Wednesday, February 26, 2020

வடலூருக்கு அடுத்ததாக துறையூரில் 40+ ஆண்டுகளாக அணையா அடுப்பு

துறையூர் ஓங்காரக்குடிலில் ஓர் அட்சயப்பாத்திரம்.




40+ ஆண்டுகளில் கோடிக் கணக்கானோர்க்கு
அன்னதானம், இலவசக்குடிநீர், மருத்துவம்...
ஓங்காரக்குடிலில் ஓர் அட்சயப் பாத்திரம்.

வடலூருக்கு அடுத்ததாக துறையூரில் 40+ ஆண்டுகளாக அணையா அடுப்பு

துறையூர் - இப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு சிறு ஊர். இதற்குமுன் வறட்சி மிகுந்ததாக, இயற்கை வளம் குன்றியிருந்த இந்த ஊர் இப்போது பசுமைப் போர்வை போர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்குக் காரணம், துறையூரில் அமைந்திருக்கும் ஓங்காரக் குடில்தான்! தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகளின் அரிய முயற்சியால் உருவானதுதான் ஓங்காரக் குடில். ‘நல்லார் ஒருவர் உளரேல்’ என்ற வாக்கியப்படி, அந்தப் பகுதியின் வறட்சியைப் போக்கி நீர்வளம் மிக்கதாக ஆக்கியவர் சுவாமிகள்தான். வடலூரிலுள்ள வள்ளலார் திருக்கோயி லில் நிரந்தரமாக ஒளிரும் தீபத்திலிருந்து ஒரு பொறியை எடுத்துவந்து இங்கே ஓங்காரக்குடிலில் தீபமாக ஏற்றி வைத்து, வடலூர் போலவே அனைத்து ஆன்மிக நிகழ்ச்சிகளையும் மேற்கொள்கிறார்கள். திருச்சி, துறையூரிலிருக்கும் இந்த ஓங்காரக் குடிலில், சுவாமிகள் தலைமையில், சமீபத்தில் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

24.01.2016 அன்று காலை 6.30 மணியளவில் சரவணஜோதி தரிசனமும் தொடர்ந்து மகான் இராமலிங்க சுவாமிகள் வகுத்த அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணமும் நடைபெற்றன. காலை 9 மணியளவில் குருநாதர் அன்பர்களுக்கும் பொது மக்களுக்கும் அருளாசி வழங்கினார். காலை 10 மணியளவில், பருவ மழை பெய்து நாடு செழித்திட வேண்டி முதுபெரும் தலைவன் முருகப்பெருமான், மகான் அகத்தியர், மகான் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் மற்றும் நவகோடி சித்தர்களை வணங்கும் சித்தர்கள் வழிபாடு நடைபெற்றது. பிறகு அன்பர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து குருநாதர் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் சிறப்பு அருளுரை வழங்கினார்கள். சித்திரா பௌர்ணமி, அகத்தியர் சித்தி தினம் ஆகியவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் இத்தலத்தில் சமீபத்திய தைப்பூசத் திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து குழுமிவிட்டார்கள். சிங்கப்பூர், லண்டனிலிருந்தெல்லாம் வந்திருந்து ஆர்வத்துடன் விழா நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்டார்கள். மலேசியாவிலிருந்து மட்டும் 200 பேர் வந்திருந்தார்கள் என்றால், இத்தலத்தின் மேன்மை புரியும்.

பசிப்பிணி போக்கும் அட்சயப் பாத்திரமாகவே இந்த அற்புதத் தலம் விளங்குகிறது என்றால் மிகையில்லை. ஆமாம், காலை, மதிய வேளைகளில் தினமும் சுமார் 25,000 பேருக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது - முழு சாப்பாடு! இதுதவிர, சுற்றியுள்ள ஏழு கிராமங்களைத் தத்தெடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு கிராமத்துக்கு சுடச்சுட அன்னதானம் அளிக்கப்படுகிறது. ‘மிச்சமில்லை, எச்சமில்லை’ என்பது இந்த அன்னதானத்தில் தாரக மந்திரமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, தயாரிக்கப்பட்ட அன்னம் அனைவருக்கும் மிச்சமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதேபோல உணவு பெற்றவர் சிறிதளவேனும் எச்சம் (மீதம்) வைத்தால், அவையும் வாயில்லா ஜீவன்களுக்கு ஆகாரமாகிறது. அதேபோல டன் கணக்கில் தயாராகும் சாதம் வடிக்கப்பட்டு அந்த உலைநீர் ஒரு கால்வாய் வழியாக வெளியே விடப்படுகிறது. இந்த நீர் பக்கெட்டுகளில் சேகரிக்கப்பட்டு பசு முதலான கால்நடைகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அடுப்பெரிக்க விறகு பயன்பட்டுவந்தது; இப்போது முற்றிலும் எரிவாயுதான். எச்சில்பட்ட பாத்திரங்களைப் படுசுத்தமாகக் கழுவி எடுக்க ‘டிஷ் வாஷர்’ இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. சமையலறையும் சுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழ்கிறது. குடிலின் ஆதரவில் இதுவரை 18,000 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் நலிந்த பலர் இந்த உதவியால் கண்ணொளி பெற்று உலகைப் பளிச்சென்று பார்த்து மகிழ்கிறார்கள். இங்கே மிகவும் எளிய முறையில் திருமணமும் நடத்திவைக்கப்படுகிறது. ஆமாம், மொத்தத்தில் பத்தே நிமிஷம்தான்! மணமகன்-மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் வலதுகை மணிக்கட்டில் காப்பு கட்டிக்கொள்கிறார்கள். ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி’ என்று வள்ளலார் மந்திரம் சொல்கிறார்கள்.

பிறகு மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டுகிறார். இருவரும் தத்தமது பெற்றோருக்கு பாதபூஜை செய்கிறார்கள். பிறகு சுவாமிகளிடம் சென்று ஆசி பெறுகிறார்கள். அவ்வளவு தான்! இந்தவகையில் இதுவரை சுமார் 3000 திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. பொதுவாக மடாதிபதிகளோ, ஓர் ஆன்மிக அமைப்பின் தலைவரான சுவாமிகளோ தன்னை வணங்கி ஆசிபெற வருபவர்களுக்கு விபூதி, குங்குமம், சந்தனம், புஷ்பம் அல்லது பழம் என்று தமது ஆசியுடன் அளிப்பார்கள். ஆனால், தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளோ அனைவருக்கும் சாக்லெட் அளிக்கிறார் - வாழ்க்கை இனிப்பாகவும், சுவையாகவும் (அந்த சாக்லெட் காகிதத்தைப் பிரிப்பதுபோன்ற சிறு பிரச்னை வந்தாலும், அதுவும் தன் அருளால் சீராகி) அமையவேண்டும் என்ற தன்னுடைய உளமார்ந்த அருளாசியுடன்!

நன்றி தினகரன் 25/02/16
- குடந்தை நடேசன்
ஓங்காரக்குடில் Ongarakudil
https://www.facebook.com/groups/ongarakudil
Aum Muruga ஓம் மு௫கா




https://www.facebook.com/groups/305917699863621




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3



||  Contact தொடர்பு  || || More Videos ||

🔥🔥அணையா🔥அடுப்பு 🔥🔥அன்னதானம்.

உயர்ந்த வழிபாடு யாதெனில் சீவர்களின் பசி போக்குதலே. பசித்தோர் முகம் பார்.

💞சீவதயவே இறைவன் விரும்பும் வழிபாடு💕

40+ ஆண்டுகளில் கோடிக் கணக்கானோர்க்கு
அன்னதானம், இலவசக்குடிநீர், மருத்துவம்...
ஓங்காரக்குடிலில் ஓர் அட்சயப் பாத்திரம்.
வடலூருக்கு அடுத்ததாக துறையூரில் 40+ ஆண்டுகளாக அணையா அடுப்புhttps://thamilsiddhas.blogspot.com/2020/02/40.html



ஓங்காரக்குடில் இது ஞானிகளின் கோவில்

ஆசான் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் உலகமக்களை கடவுளின் பிள்ளையாகப் பார்த்து அவர்களின் துன்பங்கள் துயரங்களிருந்து விடுவித்து ஞானிகளின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று அவ்வழியில் நம்மையும் அழைத்துச் சொல்கிறார்.

இங்கே சுவையான உணவு, மன ஆறுதல், தங்குவதற்கு இடம் கிடைக்கும். தினமும் மூன்று நேர உணவு கிடைக்கும்.தொண்டர்கள் மனதில் போட்டி, பொறாமை, வஞ்சனை இருக்காது. அப்படியிருப்பவர்கள் குடிலில் இருக்கவும் முடியாது. இங்கு சமையற்கலை நிபுணர்கள் எவரும் கிடையாது ஆனால் சுவையாகவும், தரமானதாகவும் உணவு இருக்கும். எப்படி? ஆசானின் ஆசி உள்ளவர்கள் எதை தொட்டாலும் துலங்கும். எல்லா அன்பர்களுக்கும் இங்கு தொண்டு செய்ய வாய்ப்பிருக்கு.

ஆசானை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் எவரும் சந்திக்கலாம். (காலை 11 மணி மற்றும் மதியம் 1 மணி) அதற்கென கட்டணங்கள் எதுவும் கிடையாது. நீங்கள் விரும்பினால் தொண்டுகள் செய்யலாம் அன்றி கட்டாயம் கிடையாது. ஓங்காரக்குடிலாசான் நம்மிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் தினமும் அரை மணி நேரமாவது ஞானிகளுக்கு பூசை செய்யுங்கள். உங்களின் வாழ்கையில் மாற்றங்களை காண்பீர்கள். உங்களால் முடிந்தால் ஓங்காரக்குடிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள். ஆசான் அரங்கமகா தேசிகர் திருவடியை இறுகப் பற்றுங்கள்.


 நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பசிப்பிணியை அகற்றுவதால் துறையூரைச் சுற்றியுள்ள எந்த ஊரிலும் பிச்சைக்காரர்கள் இல்லை. வழிப்பறி செய்வோர் இல்லை. வறுமை இல்லை. துறையூர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்பதை அங்கு வாழும் மக்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம். உங்களால் நேரடியாக ஏழைகளுக்கு உதவ முடியா விட்டால் ஓங்காரக்குடில் வழியாக உதவி செய்யுங்கள். ஒரு முறை இந்த புனித தலத்திற்கு விஜயம் செய்யுங்கள். மாற்றங்களைக் காண்பீர்கள்.

 ஓங்காரக்குடில் சாதி,மத,மொழி, இன பேதமின்றி அனைவருக்கும் தாயன்புடன் பசியாற்றும் இடம். இது ஓர் ஆன்மீகப்பயிற்சிக் கூடம். இங்கு ஞானம் கற்று கொடுப்பதில்லை. ஒங்காரக்குடில் உங்களுக்கு ஞானத்தை கற்று கொள்ள வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது. ஆனால் நாம் நாள்தோறும் பூஜிக்கும் மகான்கள் உங்களுக்கு ஞானத்தை அடைய உறுதுணையாய் இருப்பார்கள்.
*
 புலால் உணவால் வரும் கேடுகள்

மனித வர்க்கதிற்கு பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும், கனி வகைகளும், கீரை வகைகளும் இன்னும் பலவிதமான தாவர உணவுகளையும் மனித சமுதாயம் உயிர் வாழ இயற்கை தாய் தனது பெருங்கருணையினால் படைத்திருக்கிறார். இப்படிப்பட்ட இயற்கையின் கொடையாகிய தாவர உணவை விடுத்து ஆடு, கோழி, மீன் போன்ற மிருகாதி உணவுகளை சுவைக்காக அவைகளின் உயிரைக் கொன்று சாப்பிடக்கூடாது. உயிருள்ள மிருகங்களும், பறவைகளும், நீர்வாழ் உயிரினங்களும் கொல்லும்போது தம்மைக் காத்துக் கொள்ள பேசக்கூட தெரியாத வகையில் உள்ளது என்ற காரணத்தால் அவைகளைக் கொல்வது இயற்கைக்கு ஒவ்வாத செயலாகும்.

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
-திருக்குறள்- புலால் மறுத்தல்

தன் உடம்பை பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும். (நன்றி- மு. வரதராசனார்)

நாம் பெற்ற தேகம் எப்படியும் கண்டிப்பாக ஒருநாள் அழியத்தான் போகிறது. அப்படி அழியப்போகின்ற இந்த உடலை வளர்ப்பதற்கு தாவர உணவை தவிர்த்து பாதகமான ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்தாலும் காப்பாற்ற முடியாது. ஆகவே நிலையில்லாத தேகத்திற்காக மாமிச உணவை உண்டு அழியாத ஆன்மாவிற்கு பாவச்சுமையை ஏற்றி நரகத்தில் வீழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?

ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ள அன்பர்கள் இதுவரை இக்கருத்தை உணராமல் புசித்திருந்தாலும் இனியேனும் இதைப் புரிந்துகொண்டு கொடுமையான மாமிச உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

-ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.

*

நல்லவர்கள் பிறருடைய நன்மைக்காக வாழ்கின்றனர். உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாக என்னுடைய நன்மையை நான் பெறமுடியும். இதைத்தவிர வேறு வழி இல்லை.
* தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் அனைத்து வழிபாடுகளின் சாரம்.
* இறைவனுக்கு உதவுவதாக எப்போதும் சொல்லாதீர்கள். அவருக்காக பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம்.
* நாய்க்கு சோறு கொடுக்கும் போது, அந்த நாயையும் கடவுளாகக் கருதி வழிபடு. ஏனெனில், அந்த நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார், எல்லாவற்றிலும் இருக்கிறார்.
* ஏழைகளிடம் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுபவன் ஆகிறான். விக்ரகத்தில் சிவனை வழிபடுவது ஆரம்பநிலை தான்.

*

 ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள்.

"ஓம் அகத்தீசாய நம"


அகத்திய மாரஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேடமீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
அகத்தியரைத் தொண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.

-கொங்கணார் கடைக்காண்டம்.


*


அன்னதானம் செய்வது ஏன்;
--------------------------------------
அன்னதானம் என்பது உணவற்ற ஏழைகளுக்கும்,வரியோருக்கும் பசிக்கு உணவளிப்பதே அன்னதானம் ஆகும்.பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.நோய்களில் கடுமையானது பசி ஆகும்.பசி வந்தால் ஒருவன் தன்னிலை இழப்பான்.

மனித மனமே எதிலும் முழுமையாக திருப்தியடையாது.மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்ததிற்கு ஏங்கும்.பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது.

உலகத்தில் சிறந்த பரிகாரங்களுள் ஒன்று மனித மனத்தை குளிர்விப்பது ஆகும்.ஒருவருக்கு பொன்னாலும்,பணத்திலானாலும் திருப்தி படுத்த முடியாவிட்டாலும் நாம் உணவு அளிக்கும்போது அவர் மனதை திருப்திபடுத்திவிடலாம்.அதனால்தான் அன்னதானம் செய்வது மிகப்பெரிய தர்மம் ஆகும்.

*

உண்மையறிந்த சற்குருதான் இத்துறையில் வழிகாட்ட முடியும். மற்றவர் தான் அறிந்ததாகக் கூறுவதெல்லாம் உண்மையன்று. ஒருவர் சற்குருவாயும், சொற்குருவாயும் ஆக வேண்டுமெனில் அவர் உடல் இரகசியங்களையும், உயிர் இரகசியங்களையும் அறிந்தவராயும், இவற்றினை அறிவதற்கு ஜென்மத்தை கடைத்தேற்றித் தரவல்ல முற்றுப்பெற்ற ஞானிகளைப்பற்றி அறிந்து பூசிப்பவராகவும், தலைவனைப் பற்றி அறிந்து அவரது திருவடியை, திருவடிப்பெருமையை தான் உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்துபவராகவும் இருக்க வேண்டும்.

இதெல்லாவற்றையும் விட தலைவனே அக்குருவின் வாசியோடு வாசியாக கலந்து தலைவனும் குருவும் இரண்டற கலந்து எல்லா ஞானிகளின் ஆசியும், நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியும் பெற்றவராக இருக்க வேண்டும். இப்படி வாசி வசப்பட்டவர்களில் முதன்மையானவர் ஆசான் ஞானபண்டிதன் என்றும், சுப்ரமணியர் என்றும், ஞானத்தலைவன் என்றும், ஞானத்துறையினை உருவாக்கி அதன் தலைமையாகவும், தானறிந்த மரணமில்லா பெருவாழ்வையும், அதன் இரகசியத்தையும் மகான் அகத்தியருக்கும், அகத்தியர் மூலமாக நவகோடி சித்தரிஷி கணங்களுக்கும் அருளிச்செய்து, வாழையடி வாழையென ஒரு திருக்கூட்ட மரபினை தொடங்கி, இன்று வரையிலும் இனி எக்காலத்தும் அழிவற்ற ஒரு ஞானவர்க்கத்தை உருவாக்கி அதனை கட்டிக்காத்துவரும் மிகப்பெரும் ஆற்றல் கொண்டவரே முருகப்பெருமான்.

-ஓங்காரக்குடிலாசான்-

*



  காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.
-மகான் ரோமரிஷி

இந்த 14 ஞானிகள் அடங்கிய பாடலை காலையிலும் மாலையிலும் படித்து பாராயணம் செய்தும், பூசை செய்தும் வந்தால் ஞானிகளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

*
ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம!

சிறப்பறிவு -நாம் இந்த உலகத்திலிருந்து நம்முடைய பாவத்தையும், புண்ணியத்தையும் தவிர எதையும் எடுத்துப் போகமுடியாது. அது எல்லோருக்கும் தெரிந்த விடயம் அப்படியிருந்தும் நாம் பொருளைப் பெருக்கும் அளவிற்கு ஏன் புண்ணியத்தை பெருக்குவதில்லை.

அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அறியாமை அதாவது சிலர் பாவ, புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாமல் கிடைப்பதை அனுபவித்து விட்டு போவார்கள். சிலர் இளவயதில் நன்றாக கூத்தாடி விட்டு இறக்கும் தருவாயில் அட நாம் புண்ணியத்தை சேர்க்கவில்லையே என்று கவலைப்படுவார்கள். ஒரு சிலரே இளவயதிலேயே புண்ணியத்தை செய்வாரகள். இந்த அறியாமையை நீக்க ஞானிகளின் அருள் இருக்க வேண்டும்.

அதாவது நாம் வாழும் இந்த குறுகிய காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் எல்லோர் மனதிலும் இருக்க வேண்டும். பாவத்தை நீக்க கோபம், வஞ்சனை, பொறாமை, காமம் போன்ற குணக்கேடுகளை அழிக்க வேண்டும். நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழக வேண்டும். நல்ல சிந்தனை இருக்க வேண்டும். தினமும் ஞானிகளை பூசை செய்து அடியேன் பாவி என்னுடமுள்ள குணக்கேடுகளை நீக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டும்.





சிவராஜயோகி, பரமானந்த, சதாசிவ, சற்குரு, தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்களின் அறிவுரைகள்

ஞானியர்களின் திருவடிதான் உண்மையான ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார் ஓங்காரக்குடிலாசான். 131 சித்தர்கள் போற்றித் தொகுப்பை தினசரி காலையும், மாலையும் சொல்லி பூசை செய்து வந்தால் சிறப்பறிவை பெறலாம்.

வாரம் இருவருக்காவது அன்னதானம் செய்ய.வேண்டும். பசியுடன் வரும் ஏழைகளுக்கு உணவளிப்பது தான் அன்னதானம் ஆகும்.

புலால் மறுத்தல், உயிர்க்கொலை செய்யாதிருத்தல் வேண்டும். பிறர் உயிர்களிடத்தில் அன்பு உள்ளவனாகவும், பிற உயிருக்கு மதிப்பு கொடுப்பவனாகவும் இருக்கவேண்டும்.

நல்லவனாகவும். பண்புள்ளவனாகவும் இருக்கவேண்டும். தனது சினத்தை பிறருக்கு காட்டாது அடக்கிக் கொள்பவன் சிறந்த பண்பாளன் ஆவான்.

தனது குருவின் மீது உண்மையான பக்தி இருக்கவேண்டும்

பிறரை மகிழ்வித்து தானும் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது, பிறர் நம்மைக் கண்டு ஓதுங்குதல், பயந்து நடுங்குதல், வெறுப்பு காட்டுதல் எல்லாம் நமது தீவினையாகும்.

எளியவருடன் கோபத்தை காட்டக் கூடாது. (எளியவர் என்றால் குழந்தைகள், வயோதிபர்கள்) சிலபேர் யாருடனும் சண்டை போட்டுட்டு மனைவி, குழந்தைகளுக்கு அடிப்பார்கள், தாய், தந்தையருடன் சண்டை பிடிப்பார்கள் இது பாவச் செயலாகும்.

பிறர் பொருளை கவருதல், பேராசை, கோபம், செருக்கு, உண்மையறியாது வீண் பழி சுமத்தல், தீயவர்களின் நட்பு போன்ற குணக்கேடுகள் பாவச்செயலாகும்.

தேவைக்கு மேலதிகமாக இருந்தால் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்யலாம். உண்மையான ஆன்மீகம் இருக்கும் இடத்தில் ஆடம்பரம் இருக்காது. எந்தவொரு ஞானியும் அப்படி வாழ்ந்ததில்லை அப்படியிருந்தும் நாம் ஆடம்பரத்திற்குதான் ஆசைப்படுகிறோம்.

இது எல்லாம் ஒரே நாளில் நடந்து விடாது தினமும் ஞானிகளை பூசித்து நாமும் முழுமனதுடன் முயற்சி செய்யவேண்டும்.


அன்பின் முதிர்ச்சிதான் ஞானமாக மாறும். ஆகவே எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள். இதுதான் ஞானத்தின் வழிகோல் என்கிறார் ஓங்காரக்குடிலாசன் சிவராஜயோகி, பரமானந்த, சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ சுவாமிகள். 

ஒருவன் கடவுள்தன்மை அடையவேண்டுமாயின் அவரைச் சார்ந்தவர்கள் மனம் பதறும்படியாகவோ, அஞ்சும்படியாக நடக்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் கணவன் வெளியில் சென்றால் மனைவி எப்போது திரும்பி வருவார் என நினைக்க வேண்டும். பிள்ளைகள் தகப்பனை ஆவலுடன் எதிர்பார்க்க வேண்டும். அதைவிடுத்து மனைவி, பிள்ளைகள் பாவி வந்திட்டான் என்று நினைத்தால் நிச்சயம் அவன் வாழ்வில் முன்னேற்றம் கிடையாது. ஆகவே பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்ளவேண்டும். மனைவியும் குடும்பத்திலுள்ளோர் மனஅமைதி கெடும்படி நடக்ககூடாது.

நம்மைச் சார்ந்தவர்களிடம் முதலில் அன்பு செலுத்தவேண்டும். வீட்டிலுள்ளோர் மனம் மகிழும்படி நடந்துகொள்ளாமல், வெளியே தேனொழுக் பேசி எந்தப் பயனுமில்லை என்கிறார் ஆசான். நீங்கள் அன்பு செலுத்தியும் அவர்கள் உங்களை வெறுத்தால் பூசை செய்யும்போது ஞானிகளிடம் "என்னை கொடுமைக்காரன் என்று சொல்லாத அளவிற்கு அல்லது மற்றவர்கள் மனம் மகிழும்படி நான் நடந்து கொள்ள வேண்டும்" என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஆசான் மேலும் சொல்கிறார் பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் கடவுளால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம். அவர்கள் இதயத்தில் நம்மீது கசப்புணர்ச்சி இருக்ககூடாது. யாராக இருந்தாலும் நம்மை வாழ்த்த வேண்டுமேயன்றி தூற்றக்கூடாது.





மகான்களுடனான உறவு என்பது உங்களுக்கு ஒரு மறைமுகமான பாதுகாப்பு.அவர்களின் விசுவாசியாகுங்கள். நீங்களே வியக்கும்படி உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். இதை வார்த்தையால் விளங்க வைப்பது இலகுவான செயல் அல்ல அதை அனுபவித்துதான் பார்க்க வேண்டும்.
ஞானிகளை மனம் உருகப் பாடுங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும், நினைத்ததெல்லாம் நடக்கும். ஓங்காரக்குடிலுக்கு வாருங்கள்! மக்களுக்கு தொண்டு செய்யுங்கள்! மகத்தான ஆற்றல்களை பெறுவீர்கள்!

ஓம் ரெங்கராஜ தேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!




அன்பாய் இருப்பது அறம்
இனிமையாய்ப் பேசுவது அறம்
காடுஞ்சொற்களைத் தவிர்ப்பது அறம்
நல்லதையே நாடுவது அறம்
மனதில் குற்றமற்று இருப்பது அறம்
பொய்யைத் தவிர்ப்பது அறம்
சினத்தைத் தவிர்ப்பது அறம்
பொறாமை உணர்ச்சியைத் தவிர்ப்பது அறம்
பிறருக்குக் கெடுதல் செய்யாமை அறம்
பிறருடன் பகிரிந்து உண்பது அறம்
பிற உயிர்களைக் கொல்லாமை அறம்
தீமையில்லாத வழியில் பொருளீட்டுவது அறம்
இல்லற வாழ்வில் ஈடுபடுவது அறம்
அறநூல்களைக் கற்று அடக்கமுடன் இருப்பது அறம்
தூய துறவியரைப் பேணுவது அறம்
மானத்துடன் வாழ்வது அறம்
உயிருக்கு ஊக்கம் தருவது அறம்
அருள் வழியில் ஆண்டவனை உணர்த்துவது அறம்

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்


ஓங்காரக்குடிலில் உணவு உண்ணுகின்ற வாய்ப்பு கிடைத்தால் அது உணவாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கும்.

அடைந்திடுவார் குடில் உணவை உண்டமக்கள்
அகிலமதில் அரங்கர் ஆசி அமைந்ந உணவு
சோடைதனை அகற்றிவிடும் பிணிதீர்க்கும் மருந்து
சிறப்பான அமிர்தமாகும் ஆசியுண்டு.

-ஆசான் அகத்தீசர் ஆசி நூல்.




எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூால் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.




*


பூஜையில் கேட்க வேண்டிய வேண்டுகோள்:

ஓம் அகத்தீஸ்வரா உன் திருவடியை தினமும் பூஜித்து ஆசிபெற நினைக்கின்றேன். அதற்கு என் வினைகளின் காரணமாக சில தடைகள் வருகிறது. அந்த தடைகளை நீக்கி உன் நாமத்தை சொல்லி பூஜித்து உன் ஆசிபெற நீரே அருள்செய்ய வேண்டும்.
மனிதன் கடைத்தேறுவதற்கு (மோட்சலாபம்) அகத்தீசா! உன் திருவடி துணை அன்றி வேறு எந்த வகையாலும்; கடைத்தேற முடியாது என்பது எல்லா ஞானிகளின் கருத்தாகும். ஆகவே உன் திருவடியை போற்றி வணங்கி பூஜிக்க உன் ஆசி வேண்டும்.
எல்லா உயிர்களையும் என்னுயிர்போல் எண்ணுதலும் அவ்வுயிர்களுக்கு வரும் இடையூறுகளை கண்டு இரங்குதலும், அவ்வுயிர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பையும் தந்து எனை ஏற்று அருள்செய்ய வேண்டுகிறேன்.
பெண்களை தாயாக எண்ணும் பரிபக்குவம் தந்து அருள வேண்டுகிறேன்.
அகத்தீசா உன் திருவடிக்கு சேவை செய்து, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள அருள் செய்ய வேண்டுகிறேன்.
மேற்கண்ட கொள்கைகளை கடைபிடிக்க அடியேனுக்கு தாய்மை குணம் தந்து அருள் செய்ய வேண்டுகிறேன்.
*
"ஓம் அகத்தீசாய நம" என்பதே உண்மைத் தவமாகும்.
பூஜை செய்யசெய்யத்தான் பாவ புண்ணியத்தை உணர முடியும்.
பூஜை செய்து வருபவர்களை பாவம் செய்யாமல் ஆசான் அகத்தீசன் தடுத்தாட் கொள்வார்கள்.
பாவம்தான் தொடர்ந்து வரும் பிறவிக்கு காரணமாக அமையும். எனவே புண்ணியம் செய்வோம், பிறவியை ஒழிப்போம்.
*
 
 
கடவுளை அடைய கடைபிடிக்க வேண்டியவை:
மனித வர்க்கத்தை கடவுளின் பிள்ளைகளாக பார்க்க வேண்டும்.
மனித வர்க்கத்தை தன் சகோதரர்களாக எண்ண வேண்டும்.
பிறரிடம் மனம்விட்டு பேசி பழக வேண்டும்.
மற்றவரை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
மனித வர்க்கத்திற்கு தொண்டு செய்வதே உண்மையான சன்மார்க்கமாகும்.
 
*
 
ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள்.

*
 
 மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய குழைத்த பத்து

வேண்டத் தக்கது அறிவாய் நீ
வேண்ட முழுவதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாலுக்கு, அரியாய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவே உந்தன் விருப்பு அன்றே.

ஞானிகளிடம் எதை கேட்டாலும் தருவார்கள் அதனால் எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என்று கேட்டால் எல்லாவற்றையும் கொடுப்பார்கள்.
 
 நந்தி அகத்தியர்மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
கந்திடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார் கொங்கணர் காலாங்கி அன்பிற்
சிந்தில் அழுகண்ணர் அகப்பையர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பயைருஞ் சட்டைநாதர்
செந்தமிழ்ச் சீர்சித்தர் பதினெண்பேர் பாதம்
சிந்தையுணிச் சிரத்தணியாச் சேர்த்தி வாழ்வாம்.

மேற்கண்ட கவியின் சாரம் :
ஆசான் நந்தீசர், மகான் அகத்தீசர், திருமூலதேவர், மகான் புண்ணாக்கீசர், பிரம்மமுனிவர், புலத்தீசர், ஆசான் பூனைக்கண்ணார், மகான் இடைக்காடர், ஜோதி ரிஷியாகிய போகர், மகான் புலிப்பாணி சித்தர், அருள்மிகு கருவூரார், வினை தீர்க்கும் கொங்கண மகரிஷி, மகான் காலாங்கிநாதர், அழுகண்ண மகரிஷி, அகத்தின் இயல்பை அறிந்த அகப்பைச் சித்தர், பக்குவமுடைய பாம்பாட்டி சித்தர், தெளிவுமிகு தேரைய மகரிஷி, குணம் மிகுந்த குதம்பைச் சித்தர், தேகமென்னும் சட்டை நீக்கிய சட்டை முனிவர் மேற்கண்ட முத்தமிழ் வித்தகர்களாகிய பதினெட்டு சித்தர்களும் மகா அருள் வல்லவர்கள் ஆவார்கள். அவர்களை தினமும் வரிசைப்படுத்தி நாமஜெபம் செய்து வந்தால் பலபிறவிகளில் "யான்" என்ற கர்வத்தாலும், பொருள் வளமென்னும் செருக்காலும், ஆள்படை அகந்தையாலும் மற்றும் உத்யோக திமிராலும், பொல்லாத காமதேகத்தின் கொடுமையாலும், கொடிய சினத்தாலும் மேலும் புலால் உண்ணுதல், உயிர்க்கொலை செய்தல் போன்ற கொடிய பாவத்தாலும் வந்த கேடுகள் அத்தனையும், மேற்கண்ட ஞானிகளின் நாமத்தை சொல்லி வந்தால் பாவங்கள் எல்லாம் பொடிப்பொடியாகிவிடும்.
மேலும் சிறப்பறிவு உண்டாகும். "நாம் யார்?" "நமது பிறவி என்ன?" "நமது பிறவியின் தன்மை என்ன?" "இந்த பிறப்பால் அடையக்கூடிய லாபநஷ்டமென்ன?" என்பதை அறிய முடியும். நஷ்டத்தை நீக்கி ஆன்ம லாபம் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்து வருகின்ற பிறவிக்கு அறியாமைதான் காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆன்ம இயக்கமும், அதை தாங்குகின்ற உடம்பு பற்றியும், அந்த உடம்பால் வருகின்ற நன்மை, தீமைகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.
உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல). ஆகவே, மேற்கண்ட பதினெட்டு மகான்களை உருகி தியானம் செய்தால், நாம் ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்ளலாம். எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!

ஓம் சிவாய அகத்தீசாய நம

ஓம் சிவாய நந்தீசாய நம

ஓம் சிவாய திருமூலதேவாய நம

ஓம் சிவாய கருவூர் தேவாய நம

ஓம் சிவாய பதஞ்சலி தேவாய நம

ஓம் சிவாய இராமலிங்க தேவாய நம
 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க








நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 
bbb3



No comments:

Post a Comment