Sunday, October 30, 2016

சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகன்.


பல்லாயிரம் யுகங்களுக்கு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த

சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை
பற்றிய வித்தியாசமான ஆய்வு ......

வாசித்து பாருங்கள் .... வியந்து போவீர்கள் .......



பல்லாயிரம் யுகங்களுக்கு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள். தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற
சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.

அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத
தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.

"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும்
அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.

"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"

சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது
ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.

இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்

1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)

இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப்பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும். முருகன் கையிலுள்ள வேலும் இந்த
சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது. மருத்துவர்களின் லோகோவில் இடது
புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.

"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"

எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த
சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்

 "உள்ளொளியாய் இருந்து 
உன்னில் அவனாக்கிடுவான் 
தன்னில் உனைக்காட்டி 
உன்னில் தனைக்காட்டி 
எங்கும்  தனைக்காட்டி 
எங்குமுனைக் காட்டிடுவான்"

சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம். ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்
வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரேஅவர் எவராலும் பெறப்படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை. முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையனசத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்குகடவுள் முருகன் என்றார் . எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான் படைப்பு உருவாகும் .

ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும் எனவே ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுலுடன் முடிந்து போகும் எனவே எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாட்டி வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே உணர்வோம். எனவே ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை
பிள்ளையார் என்று அழைத்தார்

அகத்தியர் & இராவணன் போன்ற மகாண்கள். சிவன் அணுத்துகள் atom , என்பதை உணர்ந்த அதந்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசத்தியன சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல் இருக்கு செவ்வேல் குறிக்கும் அதவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள். இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிளார்கள் சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பது தான் செவ்வேல் இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன்படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.

ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம். பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது. தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.

ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும். இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் அறியலாம்.

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
**************************************************
அகத்தியம் பெருமானாருக்கு அருள் செய்து ஒளி தேகத்தை அளித்து மரணமிலாப் பெருவாழ்வை அளித்து அருள் செய்து காத்ததைப் போல நாம் முருகனை வணங்க வணங்க, முருகனும் நம்மீது கருணை கொண்டு ஒரு கால பரியந்தத்திலே நமக்கும் அருள் செய்து நம்மையும் அருள் பார்வைக்கு உள்ளாக்கி அகத்தியருக்கு அருளியது போல நம்மையும் சார்ந்து வழிநடத்தி மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்வான் என்பதை அறியலாம்.

அதற்கு நாம் முருகப்பெருமானாரது ஆசியையும், அருளையும் அளவிலாது பெற வேண்டும். அதற்கு ஒரு நாள் இரண்டு நாள் போதாது, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். முருகனது அருளைப் பெற முதலில் நாம் இதுவரை செய்து வந்த, உயிர்க்கொலை செய்து புலால் உண்பதை நிறுத்த வேண்டும் .உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்வதோடு எண்ணம், சொல், சிந்தை, செயல் ஆகியவற்றிலும் சைவமாக இருப்பதோடு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் வேளைக்கு குறைந்தது பத்து நிமிடமேனும் “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ தவறாது நாமஜெபங்களை மந்திரங்களாகச் சொல்லி உரு ஏற்றி வருவதோடு மாதம் குறைந்தது ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதை கட்டாயமாக செய்வதுடன் ஜீவதயவை மனதினுள் பெருக்கி எவ்வுயிர்க்கும் தீங்கு நினைத்திடாத மனதினையும் பெற்று முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனம் உருகி தொடர்ந்து பூஜை செய்ய செய்ய, முருகனருள் கூடி அனைத்தையும் பெற்று இறுதியில் முருகன் நம்மை சார்ந்து வழிநடத்திட சேராத கலைகளை சேர்த்து பெற முடியாத மரணமிலாப் பெருவாழ்வையும் முருகனருளால் பெற்று அழிவிலாத நித்திய வாழ்வை வாழலாம்..

...........
காரண குருவான கந்தனைப் போற்றிட
காரிய உடம்புள்ளே காணலாம் உண்மை.

ஞானம் அடைதல்
***********************

ஞானம் அடைதல் படிநிலையானது நான்கானது என்றும், அவற்றினிலே சரியை என்ற நிலையினிலே தன்னை நோக்கி வருகின்ற விருந்தை உபசரித்தும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் உலக உயிர்களுக்கு தம்மால் ஆகிய உபகாரங்களை செய்தும், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தும், உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும், ஜீவகாருண்ய நெறி நின்றும், எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தலாகிய தூயநெறியில் நின்று தேறி கிரியை என்ற நிலையிலே நின்று மனித தன்மைக்கும் அப்பாற்பட்ட சக்தி உண்டென்றும் அந்த சக்தியே கடவுள் என்றும் கடவுள் உண்டென்று நம்புதலும் அந்த கடவுளை அடைந்திட வேண்டியே பக்தி செலுத்துதலும் கடவுளை அடைந்திட ஏதுவாக உள்ள வகையினிலே சான்றோர்களை போற்றுதலும் வணங்குதலுமாய் இருந்துமே அடியவர்கள் தம்மை பாதுகாப்பதுடன் கடவுள் வழிபாட்டையும் செய்து வருதலும் கடவுள் தன்மை அடைய உதவிடும் உண்மை சாதுக்களின் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு சாதுசங்க தொடர்பினை விடாது பற்றி அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும் முயற்சிகளை விடாது செய்தும் அவரவரால் இயன்ற அளவு ஞானிகள் கூறின, மார்க்கம்தனிலே தவதான தருமங்களை செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முயலுதலும், ஆக இவ்விதம் செய்து கிரியையை முடித்து, யோகமார்க்கம் தனிலே வருகையுற்று யோகநிலை என்ற நிலையடைந்து கசடான மனித தேகத்தின்கண் உள்ள நீங்காத கசடை நீக்குதற்கான ஞானபண்டிதரால் வகுத்தும் தொகுத்தும் அளிக்கப்பட்ட வாழையடி வாழையென திருக்கூட்ட மரபினை சார்ந்திட்டவர்க்கு மட்டுமே புலப்படும்படியானதொரு அற்புத கலைதனை யோககலைதனை பக்குவம் பெற்றுமே அறிந்திடல் வேண்டும்.

யோகம் என்பதே மூச்சுக்காற்றையும், அதன் இயக்கத்தையும், அதன் வெளிப்பாடையும், அதன் இரகசியத்தையும், அதன் பயன்களையும் அறிந்து யாருக்கும் எந்த சக்திக்கும் கட்டுக்கடங்காத வாசியெனும் மூச்சுக்காற்றின் இயக்கத்தை கட்டுக்குள் அடக்கி ஒடுங்கிட செய்தலாம் என்ற உண்மை அறிந்து நாசியின் இடது பக்கம் வருகின்ற இடகலை காற்றையும், நாசியின் வலதுபக்கம் ஓடுகின்ற வலகலை காற்றையும், சுழிமுனையாகிய புருவமத்தியில் ஒடுங்கிடச் செய்திடல் வேண்டும். அதை செய்திட அதிகாரம் பெற்றிட்டவர் யோகநாதனாம் முருகப்பெருமான் ஒருவர் மட்டுமே என்ற அதிநுட்ப சூட்சும இரகசியத்தை உணர்ந்திடல் வேண்டும்.

யோகம் என்பது ஆதிதலைவன் ஆறுமுகனாம் யோகநாதனாம், யோகமூர்த்தியாம், முருகப்பெருமானாரால்தான் செயல்படுத்திட இயலும் என்றும் அதற்குரிய சாதனங்களை அவரவர் தகுதிக்கேற்ப அவனே அருளுவான் என்றும், அவனருள் இல்லையேல் யோகம் இல்லையென்றும் உணர்தல் வேண்டும். உணர்ந்து யோகம் கற்று ஞானம்தனை அறிந்திடவே அயராது ஊன் உருகி உருகி உருகி, மனம் கசிந்து கசிந்து கசிந்து, நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஆற்றி அரற்றி தலைவன் மனம் குளிர நடந்து நடந்து, ஞானியர் நெஞ்சம் நெகிழ்ந்து கரைந்திட பக்திதனை செலுத்தி செலுத்தி, குருவிசுவாசம் மிகுதிபட நடந்து நடந்து, குருநாதன் முருகன் தம்முள் கலந்து நமக்கு உடலைப்பற்றியும், உயிரைப்பற்றியும் அறிவித்து உடலையும் உயிரையும் தூய்மையாக்கி, செம்மையாக்கி, உடல்உயிரை சேர்த்து, பிறவாநிலை தனை அடைந்திடல் என்றொரு நிலைதனை அடைந்திடல் வேண்டும்.

இப்படி நான்கு படித்தர நிலைகளிலே மனிதன் பன்னெடுங்காலம் அயராது பாடுபட்டு இறையருள் துணையுடனே சரியை நிலையும் கடந்து, கிரியை நிலையையும் கடந்து யோகநிலைதனை அடைந்து இறைவனாம் முருகப்பெருமான் தனிப்பெரும் தயவினாலே அந்த சாதகன் அவன்தன் தனது சாதக இருநிலைகளாம் முன்பு செய்த சரியை, கிரியை தனிலே அளவிலாது செய்திட்ட தானதவ பலன்களாலே, பக்தி விசுவாசத்தாலே, புண்ணிய பலத்தாலே ஞானிகள் அருள்பலத்தாலே, ஞானகுருவின் அண்மையாலே, தீவினைகளை குறைத்திட்டதாலே, உலக ஜீவர்களது ஆசியினாலே உயிர்க்கொலை துறந்ததாலே, பற்றுகளை துறந்ததாலே அவர் தமக்கு ஞானம் அடைதற்கு சாதகமாய் அதன் சாதனமாம் யோகம்தனை யோகஞானத்தலைவன் முருகப்பெருமானே முன்னின்று அருளுவான்,

அந்த சாதகனுக்கு ஞானியர் புடைசூழ யோகம்தனை. இப்படி திருஞான திருக்கூட்ட மரபினர் ஒன்று கூடிட எல்லாம்வல்ல ஞானத்தலைவன் சாதகன் தனக்கு யோகமளித்து அவர்தமக்கு வாசியின் சூட்சுமங்கள் உணர்த்தி வாசியாம் பரம்பொருளை அவன் தன்னுள்ளே இருத்தி புருவமத்தியாம் சுழிமுனைக் கதவை திறந்து செலுத்தி அடைத்து அவன்தன் தேகத்தினின்று அடைக்கப்பட்ட ஓரங்குல காற்று உருதரித்த நாடிதனிலே செலுத்தி மீண்டும் வெளியேறா வண்ணமே பாதுகாத்து வாசிப்பயிற்சிதனை செய்திட செய்திட அக்காற்றே அளவிறந்த சக்தியுடையதாய் மாறி பெரும் ஆற்றலாய் மாறியே பெருங்கனலாய் மாறி மனிததேகத்தை சுட ஆரம்பிக்கும்.

அப்படி தவம் தணலாய் சுடுகின்ற அந்த மூலாக்கினியில் மனித தேகத்தின்கண் உள்ள பிறவிக்கு காரணமாக உள்ள அசுத்த சுக்கிலத்தை தாக்கி தாக்கி சுத்தப்படுத்த முயற்சிக்கும்.

ஆயினும் தாய்தந்தையரால் பெறப்பட்ட இந்த தேகத்தில் சுத்த சுக்கிலம் ஊறாது. ஆயின் ஒவ்வொரு அணுக்களிலுமே இயற்கையின் அதீத சக்தியினால் காமக்களிம்பு விடாது பற்றியுள்ளதால் அந்த அணுக்களிலிருந்து தோன்றும் சுக்கிலமும், காமக்களிம்புடனே இருக்கின்றபடியாலே காமக்களிம்பை நீக்கிட ஞானத்தலைவனே சாதகன் உடலைச் சார்ந்து வழிநடத்தி உடல் அணுக்களிலே உள்ள காமக்களிம்பை தன்மூலக்கனல் கொண்டு சாதகன் மூலக்கனல் உதவியுடன் மிகமிக மெதுவாக அணுக்களை சூடேற்றி சூடேற்றி அணுக்கள் வெப்பமாகிடும்படியாக அதேசமயம் அணுக்கள் செத்துவிடாமலும் செய்து செய்து அணுக்களை சுத்தப்படுத்துவான்.

எப்பொழுது அணுக்கள் சுத்தமாகின்றதோ அதுவரை அதனின்று ஊறும் சுக்கிலம்தனை கட்டமாட்டார்கள் யோகிகள். இது அந்த ஞானக்கூட்டத்தினருக்கு மட்டுமே தெரியும். அவ்விதம் இல்லாமல் மீறி சூட்சுமம் அறியாமலேயே அசுத்த சுக்கிலத்தை கட்டினால் அசுத்தமாகிய சுக்கிலம் ஆர்ப்பரித்து எழுந்து உடம்பை விஷமாக்கி அதீத காமத்தை உண்டு பண்ணுவதோடு அந்த சாதகனை எந்த சுக்கிலம் பிறவாமையை தரவல்லதோ அதுவே அவனைக் கொன்றுவிடும்.

ஆதலின் அதுவரை யோகியர் தேகத்துள் தூயதேகம் பெறுமளவும் ஊறும் சுக்கிலம்தனை இறைவனருளால் ஞானபண்டிதன் சார்ந்து உடலை சார, அசுத்த சுக்கிலம் ஒட்டாது செய்து புறந்தள்ளி விடுவான். இப்படி அதிலுள்ள இரகசியங்கள் இருக்க இவ்வுலகினிலே நூறுக்கும் சில ஆயிரங்களுக்காக ஆசைப்பட்டு தனக்கு தெரியாத யோகப்பயிற்சிகளை ஏதோ சில ஞானநூல்களை அதன் உண்மைப் பொருளுணராது படித்து, கற்று தேர்ந்தவர் போல பசப்பி, மக்கள் மனம் கவர்ந்து, சொல்வதை நம்பி இல்லறத்தான் சென்று அசுத்த சுக்கிலத்தை உடம்பினுள் தவறான யோகப்பயிற்சிகள் மூலம் கட்டுவானேயானால் அதனால் உடல் உஷ்ணம் காமக்கனலும், யோகக் கனலுமாய், உடல் உஷ்ணம் அளவு கடந்து ஏறி தலைபாரம் ஏற்பட்டு மலச்சிக்கல் ஏற்பட்டு அசுத்த சுக்கிலம் உடலில் தங்கி உடம்பு நாற்றமெடுத்து விஷமாகி இறந்தும் போவான். அன்பு கொண்டு எச்சரிக்கை செய்கிறேன் மக்களே! விந்து கட்டுதல் ஆறுமுகனார் அருள் பெற்ற யோகிகளுக்கு மட்டுமே உகந்ததாகும். மற்றைய சாதாரண இல்லறவாசிகளுக்கோ, ஆசி பெறாத வாலிபர்களுக்கோ உகந்தது அல்ல. பக்தி செலுத்துங்கள் ஆறுமுகனார் திருவடியைப் பற்றி! அவன் உணர்த்துவான் உங்களுக்கு!

தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் – பீர்முகம்மது
****************************************************
தக்கலை பீர் முகம்மது அவர்களும் தந்தைக்கு முன் மகன் பிறந்தான் என்று பாடுகிறார். மேலும் அவர்களின் பாடல் திருமந்திர பாடலுடன் எவ்வாறு ஒத்து போகிறது என்று சொல்லும் பாடல். அப்பட்டமான ஞான பாடலும் கூட!

அந்த பாடலை ஞான சற்குரு அவர்களின் “ஞான கடல் பீர் முகம்மது” என்ற புத்தகத்தில் இருந்து ஞானப் புகழ்ச்சி என்ற பகுதியில் உள்ள பாடல் – 10
கணங்காத தந்தைக்கு முன்பிறந்துந்திக்கமலத்தில் – பாடல் 10
பீரப்பா பாடலில் இது ஒரு அற்புதமான பாடல்! ஞான ரகசியம் வெளிப்படும் படலுங் கூட! தந்தைக்கு முன் பிறந்தான் – தந்தைக்கு முன்னாலயே பிறந்தவனல்?! தந்தை பிறப்பதற்கு முன் எப்படி மகன் பிறக்கமுடியும்? தந்தையின் முன்னில் – முன்பக்கத்தில் மகன் பிறந்தான் என்பதேயாகும்!?

கந்த புராணத்தில், சிவனின் நெற்றி கண்ணிலிருந்து வந்த தீப் பொறியே முருகன் என்கிறதல்லவா? சிவனின் முன்பு முருகன் தோன்றினான். எப்படி? நெற்றிகண் மூலமாக! உந்தி கமலம் – உந்தி – முன் தள்ளி கமலம் – தாமரை,இது பரி பாஷை நமது கண்களே தாமரைக்கு ஒப்பிடுவார்கள். கண் உந்தி கொண்டுதானே இருக்கிறது – கண்ணைத்தான் உந்திக்கமலம் என்றனர். சிவனின் உந்திக் கமலத்தின் நெருப்பிலிருந்து பிறந்தான் முன் பக்கத்தில்! முருகன்! பீரப்பா கந்த புராணத்தை சொல்லவில்லை!

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.
திருமந்திரம் – .869

சாத்திரத்தில் சிறந்த திருமந்திரத்தில் சொல்லப்பட்ட ஞானத்தையே பீரப்பாவும் சொல்லியிருக்கிறார்கள். நாம் கண்ணை விழித்திருந்து தியானம் செய்யும்போது நமது உந்திகமலமாகிய கண்களில் இருந்து, நம் கண்களின் வழி, உள்ளே இருக்கும் சிவமாகிய ஒளி பிரவாகமாக வெளிப்படும்! உள் ஒளி கண்வழி வெளிப்படும் போது ஆறுவட்டமான இரு கண்களின் காட்சி நமக்கு கிடைக்கும்.! அதாவது நம் கண்ணையே நாம் நமக்கு முன்னால் காணலாம்!?

ஆறு வட்டம்தான் கதையில் ஆறுமுகமானது, சிறுவர்களுக்கு கதை – புராணம். பெரியவர்களுக்குஞானம் – அனுபவம். இஸ்லாமியருக்கும் இந்துவுக்கும் கிறிஸ்த்துவனுக்கும் ஒரே அனுபவம்தான்! ஞானம் ஒன்று தான்! இறைவன் ஒருவன் தானே! சாதனை ஞான சாதனை அதாவது ஞான தவம் செய்யும் யாவருக்கும் கிட்டும் முதல் அனுபவம் இதுவே!

இங்கே எங்கேயிருக்குது மதம்!? உலக மக்கள் அனைவருக்கும் ஒரே அனுபவம் தான்! ஒரே இறைவன் தான்!

“முருகா! முருகா!! முருகா!!!” என்றே மனம் உருகி பூசிப்போம் யோகத்தின் இரகசியம் அறிந்து தேறுவோம்.

சித்தர் அறிவியல் Wisdom of Siddhars

https://www.facebook.com/groups/siddhar.science/

No comments:

Post a Comment