Wednesday, February 12, 2020

தஞ்சைக் கோவிலைக் கட்டியது யார்..?!

*தஞ்சைப் பெரிய கோயிலை  கட்டியது யார்..?!* என்றால்..... இராசராசசோழன் என்று சொல்லிவிடுவர். 

அக்கோயிலை வடிவமைப்பிலும் கருவரையில் பெரிய இலிங்கத்தைச் சமன் செய்வதிலும் முக்கியமான பணியைச் செய்தவர் ஒரு *சித்தர் மகான் கருவூரார்* என்பது பலருக்குத் தெரியாது. 

கருவூராரின் சமாதி திருக்கோயில் , பெரிய கோயிலுக்குப் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

இவர்தான் இராச இராச சோழன் பேரரசனின் குருவாகச் செயல்பட்டவர்; அவரை வழிநடத்தியவர்.

மாமன்னர் இராசராசசோழனின் அரசகுரு, பிறவிப் பெருங்கடல் கடந்து, பிறப்பு-இறப்பெனும் கர்மச்சக்கரத்தை வென்று முற்றுப்பெற்ற சித்தர் மகான் கருவூர்ச்சித்தர். தஞ்சைப் பெருங்கோவிலை வடிவமைத்தவர் எனக் கருதப்படும் தமிழ்ச்சித்தர்.

*சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்.*

மருத்துவம், அறிவியில், வானவியல், விஞ்ஞானம் என்று இவர்கள் தொடாத இடமே கிடையாது.

சித்தர் மருத்துவம், சித்தர் வர்மக்கலை, சித்தர் நூல்கள், சித்தர் பாடல்கள், சித்தர் வாக்குகள், சித்தரியல் ஒலி/ஒளி நாடாக்கள், ஓலைச்சுவடிகள், சீவநாதச் சுவடிகள் மற்றும் பல சித்தரியல் தகவல்களைப் பெற இணையுங்கள்.

*ஓம் கருவூரார் சித்தர் திருவடிகள் போற்றி!*🙏💐

No comments:

Post a Comment