Tuesday, May 21, 2019

இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்ற தாயும் வேண்டாள்

செல்வம் இல்லாதவனை இல்லாளும் வேண்டாள், ஈன்ற தாயும் வேண்டாள்


கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்- இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.(34)

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

(கைப் பொருள் = செல்வம், எதிர்கொள்வர் = வரவேற்பர், இல்லானை= செல்வம் இல்லாதவனை, ஈன்று = பெற்று, இல்லாளும் = மனைவியும், வாயின் சொல் = வாய்ச்சொல், பேச்சு)

கல்வி அறிவு உடையவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவர். கல்வி அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு மதிக்கப்படுவதில்லை.

ஆனால், கல்வி அறிவு இல்லாதவனுக்குச் செல்வம் இருந்தால் அவனையும் எல்லோரும் சென்று போற்றிப் புகழ்வார்கள்.

செல்வம் இல்லாதவனை அவனது மனைவி கூட விரும்பமாட்டாள்; அவனைப் பெற்ற தாயும் விரும்பமாட்டாள்; அவன் சொல்லும் சொல்லை யாரும் பெரிதாகக் கருதி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வத்தின் உயர்வை ஒளவையார் பாடியுள்ளார்.

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:247)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

மணக்குடவர் உரை:
அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல.
இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.

பரிமேலழகர் உரை:
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல.
('அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.)

சி இலக்குவனார் உரை:
பொருட்செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல அருட்செல்வம் இல்லாதார்க்கு வீட்டுலக இன்பம் இல்லை.

அன்பும் அறமும் உள்ளவரிம் பொருள் இருந்தால், அறங்கள் பல செய்து தன்னையும் சமூகத்தையும் உயர்த்துவார்.


https://www.facebook.com/groups/305917699863621





நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 





                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

Friday, May 17, 2019

பழைய சோறு, ஆரோக்கிய காலை உணவு..

பழைய சோறு, ஆரோக்கிய காலை உணவு... சத்துகளும் சான்றுகளும் !



அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... 

`உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று 

`பழைய சோறு, கம்பங் களிதான்... வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது.

பழைய சோறு

`பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’ `ஐஸ் பிரியாணி’... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு, அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. `மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும்’ என்று இதன் எளிய செய்முறையை விளக்கலாம்தான். `இதுகூடத் தெரியாதா எங்களுக்கு?’ என்று சிலர் கோபப்படவும்கூடும். ஆனால், எதைச் சொன்னாலும் செய்முறை விளக்கம் கேட்கும் இளைய தலைமுறைக்கு, பீட்சா, பர்கரிலேயே காலம் தள்ளிக்கொண்டிருக்கும் இளைய பட்டாளத்துக்காகவாவது இதைச் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது. பழைய சோறு கிடக்கட்டும்... சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது.

கிராமங்களில், வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள், உரிமையோடு கேட்கும் பானம் அது! `கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி...’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’, `நீராகாரம்’ என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி, நீராகாரத்தை மெள்ள மெள்ள ஓரங்கட்டிவிட்டது. அதோடு, இந்தப் பழைய சோற்றுத் தண்ணீர், மற்ற பானங்கள்போல அல்ல. பழச்சாறுகள், இளநீர், டீயைப்போல இதை பாட்டிலில் அடைத்துக் கையோடு எடுத்துப்போக முடியாது. சாதம் கலந்திருக்கும் என்பதால், புட்டிகள் ஏற்றவை அல்ல. இதுவும் தமிழர்கள் நீராகரத்தை மறந்துபோக ஒரு காரணம்.

தனியாக ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரூட்டவேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. அடுக்களையில் ஓர் ஓரமாக பாத்திரத்தில் வைத்து மூடி வைத்தாலே போதும். காலையில், குளிரக் குளிர பழைய சோறு தயார். மண் பாத்திரத்தில் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் பாரம்பர்யம் மிக்க உணவு இது. தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயம், பச்சைமிளகாய் அல்லது ஊறுகாய் போதும்.

பழைய சோறு கஞ்சி

பழைய சோற்றில் லேசாக புளிப்புச் சுவை ஏற்படக் காரணமும் உண்டு. சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria) புளிப்புச் சுவையைத் தருகிறது. அதோடு, மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அள்ளி அள்ளித் தருகிறது இந்த அட்டகாசமான சாதம். உதாரணத்துக்கு ஒரே ஒரு விஷயம்... வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். ஆக, காலையில் சாப்பிட ஏற்ற சத்தான உணவு பழைய சோறு.

அதே நேரத்தில், எல்லா உணவுக்கும் ஓர் கால அளவு உண்டு... இல்லையா? அது, பழைய சோற்றுக்கும் பொருந்தும். `அதிகபட்சம் பழைய சாதம் ஆக வேண்டும் என்பதற்காக, நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம்.

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்...

🍯 உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.

🍯 காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.

🍯 இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும்.

🍯 ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.

🍯 ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கும்

🍯 முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும்.

🍯 ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.

🍯 எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.

🍯 புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.

🍯 வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும்.

பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சோறு. பாரம்பர்யத்தைப் போற்றுவோம்!

- பாலு சத்யா






நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 





                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

Wednesday, May 15, 2019

ஞானம் என்பது ...

#ஞானம் - ஞானம் என்பது ஆன்மாவைப்பற்றி அறிதல்.



#ஆன்மா மாசுபட்டிருக்கிறது. புறஉடம்பு அல்லது தூலதேகம் மும்மலத்தால் ஆனது. தூலதேகத்தை, சூட்சுமத்தை ஆட்டிப் படைப்பது ஆன்மா. தூலதேகத்தையும் சூட்சுமதேகத்தையும் பற்றி அறிவதுதான் ஆன்மாவைப் பற்றி அறிவதாகும். தூலத்தைப் பற்றியது புற உடம்பு அல்லது காரிய தேகம். சூட்சுமம் என்பது அக உடம்பு அல்லது ஒளி உடம்பு அல்லது காரண தேகம். இதைப்பற்றி அறிதல் ஞானம். ஞானத்தைப் பற்றி அறிய முற்படுகின்ற மக்கள் வாசியைப்பற்றி அறிவது #யோகம். ஞானத்தைப் பற்றி அறிதல் என்பது வாசியைப் பற்றி அறிவதாகும். இதன் மூலமாக ஆறாதாரத்தை அறிய வேண்டும்.

-மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்






நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 




                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

#வாசி #குண்டலினி

#வாசி #குண்டலினி

ஞானத்தை அடைய முயற்சிப்பவர்கள் ஒன்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஞானத்தை அடைய யோகமார்க்கம் என்ற ஒன்று உண்டு. அப்படி செய்யப்படும் யோகமானது ஆசான் ஞானபண்டிதனாகிய ஆறுமுகப்பெருமானும், மகான் அகத்திய பெருமானும் நமது உடலோடு கலந்து நின்று உள்ளிருந்து உணர்த்த உணர்தலால் செய்யக்கூடிய பயிற்சியாகும்.

அத்தகு யோகப்பயிற்சி செய்யுங்காலத்து உடலின் தன்மைக்கும் யோகசக்திக்கும் ஏற்ப அவ்வப்போது கற்பங்களும் மூலிகைகளும் ஆசான் உணர்த்த அவற்றின் உதவியால் உடலைக் காத்துக் கொள்ள வேண்டும்.

தவத்திற்கென்று ஞானத்தலைவனும், குருமுனி அகத்திய பெருமானும், மற்றைய ஞானிகளும் அவ்வப்போது உடல் தகுதிக்கேற்பவும் உடல் உஷ்ணத்திற்கேற்பவும் தவஉணவினை சொல்லியும், அவற்றை உண்ணும் அளவுகள் குறித்தும் அறிவுறுத்தியும் உடனிருந்து யோகத்தை நடத்துவார்கள்.

இதன்றி பல்வேறு வகையான கனி வகைகள், பல்வேறு வகையான மூலிகைகள், பல்வேறு வகையான கற்பங்கள், மருந்துகள், சூரணங்கள் இப்படிப் பலபல விதங்களில் நொடிப்பொழுதும் யோகியை விட்டு நீங்காது ஒரு பெரிய ஞானியர் கூட்டமே அவ்யோகியை சுற்றி அரூபநிலையில் நின்று கண்காணித்துக் கொண்டே இருந்து அவ்வப்போது உள்ள சூடிநநிலைக்கேற்ப மாற்றி மாற்றி ஆலோசனைகளை சுவடிகள் மூலமாகவும், சகுணங்களாகவும், அசரீரியாகவும், பொருள்கள் மூலமாகவும் அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.

ஏன் தண்ணீர் அருந்துவது என்றால்கூட உடற்சூட்டின் அளவைப்பொறுத்து இவ்வளவுதான் குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடிக்கக் கூடாது என உத்தரவுகள் வரும். இப்படி முழுதும் ஞானிகள் திருவடிக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்து இமைப்பொழுதும் அவரது சிந்தை நீங்காமல் தவமாய் தவமிருந்து செய்வதே வாசி யோகமாகும்.

அப்படிச் செய்தால்தான் குண்டலினி சக்தி விழிப்படைந்து அவ்யோகிக்கு பலன் அளித்து இறுதியில் மரணமில்லா பெருவாழ்வைத் தரும். அதை விட்டுவிட்டு சிலர் குண்டலினியைப் பற்றி சற்றும் அறியாமல் ஏதோ விளையாட்டாக தவறான முறையில் யோகப்பயிற்சிகள் தருகிறார்கள்.

அதை நம்பி பலர் அப்பயிற்சிகளை மேற்கொண்டு நீடிய மலச்சிக்கல் ஏற்பட்டு, உடல் உஷ்ணம் ஏறி, முறையான யோகப்பயிற்சிகள் செய்யாமலும், உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமலும் இருந்து இறுதியில் உடல் வீங்கி துன்பப்பட்டு இறந்தும் போய்விடுகிறார்கள். ஞானிகளுக்கு யோகப்பயிற்சி அவசியம்தான். ஆனால் யோகப்பயிற்சிகள் செய்வதால் மட்டும் ஒருவர் ஞானியாகிவிட முடியாது.

அப்படி பயிற்சிகளால் ஞானிகளாகி விடலாம் என்றால் இவ்வுலகில் எண்ணற்ற கோடிக்கணக்கானோர் ஞானிகளாகி இருப்பார்கள். ஞானம் பெறுவதும், யோகம் பெறுவதும், வாசி வசப்படுவதும் அவரவர் விருப்பமல்ல. அது முதுபெரும் தலைவன் ஞானத்தலைவன் ஆசான் ஆறுமுகப்பெருமானின் தனிப்பெருங்கருணையினால் மட்டுமே சாத்தியம்.

அதற்கு பலகோடி ஜென்மங்கள் ஞானிகள் திருவடி பணிந்து பாடுபட்டிருக்க வேண்டும். ஏதோ பயிற்சியினால் மட்டும் அதை அடைய முடியாது. இப்படி கடினமானதும், பலஜென்ம புண்ணியத்தாலும் வரக்கூடிய யோகப்பயிற்சியினை ஞானநூல்களை படித்தோ, பிறர் கூறியதன் பேரிலோ, தவறான வழிகாட்டுதல்களினாலோ அல்லது தானாகவோ முயற்சி செய்து யோகப்பயிற்சிகளை செய்பவர்களும், செய்து பாதிக்கப்பட்டவர்களும், செய்ய நினைப்பவர்களும் வாசியோகம் முழுதும் அறிந்த, குண்டலினி சக்தியைப் பற்றி முழுதும் அறிந்த, உடல் தத்துவமும், ஆன்ம தத்துவமும் அறிந்த, யோக நிலைகளும், தத்துவ நிலைகளையும் அறிந்து அவற்றையெல்லாம் கடந்து முழுமை பெற்ற ஆறுமுகனின் அவதாரமான ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர் வாசம் செய்யும் ஓங்காரக்குடிலிற்கு வந்து அரங்கமகாதேசிகரின் ஆசி பெற்றால் தவறான யோகப்பயிற்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட்டு உண்மையான யோகத்தை அறியவும், ஞானவாடிநவில் தடைபட்டவர்கள் தடைகள் நீங்கி ஞானவாடிநவை தொடரவும் தவறான யோகத்தினால் பாதிக்கப்பட்ட சக்கரங்கள் மீண்டும் இயங்கவும் செய்யும்.

குருவருளும் திருவருளும் புண்ணியபலமும் உள்ளவர்கள்தான் யோகத்தைப் பற்றி சிந்திக்கலாமே தவிர குருவருளும், திருவருளும், புண்ணியபலமும் இல்லாதவர்கள் யோகத்தைப் பற்றி சிந்திக்கவே கூடாது.

ஏனெனில் யோகமானது முழுதும் பூர்வஜென்ம புண்ணியபலத்தாலும், குருவருளாலும் நிகழக்கூடிய ஒன்றாகும். கல்வியினாலோ, பயிற்சியினாலோ செய்யக் கூடியது அல்ல.

-மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்

https://www.facebook.com/groups/30591769986362




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 




                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

Ancient Indian Art Utilizes Mathematics, Mythology, and Rice

How an Ancient Indian Art Utilizes Mathematics, Mythology, and Rice

Computer scientists have studied these “pictorial prayers.”