Thursday, January 25, 2018

சன்மார்க்கம்




அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

"சாகாதவனே சன்மார்க்கி"
-ஆசான் வள்ளலார். சாகாக்கல்வி/ மரணமிலாப் பெருவாழ்வு அளிப்பது  சன்மார்க்கம்.  "தன்னெறியாவது சன்மார்க்கமாமே" -ஆசான் திருமூலர். நான் யார் என அறியும் நெறி! எங்கிருந்து வந்தோமோ அந்த வீட்டை மீண்டும் அடைவதே ஆன்ம விடுதலை / வீடு பேறடைதல் / இறையுடன் இரண்டறக் கலத்தல் / சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி / பேரின்பம் அடைதல் / பேரறிவு பெறல் / முக்தி அடைதல் / இறைநிலை(சிவபதம்) எய்தல் / முற்றுப்பெறல் எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றன.



"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்."
- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)

"என்றானும் சாவாமல் கற்பதே கல்வி"
- ஆசான் ஔவையார்.

"பிறப்பென்பது பேதமை"
- ஆசான் திருவள்ளுவர்.

"சகாதவனே சன்மார்க்கி"
- ஆசான் வள்ளலார்


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை..!!!

முற்றுப்பெற்ற மகான் திருவள்ளுவப் பெருந்தகை கூறுகிறார் நாம் எதற்காவது ஆசைப்பட வேண்டும் என்றால் அது மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து வாழும் பிறப்பு-இறப்பு சக்கர நிலையிலிருந்து விலகிப் பிறவாநிலை கிடைக்கவே ஆசைப்பட வேண்டும். அதற்காக முற்றுப்பெற்றவர்களை (இறைநிலை அடைந்தோரை) வேண்டுதல் செய்ய வேண்டும். 

ஏனெனில், முற்றுப்பெற்ற ஞானிகளான ஆசான் திருவள்ளுவப் பெருமான் போன்றோரின் கருத்துப்படி பிறப்பே நரகம். இந்தப் பிறவியை முற்றுப்பெற்ற சித்தபெருமக்கள் வழிகாட்டலின் கீழ் வெல்வதே சொர்க்கம். அதுவே பேரறிவு, பேரின்பம், வீடு பேறடைதல், மோட்சம், ஆன்ம விடுதலை, இறையுடன் இரண்டறக் கலத்தல், ஜோதி உடம்பு பெறல், மரணமிலாப் பெருவாழ்வு எனப் பலவிதமாக அழைக்கப்படுகிறது.

பிறவிப்பிணியை வென்ற மாபெரும் தலைவன், பொதுமறை தந்த அண்ணல் ஆசான் திருவள்ளுவப்பெருமானை வேண்டிப் பிறப்பென்னும் நரகத்தை வெல்வோம்.

ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி.


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது 
வேண்டாமை வேண்ட வரும். (குறள் 362)

Translation: 
If desire you feel, freedom from changing birth require! 
'I' will come, if you desire to 'scape, set free from all desire.

Explanation: 
If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.

மு.வ உரை:
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.


#பிறவிப்பெருங்கடல் #பிறவிப்பிணி

பிறவி ஒரு பிணி என்கிறார். நோய் என்றால் இலகுவாக மாற்றமுடியும். பிணியென்பது இலகுவாக மாற்ற முடியாதது. பிணி ஏற்பட்டால் நரகவேதனைதானே. ஆதலால், பிறப்பாகிய பெருங்கடிலில் (பிறவிப்பிணியில்) மாட்டித் தவிக்கும் எமக்கு ஞானிகள் காட்டிய வழியே மருந்தாகும். பிறவியை வெல்வதே சுவர்க்கம்(சொர்க்கம்) ஆகும். பிறவியை வென்று மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவரே முற்றுப்பெற்ற ஞானிகள் / சித்தர்கள் ஆவர்.

நுண்ணறி வாகும் நுழைபுலம் மாந்தர்க்கு
பின்னறி வாகும் பிரானறி(வு) அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாமது சன்மார்க்க மாமே
-ஆசான் திருமூலர் (திருமந்திரம்-1228.)

புலன்களில் இருந்து ஏற்படும் பிழைகளையும் கடந்து நுட்பமாக அறியும் மனிதர்களுக்கு பின்பற்றும் அறிவாக அதை பிரான் அருள அதுவே செம்மையான நெறியாகும் சிவ கதியை சேர்வதற்கு. இதை தனதாக்கிக் கொள்வதே சன்மார்க்கம் எனப்படும்.  சிவத்திடை சேர நுட்ப அறிவுடன் செயல்படுவதே சன்மார்க்கம். 


"தன்னெறியாவது சன்மார்க்கமாமே" -ஆசான் திருமூலர். நான் யார் என அறியும் நெறி! எங்கிருந்து வந்தோமோ அந்த வீட்டை மீண்டும் அடைவதே ஆன்ம விடுதலை / வீடு பேறடைதல் / இறையுடன் இரண்டறக் கலத்தல் / சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி / பேரின்பம் அடைதல் / பேரறிவு பெறல் / முக்தி அடைதல் / இறைநிலை(சிவபதம்) எய்தல் / முற்றுப்பெறல் எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றன.

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.
-ஆசான் திருமூலர் (திருமந்திரம்-101)



நன்றி 

Nàthàn கண்ணன் Suryà
20/06/2014









https://www.facebook.com/groups/siddhar.science

Ayurveda and Siddha Medicine ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். 

Wisdom of Siddhas சித்தரியல்

Aum Muruga ஓம் மு௫கா

ஓங்காரக்குடில் Ongarakudil

சித்தர் அறிவியல் Wisdom of Siththars



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



No comments:

Post a Comment