அன்னவனே! மனிதனாக உன் கோபம், ஆதங்கம் உனக்கு சரியாகவே தெரியும் ஆனால், வேண்டுதல் வேண்டாமையற்ற எல்லாம்வல்ல இறைக்கு, ஓரறிவுள்ள செடி முதல் ஆறறிவுள்ள மனிதர்களும் ஒன்றே. அனைத்தும் இறைகூறாகிய சீவர்களே. சீவாத்மா அழிவற்றது. ஆதலால், அழிவைக்கண்டு மனிதர்கள் கலங்கலாம் இறை கலங்குவதில்லை. ஏனெனில், எந்த ஆத்மாவும் அழிவற்றது.
சீவர்கள் வினைகளை அனுபவித்து பெறுதற்கரிய மானிடப்பிறப்பு எடுக்கும்போது, இருவினைகளை நீக்க குரு வழியாக உபதேசங்கள் பல அளித்து, அதன் மூலம் பக்குவப்பட்ட சீவர்களை ஞானத்தலைவன் முருகப்பெருமான் வாசி வசப்பட வைத்து. இறையுடன் இரண்டறக் கலக்கும் பேரின்பத்தை சீவாத்மாக்களுக்கு அருளுகின்றார்,
உங்கள் துன்பங்கள் ஆத்மா தூலதேகத்தில் இருக்கும் வரையே இருக்கும். பிறவிப்பெருங்கடலை இறையருளால் வெல்லும்போது சகல துன்பங்களும் சோதனைகளும் நீங்கிய நித்திய பேரின்பம் கிடைக்கும். நீ விதைத்ததே வினையாகிறது. வினையால் மாயையில் அகப்படுகிறாய், இறையைவிட்டு தூர விலகுகிறாய்.
ஈற்றில் எல்லோரும் வினையறுத்து வீடு அடைவர். அதுவரை வினைக்கேற்ப துன்பமும் சோதனைகளும் தொடரும். ஆத்மா அழிவற்றது. துன்பத்தைக் கண்டு துவழாதே. இன்பத்தைக் கண்டு ஆர்ப்பரிக்காதே. இறைக்கு எல்லா ஆத்மாக்களும் பிள்ளைகளே.
கடமையிலும் அறத்திலுமிருந்து ஒருபோதும் விலகாதீர். தானமும் தவமும் செய். இறையருள் நிச்சயம் கிடைக்கும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
நல்லாசிகள்.
சித்தர் அறிவியல்
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
|| |More videos || || Contact தொடர்பு ||
No comments:
Post a Comment