Monday, August 6, 2018

உலக மக்கள் உய்வதற்கு ஒரு உபாயம்!



"சீசனாம் எனத்தேர்ந்தால்
மௌனம் சொல்வார்
சிற்றெறும்பு ஊறையிலே 

கற்குழிந்தாற் போலே
பாசமங்கே வைக்கவைக்கப்
பாவமெல்லாம்
பர்வதம்போல் பஞ்சுவைத்து
அணுவளவு
த் தீயை
நேசமுடன் வைத்தகதை
போலேயாச்சு
நிலைத்துநின்ற குருவுக்கு
மனங்கோணலாகா
வேசைமனம் போலாகி
அலையாதே நீ
வேதாந்த குருபதத்தை
மேவுமேவே."

-மகான் கொங்கண மகரிஷிஅருளிய கடைக்காண்டம் கவி 270.

மேற்கண்ட அருட்கவியின் சாரம்

மகான் கொங்கண மகரிஷி உலக மக்கள்பால் கருணை கொண்டு அருளிய அமுத கவியாகும். இந்த பாடலை யாரெல்லாம் பக்தியுடன் படிக்கிறார்களோ, அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அவர்களை பார்த்தாலே பாவம் தீரும்.

ஞானிகளிடத்தில் பக்தி செலுத்தசெலுத்த நாம் பல ஜென்மங்களிலும், இந்த ஜென்மத்திலும் செய்த பாவங்களெல்லாம் பெரியமலைபோன்ற பஞ்சில் அணுவளவு தீயை வைத்ததுபோல் நமது பாவங்களெல்லாம் சாம்பலாகிவிடும். எனவே சலிப்பில்லாமல் பூஜை செய்து வந்தால் இல்லறமும் சிறக்கும். ஞானமும் கைகூடும்.

இந்த பாடலை பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால் எரிமலை, நிலநடுக்கம், புயல், கடல் கொந்தளிப்பு, நிலச்சரிவு, கடும்வறட்சி, கொடுமையான வெயில், சூறாவளி, பெரும் வெள்ள சேதம், அதிகமழை, இடி, மின்னல், அதிக பனி, விண்கற்கள் விழுதல், கடல் அரிப்பு, கொடிய நோய்கள், தீ பரவுதல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் நடைபெறாது. மேற்கண்ட பாடல் புனிதமான வேதமாகும். இதை தொட்டு வணங்குவதே பூஜையாகும்.

சமுதாயத்தில் ஜீவதயவு குறைந்து வருவதால், எங்கு பார்த்தாலும் இயற்கை சீற்றங்கள் அளவு கடந்து நடக்கிறது. ஜீவதயவு இருந்தால் எல்லாம் வல்ல இயற்கை அன்னை சாந்தமடைந்து நல்வாழ்வு தருவாள்.

ஜீவதயவு அல்லது மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் அல்லது ஜீவகாருண்யம் ஆகிய நான்கும் ஒரே பொருளாகும். ஜீவதயவு உண்டாக வேண்டுமென்றால் சாந்தமே வடிவான மகத்துவம் பொருந்திய "அகத்திய முனிவர்", சிந்தையில் நிலைத்திடும் "ஆசான் நந்தீசர்", திக்கெல்லாம் புகழ் வாய்ந்த "மகான் திருமூலதேவர்", அருள் கருவுருவாய் வந்த "மகான் கருவூர் முனிவர்", அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய "மகான் இராமலிங்க சுவாமிகள்"
ஆகிய ஐந்து மகான்களை

"ஓம் அகத்தீசாய நம"
"ஓம் நந்தீசாய நம"
"ஓம் திருமூல தேவாய நம"
"ஓம் கருவூர் தேவாய நம"
"ஓம் இராமலிங்க தேவாய நம"


என்று நாமஜெபம் செய்யவேண்டும்.

மேற்கண்ட ஐந்து மகான்களும் ஜீவகாருண்ய தலைவர்கள் ஆவார்கள். அவர்கள் நாமத்தைச் சொல்லி காலையில் பத்து நிமிடமும், மாலையில் பத்து நிமிடமும் நாமஜெபம் செய்து வந்தால் நமக்கு ஜீவகாருண்ய உணர்வு வரும். ஜீவகாருண்யம் இல்லாதவர்களுக்குத்தான் மூர்க்கத்தனமும், பொல்லாத வறுமையும், கொடிய நோயும், அடிக்கடி விபத்தும் நடக்கும். மேலும் புலால் உண்ணுதல், மது அருந்துதல், சூதாடுதல் போன்ற குணக்கேடுகளும் பற்றிக்கொள்கின்றன.

மேற்கண்ட மகான்களை பூஜை செய்வதால் சிறந்த குணப்பண்பு உண்டாகும், தன்னையும் அறியலாம், தலைவனையும் அறியலாம். தலைவனை அறிந்த மக்கள்தான் பேதைமையை உண்டுபண்ணும் மும்மலமாகிய காமதேகத்தைபற்றி அறிந்து கொள்ளமுடியும்;. காததேகத்தின் சீற்றத்தை தணித்து கொண்டாலே நாமும் கடவுளாகலாம். மேலும் பொல்லாத வறுமைத் தீரும், செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும், பண்புள்ள புத்திரபாக்கியம் தோன்றும், நோயில்லா வாழ்வும், நீடிய ஆயுளும் உண்டாகும். நம்மிடம் தீயபழக்கவழக்கங்கள் இருந்தாலும் நீங்கிவிடும். தீயநட்பு நீங்கி தகுதியுள்ள நட்பு அமையும். புலால் உண்ணுதல், மது அருந்துதல் போன்ற குணக்கேடுகள் நம்மைவிட்டு நீங்கிவிடும்.

சாந்தமே வடிவான ஞானியர்களின் அருளை பெறவிரும்புகிறவர்கள், நித்தியம் மேற்கண்ட பாடலை பயபக்தியோடு படித்தும், மேற்கண்ட ஐந்து மகான்களின் நாமத்தைச்சொல்லி பூஜை செய்தும் வந்தால் முன்செய்த பாவங்கள் தீரும். சிறப்பறிவு னண்டாகும். மேலும் விவசாயம், வியாபாரம், உத்தியோகம், தொழில், கல்வி ஆகிய அனைத்தும் நல்லபடி நடக்கும், இல்லறமும் சிறக்கும், ஞானமும் கைகூடும், மரணமில்லா பெருவாழ்வு கைகூடும்.

-மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்




சித்தர் அறிவியல் 




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 




                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

No comments:

Post a Comment