Thursday, January 30, 2020

இந்தோனேசியாவில் சித்தபெருமான் அகத்தியர் சிலை கண்டுபிடிப்பு

Penemuan arca Rishi Agastya, Lembu Andhini dan batuan candi di tanah kas desa Widodomartani , dusun Kalijeruk Widodomartani Ngemplak Sleman Selasa 28-1-2020
இந்தோனேசியாவில் விடோடோமர்தானி, கலிஜெருக் கிராமம், விடோடோமார்டனி என்ஜெம்ப்ளாக் ஸ்லெமன் ஆகியோரின் கருவூல நிலத்தில் சித்தபெருமான் அகத்தியர் சிலை, அந்தினி எருது மற்றும் கோயில் பாறைகளின் கண்டுபிடிப்பு செவ்வாய்க்கிழமை, 28-1-2020
The discovery of the statue of Rishi Agastya, Andhini Ox and temple rocks in the treasury land of Widodomartani village, Kalijeruk village, Widodomartani Ngemplak Sleman Tuesday, 28-1-2020.

https://www.facebook.com/groups/305917699863621

ஆதி அகத்தியர் சன்மார்க்க சங்கம்

சித்தர் அறிவியல்






2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)


Wednesday, January 29, 2020

சென்னையில் 20 ஆண்டுகளாகத் தன்னலமற்ற அன்னதானத் தொண்டு

சென்னை வடபழனியில் 20 ஆண்டுகளாகத் தன்னலமற்ற அன்னதானத் தொண்டு.


20 வருடங்களாக சென்னையில் இலவச உணவு | தினமும் 250 பேருக்கு மேல் தரமான உணவு | Free Food Places in Chennai





" இருப்பின் பசியாற்று இல்லையெனில் பரிமாறு."

மற்ற எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர். மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக உயர்வான அறமாகும்.
இவ்வுலகில் வாழும் உயிர்கட்கெல்லாம் உண்டி(உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
அன்னதானம் செய்தால் நமது மும்மலங்கள், அறியாமை, அகந்தை (தான் என்ற கர்வம்) போன்ற குணக்கேடுகள் நம்மை விட்டு விலகி விடும். இறை ஆசி கிட்டும். அன்னதானம் செய்தால் நற்பண்புகள் கைகூடும் அன்னதானம் செய்தால் அறிவு மலரும். அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.(226)
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.(225)
திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன.
கீதையில் கிருஷ்ணபகவான், “ எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தை, முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்”.
நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து – கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் – பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல்.
வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு போன்ற மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் – அன்னதானம் மட்டுமே ஆகும்.
அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவருக்கும் இல்லை என சொல்லக் கூடாது.
உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துகள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.
தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் – கர்ணன். மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார்.
இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே! தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார். கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது. மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார்.
அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய், ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது. உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.
அன்னதானம் செய்யாமலேயே, அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.
மற்ற எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர். மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக உயர்வான அறமாகும்.
அன்னதானம் செய்வோம் இன்புற்று வாழ்வோம்.
"இருப்பின் பசியாற்று
இல்லையெனில் பரிமாறு."
எல்லா உயிர்களையும் நேசிப்போம்..!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..!

Aum Muruga ஓம் மு௫கா

சித்தர் அறிவியல்

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Tuesday, January 28, 2020

புலால் உணவால் வரும் கேடுகள்

புலால் உணவால் வரும் கேடுகள்

மனித வர்க்கதிற்கு பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும், கனி வகைகளும், கீரை வகைகளும் இன்னும் பலவிதமான தாவர உணவுகளையும் மனித சமுதாயம் உயிர் வாழ இயற்கை தாய் தனது பெருங்கருணையினால் படைத்திருக்கிறார். இப்படிப்பட்ட இயற்கையின் கொடையாகிய தாவர உணவை விடுத்து ஆடு, கோழி, மீன் போன்ற மிருகாதி உணவுகளை சுவைக்காக அவைகளின் உயிரைக் கொன்று சாப்பிடக்கூடாது. உயிருள்ள மிருகங்களும், பறவைகளும், நீர்வாழ் உயிரினங்களும் கொல்லும்போது தம்மைக் காத்துக் கொள்ள பேசக்கூட தெரியாத வகையில் உள்ளது என்ற காரணத்தால் அவைகளைக் கொல்வது இயற்கைக்கு ஒவ்வாத செயலாகும்.

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்? -திருக்குறள்- புலால் மறுத்தல்

தன் உடம்பை பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும். (நன்றி- மு. வரதராசனார்)

நாம் பெற்ற தேகம் எப்படியும் கண்டிப்பாக ஒருநாள் அழியத்தான் போகிறது. அப்படி அழியப்போகின்ற இந்த உடலை வளர்ப்பதற்கு தாவர உணவை தவிர்த்து பாதகமான ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்தாலும் காப்பாற்ற முடியாது. ஆகவே நிலையில்லாத தேகத்திற்காக மாமிச உணவை உண்டு அழியாத ஆன்மாவிற்கு பாவச்சுமையை ஏற்றி நரகத்தில் வீழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ள அன்பர்கள் இதுவரை இக்கருத்தை உணராமல் புசித்திருந்தாலும் இனியேனும் இதைப் புரிந்துகொண்டு கொடுமையான மாமிச உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.
-ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர். 

‘கொன்றார் பாவம் தின்றாரோடு’ என்று கசாப்பு கடைக்காரர் சொல்லுகின்றார். ‘தின்றார் பாவம் கொன்றாரோடு’ என்று புலால் உண்பவர் கூறுகின்றார். இதில் எது சரி? இதன் மூலம் இரு சாரார்களுமே பாவத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா?

‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்’ என்ற பழமொழிக்கு மற்றவர்கள் சொல்கின்ற பொருள் பிழையானது. கொல்லுகின்றவன், விலை கொடுத்து வாங்கித் தின்பவனுக்காகவே செய்கின்றான். ஆகவே அப்பாவம் முழுதும் அவனையே சேராது.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல் – திருவள்ளுவர் (அதிகாரம்: புலால் மறுத்தல்).
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் 
செல்லாது உயிருண்ணுங் கூற்று. திருவள்ளுவர் (அதிகாரம்: கொல்லாமை).

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான். ஆகவே, உயிர்களைக் கொன்ற பாவம், தின்பதனால் போகும் என்பது ஒரு சிறிதும் பொருந்தாது. ஒரு சிலர், ‘நான் கொல்வதில்லை, கடையில் இருந்து வாங்கித் தின்கின்றேன்” என்பார்கள்’ இதுவும் பிழையான கருத்தாகும். வாங்குவார் பொருட்டே விற்பவன் கொல்கின்றான். திருவள்ளுவர் ‘கொல்லாமை’ என்று ஒரு அதிகாரமும் ‘புலால் மறுத்தல்’ என்று ஒரு அதிகாரமும் தனித்தனியே கூறியிருக்கின்றார்.

கொல்லாமல் கொன்றதை தின்னாமல் சூத்திரம் கோள்களவு
கல்லாமல் கைதவரோடு இனங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல் சொற்களை கேளாமல் தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே
— பட்டினத்தார்.

இவ்வாறு எத்தனை பிரகாரங்களாகப் பார்த்தாலும் ஊன் உண்பது பெரிய பாவமாகும்.
கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் அன்றே!!!
–இராமலிங்க வள்ளலாளர்

தங்கள்தேகம் நோய்பெறின்
தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்தும்
ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து
நாளுந்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குல தெய்வமுங்கள்
உருக்குலைப்பது உண்மையே!
-சிவவாக்கியார் பாடல்

இனி, கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதற்கு சரியான உரை கீழ்வருமாறு.
புலால் உண்டவர்களை இறந்த பின் இருள் உலகத்தில் (நரகத்தில்) நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர், ‘புவனத்தொரு’ என்று தொடங்குகின்ற திருசிராப்பள்ளி திருப்புகழில், ‘இறைச்சி அறுத்து அயில்வித்து’ என்று குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே, கொன்ற பாவமும் தின்ற பாவமும் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.

ஓம் சர்வலோக சித்தர்கள் திருவடிகள் போற்றி

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)


சித்தர் பாடல்: பாம்பை உணவாக உண்டால் என்ன நடக்கும்

சித்தர் பாடல்: பாம்பை உணவாக உண்டால் என்ன நடக்கும்

மகாசித்தர் அகத்தியர் ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.
"சர்ப்பமுண்டு
சர்வநோயுண்டு
கர்ப்பமறியா கன்னியும்
வாயு பகவான்
பகைகொண்டு
பித்தம் சித்தம்
சிதைகொள்வாள்"
இதன் அர்த்தம் சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் (சர்வ) ஒன்றுசேர்ந்து தாக்கியதுபோல கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் (வாயு) பாதிக்கப்பட்டு , பிறகு பித்தம் அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு ( இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இறுதியாக வலிப்பு வந்து இறப்பதை வீடியோவில் பார்க்கலாம்) சிதை கொள்வாள். அதாவது இறப்பார்கள். தேவர்களும் அசுரர்களும் பாம்பை இருபக்கமும் இழுத்தார்கள். அப்போது பாம்பு விசத்தைக் கக்கியது. உண்மையில் அது விசத்தை சிவன் விழுங்கினார். அதுதான் அவரின் தொண்டைப் பகுதி நீலமாகியது. அப்போது பாம்பு இறைவனிடம் வரம் வேண்டிக்கொண்டது. பாம்புகளைக் கொல்பவர்கள் வாழ்வு சீரழியும் என இறைவனும் வரம் கொடுத்தார். இப்போது கொரோனா வைரஸ் தாக்கி இறப்பவர்களும் நீலமாகியே இறக்கிறார்களாம். அதை அறிந்துதான் மக்களைக் காக்க சிவன் பாம்பை கழுத்திலே அணிந்து இறைநிலை அளித்து பாம்பைக் கொல்லாமல், உண்ணாமல் வழிபடுங்கள் என்றாராம். உங்களுக்கு ஒரு இரகசியம் தெரியுமா? சீனாவில் நாகப்பாம்பு சாப்பிட்டவரிலிருந்துதான் இந்த வைரசே பரவியது.

https://www.facebook.com/groups/305917699863621

ஆதி அகத்தியர் சன்மார்க்க சங்கம்

சித்தர் அறிவியல்





இராவணன் இயற்றிய நூல்கள்

பெருமன்னன் இராவணன் இயற்றிய நூல்கள்
இராவணேசனின் ஓவியத்தை இலங்கை நாரஹென்பிட்ட சந்திக்கு அண்மையில் Baseline வீதியில் பிரமாண்டமான ஓவியமாக வரைந்திருக்கிறார்கள்.
இன்றையநாட்களில் இராவணன் அலை முழு இலங்கையிலும் படித்தவர் வட்டங்களில் வீசிக்கொண்டிருக்கிறது.
இன்று அவனை முன்னோன் என்று புனைவதிலும் அதற்கான ஆதாரங்களை திரட்டுவதிலும் பலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். சீகிரிய , இராவண எல்ல , சீத்தாஎலிய , வாரியபொல , தொலுக்கந்த (சஞ்சீவினி மலை) போன்ற இடங்களினை இராவணனோடு பிணைத்து வரலாறு உருவாகிக்கொண்டு வருகிறது. கொழும்பு புத்தக கண்காட்சிகளில் இராவணன் தொடர்பான புத்தகங்களுக்கு தனிப்பகுதியே ஒதுக்குகிற அளவுக்கு நூல்களை வேறு எழுதித்தள்ளுகிறார்கள்.
பத்துதலை திண்தோள் கருநிறம் என்று இப்போது நாங்கள் சொல்கிற அதே இராவணனின் உருவம் கம்பராமாயணத்திலும் , அதற்கு முன் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் பெருமானின் காலத்திலும் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. (தகவல்: துவாரகன்)
அநேகமான இராவணன் இயற்றிய நூல்கள் ஓலை சுவடிகளாகவும், பிரதிகள் இல்லாமலும் இருந்தன. இவை யாழ் நூலகத்தில் தீக்கிறையானது.ஆனால், சில முன்னமே அச்சிடப்பட்டு விட்டது. அவை தான் இப்பொழுதும் கிடைக்கின்றது.
தமிழ்ப் பெருமன்னன் இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம்.
https://www.facebook.com/groups/siddhar.science

1. உடற்கூறு நூல் 2. மலை வாகடம் 3. மாதர் மருத்துவம் 4. இராவணன் – 12000 .5. நாடி, எண்வகை பரிசோதனை நூல் 6. இராவணன் வைத்திய சிந்தாமணி 7. இராவணன் மருந்துகள் - 12000 8. இராவணன் நோய் நிதானம் - 72 000 9. இராவணன் – கியாழங்கள் – 7000 10. இராவணன் வாலை வாகடம் – 40000 11. இராவணன் வர்ம ஆதி நூல் 12. வர்ம திறவுகோல் நூல்கள் 13. யாழ்பாணம் – மூலிகை அகராதி 14. யாழ்பாணன் – பொது அகராதி 15. பெரிய மாட்டு வாகடம் 16. நச்சு மருத்துவம் 17. அகால மரண நூல் 18. உடல் தொழில் நூல் 19. தத்துவ விளக்க நூல் 20. இராவணன் பொது மருத்துவம் 21. இராவணன் சுகாதார மருத்துவம் 22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம் 23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000 24. இராவணன் பொருட்பண்பு நூல் 25. பாண்ட புதையல் முறைகள் – 600 26. இராவணன் வில்லை வாகடம் 27. இராவணன் மெழுகு வாகடம்
https://www.facebook.com/groups/siddhar.science
**"இராவணன் மேலது நீறு **
**எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு **
**பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு **
**தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி **
ஆலவாயான் திருநீறே"
-திருநீற்றுப்பதிகம்

சித்தர் அறிவியல்



சித்தர் அறிவியல்