ஈழத்தில் திருகோணமலையில் புராதன திருமங்களாய் சிவன் கோவில்
ஈழத்தில் திருகோணமலையில் மூதூர் திருமங்களாய் சிவன் கோவில் (மிக புராதன சிவன் கோவில்) மிக காடு மண்டிய நிலையில் இருந்தது கவனத்துக்கு வந்துள்ளது.
இந்த இடம் கிளிவெட்டி பிரதேசத்தில் இருந்து 10 மைல் தொலைவில் லிங்கபுரம் என்ற காட்டு பகுதியில் உள்ளது. முன்பு இந்த இடம் திருமங்களாய் என அழைக்கப்பட்டது. தமிழர்கள் செறிவாய் வாழ்ந்த இந்த பகுதி ,1964 இந்த பின்னர் உருவான கலகங்களால் அடர்ந்த வன பகுதியாய் மாறி காடுகளானது.
திருகோணமலை வரலாற்றை கூறும் திருக்கரசை புராணம் என்ற வரலாற்று நூலில் திருமங்களாய் பற்றி பல குறிப்புகள் உள்ளன.
அண்மைய ஆய்வுகளில் இங்கு இங்கு 5 மிக பழமையான கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 3 கல்வெட்டுகள் கி.பி 10,11 நூற்றாண்டுக்கு உரியவையும் ,மீதி ரெண்டு 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் கருதப்படுகிறது.
இப் பிரதேச மக்கள் இவ்வாலயத்தை மீள கட்டியமைக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
இப் பிரதேச மக்கள் இவ்வாலயத்தை மீள கட்டியமைக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
தமிழார்வலர்கள் இதற்கான முயற்சியை எடுப்பது சிறந்தது . மேலும் இந்த ஆலயம் பழமை இழக்காது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு சொல்லி கொண்டு நிற்கட்டும் .
No comments:
Post a Comment