Sunday, May 10, 2020

அருட்பெரும் கடவுள் ஞானத் தலைவன் முருகப்பெருமானே ArutPerumJothi

*அருட்பெரும் கடவுள் ஞானத் தலைவன் முருகப்பெருமானே.*

வள்ளலார் பெருமானார் அவர் பெற்ற இயலை அவர் காலத்திலேயே திரித்து, வழக்குத் தொடர்ந்தார்கள். ஈற்றில் அவரே கடை விரித்தோம் கொள்வார் யாருமில்லை எனச் சோதியில் இரண்டறக் கலந்து விட்டார்கள். அவர் வழிபடப் பயன்பட்ட மொழி முருகப் பெருமானின் தமிழ்மொழி, அருட்பெரும் ஆண்டவர் முருகப் பெருமானே என்பதை சன்மார்க்கிகளே உணரவில்லை. சரவணசோதியே அருட்பெருஞ் சோதி. ஞானத்திற்கு தலைவன் ஞான பண்டிதரான முருகப் பெருமானே என்பதை உணர வேண்டும்.
"வேல் பிடித்தருள் வள்ளலே யான் சதுர்வேதமும் காணாநின் கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ.!!"
-ஆசான் #வள்ளலார்
"சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர் தேவர்கள் தேவரே வாரும் மூவர் முதல்வரே வாரும்." "தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர் சுப்பிரமணியரே வாரும் வைப்பின் அணியரே வாரும்." "வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு வாசியில் இங்கே வருவாண்டி ஆசில் கருணை யுருவாண்டி - அவன் அற்புதத் தாண்மலர் ஏத்துங்கடி." "உலகம் பரவும் ஒருமுதல்வா தெய்வத் திலகம் திகழிடத்துத் தேவே - இலகுதிருப் புள்ளிருக்கு வேளூர்ப் புனிதா அடியேன்றன் உள்ளிருக்கும் துன்பை ஒழி." "உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக் கலகம் தருசூர்க் கிளைகளைந்த
கதிர்வேல் அரசே கவின்தருசீர்த் திலகம் திகழ்வாள் நுதற்பரையின் செல்வப் புதல்வா திறல் அதனால் இலகும் கலப மயிற் பரிமேல் ஏறும் பரிசென் இயம்புகவே." "உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாகி இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் தானே எனக்குத் தனித்து." "அலகறியாப் பெருமையரே அணையவாரீர் அற்புதப்பொற் சோதியரே அணையவாரீர் இலகுசபா பதியவரே அணையவாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்,
அணைய வாரீர்"
-ஆசான் #வள்ளலார்.
தமிழே முருகப்பெருமான் அருள சித்தர்கள், குறிப்பாக அகத்தியப்பெருமான் இலக்கணம் வகுத்து வளர்தத மொழி . சித்தர்களைக் குறை சொல்வது முருகப்பெருமானைக் குறை சொல்வதற்குச் சமம். அதுவே தமிழை நிந்திப்பதற்கு சமம். அதை வள்ளல்பெருமானார் ஏற்கமாட்டார்.
ஓம் எண்ணிலாக்கோடி சித்த, ரிஷி, கணங்கள் திருவடிகள் போற்றி நன்றி! -Nàthàn கண்ணன் Suryà 10/07/2015

*சித்தர் அறிவியல்*




No comments:

Post a Comment