பரமாணு: பிரிக்க முடியாத அணு..!
சித்தர்கள் The Ascended Masters
"அணுவின் அணுவினை
ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை
ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை
அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை
அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்-
"குலவு பேரண்டப் பகுதியோர்
அனந்த கோடி கோடிகளும்
ஆங்காங்கே நிலவிய
பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேலிடத்தும்
மெய்யறி வானந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது
அதுவதில் விளங்கும்
அருட்பொருஞ்சோதி
என் அரசே"
-ஆசான் வள்ளலார்-
"இருக்கில் இருக்கம்
எண்ணிலா கோடி
இருக்கின்ற மூலத்தூர்
அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும்
ஆரடில் வீச
உருக்கிய ரோமம்
ஒளி விடுந்தானே"
-ஆசான் திருமூலர்-
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக் கோடி அண்டங்கள், பேரண்டங்கள், இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூலகாரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணுசக்கி. ஒரணுவை ஆயிரங் கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றல் கொண்ட சக்தியையே சித்தர்களும் ஞானிகளும் என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. அதையே பரமாத்மா என்கின்றனர்.
அதே மூல அணுவின் ஆற்றலே ஒவ்வொரு சீவராசிகளின் இயக்கங்களுக்கும் காரணமாக விளங்குவதால் சீவாத்மா என்றனர். ஆன்மா என்பது அளப்பரிய ஆற்றல் மிக்கது. அந்த ஆற்றல் நம்மிடம் உள்ளது. அதன் சக்தியை, ஆற்றலை உணர்ந்தவர்களால் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அந்த ஆற்றலை உணர்ந்தவர்களே சித்தர்கள். நம்மிடம் உள்ள மகத்துவம் வாய்ந்த ஆற்றல்மிகு ஆன்மாவின் சக்தியை உணர்ந்து, பிறவிப்பிணியைப் போக்கி, அட்டமா சித்திகளையும் பெற்று, மரணமிலாப் பேரின்ப வாழ்வைப் பெறுதலே ஆத்மஞானமாகும். இதுவே, சித்தர்கள் வகுத்த சாகாக்கல்வியும் ஆகும்.
கண்ணுக்குத் தெரியாத அணு எவ்வளவு சக்தி வாய்ந்ததென்பது நமக்குத் தெரியும். அந்த அணுவினை ஆயிரங் கூறிட்டால்தான் பரமாணு என்கிற ஆதிபிரானைக் காணலாம் என்கிறார்கள் சித்தர்கள் . அந்த அற்புதசக்தியின் ஒளி ஆயரங்கோடிச் சூரியர்களுக்கு ஒப்பானதென்பர் சித்தர். அந்த அற்புதசக்தியைச் சுழிமுனையில் காணும்போது முற்றுப்பெறற முழுமையான அறிவாகிய பேரறிவையும், முழுமையான அனுபவ இன்பமாகிய பேரின்பத்தையும் பெறுதற்கரிய பிறப்பான மானிடரனைவரும் பெறலாம். இவையனைத்தையும் பெற்றுப் பல யுகங்கள் தாண்டியும் இன்றும் வாழ்கின்றனர் சித்தர்கள்.
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
bbb3
No comments:
Post a Comment