"நீர்க்குமிழி வாழ்வைநம்பி
நிச்சயமென் றேயெண்ணிப்
பாக்களவாம் அன்னம்
பசித்தோர்க் களியாமல்
போர்க்குளெம தூதன்
பிடித்திழுக்கு மப்போது
ஆர்ப்படுவா ரென்றே
யறிந்திலையே நெஞ்சமே."
எனக் கூறுகிறார் மகான் பட்டினத்தார்.
நீரின் அடியில் தோன்றிய நீர்குமிழியானது பார்க்க அழகாய் இருக்கும் ஆனால் நீரின் மேல் வந்தவுடன் வடிவத்தை இழந்துவிடும். அதுபோல மனித வாழ்வும் குறுகியகாலமே கொண்டதால் வாழ்வை நிலையென நம்பி பொருள் சேர்ப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு வாழக்கூடாது. செல்வத்தால் உண்டான பந்தங்கள் அச்செல்வம் உள்ளவரை தான் அதனால் தான் செல்வம் உள்ளபோதே தான தருமங்கள் செய்தால் அது உங்களை காப்பாற்றும். பசித்து வருவோருக்கு உணவளிக்காது யமதூதன் பிடித்து இழுக்கும்போது கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை.
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
bbb3
No comments:
Post a Comment