Wednesday, July 12, 2017

பிறவிப்பெருங்கடல் நீந்துவது எப்படி..?!



#பிறவிப்பெருங்கடல்

சித்தர்கள் The Ascended Masters

இறை என்பது பெருஞ்சோதி. அப்பெருஞ்சோதியை பரஞ்சோதி, சிவசோதி, அருட்பெருஞ்சோதி, சரவணசோதி எனப் பலபெயர் கொண்டு அழைக்கிறோம். அந்தச் சோதியின் சிறுகூறே அனைத்து சீவர்களும். நாம் சீவசோதி / ஆன்மசோதி. சிவசோதியிலிருந்து பிரிந்த ஆன்மசோதி வினைகள் செய்வதன் மூலம் மும்மலச்சிறையில் அகப்பட்டு தான் யார் என்பதை அறியும் ஆற்றலை இழக்கின்றது. தொடர் வினைகளால் பலவகைப் பிறப்புக்களை எடுக்கின்றது. மனிதப்பிறப்பை எடுக்கும்போது மீண்டும் சிவசோதியில் கலப்பதற்கான வாய்ப்பு முற்றுப்பெற்ற குருமுகாந்திரமாக அளிக்கப்படுகின்றது. வீடுபேறு அடைவதற்கான உபாயம் வழங்கப்படுகின்றது. இதைச் சரியாகப் பயன்படுத்தும் சீவர்கள் மீண்டும் சிவத்தை அடைகின்றன. மற்றவை சவமாக வீழ்ந்து பிறவிப்பெருங்கடலில் வீழ்ந்து துன்புறுகின்றன.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.(குறள் 10)

Translation:
They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach
the shore of being's mighty main.

Explanation:
None can swim the great sea of births but those who are united to the
feet of God.

மு.வ உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

பரிமேலழகர் உரை:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.).

இறைவனடி சேராது ஞானமேது..?!

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.(குறள் 10)
https://youtu.be/7OI17B4jjkw

No comments:

Post a Comment