Friday, August 10, 2018

அகத்தியரின் அமுதகலை ஞானம்

உண்மையான குருவானவர் தாயாக, தந்தையாக அன்பாக இருப்பார். பசித்தோரின் வயிற்றுப் பசியாற்ற ஆற்றலில்லாதவர் ஞானப்பசியாற்ற மாட்டார். அவரைக் குருவென நம்பி ஏமாறேதே என்கிறார் தனது அமுதகலை ஞானத்தில் ஆசான் அகத்தியப்பெருமான் .
*******



பாரப்பா மனமறிந்து குணமறிந்து பேசி
பசிதாகம் தான்அறிந்து ஈவோர் உண்டோ
ஆரப்பா கோடியிலே ஒருவர் உண்டு
அவர் மனதில் கவடறிந்து கருவறிந்து கொண்டு
சேரப்பா அச்சீடன் இணக்க மானால்
தேட்டமென்ன ஏவலிடம் பொருள்தான் சிக்கும்
கோரப்பா வெகுகோடி சித்து தானும்
கொண்டாடி அவன் குருவாய்க் குறித்துக் கொள்ளே.

குருவென்ன அன்னமது கொடுப்போன் ஆசான்
குணமான தந்தைாய் அவனே ஆகும்
உருவான குலதெய்வம் அவனே ஆகும்
உருவென்றும் தோன்றாத பரமே ஆகும்
திருவான லட்சுமியும் அவனே ஆகும்
தேட்டமுள்ள பலருசியும் அவனே ஆகும்
தருவான தருக்கள் எல்லாம் அவனே ஆகும்
சதகோடி மந்திரமும் அவன் தான் பாரே.

-அகத்தியரின் அமுதகலை ஞானம்







நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 


                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

No comments:

Post a Comment