Friday, October 7, 2016

வள்ளலார் வரவழைத்த வற்றாத தீஞ்சுவை நீரோடை


வள்ளலார் வரவழைத்த தீஞ்சுவை நீரோடை சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காணவருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது. 

அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’ என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன. வள்ளலார் கரம்பட்டதும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஊற்றாக ஆகிவிட்டது.வள்ளலார் உருவாக்கிய தீஞ்சுவை ஊற்று. இந்த தீஞ்சுவை நீருற்று நீரோடையில் இருந்து வரும் நீர் அருகில் ஏற்ப்படுத்தப்பட்ட குள்ம் போன்ற குட்டையில் நிறுத்திவைக்கப் பட்டு பின் விவசாய நிலத்துக்கு அனுப்ப படுகிறது. அதிகாலை நேரம் மூன்று முதல் நான்கு மணிக்குள் வள்ளலாரை சூட்சும உடலுடன் காண வரும் யோகிகள் சித்தர்கள் சன்மார்க்கிகள் இங்கு சூட்சுமாக நீராடுவதை சுத்த சீவர்கள் கண்ணால் காண்பதும் உணர்வதும் தத்ரூபமானது. இதை எழுதும் நான் நன்கறிந்துள்ளேன்.

உடல் பிணி பிடித்த பாவம் மற்றும் தோசங்கள் விலக அசைவம் முழுதும் துறந்து சீவர் கருணையுடன் சித்திவளாகம் சத்திய ஞான சபை தரும சாலை கண்டு சென்று இம்மையிலும் மறுமையிலும் வேண்டிய செல்வங்களை பெருவாழ்வு பெருவோமாக வள்ளலாரை குருவாகவோ வழி நடத்தும் ஆன்ம நேய சகோதர ஆத்மாவகவோ படைத்த இறைவனிடம் கூட்டி செல்லும் தெய்வமாகவோ கொள்வதற்க்கு தங்களுக்கு எந்த சாதி மதம் இனம் நாடு மொழி என எதுவும் தேவையில்லை. தாங்கள் நாம் சந்திக்கும் ஒவ்வொரு உயிருள்ள உயிர்களையும் அன்பு கருணை இரக்கத்துடன் முடிந்தவரை உதவுதல் என சார்புடையவராக இருப்பின் தாங்களும் வள்ளலாரின் அநுக்க சன்மார்க்கியாவீர் இது சத்தியம் சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம் கண்ட மாபெரும் தலைவர் திருஅருட்பிரகாச இராமலிங்க சுவாமிகள் எனும் வள்ளல் பெருமானார் 

இந்தப் புதிய சங்கத்தின் கொள்கைகளாக அவர் அறிவித்தவை, மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை: கடவுள் ஒருவரே. கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவிலோ அல்லது ஓளிக்கு முன் தோன்றும் வெட்ட வெளியில் வைத்து வழிபட வேண்டும். சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது. இன, நாடு, ஜாதி, மத மார்க்க வேறுபாடு கூடாது. பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.ஆதலால் மாமிச உணவை உண்ணக்கூடாது. பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தாங்கள் நாம் சந்திக்கும் ஒவ்வொரு உயிருள்ள உயிர்களையும் அன்பு கருணை இரக்கத்துடன் முடிந்தவரை உதவுதல் எனும் சீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங் களுக்கும் மேலானது. மேற்கண்ட பண்புகளுடன் திகழ்பவர்களுடன் தானும் இருந்து நம்மை கருணையுள் கருணையவர் மகான்களுக்கெல்லாம் மகான் ஆன வள்ளல் பெருமானர். இந்த மகான்களுக்கெல்லாம் மகான் வழங்கிய மஹா மந்திரம் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி ... இந்த மகான்களுக்கெல்லாம் மகான் வழங்கிய அருள் நெறி திருமுறைகள் ஆறு அதுவே திருஅருட்பா.

சித்தர் அறிவியல் Wisdom of Siddhars

https://www.facebook.com/groups/siddhar.science/

1 comment: