Wednesday, August 29, 2018

மலேசியாவில் சோழர் தடயங்கள் கண்டுபிடிப்பு

மலேசியாவில் சோழர் தடயங்கள் கண்டுபிடிப்பு
=========================================
தமிழ் மலர் 10.03.2018

ஜொகூர் மாநிலத்தின் லாயாங் லாயாங் காடுகளில் சோழர் ஆட்சியின் மிகப் பழைமையான வரலாற்றுக் கலைச் சின்னங்களும் புலிப்பாறைப் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்தத் தடயங்கள் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப் படிவங்கள்.

இது ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் சொல்லும் தகவல்.

இதற்கு முன்னர் கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சியின் புராதனப் படிமங்களும் பழைமையான வடிவங்களும் கிடைத்து உள்ளன. இப்போது கோத்தா கெலாங்கி காடுகளுக்கு அருகில் இருக்கும் லாயாங் லாயாங் காடுகளிலும் சோழர் ஆட்சியின் புராதனப் படிமங்கள் கிடைத்து உள்ளன.

புலியின் உருவத்தைக் கொண்ட சோழர்களின் கொடிகள் ஏற்றப்பட்ட கோட்டைப் பகுதியில் இப்போது கட்டுப் புலிகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் புலிகளைப் பிடிக்க முடியாமல் வனவிலங்கு அதிகாரிகள் தடுமாறுகின்றனர். அந்த அளவுக்கு அங்கே நிறைய புலிகள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.

புலிகள் உலாவும் அந்த இடம் அடர்ந்த காடு அல்ல. பிரதான சாலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் மலை அடிவாரத்தில் ஒரு செம்பனைத் தோட்டம். சோழர்கள் வாழ்ந்த இடத்தில் இன்னும் புலிகளின் நடமாட்டங்கள் இருந்து வருகின்றன.

செஜாரா மெலாயுவில் சொல்லப்படும் கோட்டைத் தூண்களையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். செஜாரா மெலாயுவில் இரு இருப்புத் தூண்கள் இருக்கும் தூண்களுக்கு நடுவில் ஒரு கதவு இருக்கும். அந்தத் தூண்களில் ஒரு தூண் ஆற்றில் ஓர் அணை போல சரிந்து கிடக்கிறது.

செஜாரா மெலாயுவில் சொல்லப்பட்ட தூண்கள் அங்கே அப்படியே காணக் கிடைக்கின்றன. இந்தப் பகுதியின் சுற்று வட்டாரங்களில் கிடக்கும் கருங்கற்கள் செம்மண் நிறத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு கற்பாறையும் இரண்டு மூன்று டன்கள் எடை கொண்டவை. கருங்கற்களைப் பொன்ற இருப்புக் கற்கள். பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் சிதைவு பெறாமல் உள்ளன.

ஆற்றில் காணப்படும் கற்பாறைகளில் புலி அல்லது சிங்கங்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2017 ஜூன் மாதம் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ காட்டுப் பகுதியில் தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள் கிடைத்தன. 20 லிருந்து 30 வரையிலான தாமரைப் பூக்கள் வடிவப் பாறைகள். கி.பி. 650-ஆம் ஆண்டுகளில் செதுக்கப்பட்ட பாறைகள் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றனர்.

ஏறகனவே கோத்தா திங்கி மலைக்காட்டுப் பகுதியில் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அங்கே பாழடைந்த கோட்டைக் கோபுரங்கள் உள்ளன.

அவை 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள். உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைந்து போன வரலாற்றுப் படிவங்கள் ஆகும்.

அதைத் தவிர சோழர் காலத்துக் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் எப்போது செதுக்கப் பட்டவை என்று தெரியவில்லை. ஆனால் அவை இராஜாராஜன் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்று உறுதியாக நம்பப் படுகிறது.

கி.பி. 1025-ஆம் ஆண்டு சோழர் காலத்து நாணயங்களில் காணப்பட்ட அதே வரைப் படிவங்கள் ஜொகூர் ஆற்றின் கரையோரப் பகுதியின் கற்பாறைகளிலும் செதுக்கப்பட்டு உள்ளன. அந்த மாதிரியான கல்வெட்டுப் பாறைகள் ஆற்றின் சில இடங்களில் காணப் படுகின்றன என்று கணேசன் கூறினார்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்-












Aum Muruga ஓம் மு௫கா

சித்தர் அறிவியல் 




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 






                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

No comments:

Post a Comment