Sunday, June 25, 2017

சித்தர்கள் வகுத்த காயத்திரி



#சாகாக்கல்வி

சித்தர்கள் வகுத்த காயத்திரி

காயம்+திரி=காயத்திரி. காயமாகிய பொய்யுடலை கபங்கள் நீக்கி(திரித்து) மெய்யுடல் ஆக்கல்.

"உருத்தரித்த நாடியில்
ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே
கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்
மேனியும் சிவந்திடும்"

-ஆசான் சிவவாக்கியர்

இடது, வலது மூச்சுத் (மூக்கு) துவாரங்கள் ஊடாக ஓடும் காற்றை(வாயுவை) கபாலத்திலுள்ள சுழிமுனையில் (உருத்தரித்த நாடி) ஓடுங்கினால், வயோதிபரும்(விருத்தர்) பாலகராக மாறி, மேனியும் பளபளப்பாக ஒளிதேகம் பெற்று சிவந்திடும்.

வயது முதிர்ந்த கிழவரும் ஞானபண்டிதனான முருகப்பெருமான் துணைகொண்டு சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை சுழிமுனையாகிய 'உருத்தரித்த நாடி'யில் ரேசித்துப் பூரித்துக் கும்பித்து நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என்கிறார் ஆசான் சிவவாக்கியர். இவ்வாறு காயத்தைத் திரித்து சூட்சுமதேகமாகிய ஒளியுடலைப் பெறலே சித்தர்கள் வகுத்த காயத்திரி ஆகும்.

காற்றை/பிராணனை/வாயுவை தசநாடியான சுழிமுனையில் பூரித்து, கும்பித்து தங்கச் செய்துவிட்டால் பொய்யுடலில் உள்ள கபங்கள் நீங்கி ஒளியுடம்பைப் பெறறு அருட்பெருஞ்சோதியாகிய சிவத்துடன் இரண்டறக் கலக்கலாம்.

சாகாதவனே சன்மார்க்கி!
சாகாதவனே சற்குரு!
சாகாதவனே முற்றுப்பெற்ற சித்தன்!


முருகப்பெருமானின் முதன்மைச் சீடர்களான சித்தர்கள் அறிவியலின்படி மனதவுடல் 72,000 நாடி நரம்புகளால் ஆனதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் தசநாடி(பத்து நாடிகள்) முக்கியமானதென்றும், அவற்றுள்ளும் முக்கியமானவை மூன்று. அம்மூன்றிலும் மிக முக்கியமான நாடி ஒன்றுண்டு. அதுவே, பிறவிப்பிணியை ஒழிக்கக்கூடிய நாடி என்கின்றனர். அதற்கு காரணகுருவாகிய சித்தர்கள் துணை வேண்டும். அவர்களை நாடி நாம்தான் போதல் வேண்டும். இதனையே "உருத்தரித்த நாடி" என்கிறார் ஆசான் சிவவாக்கியர். அதையே "நரம்பெனு நாடியிவையினுக் கெல்லா முரம்பெறு நாடியொன் றுண்டு" என்பார் ஆசான் ஒளவையார். இவை பற்றி விளக்கமாக பிறிதொரு பதிவிற் பார்க்கலாம்.

எழுபத்தீ ராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல்

-ஒளவைக்குறள்- நாடி நாரணை - குறள் எண்:1-

நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லாம்
உரம்பெறு நாடியொன் றுண்டு.

-ஒளவைக்குறள்- நாடி நாரணை - குறள் எண்:2-

"உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே."

- ஆசான் சிவவாக்கியார்-

"இருப்பன நாடி எழுபத்தீரா
யிரமான தேகத்தில் ஏலப் பெருநாடி
ஒக்கதசமத்தொழிலை ஊக்கதச வாயுக்கள்
தக்கபடி என்றே சாரும்”


"பொருந்துமோ ருந்திக் கீழே
புகன்றேதுஞ் சுழியைப் பற்றி
எழுந்ததோர் நாடி தானும்
எழுபத்தி ராயி ரந்தான்
தெரிந்ததோ ரிவற்றில் பத்துத்
தசநாடி இவற்றில் மூன்றும்
பரிந்தத்தோர் வாத பித்தம்
படர்ஐயும் அறிந்து பாரே"


நன்றி
ஓங்காரக்குடில் Ongarakudil


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


No comments:

Post a Comment