"தெள்ளத் தெளிந்தார்க்கு
சீவன் சிவலிங்கம்"
-ஆசான் #திருமூலர்
மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்து
- ஆசான் திருமூலர்
(திருமந்திரம் 1726)
மனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கமாகவும், அதுவே சிதம்பரமாகவும், மேலும் அதுவே சதாசிவமாகவும் மற்றும் திருக்கூத்துமாகவும் உள்ளது. இதில் திருக்கூத்து என்பது சுழிமுனைக்கதவு திறந்தபின் புருவமத்தியாகிய சுழிமுனையில் சந்திர ஒளி, சூரிய ஒளி, வன்னியாகிய அக்னிஒளி முச்சுடர்களும் மாறிமாறி இயங்கும். இதுவே திருநடனம் அல்லது திருக்கூத்து எனப்படும்.
இவ்வரிய வாய்ப்பு மனிதருக்கு இருந்தபோதிலும் புண்ணியபலமும், குருவருளும், இறையருளும் இல்லாததால் மனிதர்கள் இந்த வாய்ப்பை அடையமுடியவில்லை.
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.
- திருமந்திரம் - கேடு கண்டிரங்கல் - கவி எண் 2090
"பாலுள் நெய் கலந்தவாறு
பாவிகாள் அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார்
அகத்துளே இருக்கவே,
காலன் என்று சொல்லுவீர்!
கனாவிலும் அதில்லையே!!"
-ஆசான் #சிவவாக்கியார்
கெட்டுப்போகக்கூடிய பாலுக்குள்
கெடாத நெய் இருப்பதுபோல்
அழியக்கூடிய உடம்பில்
என்றுமழியாத சிவக்கூறாகிய
உயிர் இருக்கின்றது.
https://www.facebook.com/groups/ongarakudil
உயிர்கள் அனைத்தும் சிவத்தின் கூறுகள்
https://www.youtube.com/watch?v=ZFbvPrqhwuw
யார் கடவுள்..?!
மாலும் மனிதன்
மலரோனும் தான் மனிதன்
ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன்
சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார்
கற்றுமறிந்தார் இல்லை
- மகான் ஔவையார்
மேலும் வாசிக்க
https://www.facebook.com/
ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
Aum Muruga ஓம் மு௫கா
.
Aum Muruga ஓம் மு௫கா
. Aum Muruga ஓம் முருகா
No comments:
Post a Comment