"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்ப
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.
உப்பும் மிளகும் கோவிலுக்கு அல்ல. நமக்கு..
https://www.facebook.com/இதை படித்த பின் உங்களை சுற்றி வாழும் ஒரு 12 பேருக்காவது இந்த அறிவியலை புரிய வையுங்கள். முந்தைய தலைமுறை இவற்றை செய்யாமல் விட்டதாலேயே கோவில் பற்றிய ஞானம் அழிந்து வருகிறது.
இன்று பெரும்பாலான கோவில்களில் கொடிமரத்தின் அடியிலும் சிலைகளின் மீதும் உப்பை கொட்டி வழிபடுகின்றனர். இது தவறு. சித்தர்கள் உணர்த்திய உண்மையை அறிந்து கொள்ளாமல் அவர்கள் கட்டிய கோவில் சிலைகளை அரித்து, அழிப்பது நாம் மடையர்கள் என்பதையே காட்டுகிறது. அதன் உண்மையை அறிவோம்.
உப்பின் பிறப்பிடம் கடல். இன்று நிலப்பரப்பாக நாம் வாழும் எவ்விடமும் சில கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்தவைகளே. மொத்த உலகமே உப்பின் மயம்தான். அவ்வகையில் மண்ணும் மண்ணில் தோன்றும் தாவரங்களும் அவற்றை உண்ணும் புழு, பூச்சிகள், விலங்கு, பறவை, மனிதன் என எல்லாமே உப்பின் வெவ்வேறு வடிவங்கள் தான். ‘உப்பிருந்த பாண்டம்’ என்று சித்தர்கள் உடம்பை பற்றி பாடியதன் பின்னுள்ள அறிவு இதுதான்.
உப்பு ஒரு சுவை என்பதை தாண்டி அதிலுள்ள மின்னாற்றலே உடலையும் மூளையையும் இயக்குகிறது. அடுத்த ஒரு 21 நாட்களுக்கு உப்பில்லாத உணவு மற்றும் உப்பு குறைவாக உள்ள காய்கறி, பழங்களை உண்டு வாருங்கள். உங்களின் உடல் இயக்கத்திலும், சிந்தனையிலும் உள்ள மின்னாற்றல் குறைந்து போகும். சிடு சிடு வென திரியும் பலர் மந்தமாகி போவர். ‘நீ உப்பு போட்டு தானே சாப்பிடுகிறாய்’ என்று ரோஷம் பற்றிய சொல்லாடல் இன்றும் வழக்கில் உள்ளது அதனாலேயே.
உப்பின் அளவு உடலில் அதிகரித்தாலும் உடல் அழியும். உப்பால் அரிக்க முடியாத பொருள் எதுவும் இல்லை. உப்பு ரத்தத்தில் அதிகரிப்பதால் உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. எல்லா வித நோய்களுக்கும் இது தான் தொடக்கம். உடலின் காரத்தன்மையை அதிகப்படுத்தும்போது நோய் நீங்குகிறது. இங்கு காரத்தன்மை என்பது காரச்சுவை அல்ல. சுக்கு, சீரகம், மிளகு, கடுக்காய் ஆகியவற்றில் காரத்தன்மை அதிகம். அதனாலேயே சித்தர்கள் தம் பெரும்பாலான உணவுகளில் இவைகளை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தினர்.
குடும்ப வாழ்க்கையில் உள்ள மக்களுக்கு உப்பும் அதனால் உண்டாகும் உணர்சிகளும் ஒரு அளவில் தேவை. ‘சம்சார கடல்’ என்று உலக வாழ்வை மறைமுகமாக கடலுடன் ஒப்பிட்டது இந்த உப்பின் ஆற்றலை உண்மையை மறைப்பாக உணர்த்தவே சொல்லப்பட்டது. ஞானம் பெற விரும்பும் மனிதர்கள் அவ்வுணர்ச்சிகளை வென்று யோகப்பாதையில் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். அதற்கு கருவியாக உள்ள உடலை நீண்ட நாள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் காரத்தன்மை பற்றிய முழு அறிவும் பெற வேண்டும். இதை கோவிலுக்கு வரும் மக்கள் உணர்ந்து கொள்ளவே இரண்டு மண் கலசங்களில் உப்பும் மிளகும் இட்டு கொடிமரத்தின் அருகில் வைத்து விடுவார்கள். ஆனால் இன்று மக்கள் அவற்றின் பொருள் விளங்காமல் சித்தர்கள் கட்டிய கோவில் கொடிமரங்களையும் சிலைகளையும் அரிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
சித்தர்களும் பெரியவர்களும் ஏன் இத்தகைய அறிவை மறைப்பாக சொல்ல வேண்டும்? ஒன்றை பல வழிகளில் உடைத்து, சேர்த்து, ஆராய்ந்து முடிவினை பெறும்போதுதான் மூளை தன் எல்லைகள் தாண்டி சிந்திக்க முயல்கிறது. கிராமத்து மக்களையும் நகரத்து மக்களையும், ஞானிகளையும் ஒப்பிட்டு பாருங்கள். மூவருக்கும் உள்ள வேற்றுமைகள் புரியும். மக்கள் ஏதோ சாதாரணமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டு போகட்டும் என்று விட்டுவிடவில்லை நம் முன்னோர். அப்படி சாதாரண வாழ்வு வந்தால் மீண்டும் மீண்டும் இங்கு மனிதராய் பிறந்து உழன்று கொண்டே இருப்பார்கள். உச்ச கட்ட அறிவில் வாழ்ந்து மனித வாழ்வு தாண்டி தெய்வத்தன்மை என்ற மேல்நிலை அடையவே இத்தகைய வாழ்வு முறைகள். பகுத்து ஆராய்பவர்கள் மென்மேலும் முன்னே போகட்டும். சிவ! சிவ!
குறிப்பு: உங்கள் சுற்றியுள்ளவர்களிடம் இதை விளக்கி கோவில் சிலைகளை பாதுகாத்திடுங்கள். நம் முன்னோர் நமக்காக விட்டு சென்ற சொத்துக்களை அழிய விடாதீர்கள்.
-Sathish Kumar
https://www.facebook.com/
Ayurveda and Siddha Medicine ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
Wisdom of Siddhas சித்தரியல்
Aum Muruga ஓம் மு௫கா
ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
No comments:
Post a Comment