சித்தர்கள் The Ascended Masters
சிவத்தை அடைய ஞானத்தலைவனாகிய முருகப்பெருமானை அல்லது அவர் சீடர்களான முற்றுப்பெற்ற மெஞ்ஞானக் குருவாகிய ஞானிகளை/ சித்தர்களை வழிபடுதலே முறை என்கின்றது தமிழ்மறையான திருமந்திரம்.
"சிவனை வழிபட்டார்
எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு
ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு
ஆமாறு காட்டும்
குருவை வழிபடின்
கூடலும் ஆமே. "
- ஆசான் திருமூலர்
திருமந்திரம் 2119
ஆசான் தாயுமானவர் திருமூலர் சொன்னதையே அழுத்தம் திருத்தமாக அடித்து கூறுகிறார். “மூர்த்தி தளம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல்ல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே” என தெளிவாக கூறுகிறார்.
உண்மையான பக்தனுக்கு உண்மையான கர்மிக்கு உண்மையான யோகிக்கு இறைவன் தகுந்த நேரத்தில் சிறந்த தகுந்த ஞான சற்குருவை காட்டுவித்து அவர் மூலம் உபதேசம் தீட்சை பெற வைத்து தவம் செய்ய வைத்து பின்னரே தகுதியுடையவரை ஆட்க்கொள்வார்.
குரு இல்லாமல் யாரும் இறைவனை அடைய முடியாது. பக்தியில் சிறந்தவரை இறைவன் சோதித்து பக்குவியாக்கி குருவிடம் சேர்ப்பித்து பின்னரே ஞானம் அருள்கிறார். குரு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே ராமன் , கிருஷ்ணன் பல குருவிடம் உபதேசம் கேட்டு நமக்கு பாடமாக வாழ்ந்து காட்டினர்.
“காட்டும் குருவின்றி காண வொண்ணாதே” ,”குருவில்லா வித்தை பாழ்!” குருவே எல்லாம் எனக்கருதி அவர் பாதங்களில் எவர் ஒருவர் சரணடைகிறாரோ அவரே இரட்சிக்கப்படுவார். “குருவினடி பணிந்து கூடுவ தல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்” என்கிறது ஒளவைக்குறள்.
முற்றுப்பெற்ற குருவின் துணையின்றி இறையை உணரமுடியாது
சிவத்தை அடைய முற்றுப்பெற்ற மெஞ்ஞானக் குருவாகிய ஞானிகளை/ சித்தர்களை வழிபடுதலே முறை என்கின்றது தமிழ்மறையான திருமந்திரம்.
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.
- திருமந்திரம் 2119
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.
-- திருமந்திரம் 1580
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.
-- திருமந்திரம் 1581
முற்றுப்பெற்ற ஞானத்தலைவி ஔவையார் அவர்களும் இதையே உறுதிப்படுத்துகிறார்
“குருவின் அடிபணிந்து கூடுவதல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்.”
"நெறிபட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிறிவற் றிருக்குஞ் சிவம்."
- ஆசான் ஒளவையார்
காரணகுரு, காரியகுரு ...!
'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.
காரியகுரு
காரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகிய தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)
காரணகுரு
எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.
அத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிபெறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப்பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.
காலம் உள்ளபோதே அதாவது இளமை இருக்கும்போதே காரணகுருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ளவேண்டும்.
"தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே”
-ஆசான் திருமூலர்
ஓம் எண்ணிலாக் கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி
சித்தர் அறிவியல் Wisdom of Siththars

நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
bbb3
No comments:
Post a Comment