முருகனை உளமார உள்ளன்போடு வணங்க வணங்க, வணங்கின அவர் தம்முள்ளே உண்மை வழிபாடு தோன்றிடத் துவங்கும். அதுவரை அவன் இருந்த புறச்சமயச் சடங்குகள் எல்லாம் பக்தியை தருமே அன்றி அதன்மூலம் இறையருளை பெற முடியாது என்று உணர்வான். ஆதலின் இறையருளை பெற்றிட வேண்டுமாயின் அந்தரங்கத்திலே முருகநாமம் சொல்லியும் அந்தரங்கத்திலே மனதுள்ளேயே முருகன் திருவடியை பூசித்தும் முருகன் பெருமைகளை சதா எண்ணிக் கொண்டும் பிறருக்கு சொல்லியும்செய்துவர செய்துவர அவர்தம் உள்ளத்தே முருகன் அருள் கூடிட துவங்கி உண்மை ஆன்மீகம் அறிந்து உண்மை நெறிதனிலே கொண்டு செல்லும் முருகனருளால் நல்லோர் தொடர்புகளை மிகுந்து பெற்று நன்னெறி சென்று வாழ்வான்.
https://www.facebook.com/
முருகன் நாமம்தனை செபிக்கச் செபிக்க ஜீவதயவு மனதினுள்ளே பெருகி எல்லா ஜீவனையும் தம்முயிர்போல் எண்ணி வாழ்தலே அந்த ஞானபண்டிதனின் அருளைப்பெற உறுதுணையாய் இருக்கும் என்றே உணர்ந்து ஜீவதயவினை தமது உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து கடைத்தேறுவான்.
ஜீவதயவு இல்லையேல்
நம்முள் முருகன் நாமம் இல்லை
ஜீவதயவு இல்லையேல்
முருகன் அருள் இல்லை
ஜீவதயவு இல்லையேல்
பக்தி இல்லை
ஜீவதயவு இல்லையேல்
எத்துணை வழிபாடு செய்தும் பயனில்லை
ஜீவதயவு இல்லையேல்
எத்துணை புண்ணியம் செய்தும் பயனில்லை
ஜீவதயவு இல்லையேல்
இன்னுயிர் நீத்து தியாகம் செய்தும் பயனில்லை
ஜீவதயவு இல்லையேல்
உலகம் போற்ற வாழ்ந்தும் பயனில்லை
என்றெல்லாம் உணர்ந்து
ஜீவகாருண்ய அருட்ஜோதி ஆறுமுகனை
மனதினுள் வைத்து அளவிலாது
அன்பு செலுத்தி முருகனை வழிபட்டு
முருகனை ஜீவதயவே வடிவான
அருட்பெரும் சோதியாக காணுகின்ற
அற்புத நிலையையும் அடைவான் அந்தப் பக்தன்.
https://www.facebook.com/
சண்முக துய்யமணியாம் சண்முகனை போற்றுவோம்
அவன் முகம் சைவமணியானதை உள்ளுணர்வால் உணர்வோம்
சைவமே முருகனாய் தோன்றி ஜீவதயவே வடிவாய் உள்ளதையும் உணர்வோம்.
-அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்
https://www.facebook.com/
ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
Aum Muruga ஓம் மு௫கா
No comments:
Post a Comment