Monday, January 29, 2018

தஞ்சைப் பெருங்கோவில்

பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..



கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள். பிரம்மாந்திர கல் எனப்படும் தூபிக்கல். இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..

இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அத்திவாரம்..

இது என்ன விந்தை.. அத்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..? நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அத்திவாரம் இடுவோம்..

பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்.. இவ்வளவு பெரிய கோவிலுக்கு அத்திவாரம் எவ்வாறு அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அத்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும் புகை மண்டலமாகத்தான் இருக்கும்..

ஆனால் .. பெரியகோவிலின் அத்திவாரம் வெறும் 5 அடிதான்..

மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின்/ கருவூர்ச்சித்தரின் வியத்தகு அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..



பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள் இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள். அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது, ஒரு நூலளவு  இடைவெளிவிட்டு  அடுக்கினார்கள்..

எதற்காக..?



நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பிணைப்பு லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..

லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று, அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை
அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி மிக பலமான இணைப்பை பெறுகின்றன...

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட, தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..

அத்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற
அதிசியம் இது..

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்..

*சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும்* *இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த* *காலத்திலும் பொய்க்காது..*

ஓம் நமசிவாய

  

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

 Aum Muruga ஓம் முருகா 

No comments:

Post a Comment