Wednesday, May 13, 2020

சங்கத்தமிழ் மூன்றும் தா!!!

பிள்ளையார் துதி!! சங்கத்தமிழ் மூன்றும் தா!!!

கணபதி துதி:
"பாலும், தெளி தேனும்,
பாகும், பருப்பும்
இவை நான்கும் கலந்து
உனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்க
கரிமுகத்து தூமணியே!
நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா!!"
பொருள்:-
பாலையும், கலப்படம் அற்ற தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும் வேக வைத்த பருப்பையும் ஒரு சுவையான கலவையாக உனக்கு நான் நைவேத்தியமாக அர்ப்பணிக்கிறேன்.

கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க (துதிக்கையுடைய) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூமணியே (தூய்மையான மணி போன்ற பொக்கிஷமே) நீ எனக்கு இயல், இசை, நாடகம் என முப்பரிமாணத்தில் மிளிரும் தமிழ் மொழியை அருள்வாயாக…

சித்தர் அறிவியல்

சித்தர் அறிவியல்

No comments:

Post a Comment