Friday, August 31, 2018

போற்றினால் உனது வினை அகலுமப்பா

"போற்றினால் உனது வினை அகலுமப்பா
பூதலத்தில் நீயும் ஓர் சித்தனாவாய்"

குருமுனி, கும்பமுனி, கலசமுனி 
பேராசான் அகத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் அகத்தீசாய நம 

போற்றினா லுனதுவினை யகலுமப்பா
பிறவியில்லாப் பதவியிலே புனிதமாவாய்
போற்றினால் பூரணமுங் கூடப்பேசும் .
பூதலத்தில் நீயுமொரு சித்தனாவாய்
போற்றினாலென்ன பலனில்லை என்றால்
பொதியமலை எனக்கேது புலத்தியாகேள்
போற்றினோம் பூரணத்தின் கிருபைகண்டோம்
புத்தியுடன் தானேதான் பூண்டுபாரே
தானான ஆதார சொருபந்தன்னைச்
சமர்த்தாகத் தானறிந்து தியானம்செய்து
தேரான புலத்தியனே அறிவால் தானும்
தேகத்தில் உயிர்சிவமாய்த் தெரிந்துகொண்டு
வானான கேசரியில் மனக்கண்வைத்து
மனங்கனிந்து ஒங்றீங்அங் என்றோது
கோனான ஆதார பூசைகாணும்
கோடான பூசை செய்தபலத்துக் கொப்பே
-அகத்தியர் பரிபூரணம் – 400, பக்கம் – 68 – பாடல் - 377



Aum Muruga ஓம் மு௫கா

சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 





                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.
-----------------------------------------------------------------


சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448 ஆகும் அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள் உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை

துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும்.

அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், இந்த உலக வாழ்க்கையின் போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் ஆகும் என்றும்,

மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.

அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும்.

அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் .
இநநூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும்.
கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர்.

ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் விபரங்கள்

சிரசில் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது.
ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார்.

ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும்.

தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன.

ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர்.
மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை என்பனவாகும்.
இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன.

இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

ஆண், பெண், அலியாவது ஏன்?

"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)

அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.

கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

"கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்"

கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர்.

மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார்.

பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே"
(திருமந்திரம் 481)

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார்.

ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.


Aum Muruga ஓம் மு௫கா

சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 




                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

விநாயகர் அகவல் விளக்கவுரை


இந்த பூமிக்கு கீழ் ஒரு சக்தி இருக்கு, பிரமாண்டமான இந்த அண்டத்தை தாங்கிகொண்டிருக்கும் சக்திக்குதான் விநாயகம் என்று பொருள். நம்ம உடம்பில் எப்பிடி இருக்கு விநாயகம்..?! கணபதி அல்லது விநாயகம் கால் எலும்பும் கதிர் எலும்பும் கூடுகின்ற இடத்தில் இருக்கின்றது. கால் எலும்பும் கதிர் எலும்பும் கூடுகின்ற "விநாத்தண்டு விநாயகம் (விநா+அகம் = விநாயகம்)" இருக்கின்ற இடத்தில் சுக்கிலம் / சுரோணிதம் உற்பத்திகின்றது. அந்த இடத்துக்குக் காற்று போகாது. அதுதான் மூலாதாரம். அங்கு எழக்கூடிய சக்தியே குண்டலி சக்தி.



மகான் ஒளவையார் அருளிய விநாயகர்
அகவல் விளக்கவுரை!
https://t.co/ULNCz5Ln5e
சத்தத்தின் னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங் காட்டிச்
அணுவிற் கணுவாய் அப்பாலுங் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
ஞானவழி காட்டும் ஒளவையே என் அம்மையே
நின் திருவடிகள் போற்றி..! போற்றி..!
https://youtu.be/LjISsZhS9WE









நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 




                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||



-1:00:24

8,657 Views
ஓங்காரக்குடில் Ongarakudil - London Branch added a new video: விநாயகர் அகவல் விளக்கவுரை.
விநாயகர் அகவல் விளக்கவுரை
அகத்தியர் துணை

அருட்பெருஞ்சோதி  அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நித்ய ஆசி நூல்

வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமான் ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், B.A., B.Ed.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ டோல்கேட், திருச்சி.

31.01.2013

1. ஞான சூட்சுமம் கொண்ட அரசா
ஞானிகள் பூசை வழிமுறையை
வானவரே வியக்கும் வண்ணம்
வழுவாது செய்து கலியுகத்தில்

2. கலியுகத்தில் உலக ஞானிகளை
கருணைபட அழைத்து மக்களுக்கு
தெளிவூட்டும் தேசிகனே வாழ்க
தேவலோக சபையோ என வியக்க

3. வியக்க கண்டேன் ஐங்கரனும் (விநாயகப் பெருமான்)
வினை போக்க இன்று குடிலில்
தயக்கமிலா வரும் அடியவர்க்கு
தரணியிலே நந்தன கலை திங்கள்

4. திங்களிலே மூவாறு திகதியதும்
(நந்தன வருடம் தை மாதம் 18ம் நாள்)
தெரிவிப்பேன் நித்ய ஆசிதனை
ஓங்காரன் (ஆறுமுகப்பெருமான்) புஜத்தில் அமர்ந்து
உறுதுணைபட அருள்வேன்

5. அருள்பெற அணுகும் அனைவருக்கும்
அல்லல் நீக்கி அரங்கன் மூலம்
அருள்பலம் இனிதே ஈந்திடுவேன்
அன்னமதை குடிலில் உண்பவர்க்கு

6. உண்பவர்க்கு அருமருந்தாகி
உடல்பிணி அகற்றி நிற்பேன்
கண்டமிடரை விரட்டியும்
காத்து வளமும் சேர்ப்பேன்

7. சேர்ப்பேனே செயல் மாற்றமுள்ளவர்க்கும்
சிறப்பறிவு ஊட்டி இனிதே
வார்ப்பேனே (உருவாக்குவேனே) ஞானவழி அவரவரை
வளர்ப்பேனே குறைவிலா சிறப்புற

8. சிறப்புள அமுதை உண்ணும்
சிறார்கட்கும் ஞான ஆற்றல்
மறுப்பில்லா ஞாபகசக்தி கூட்டி
மண்ணுலகில் புகழ்பெறச் செய்திடுவேன்

9. புகழ்பட இன்று துறையூர் எல்லை
புண்ணியக் குடிலாம் பிரணவக் குடிலில்
வகைபட கண்டு தேசிகரை
வணங்கி தொண்டில் கலப்பீர்

10. கலந்து கவலைகள் தீர
கலச தீட்சை பணிவுடன் ஏற்று
வலம் வயது தொண்டாற்றி
வையத்துள் சிறக்க தொடர் சேவை

11. சேவை புரிய அவரவர்க்கும்
சிவராசன் வழி என் அருள்
அவைமெச்ச (பலரால் போற்றப்படும்நிலை) அடைந்து உயர்த்தும்
அரங்கனுள் இருக்கின்றேன் உலகை காக்க நித்ய ஆசி முற்றே.

ஒரு மனிதன் ஞானத்தை அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவர் பல
ஜென்மங்களில் பல ஞானிகளிடம் ஆசி பெற்று ஞானிகள் மனம் மகிழும்படி நடந்து அவர்களது ஆசியினால் ஞான இரகசியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து இறுதியில் ஒரு ஜென்மத்தில் ஞானத்தலைவனால் வாசிவசப்பட்டு ஞானிகள் உதவியால்தான் மரணமில்லா பெருவாழ்வை அடைந்து ஞானி என்ற பட்டத்தையும் பெற இயலும்.

எந்தவொரு மனிதனும் மரணமில்லா பெருவாழ்வாகிய ஞானத்தை ஞானிகளின் அருளும், ஆசியும், துணையும், வழிகாட்டுதல்களும் இல்லாமல் கண்டிப்பாக அடைந்வே முடியாது. சொல்லொண்ணா உருக்கமும், மனஉறுதியும், மனஒருமையும் கொண்டு நாத்தழும்பேற ஞானிகளே கசிந்துருகி அன்பு கொண்டு “என்பிள்ளை என்பிள்ளை” என வாரியெடுத்துக் கொள்ளும்படியான அளவிற்கு ஞானிகள் அத்தனைபேரும் இதுபோல் மனம் உருகி பூஜை செய்தவரை இதுவரை கண்டதில்லை என வியக்குமளவிற்கும், அவர்களே அளவில்லா மகிழ்ச்சி அடையும் அளவிற்கும் புளங்காகிதமடைந்து நெகிழும் அளவிற்கு பூஜை செய்து பெறுதற்கரிய ஞானத்தைப் பெற்றவர்தான் ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.

அப்படி பல ஆயிரம் ஆண்டுகள் பாடுபட்டு சேர்த்த அந்த ஞான இரகசியங்களையும், ஞானிகளை எப்படியெல்லாம் வணங்கினால் மனமிரங்கி அருள் செய்வார்கள், எப்படியெல்லாம் ஞானிகளை அழைப்பது, என்னென்னவெல்லாம் ஞானிகளிடம் வேண்டுகோளாக கேட்பது, எதையெல்லாம் கேட்கக்கூடாது. இப்படி அநேகம் அநேகம் ஞான இரகசியங்களையெல்லாம் தாம் பெற்ற அந்த ஞானானுபவ நிலைகளை, உலகமக்களும் பெறவேண்டுமென்று பொதுநோக்கிலே உலக மக்கள் அறியும் பொருட்டு வெளிப்படையாக அனைவருக்கும் அறிவித்து அவர்களையும் ஞானிகள் திருவடியைப் பற்றச் செய்து இக்கலியுகத்தினையே ஞானயுகமாக மாற்றி வருகிறார் மகாஞானி ஆறுமுகப்பெருமானின் அவதாரம் அரங்கமகாதேசிகர்.

அரங்கமகாதேசிகரின் அளப்பரிய முயற்சிகளால் ஓங்காரக்குடிலைச் சார்ந்த அனைவரும் ஞானிகள் திருவடியைப் பற்றி பூசித்து தேவநிலையை எட்டும் நிலையிலிருப்பதால் ஓங்காரக்குடிலே சித்தர்கள் சபையோ என வியக்கும் அளவிற்கும், தேவலோக சபையோ என வியக்குமளவிற்கும் பண்புள்ள அன்பர்கள் கூட்டத்தால் நிறைந்துள்ளது என வியக்கிறார் ஐங்கரனாகிய விநாயகப் பெருமான்.

தர்மத்தின் தலைவனாம் ஆற்றல் பொருந்திய ஆறுமுகப்பெருமானின் பன்னிரு கரங்களிலும், விநாயகப் பெருமானும் சார்ந்து தர்மத்தைக் காக்கும் பொருட்டு ஆறுமுகப்பெருமான் கொடியவர்களை அடக்கி நல்லோரைக் காக்கும்பொழுது விநாயகப் பெருமானாகிய நானும் ஆறுமுகனின் கரத்திலிருந்து ஆற்றல் வழங்கி அருள் செய்கிறேன் என்கிறார் விநாயகப்பெருமான்.

ஞானிகளெல்லாம் ஓங்காரக்குடிலில் தங்கி அருள் செய்வதால் இங்கு
சமைக்கப்படும் உணவு ஞானிகளின் அருள் பார்வையால் நோய் தீர்க்கும் மருந்தாக மாறி உணவு உண்பவர்களுக்கு நோய்கள் நீங்கி, அவர்களுக்கு உள்ள கண்டங்களும் இடர்களும் நீங்கி சுகம் பெறுவார்கள். சன்மார்க்க நெறிகளிலிருந்து மாறுபட்டு வேறு வழிகளில் செல்ல நினைப்பவர்களை தடுத்து ஆட்கொண்டு அருள் செய்வேன். ஓங்காரக்குடிலில் உணவு உண்கின்ற கல்வி கற்கும் மாணவர்களுக்கு தாம் கற்ற கல்வி மறக்காமல் நினைவில் தங்குவதற்கு நான் அருள் செய்வேன். கல்வியில் அவர்கள் தேர்ச்சியடைந்து பெரிய பெரிய பதவிகளில் அமரச்செய்து புகழடையவும் செய்வேன் என கூறுகிறார் விநாயகப்பெருமான்.

நந்தன வருடம் தை மாதம் 18ம் நாள் (31.01.2013) வியாழக்கிழமையான இன்றைய தினம் புண்ணியத்தின் உறைவிடமான ஓங்காரக்குடிலை நாடி ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகரை முறையாக வணங்கி வழிபட்டு தொண்டு செய்தும் அவர்களது கவலைகள் தீரும் பொருட்டு ஆசானிடத்தில் “கலச தீட்சை”யை தீட்சை உபதேசமாக பெற்றும், பணிவுடன் தீட்சை ஏற்று குடிலாசானை வணங்கி குடிலில் நடைபெறும் அறப்பணிகளுக்கு தொண்டு செய்தும், பொருளுதவி செய்தும் வருபவர்களுக்கு சிவராஜயோகியாகிய ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர் வடிவில் விநாயகப் பெருமானாகிய நானும் கலந்து தீட்சை பெறுபவர்களுக்கும், தொண்டு செய்பவர்களுக்கும், பொருளுதவி செய்பவர்களுக்கும் ஆசி அருள்வேன். அரங்கரை நானும் சார்ந்து இவ்வுலகை காப்பேன் என்கிறார் விநாயகப்பெருமான்.

-சுபம்-

Wednesday, August 29, 2018

மலேசியாவில் சோழர் தடயங்கள் கண்டுபிடிப்பு

மலேசியாவில் சோழர் தடயங்கள் கண்டுபிடிப்பு
=========================================
தமிழ் மலர் 10.03.2018

ஜொகூர் மாநிலத்தின் லாயாங் லாயாங் காடுகளில் சோழர் ஆட்சியின் மிகப் பழைமையான வரலாற்றுக் கலைச் சின்னங்களும் புலிப்பாறைப் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்தத் தடயங்கள் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப் படிவங்கள்.

இது ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் சொல்லும் தகவல்.

இதற்கு முன்னர் கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சியின் புராதனப் படிமங்களும் பழைமையான வடிவங்களும் கிடைத்து உள்ளன. இப்போது கோத்தா கெலாங்கி காடுகளுக்கு அருகில் இருக்கும் லாயாங் லாயாங் காடுகளிலும் சோழர் ஆட்சியின் புராதனப் படிமங்கள் கிடைத்து உள்ளன.

புலியின் உருவத்தைக் கொண்ட சோழர்களின் கொடிகள் ஏற்றப்பட்ட கோட்டைப் பகுதியில் இப்போது கட்டுப் புலிகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் புலிகளைப் பிடிக்க முடியாமல் வனவிலங்கு அதிகாரிகள் தடுமாறுகின்றனர். அந்த அளவுக்கு அங்கே நிறைய புலிகள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.

புலிகள் உலாவும் அந்த இடம் அடர்ந்த காடு அல்ல. பிரதான சாலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் மலை அடிவாரத்தில் ஒரு செம்பனைத் தோட்டம். சோழர்கள் வாழ்ந்த இடத்தில் இன்னும் புலிகளின் நடமாட்டங்கள் இருந்து வருகின்றன.

செஜாரா மெலாயுவில் சொல்லப்படும் கோட்டைத் தூண்களையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். செஜாரா மெலாயுவில் இரு இருப்புத் தூண்கள் இருக்கும் தூண்களுக்கு நடுவில் ஒரு கதவு இருக்கும். அந்தத் தூண்களில் ஒரு தூண் ஆற்றில் ஓர் அணை போல சரிந்து கிடக்கிறது.

செஜாரா மெலாயுவில் சொல்லப்பட்ட தூண்கள் அங்கே அப்படியே காணக் கிடைக்கின்றன. இந்தப் பகுதியின் சுற்று வட்டாரங்களில் கிடக்கும் கருங்கற்கள் செம்மண் நிறத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு கற்பாறையும் இரண்டு மூன்று டன்கள் எடை கொண்டவை. கருங்கற்களைப் பொன்ற இருப்புக் கற்கள். பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் சிதைவு பெறாமல் உள்ளன.

ஆற்றில் காணப்படும் கற்பாறைகளில் புலி அல்லது சிங்கங்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2017 ஜூன் மாதம் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ காட்டுப் பகுதியில் தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள் கிடைத்தன. 20 லிருந்து 30 வரையிலான தாமரைப் பூக்கள் வடிவப் பாறைகள். கி.பி. 650-ஆம் ஆண்டுகளில் செதுக்கப்பட்ட பாறைகள் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றனர்.

ஏறகனவே கோத்தா திங்கி மலைக்காட்டுப் பகுதியில் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அங்கே பாழடைந்த கோட்டைக் கோபுரங்கள் உள்ளன.

அவை 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள். உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைந்து போன வரலாற்றுப் படிவங்கள் ஆகும்.

அதைத் தவிர சோழர் காலத்துக் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் எப்போது செதுக்கப் பட்டவை என்று தெரியவில்லை. ஆனால் அவை இராஜாராஜன் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்று உறுதியாக நம்பப் படுகிறது.

கி.பி. 1025-ஆம் ஆண்டு சோழர் காலத்து நாணயங்களில் காணப்பட்ட அதே வரைப் படிவங்கள் ஜொகூர் ஆற்றின் கரையோரப் பகுதியின் கற்பாறைகளிலும் செதுக்கப்பட்டு உள்ளன. அந்த மாதிரியான கல்வெட்டுப் பாறைகள் ஆற்றின் சில இடங்களில் காணப் படுகின்றன என்று கணேசன் கூறினார்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்-












Aum Muruga ஓம் மு௫கா

சித்தர் அறிவியல் 




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 






                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||