Thursday, March 31, 2016

Ongarakudil Omkarakudil ஓங்காரக்குடில்

The Sri Agathiar Sanmaarga Charitable Trust has been serving the poor and downtrodden in Thuraiyur, Trichy, Tamilnadu, India since 1989. The center, known as "Omkarakudil", has charity as its basis of spirituality. 

Charity here means anything that can be done to ease the suffering of poor people without expecting anything in return. These include providing food, water, clothing and medical assistance. The focus on charity here is mainly feeding the hungry poor people. Most of them are poor homeless, old aged and children from poor families. For the past SEVEN years the organization has also started a center at the foot of the Perumal Hill to cater for the poor in that area.

மரணத்தை வென்ற வாழும் மகான் ஆறுமுக அகத்திய அரங்கமகாதேசிக அடிகளார்

இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன் ஞானபண்டிதரான எம்பெருமான் ஆறுமுகப் பெருமானார் தனது ஏழாவது படைவீடாகவும், ஞானத்தமிழ் வளர்க்கும் சங்கமாகவும், கலியுக இடர்நீக்கி தன் தலைமையில் உலகப்பெருமாற்றம் நடைபெறும் இடமாகவும் ஓரிடத்தை தன் சீடர்களான சித்தபெருமக்களுக்கு அறிவித்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஆறுமுக அரங்கன் பிறப்பானென்றும், பின் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபான சித்தர்கள் வழிகாட்டலில், ஞானத்தலைவன் முருகப் பெருமானாரின் முதற்சீடரான அகத்தியப் பெருமான் பெயர் தாங்கி, உலகுக்கு வழிகாட்ட பிரணவக்குடிலாக திருச்சி துறையூரில் ஓங்காரக்குடில் சிறுகுடிசையாக அமைந்து, காலவோட்டத்தில் வளர்ந்து, உண்மை ஆன்மீகத்தை உலகோருக்கு அறிவித்து, உலகப் பெருமாற்றத்தை ஏற்படுத்தும் தலமாகவும், ஆறுமுகனாரின் ஏழாவது படைவீடாகவும் அமையுமென அறிவித்தார்.

ஆறுமுகனார் அறிவிப்புக்கமைய சாதி, மத, இன வேற்றுமைகளற்ற அறக்குடிலாக சித்தர்கள் புடைசூழ ஞானவொளி பரப்பி வருகிறார் ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிக அடிகளார். நீங்களும் ஒரு தடவையாவது சென்று கண்ணாரப் பார்த்து, தொண்டு செய்து ஆறுமுகப் பெருமானாரையும், அவர்தம் சீடரான சித்தர்களையும் தரிசித்து ஆசிபெற்றுப் பலனடையுமாறு அன்புடன் திருவடி பணிந்து வேண்டிக் கொள்கிறோம்.
****************************************

ஆசானின் சில அருளுரைகள்:

மகான் ஒளவையார் அருளிய விநாயகர்
அகவல் விளக்கவுரை!
http://youtu.be/LjISsZhS9WE

திருமந்திர உரை
http://youtu.be/6zM7scSnNeg

ஜென்மத்தைக் கடைத்தேற்றும் வழிமுறைகள்
http://youtu.be/BTLtdnGws6w




Keywords: Siddhar, 18, siddhars,siddhis,agasthiar,annadhanam, bhogar,vallalar,karvurar, kagapujandar, vasistor, korakar, jeevasamadhi, thirumoolar, thirumandiram, chuvadi

Tuesday, March 22, 2016

காணொளி(Video): ஆசான் ஔவையார் அருளிய பிறப்பு-இறப்பை(கர்மா) வெல்லும் உபாயம்

விளக்கவுரை: ஔவைக்குறளும் அகவலும் .
ஓசையி னுள்ளே உதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து.
துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.
அடைந்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.
எழுஞ்சுட ருச்சியின் மேல்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.
கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ன வொளி.

காணொளி(Video): தில்லைச் சிற்றம்பலத்து நடராசப்பத்து.

சிவமயம்

1) 
மண்ணாதி பூதமோடு 
விண்ணாதி அண்டம் நீ 
மறை நான்கின்
அடிமுடியும் நீ 
மதியும் நீ 
ரவியும் நீ 
புனலும் நீ 
அனலும் நீ
மண்டலமிரண்டேழும் நீ 
பெண்ணும் நீ ஆணும் 
நீ பல்லுயிர்க்குயிரும்
நீ பிறவும் நீ 
ஓருவ நீயே, 
பேதாதிபேதம் நீ 
பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் நீ தந்தை நீயே, 
பொன்னும் நீ 
பொருளும் நீ 
இருளும் நீ
ஓளியும் நீ 
போதிக்கவந்த குரு நீ,
புகழொணாக கிரகங்களொன்பதும் நீ
இந்த புவனங்கள் பெற்றவனும் நீ 
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற
அப்பனே என் குறைகளார்க் குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே 
எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே.

2) 
மானாட மழுவாட 
மதியாட புனலாட 
மங்கை சிவகாமியாட ,
மாலாட நூலாட 
மறையாட திரையாட 
மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு 
கூட்டமெல்லாமாட 
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட 
தண்டைபுலி யுடையாட 
குழந்தை முருகேசனாட 
ஞான சம்பந்தரோடு 
இந்திராதி பதினெட்டு முனியட்ட
பாலகருமாட நரை தும்பையறுகாட 
நந்திவாகனமாட 
நாட்டியப் பெண்களாட 
வினையோடு உனைப்பாட 
யெனைநாடி இது வேளை
விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை 
ஈன்ற தில்லைவாழ் நடராசனே .


3) 
கடலென்ற புவிமீதில் 
அலையென்ற வுருக்கொண்டு 
கனவென்ற
வாழ்வை நம்பி, 
காற்றென்ற மூவாசை 
மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்தம் நித்தம் 
உடலென்ற கும்பிக்கு 
உணவென்றயிரைதேடி
ஓயாமலிரவு பகலும் 
உண்டுண்டுறங்குவதைக் 
கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனே ! 
தடமென்ற மிடி கரையில் 
பந்தபாசங்களெனும்
தாபரம் பின்னலிட்டு 
தாயென்று சேயென்று 
நீயென்று நானென்று
தமியேனையிவ் வண்ணமாய் 
இடையென்று கடைநின்று ஏனென்று
கேளாதிருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனை 
ஈன்ற தில்லைவாழ் நடராசனே .


4) 
வம்பு சூனியமல்ல 
வைப்பல்ல 
மாரணம்தம்பனம் வசியமல்ல 
பாதாள வஞ்சனம் பரகாயப் 
பிரவேச மதுவல்ல சாலமல்ல 
அம்பு குண்டுகள்
விலக மொழியு மந்திரமல்ல 
ஆகாய குளிகையல்ல அன்போடு
செய்கின்ற வாத மோடிகளல்ல 
அரியமோகனமுமல்ல கும்பமுனி
மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி 
கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போக 
முனி இவரெலாங் கூறிடும்
வைத்தியமல்ல , என் மனது 
உன்னடிவிட்டு நீங்காது நிலை நிற்க
வேயுளவு புகல வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை 
ஈன்ற தில்லைவாழ் நடராசனே.

5) 
நொந்துவந்தேனென்று ஆயிரஞ் 
சொல்லியும் செவியென்ன
மந்தமுண்டோ நுட்பநெறி 
யறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ 
சந்ததமுன் தஞ்சமென்றடியைப்
பிடித்தபின் தளராத 
நெஞ்சமுண்டோ தந்தி
முகனறுமுகன்
இரு பிள்ளை இல்லையோ 
தந்தை நீ மலடு தானோ, 
விந்தையும் ஜாலமும் 
உன்னிடமிருக்குதே வினையொன்று 
மறிகிலேனே,
வேதமும் சாத்திரமும் உன்னையே 
புகழுதே வேடிக்கை
இதுவல்லவோ இந்த உலகீரேழு 
மேனளித்தாய் சொல்லு
இனி உன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே எனை 
ஈன்ற தில்லைவாழ் நடராசனே.

6)
வழிகண்டு உன்னடியைத் துதியாத 
போதிலும் வாஞ்சையில்லாத
போதிலும் வாலயமாய்க் கோயில் 
சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த 
போதிலும் மொழியதனை 
மொகனையில்லாமலே 
பாடினும் மூர்க்கனேன்
முகடாகினும் மோசமே செய்யினும் 
தேசமே கவரினும் முழுகாமியே
யாகினும் பழியெனக் கல்லவே 
தாய் தந்தைக் கல்லவோ பார்த்தவர்கள்
சொல்லுவார்கள் பாரறிய மனைவிக்குப்
 பாதியுடலீந்த நீ பாலனைக்
காக்கொணாதோ யெழில் 
பெரிய அண்டங்களடுக்கா 
யமைத்த நீயென்
குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனை 
ஈன்ற தில்லைவாழ் நடராசனே.

7)
அன்னை தந்தகைகளென்னை 
ஈன்றதற் கழுவனோ, 
அறிவிலாததற் கழுவனோ, 
அல்லாமல்நான் முகன் 
தன்னையே நோவனோ 
ஆசைமூன்றுக் கழுவனோ 
முன் பிறப்பென்னவினை 
செய்தனென்றழுவனோ
என் மூடவறிவுக் கழுவனோ 
முன்னிலென் வினை
வந்து மூளுமென்றழுவனோ 
முத்தி வருமென்றுணர்வனோ 
தன்னைநொந்தழுவனோ உன்னை 
நொந்தழுவனோ தவமென்ன 
வென்றழுவனோ தையலர்க்கழுவனோ 
மெய்வளர்க் கழுவனோ 
தரித்திரதிசைக்கழுவனோ 
இன்னுமென்ன பிறவி வருமோ 
வென்றழுவனோ 
எல்லா முரைக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே எனை 
ஈன்ற தில்லைவாழ் நடராசனே.


8)
காயாமுன் மரமீது 
பூபிஞ் சறுத்தனோ 
கன்னியர்கள் பழி 
கொண்டேனோ 
கடனென்று பொருள்பறித்தே 
வயிறெரித்தேனோ 
கிளைவழியில் 
முள்ளிட்டேனோ 
தாயாருடன் பிறவிக்கென்ன
வினை செய்தனோ 
தந்த பொருளிலையென்றேனோ 
தானென்று கெர்வித்துக் 
கொலை களவு செய்தனோ 
தவசிகளை யேசினேனோ 
வாயாரப் பொய் சொல்லி 
வீண்பொருள் பறித்தனோ 
வானவரைப் பழித்திட்டனோ 
வடிவுபோலப் பிறரைச் 
சேர்க்கா தடித்தனோ 
வந்தபின் என்செய்தனோ 
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ 
யெல்லாம் பொறுத்தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை 
ஈன்ற தில்லைவாழ் நடராசனே.


9)
தாயாரிருந்தென்ன 
தந்தையுமிருந்தென்ன 
தன் பிறவியுறவுகோடி 
தனமலை குவித்தென்ன 
கனபெயரெடுத்தென்ன 
தாரணியை யாண்டுமென்ன 
சேயர்களிருந்தென்ன 
குருவாய் இருந்தென்ன 
சீடர்களிருந்து மென்ன, 
சித்து பல கற்றென்ன 
நித்தமும் விரதங்கள் செய்தென்ன
நதிகளெல்லாம் ஒயாது 
மூழ்கினும் என்ன பலன் 
எமனோலை ஒன்றைக் கண்டு 
தடுக்க உதவுமோ இதுவெல்லாம் 
தந்தையுறவென்றுதான் 
உன்னிருபாதம் பிடித்தேன். 
யார் மீது உன் 
மனமிருந்தாலுமுன் கடைக்கண் 
பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனை 
ஈன்ற தில்லைவாழ் நடராசனே.

10)
இன்னமுஞ் சொல்லவோ உன் 
மனங்கல்லோ இரும்போ 
பெரும் பாறையோ இரு செவியும் 
மந்தமோ கேளாது அந்தமோ 
இது உனக்கழகுதானோ 
என்னென்ன மோகமோ 
இது வென்ன சாபமோ 
இதுவே உன் செய்கைதானோ 
இருபிள்ளை தாபமோ 
யார்மீது கோபமோயானாலும் 
நான் விடுவனோ 
உன்னை விட்டெங்கு சென்றாலும் 
விழலாவனே நான் 
உனை யடுத்துங்கெடுவனோ, 
ஓகோவிது உன்குற்ற 
மென்குற்றமென்றுமில்லை. 
உற்றுப்பார் பெற்றவையா 
என்குற்றமாயினும் 
உன் குற்றமாயினும் 
இனியருளளிக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே எனை 
ஈன்ற தில்லைவாழ் நடராசனே.

சனி ராகு கேது புதன் சுக்கிரன் 
செவ்வாய் குரு சந்திரன் சூரியன்வரை, 
சற்றெனக்குள்ளாக்கி ராசிபனிரெண்டையும் 
சமமாய் நிறுத்தியுடனே பணியொத்த 
நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் 
பின்னால், பகர்கின்ற கிரணங்கள் 
பதிணொன்றையும் வெட்டிப் 
பலரையும் அதட்டி யென்முன் 
கனி போலவே பேசி கெடுநினைவு 
நினைக்கின்ற கசடர்களையுங் 
கசக்கிகர்த்தநின் தொண்டராம் 
தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் 
தொழும்பனாக்கி இனியவளமருவு 
சிறுமணவை முனிசாமியெனை 
யாள்வதினியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே எனை 
ஈன்ற தில்லைவாழ் நடராசனே

.


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 

Sunday, March 20, 2016

ஞானத்திருவடி நூல் 
ஞானிகள் நூல் 
ஞானம் தரும் நூல் 
ஞானமாய் மக்களுக்கு 
நல்வாழ்வு வழங்கும்
ஞானத்திறவு கோல்
ஞானத்திருவடி நூலே
ஞாலமதில் ஜீவ
காருண்யம் உணர்த்தி

உணர்த்தியே சத்குருவின்
சூட்சுமம் உணர்த்தி
உண்மைகளை உணர்த்தி
உயர்வுகளை காட்டி
உணர்த்தியே ஆன்மிக
நெறிகளை உணர்த்தி
உயர்வான பண்பையும்
உணர்த்தி

உணர்த்தியே உயரவைக்கும்
நூல் திருவடிநூலே
உண்மை வழி சொல்லும்
நூல் திருவடிநூலே
உணர்வுகளின் ஞானத்தை
உயர்த்தி வைக்கும் நூல்
உத்தமனாய் ஆக்கும் நூல்
ஞானத்திருவடி நூலே

- மகான் கடுவெளிச்சித்தர் ஆசிநூல்

வான்கலந்த மாணிக்கவாசகா

"வான்கலந்த மாணிக்கவாசகா
நின் வாசகத்தை 
நான்கலந்து பாடுங்கால் 
நற்கருப்பஞ் சாற்றினிலே 
தேன்கலந்து பால்கலந்து 
செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் 
ஊன்கலந்து உயிர்கலந்து 
உவட்டாமல் இனிப்பதுவே."

"வாட்டமிலா மாணிக்க வாசகா 
நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த 
கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா 
விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு 
நானடைதல் வியப்பன்றே!."
-ஆசான் வள்ளலார்

பெருமை பெற்ற மாணிக்கவாசகப் பெருமானே, நின்னுடைய திரு வாசகத்தை உணர்வு ஒன்றிப் பாடும் போது, நல்ல கருப்பஞ் சாற்றினில் தேனும் பாலும் நன்கு பழுத்த தூய கனியின் சாறும் கலந்தது போல என் உடலிலும் உயிரிலும் கலந்து உமட்டி யுமிழாவாறு இனிப்பு மிகுகிறது.   

Saturday, March 19, 2016

சித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்




நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து,வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை)வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.


"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"

- ஆசான் திருமூலர்

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!


என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.

-ஆசான் வள்ளலார் - 14.

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.

-ஆசான் கருவூர் முனிவர் -11-

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.

எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.

source: http://cyber-mvk.blogspot.co.uk/2010/08/blog-post_26.html