Saturday, June 17, 2017

சித்தர் அறிவியல்: 72,000 நாடி நரம்புகளில் முதன்மை நாடி..

சித்தர்கள் The Ascended Masters.

முருகப்பெருமானின் முதன்மைச் சீடர்களான சித்தர்கள் அறிவியலின்படி மனதவுடல் 72,000 நாடி நரம்புகளால் ஆனதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் தசநாடி(பத்து நாடிகள்) முக்கியமானதென்றும், அவற்றுள்ளும் முக்கியமானவை மூன்று. அம்மூன்றிலும் மிக முக்கியமான நாடி ஒன்றுண்டு. அதுவே, பிறவிப்பிணியை ஒழிக்கக்கூடிய நாடி என்கின்றனர். அதற்கு காரணகுருவாகிய சித்தர்கள் துணை வேண்டும். அவர்களை நாடி நாம்தான் போதல் வேண்டும். இதனையே "உருத்தரித்த நாடி" என்கிறார் ஆசான் சிவவாக்கியர். அதையே "நரம்பெனு நாடியிவையினுக் கெல்லா முரம்பெறு நாடியொன் றுண்டு" என்பார் ஆசான் ஒளவையார். இவை பற்றி விளக்கமாக பிறிதொரு பதிவிற் பார்க்கலாம்.


எழுபத்தீ ராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல்

-ஒளவைக்குறள்- நாடி நாரணை - குறள் எண்:1-

நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லாம்
உரம்பெறு நாடியொன் றுண்டு.

-ஒளவைக்குறள்- நாடி நாரணை - குறள் எண்:2-

"உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே."

- ஆசான் சிவவாக்கியார்-

"இருப்பன நாடி எழுபத்தீரா
யிரமான தேகத்தில் ஏலப் பெருநாடி
ஒக்கதசமத்தொழிலை ஊக்கதச வாயுக்கள்
தக்கபடி என்றே சாரும்”


"பொருந்துமோ ருந்திக் கீழே
புகன்றேதுஞ் சுழியைப் பற்றி
எழுந்ததோர் நாடி தானும்
எழுபத்தி ராயி ரந்தான்
தெரிந்ததோ ரிவற்றில் பத்துத்
தசநாடி இவற்றில் மூன்றும்
பரிந்தத்தோர் வாத பித்தம்
படர்ஐயும் அறிந்து பாரே"


நன்றி
சித்தர்கள் The Ascended Masters.


Aum Muruga ஓம் மு௫கா

ஓங்காரக்குடில் Ongarakudil

No comments:

Post a Comment