Saturday, November 19, 2016

மகாசி்த்தர் முத்தூர் அகத்தியர்



தமிழ்க் கலைகள் அறுபத்தி நான்கும் அகத்தியரால் போதிக்கப்பட்டவையாகும். அகத்தியத் தாபனம் பல்கலைகளையும் போதித்து வந்துள்ளது. திருமங்கலாய் தொடங்கி முத்தூர் துறை மகாவலி வரை மகாவலி ஆற்றுக்கு கிழக்கே கங்கை வெளி பரந்து காணப்பட்டது. இன்று கங்குவேலி என்று பெயர் குறுகிவிட்டது. உலகில் முதலில் நாகரீகம் தோன்றியது இங்கே தான் என முத்தூர் அகத்தியர் என்ற ஆய்வு நூலில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குவேலியிலுள்ள அகத்தியத் தாபனம் அழிந்த பின்னரும், வழிபாட்டுத் தலமாக சிவலிங்கம் காட்சியளித்தது. அத்துடன் அகத்தியத் தாபனத்தின் வாயில் படிகள், சந்திரவட்டக்கல் உட்பட கல்வெட்டுக்கள் என்பன போர் முடிவடைந்த பின்னர் சமாதானச் சூழல் நிலவுகிறது எனக் கூறப்படும் காலத்தில் தான் சேதமாக்கப்பட்டிருக்கின்றன.

ஈழ நாட்டில் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள், நூல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் தமிழரின் வரலாற்றுக் காலத்துக்கு இவை முற்பட்டவையாகும். தமிழ்ப் பேரவைக்கால நூல்களில் முத்தூர் அகத்தியர் என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்தியுள்ளமையை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அகத்தியர் ஈழத்தில் திருகோணமலையில் பல்லாண்டுகள் காலம் வாழ்ந்துள்ளார் என்பதை அவர் பணிகளாலும், நூல்களாலும் அறிய முடிகின்றது. திருமங்கலாய்ச் சிவன்கோயில், அகத்தியத் தாபனம், திருக்கரசைச் சிவன் கோயில் என்பவற்றை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதன் மூலம் திருகோணமலையின் தமிழரின் வரலாறு, வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்டது என் பதை உறுதி செய்ய முடிகின்றது.

அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி(திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகத்தியத் தாபனம் அமைந்திருக்கிறது.

அகத்தியத் தாபனம் தொடர்பாக 2001 ஆம் ஆண்டில் பேரறிஞர்.க. பாலசுப்பிரமணியம் அவர்களால் வெளியிட்டப்பட்ட ஆய்வு நூல் மகாசி்த்தர் முத்தூர் அகத்தியர் என்பதாகும்.

வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அகத்தியத் தாபனம் தொடர்புடைய புகைப்படங்கள் சில மகாசி்த்தர் முத்தூர் அகத்தியர் என்னும் ஆய்வு நூலில் இருந்து.

மகாசி்த்தர் முத்தூர் அகத்தியர் ஆய்வு நூல்
-பேரறிஞர்.க. பாலசுப்பிரமணியம்

நூலைப் பெற்றுக்கொள்ள
http://www.noolaham.org/wiki/index.php/மகாசித்தர்_முத்தூர்_அகத்தியர்







சித்தர் அறிவியல்




No comments:

Post a Comment