக்கள்,சாமுண்டி ஆறு ,சாண்டியாகோ/சாந்த காளி இவை நம் சப்த கன்னியரின் பெயர்கள்.
COLUMBIA வில் உள்ள SANTIAGO DI CALI/சாந்த காளி எனும் நகரத்தின் குறுகிய பெயரே காளி.இதன் தலை நகரம் VALLE DEL KAUKA /வள்ளி தல் காக்க.KALIMA CULTURE/காளிமா நாகரீகத்தில் நமது காளி வழிபாடு போல் சிலைகள் வைத்து வணங்கி உள்ளனர்.
காளிமா தெய்வம்
|
CHOLADO/சோழாடோ பானம் |
JAMUNDI,சாமுண்டி என்பது இங்குள்ள ஒரு நகரம் /முனிசிபாலிட்டி .இங்கே CHOLADO PARK/சோழாடோ பார்க் என்னும் பூங்காவின் முக்கியமான ஒரு குளிர் பானத்தின் பெயர் CHOLADO/சோழாடோ.பழங்கள் சேர்த்து அருந்தும் இப்பானமும், இப்பூங்காவும் சோழர்களின் பெயரிலேயே உள்ளதும் மிகச் சிறப்பு. https://en.wikipedia.org/wiki/Jamundí
நம் மக்கள் இனத்தை விட்டு பிரிந்தாலும் நினைவுகளைச் சுமந்தே சென்றார்கள். இவர்களின் பூசாரி மழை வரவழைக்க வேண்டும் எனில் சில மிருகங்களாக ,பறவைகளாக மாறி மழையை வரவழைப்பார் எனக் கதைகள் உண்டு.
THAINO/தாயினம் மக்கள்
THAINO/தாய் +இனம் எனும் இனம் கரிபியன் தீவுகளில் வாழ்ந்த மிக அமைதியான ARAWAK/அரவாக் இன பழங்குடிகள். முதல் முதலில் கரிபியன் தீவுகளுக்கு வந்த கொலம்பஸ் இந்த அரவாக் இனத்தையே அடிமைகளாக்கி நோய்களைப் பரப்பி கொன்று குவித்தான்.
முடிவுரை
தென்அமெரிக்கா மற்றும் MEZOAMERICA என்னும் அமெரிக்கக் கண்டம் முழுதும் தமிழ்த் தரவுகள் கொட்டிக் கிடக்கின்றன.மங்கோலிய தமிழ் கலப்பு இனம் (PACIFIC ISLANDERS) இங்கு ஆதியில் இருந்து வாழ்ந்த தடங்கள் உள்ளன.சோளம் பயிர் செய்த நம் முற்காலச் சோழர் மற்றும் பாண்டியர் இங்கு ஆண்டதற்கு பலமான சாட்சியங்கள் உள்ளன. பிற்காலங்களில் கடலில் வந்ததமிழ் வணிகர்களோடும்,பிற நாடுகளோடும் இவர்களுக்கு தொடர்பு இருந்திருக்கலாம்.
வடஅமெரிக்காவில் ஐரோப்பியர் வருவதற்கு முன் இருந்த பணபுழக்கம் கவுரி எனப்படும் சோழிதான்.அதன் ஆங்கிலப் பெயரும் KAVURI SHELLS என்பதே.பாண்டியர்க்கு கவுரியர் என்றே பெயர்.பாண்டியரும் கவுரி சோழிகளை வைத்தே முன்பு பண்ட மாற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆகவே இவர்களுக்கு பாண்டியருடன் பண்ட மாற்று இருந்திருக்கிறது என்பது உறுதி ஆகிறது.
வடஅமெரிக்காவில் ஐரோப்பியர் வருவதற்கு முன் இருந்த பணபுழக்கம் கவுரி எனப்படும் சோழிதான்.அதன் ஆங்கிலப் பெயரும் KAVURI SHELLS என்பதே.பாண்டியர்க்கு கவுரியர் என்றே பெயர்.பாண்டியரும் கவுரி சோழிகளை வைத்தே முன்பு பண்ட மாற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆகவே இவர்களுக்கு பாண்டியருடன் பண்ட மாற்று இருந்திருக்கிறது என்பது உறுதி ஆகிறது.
அங்குள்ள CHIPPIWA/சிப்பிவா மற்றும் MANOMINEE /மனோமணீ இனம் அவர்களின் 7 ”மகி” என்றமுன்னோர்கள்/கடவுள்கள் அறிவுரைப்படி ஆமை வழித் தடத்திலேயே கனடாவின் QUIBECK கரையோரம் இருந்து தற்பொழுது வாழும் WISCONSIN,NORTH DOKATA பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் ஆமையைக் குல தெய்வமாகவே பாவிக்கின்றனர்.ஐரோப்பியர் வரும் முன் அமெரிக்காவின் பெயர் “ஆமைத் தீவு” தான்.
ARIZONA/அரிசோனா மாகணத்தில் உள்ள APPACHI/அப்பச்சி,HOPI/கோபி இனம் நம் தமிழ் பெயர்களை சுமந்து நிற்பதும்,நம் இயற்கை வழிபாட்டை பேணி காப்பதும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.அங்கே நான் வாழ்ந்த PHEONIX நகரத்து குடியிருப்பில் CHOLA STREET/சோளா தெருஎன்றே இருந்தது.இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம்.
மெக்சிகன் வளைகுடா வழியாகவும், EASTER ISLAND எனும் MOAI தீவு(முக+வாய்)வழியாகவும் CALIFORNIA/கலிபோர்னியா, NAVEDA/நிவேதா ,TEXAS/தெக்கன்,மற்றும் FLORIDA எனவட அமெரிக்காவுக்கு பல குடிகள் இடம் பெயர்ந்துள்ளனர்.அதன் பின்னே BERINGIA எனப்படும் நிலவழிப் பாதையில் வடக்கேயும் மக்கள் குடி வந்துள்ளனர்.அங்கு மட்டும் அல்ல இன்னும் உலகின் பல இடங்களில் நமது தரவுகள் உள்ளன.
இவர்கள் நாடு பிடிக்க வந்தக் கூட்டம் அல்ல.சிதறிப்போன தன் இனத்தை தேடி அவ்வப்போது வந்த கடலோடிகள்
என்றும் ,தன் தாய் நாடு திரும்ப இயலாமல் அங்கேயே தங்கி வாழ்ந்த கூட்டம் என்றும்,பிற்காலங்களில் மறுபடி நம்முடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் நமக்குத் தெளிவாக உணர முடிகிறது.
தொல்லியல் நிபுணர்கள் 16000-13500 வருடங்களில் நடந்த பனிக் கால இறுதியில் அமெரிக்கக் கண்டத்தில் குடிஏற்றம் நடந்திருக்கலாம் என உறுதியாகக் கூறுகின்றனர்.
இவர்கள் நிலவழியாகவோ அல்லது கடல் வழியாகவோ பசிபிக் பெருங்கடலைக் கடந்து இங்கு குடி ஏறி இருக்கலாம் என நம்புகிறார்கள்.இக்கூற்று உண்மை என்பதும் அதற்கும் முந்தையகுமரிக்கண்ட வரலாற்று(LEMURIA) உண்மை இருப்பதும் தமிழர்களான நமக்கு மட்டுமே தெரியும் .நம் இலக்கியங்களும் இதற்கு சான்று.ஒரிசா பாலு அய்யா கூற்றுப் படி(தமிழ் இலக்கியச் சான்றும் ஆமை வழித் தடங்கல் பற்றி கூறுகின்றன.) குமரிக் கண்டம்(லெமுரியா) மூழ்கி ,பிரிந்து பின் தமிழர்கள் ஆமைத் தடங்கள்வழி, கடலோடிகளாக, பிரிந்த சொந்தங்களைத் தேடி உலகை வலம் வந்து பின் கண்டங்களை ஆண்டிருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.தென் அமெரிக்காவின் ECUATOR நாட்டின்GALAPAGOS/கலப்பாகா தீவுகளில் உலகின் மிகப் பெரிய ஆசியாஆமைகள் இன்றும் வசிக்கிறது.
GALAPAGO TORTOIS/கலபாகோ/கலப்பாகன் ஆமைகள்
மரக் கலங்களை ஓட்டி வந்த கடலோடிகளுக்கு கடலின் நீரோட்டங்களில் சென்ற ஆமைகளே வழிகாட்டி ஆதலால் இவைகளுக்கு ‘கலம்’ + ‘பாகன்’ = ‘கலப்பாகன்’ என பெயர் வைத்திருக்கலாம்.(இந்த தீவில் PREINCA /முற்கால எங்க தேச பழங்குடிகளின் புல்லாங்குழல்மற்றும் சிலத் தடயங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது).
நம் மூவேந்தர் உண்மையாகவே உலகாண்டனர் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது.நமது இந்திய அரசு மற்றும் தமிழக அரசு தமிழின் பெருமையை நிச்சயம் வெளிக்கொண்டு வராது .
எனவே எதிர் காலத் தமிழ் சந்ததியினர் தொல்லியல் மற்றும் அகழாராய்வுத் துறை படிக்க ஆர்வம் காட்டி உலகத்துக்கு நாம் யார் என ஆதரங்களோடு நிறுவ வேண்டும்.நமது பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்.நம் கனிம வளங்களைக் காக்க முன்வர வேண்டும்.நம் முன்னோர் இவ்வுலகத்துக்கு அளித்த வேளாண்மையை மீட்டெடுக்க வேண்டும்.இப்பூமித் தாயான பச்சையம்மாவைக் காக்க வேண்டும்.!!!
எனவே எதிர் காலத் தமிழ் சந்ததியினர் தொல்லியல் மற்றும் அகழாராய்வுத் துறை படிக்க ஆர்வம் காட்டி உலகத்துக்கு நாம் யார் என ஆதரங்களோடு நிறுவ வேண்டும்.நமது பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்.நம் கனிம வளங்களைக் காக்க முன்வர வேண்டும்.நம் முன்னோர் இவ்வுலகத்துக்கு அளித்த வேளாண்மையை மீட்டெடுக்க வேண்டும்.இப்பூமித் தாயான பச்சையம்மாவைக் காக்க வேண்டும்.!!!
நன்றி:
திரு.பாண்டியன் ,தமிழ் சிந்தனையாளர் பேரவை.
திரு.ஒரிசா பாலு ,கடல்சார் ஆராய்ச்சியாளர்.
திரு.பாண்டியன் ,தமிழ் சிந்தனையாளர் பேரவை.
திரு.ஒரிசா பாலு ,கடல்சார் ஆராய்ச்சியாளர்.
வாழ்க தமிழ் !!!!
Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html
No comments:
Post a Comment