Thursday, August 11, 2016

"சாதி, மதவெறியர்க்கு மன்னிப்பு இல்லவேயில்லை!"



சைவம் என்றால் பிறவுயிர்களுக்கு உணவில், சிந்தையில், செயலில், சொல்லில், பார்வையில் என்றுமே தீங்கு செய்யாதிருத்தலாகும். இன்று சிலர் உணவில் சைவமாக இருந்துகொண்டு சகமனிதரையே தீண்டத்தகாதவர் என சாதி, மதவெறியுடன் செயற்படுகின்றனர். இவர்களும், இவர்களோடு இசைந்து போவர்களுக்கும் மிகுந்த வேதனையான நரகவாழ்வே ஞானச்சித்தர் காலத்தில் அமையுமென ஞானபண்டிதரான எல்லாம்வல்ல முருகப்பெருமான் அறிவித்துள்ளார். இனியாவது திருந்தி நடவுங்கள். தவறின் சாதி, மதவெறியர்க்கு மன்னிப்பு இல்லவேயில்லை என்பது கலியுகவரதன் முருகப்பெருமானின் சத்தியவாக்காகும்.

உணவிலே சைவம் : தாவர உணவினை மட்டும் மேற்கொள்ளுதல். 

சிந்தையில் சைவம் : எந்த வகையிலும் பிறஉயிர்களுக்கு சிந்தையில் கூட தீங்கு எண்ணாதிருப்பதே சிந்தையிலே சைவமாகும்

செயலிலே சைவம் : தன் செயலால் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் தீமை பயக்காமல் நன்மையே தருவதாக அமைகின்ற செயல்களை செய்வதேயாகும். 

சொல்லிலே சைவம் : எந்த வகையிலும் நமது சொற்களால் பிறர் மனம் புண்படாமல் நடப்பதே சொல்லிலே சைவமாம். 

பார்வையிலே சைவம் : பிற உயிர்களைக் கருணையுடன் இனிமையாகப் பார்த்தல் 

இப்படி உணவில் சைவம், சிந்தையில் சைவம், செயலிலே சைவம், சொல்லிலே சைவம், பார்வையிலே சைவம் அனைத்தையும் அறிந்து கடைப்பிடிப்பதற்கு சைவத்தலைவன், சைவமே வடிவான ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானின் திருவடிகளே துணையாகும்.

உலகோரை ஒரு தாய்ப்பிள்ளைகளாக கருதி கலியுகவரதன் முருகப்பெருமான் தலைமையில் முற்றுப்பெற்ற சித்தர்கள் வழிகாட்டலில் சகல அதர்மங்களும் அழிக்கப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும் காலம் கனிந்துவிட்டது.


சுவடிகள் மூலம் அறிவிப்பு.

https://twitter.com/Ongarakudil



ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars
 Aum Muruga ஓம் முருகா 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 

No comments:

Post a Comment