Sunday, May 14, 2017

தர்மம் பற்றி அகத்தியப்பெருமான்

bbb3

*அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள்வாக்கு*'


தர்மம் தருவதே தருமம். தர்மத்தில் யார் தருகிறார், யார் பெறுகிறார் என்பதே உயிரப்பா. தன்னிலை உணர்ந்து, தானாய் தருவதே தருமம். தருமமோ தர்மம். பிறர் நிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம். தருமமோ தர்மம். தர்மம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாது செய்வதே, தருமம். தர்மத்தால் வரும் பயன் எண்ணா செய்வதே தருமம். பேதங்கள் நோக்காது செய்வதே தருமம். உறவு, நட்பு, பகை நோக்காது செய்வதே தர்மம். அப்பனே தருமம், அன்னைக்கு அன்னையே தருமம். அவர்தம் பாதம் பணிந்து கடமை ஆற்றுதலே தர்மம்.

அகத்தில் சாந்தம் பொங்க, வதனத்தில் சாந்தம் தவழ செய்வதே தர்மம். அதனை உணர்ந்து, உணர்ந்து உள்ளம் பூரித்து செய்வதே தர்மம். தர்மத்தை தடுக்காதிருப்பதே தர்மம். பற்றில்லா செய்வதே தர்மம். அறப்பண்போடு செய்வதே தர்மம். தன்னலம் விட்டும், பிறர் நலம் பேணும் உயர் தன்மையே தருமம். தன் இனமில்லா, பிற உயிர்களுக்கும் செய்வதே தருமம். தன்னை அறிந்து தனக்குள் இறையை அறிந்து வாழ முயல்வதே தருமம். கர்மம் குறைப்பதே தருமம். சட்டம் உரைப்பதே தருமம். நாட்டம் தவிர்ப்பதே தர்மம். இட்டம் (இஷ்டம்) பலிப்பதே தருமம். இட்டம் (இஷ்டம்) அடைவதே தருமம். இறை சட்டம் மதிப்பதே தருமம். நல்திட்டம் காண்பதே தருமம். மிகு உணர்வினை கட்டுப்படுத்துவதே தர்மம். இலகுவாக வாழ்வை மாற்றித்தருவதே தர்மம். தன் நிலை தாண்டி மேல் உயரவைப்பதே தர்மம்.

தன் நிலைக்கு மேல் உயர்த்துவதே தர்மம். தன்னையறிய உதவும் தர்மம். தன்னலமில்லா பொதுநலத்தை வளர்ப்பதே, தர்மம். தன்னை, தன்னிலிருந்து வேறாகப் பிரித்துக் காட்டுவது தர்மம். உறவு தாண்டிச் செய்வதே தர்மம். உளைச்சலின்றி செய்வதே தர்மம். உயிர் காக்க உதவுவது தர்மம். உள்ளன்போடு செய்வது தர்மம். தன்னை, தனக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதே தர்மம். இதுபோல் தொடர்ந்து இவ்வழியில் வந்து செய்யும் தருமத்தால் குறையும் கருமம். இதனை உணர்ந்தாலும், உணராவிட்டாலும் இவ்வாறு செய்வதே தருமம். தினம் நாளும் செய்வதை வகுத்து, வகுத்து, பிரித்துப் பிரித்து பார்த்து, அதில் உள்ள தன்மையை நுட்பத்தை அறிந்து ஏற்க முயல்வதே தருமம். ஆசிகள்!

via சித்தன் அருள்

No comments:

Post a Comment