"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று
சொல்லு மந்திரம் ஏதடா..?!
நட்டகல்லும் பேசுமோ ..?!
நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ...?!"
- ஆசான் சிவவாக்கியார்
"தானமும் தவமும்
தான் செய்வராயின்
வானவர் நாடுவழி
திறந்திடுமே."
-ஆசான் ஔவையார்
"தானம் தவம் இரண்டும்
தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்"
-ஆசான் திருவள்ளுவர்
'உள்ளம் பெருங்கோவில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு
வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச்
சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும்
காளாமணி விளக்கே'
-ஆசான் திருமூலர்
"ஆர்க்கும் இடுமின்
அவர் இவர் என்னன் மின்
பார்த்து இருந்து உண்மின்
பழம்பொருள் போற்றன் மின்
வேட்கை உடையீர்
விரைந்து ஒல்லை
உண்ணன்மின்
காக்கை கரைந்து
உண்ணும் காலம் அறிமினே".
-ஆசான் திருமூலர்
. . . . . நன்றி
Aum Muruga ஓம் முருகா
Nàthàn கண்ணன் Suryà
06/05/2016
No comments:
Post a Comment