Friday, August 10, 2018

சித்தபெருமான் திருமூலர் அருள்வாக்கு

முருகப்பெருமான் துணை



திருமூலப்பெருமான் உலகமக்கள் மீது இரக்கம் கொண்டருளிய அருள்வாக்கு

மகான் திருமூலநாயனார் தியான சூட்சும நூல்

சத்தாகி அதன் சித்தாகி சத்து சித்து ஆனந்தமாகி சச்சிதானந்த வடிவமுமாகி நின்ற தன்னிகரில்லா சற்குருநாதனே சண்முகநாதா சத்சித் ஆனந்தமுமாய் சர்வமுமாய் ஆகியே ஆறெழுத்து மந்திரமாய் உள்ள சடாட்சர நாதனே சரவண நாதனே முருகப்பெருமானே! நாதனே வேதனே ஞானிகள் எங்கள் தலைவனே நான்முகனாம் பிரம்மனும் மெச்சுகின்ற ஞானம் தோற்றுவித்த ஞானபண்டிதனே! செந்தில்நாதனே! இவ்வுலகினிலே உமது அவதாரமாம் அரங்கமகாதேசிகர் தமக்கு பிரணவ மந்திரமாம் ஓங்காரமந்திரத்தின் உட்பொருளை ஓதி உணர்த்தி சூட்சுமம் விளக்கி அரங்கர் தம்மை சார்ந்துமே ஓங்காரமாக தாம் மாறியே அருளாட்சி புரிகின்ற அற்புதமே! அருள்வடிவே முருகா! அற்புதங்கள் புரிகின்ற ஆறுமுகனே! ஐயா முருகா! புண்ணியம் பெற வேண்டியே பிரணவக்குடிலாம் ஓங்காரக்குடில் நாடி வருகின்ற அனைத்து மக்களுக்கும் வரங்கள் அளித்து அருள் புரிகின்ற அப்பனே! முருகா! உமது புகழ்தனையே உலகம் அறிய உரைத்துமே அற்புத அவதாரஞானி அரங்கா தமக்கு தியான சூட்சுமநூல்தனையே திருமூலநாயனார் யானும் உரைக்கின்றேன் என்கிறார் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான மகான் திருமூலநாயனார்.

இவ்வுலகினிலே மக்களெல்லாம் தொடர்ந்து வருகின்ற பிறவிகளை ஒழித்து பிறவிக்கடல் கடந்து இனிப்பிறவாத நிலையாம், பிறப்பு இறப்பற்ற பெருநிலையாம் மரணமில்லாப்பெருவாழ்வுதனை, ஞானகதிதனை அடைந்து வீடு பேற்றினை அடைந்து ஞானலோக வாழ்வினை அனைவரும் கண்டு அடைந்து இன்புற்றிருக்க அற்புத வழியாம் உண்மை மார்க்கமாம், சத்திய மார்க்கமாம் சன்மார்க்கம் நின்ற மார்க்கமாம் அகத்திய சன்மார்க்கம் தன்னிலே கடைத்தேற்றவல்ல உலகின் வியத்தகு மகா சக்திகளாம் சர்வவல்லமை பெற்ற உண்மை ஞானமளிக்கவல்ல பிறப்பு இறப்பற்ற அற்புத நிலைகளை அடைந்திட்ட ஐந்தொழில் ஆற்றவல்ல அற்புதசித்தாம், ஞானபண்டிதன் முருகப்பெருமான் முதல் வழிவழி வந்திட்ட திருக்கூட்ட மரபினராம் முற்றுப்பெற்ற ஞானிகள் தன்னை இவ்வுலகினருக்கு அடையாளம் காட்டி வீண் போகாத அற்புத உண்மை ஞான பூசைகளை ஞானிகள் பூசைகளை ஞானிகள் பெருமைகளை உலகறியச்செய்யும் பூசைகளை செய்கின்ற இவ்வுலகினிலே அதிக நலம் விளைவிக்கின்ற அதியற்புத ஞானியர் ஆசியால் ஞானியர்களை வணங்கி ஞானியர் புகழ்பாடி நடத்துகின்ற அரங்கமகாதேசிகர் தம்மால் தலைமையேற்றும் திருக்கூட்ட மரபினரின் அருளாலும் ஓங்காரக்குடில்தனிலே நடக்கின்ற ஞானியர் விழாக்களிலே கலந்து கொண்டு பூசைகளிலே கலந்து அங்கு நடைபெறுகின்ற அறப்பணிகளுக்கும் பூசைகளுக்கும் பொருளுதவி செய்தும் கண்டிப்பாக தவறாமல் அவரவரால் இயன்ற அளவு தொண்டுகள் செய்தும் வரவர வருகின்ற அவர்களெல்லாம் உத்தம ஞான மார்க்கமாம் திருக்கூட்ட மரபின் திருமார்க்கமாம் அகத்தியர் குலம் தனிலே இடம் பெறுவர்.

அகத்தியர் குலம்தனிலே அவர்கள் கடமைதனை செம்மையாக ஆற்றி சுத்த சன்மார்க்கம்தனை மனம் விரும்பி ஏற்று சுத்த சன்மார்க்க நெறிதனை தவறாது பிறழாது தொடர்ந்து சன்மார்க்க வழிநின்று வழிபட்டு அண்ணலாம் குடிலமர்ந்து அருளாசி அருளி காக்கின்ற அருட்பெருஞ்சோதி ஞானயோகி சுத்த பிரம்ம மகாஞானி அரங்கமகாதேசிகர் தம் திருக்கரங்களினால் ஆசான் மனம் மகிழ நடந்து பணிந்து பயபக்தியுடன் மனமுருகி சரணாகதியாக தம்மை ஆசானிடத்து ஒப்புவித்து மனம்விரும்பி பத்துவிதமான தீட்சைகளை படிப்படியாக சன்மார்க்க நெறிக்கு உட்பட்டு ஏற்று சாதி மத இன மொழி பேதம் கருதாத அற்புத மனிதநேய சகோதரபாவ சமநிலையுற்று அற்புத மனநிலைதனை அடைந்திட வேண்டியே ஆசான் அரங்கர் வசம் அவர் தம்மை ஒப்புவித்து சரணாகதி அடைந்தும், எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ணுகின்ற சமநிலை பெற்றிட முற்றுப்பெற்ற ஞானிகள் திருநாமங்களை தினம் தினம் தவறாமல் பாராயணம் செய்து உலக இரட்சகர் உத்தம மகா ஞானி அரங்கரால் வகுத்தும் தொகுத்தும் அளித்ததும் ஞானிகளாக்கவல்ல அற்புதமாய் அகத்தியம் கூறும் ஞானிகள் நாமங்களடங்கிய மனிதனை கடவுளாக்கவல்ல சர்வசித்திகளை அளித்து மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றுத்தரவல்ல அற்புதமானதும் அளவில் குறுகி ஆற்றலில் பெருகி எண்ணிறந்த நற்பலன்களை, எண்ண இயலாத அளவிற்கு அளித்து காத்து இரட்சித்து அருள் செய்யவல்ல அற்புத மகா ஞான வேத நூலாம் ஞானிகள் போற்றும் நன்னூலாம், ஆறுமுகனால் அளிக்கப்பட்ட ஞானநூலாம் அரங்கர் இவ்வுலகிற்களித்ததும் ஞானிகள் நாமங்களடங்கியதுமான சித்தர்கள் போற்றித் தொகுப்பு எனும் அற்புத வேதநூலை பயபக்தியுடன் உறுதியுடன் உளமார மனமுருகி ஞானிகள் தம் திருவடி பணிந்து சரணாகதியாக தம்மை ஒப்புவித்து பாராயணம் செய்துவர செய்துவர இவ்வுலகிலே இவ்விதம் நடக்கின்ற அவரவர்க்கும் படிப்படியாக வல்லமைகள் கூடி மெய்ஞானம்தனை கலியுக வரதன் கலியுகம் கண்டிட்ட கற்பகத்தரு கேட்டதெல்லாம் வரமாக அளித்து மகிழும் கருணைக்கடல் கருணாமூர்த்தி கலியுகம் காத்திட வந்து உதித்த ஆறுமுகனின் அவதாரம் மகாஞான யோக பிரம்ம ஞானி அரங்கரின் மூலமாக அடைந்து அவர் தமக்கு குறையற்ற பற்பல உயர்ஞானநிலைகள் அவர்தம் வாழ்வில் கிட்டும்.

ஞானவான் அரங்கரருளால் பூரணமான ஞானபலம் கிடைக்கப்பெற்று பூசை தொடர தொடர இவ்வுலகினிலே அவர்தமக்கு மரணமில்லாப் பெருவாழ்வும் சற்குருநாதன் அரங்கரால் கிடைக்கப் பெறும் என மகான் திருமூல நாயனார் தமது தியான சூட்சும நூல் மூலம் உலகம் கடைத்தேறிட அற்புத எளிய உபாயம் உரைக்கின்றார்.

-சுபம்-
சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||


No comments:

Post a Comment