Monday, May 25, 2020

திருப்பட்டூர் சித்தபெருமான் பதஞ்சலியார் ஜீவசமாதி!

திருப்பட்டூர் சித்தபெருமான் பதஞ்சலியார் ஜீவசமாதி!

திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில்
இக்கோயில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள பெருமாள் சிவன் கோயிலாகும். இவ்வூர் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்டது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பிரம்மநாயகி
https://www.facebook.com/groups/305917699863621
புராணங்கள் கூற்றுப்படி கடவுள் பிரம்மா தான் இவ்வுலகை உருவாக்கியவர். முழுமுதல் கடவுளாகிய நான் தான் சிவனை விட பெரியவன் என்ற அகங்காரம் பிரம்மாவிடம் வந்தது. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தை கொய்து அவரது படைத்தல் அதிகாரத்தை நீக்கி சாபம் இட்டார். இச்சாபத்தில் இருந்து விடுபட சிவனை வேண்டி பிரம்மா சிவாலயங்களுக்கு யாத்திரையை தொடங்கினார். அப் புனித யாத்திரையின் போது இத்தலத்திற்கு வந்து 12 சிவ லிங்ககளை பிரதிஷ்டை செய்து பிரம்மபுரீசுரவரை வழிப்பட்டார். பிரம்மாவின் வழிபாட்டால் மகிழ்ந்த சிவன் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று மகிழ மரத்தின் கிழ் அவருக்கு தரிசனம் கொடுத்து சாப விமோசனம் கொடுத்தார். பிரம்மா அவரின் படைத்தல் அதிகாரத்தை திரும்பப் பெற்றார். சிவன் பிரம்மாவை வாழ்த்தி அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உருவாக்கி அருளினார். மேலும் சிவன் இத்தலத்தில் பிரம்மாவின் தலையெழுத்து திரும்ப எழுதப்பட்டதால், பிரம்மாவை தரிசிக்கும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் படி பிரம்மாவிற்கு உபதேசம் செய்தார். இதனால் திருப்பட்டுர் பிரம்மாவை தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை.

இத்தலத்தின் வளாகத்தில் அமைந்துள்ள கயிலாசநாதர் திருக்கோயில் காலத்தால் முற்பட்ட கற்றளியாகும். அழகே உருவான இக்கோயிலின் ஆதிதளம் காந்தார அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆதிதளத்தின் ஒவ்வொரு சுவரும் ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்பட்டு, ஒடுக்கங்களுடன் அமைந்துள்ளன.

பிரம்ம தீர்த்தம் - அம்மனின் ஆலயத்தின் வடப்புறம் உள்ளது. நான்கு அழகிய படித்துறைகளயும், வற்றாத நன்னீரையும் கொண்டது, இத்தீர்த்ததினால் பிரம்மன் அருள்மிகு ஈஸ்வரனை அர்ச்சித்ததால் பிரம்மதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. பகுள தீர்த்தம் - ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் சோலைகளுக்கு நடுவே நான்கு படித்துறைகளுடன் கூடிய குளம் ஆகும்.

*சித்தர் அறிவியல்*






பயனுள்ள பல சித்தர்களின் தகவல்களை பெற எங்களது முகநூல் பக்கமான *ஆதி அகத்தியர் Aathi Agathiar* விருப்பம் தெரிவியுங்கள்...

*சித்தர் அறிவியல்*




























































No comments:

Post a Comment