*பெருங்காயம்* என்றால் என்ன என்று இந்த "கோரோரணா" வரும் வரைக்கும் நம்மில் பல பேருக்கு தெரியாது. பெருங்காயம் பற்றி பலரும் பலவிதமாக கதைக்கும் போது அது பற்றிய பதிவு மிக அவசியமாகின்றது. அந்த வகையில் பெருங்காயம் மற்றும் வசம்பு என்பவற்றை கைகளில் அல்லது இடுப்பில் கட்டுவது முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்ட வழக்கங்களில் ஒன்றாகும். இது கிருமித்தொற்றில் இருந்து பாதுகாக்கும் என்பது நம்பிக்கை. இது எவ்வாறு நம்பிக்கை ஆகும் மூடநம்பிக்கை அல்லவா என பல பகுத்தறிவாளர்கள் கூற கூடும். அதுமட்டுமன்றி ஆராய்ச்சி பூர்வமாக இதை நிரூபிக்க முடியுமா என்றும் கேள்வி எழுகின்றன. https://www.facebook.com/groups/305917699863621
இதன் உண்மை தன்மை என்ன? காரணம் இன்றி காரியங்கள் இல்லையே அவ்வாறாயின் இதன் சூட்சுமம் என்ன?? அதன் பூர்வீகம் எங்கே? அதன் மருத்துவ குணங்கள் என்ன?
பல அன்பர்கள் என்னிடம் இந்த பெருங்காயத்தின் மகத்துவம், அதன் மருத்துவ சக்தி பற்றி பலர் கேட்ட கேள்விகளுக்கு என் whatsaap வகுப்பில் பகிர்ந்த விடயங்களை இன்று இந்த பதிவை சித்தர்களின் குரலில் விரிவாக பகிர்கிறேன்.
இதன் உண்மை தன்மை என்ன? காரணம் இன்றி காரியங்கள் இல்லையே அவ்வாறாயின் இதன் சூட்சுமம் என்ன?? அதன் பூர்வீகம் எங்கே? அதன் மருத்துவ குணங்கள் என்ன?
பல அன்பர்கள் என்னிடம் இந்த பெருங்காயத்தின் மகத்துவம், அதன் மருத்துவ சக்தி பற்றி பலர் கேட்ட கேள்விகளுக்கு என் whatsaap வகுப்பில் பகிர்ந்த விடயங்களை இன்று இந்த பதிவை சித்தர்களின் குரலில் விரிவாக பகிர்கிறேன்.
பெருங்காயம் என்பது ஒரு பூண்டுத்தாவரம், மானாசியஸ், அம்பெல்லிபெரேயே குடும்பத்தின் பல்லாண்டுச் செடி, அபியாசேயே என்றும் அழைக்கப்படுகின்றது. இது இலங்கை மற்றும் இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது. இச்செடி சுற்றுவட்டத்தில் 30-40 செ.மீ இலைகளுடன் 2 மீட்டர்கள் வரை உயர வளருகின்றது. தண்டு இலைகள் அகன்ற அடிப்பகுதியைக் கொண்ட காம்புகளைக் கொண்டுள்ளன. பூக்களின் தண்டுகள் 2.5–3 மீட்டர்கள் உயரம் உள்ளன மற்றும் 10 செ.மீ கடினமாகவும் மறைவாகவும் உள்ளன. பசைநிறைந்த கோந்தைக் கொண்டிருக்கின்ற மேற்பட்டையில் பல செல் விலகிய நாளங்கள் உள்ளன. பூக்கள் வெளிர் பச்சை நிறத்தில் பெரிய கூட்டு குடைமஞ்சரிகளில் உற்பத்திசெய்யப்படுகின்றன. பழங்கள் நீள்வட்ட, தட்டையாக, மெல்லியதாக சிவப்பு கலந்த மண்ணிறத்தில் உள்ளன மற்றும் அவை பால் சாற்றைக் கொண்டுள்ளன. வேர்கள் கடினமாகவும், மிகுதியாகவும் மற்றும் சதைப்பிடிப்பாகவும் உள்ளன. அவை தண்டுகளைப் போன்றே பசையையும் விளைவிக்கின்றன. தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் தனிப்பட்ட துர்நாற்ற மணத்தைக் கொண்டுள்ளன.
இந்த கதம்பப் பொருள் உணவில் சுவையூட்டுப் பொருளாகவும் ஊறுகாய்களிலும் செரிமானத்திற்கு உதவும் பொருளாக பயன்படுகின்றது. சமைக்காத போது அதன் துர்நாற்றம் கடுமையாக இருப்பதால் அதை காற்றுப்புகா கொள்கலன்களில் அடைத்து வைக்க வேண்டும்; இல்லையெனில் அந்த மணமானது அருகில் வைக்கப்பட்டுள்ள பிற மசாலாப் பொருட்களிலும் தொற்றிக்கொள்ளும். இருப்பினும், அதன் துர்நாற்றம் மற்றும் சுவை ஆகியவை மிதமாகவும் மற்றும் எண்ணெய் அல்லது நெய்யில் சூடாக்கும் வதக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை நினைவூட்டுகின்றது.
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.
ஆரம்பகாலத்தில் பெருங்காயத்தின் வாசனை காரணமாக இதனை வெளிநாட்டு மக்கள் பிசாசின் மலம் என அழைத்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட ஸ்பனிஷ் புளு (influenza) என அழைக்கப்பட்ட வைரஸ் காய்ச்சல் தாக்கத்தினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது இதன் போது பெருங்காயம் மருந்தாக பயன்பட்டது இதன் மருத்துவ தன்மையை அப்போது அறிந்த மக்கள் இதனை கடவுளின் மாமருந்து என அழைத்தனர்.
பெருங்காயம் மருந்திலோ உணவிலோ சேர்க்கும் போது உடலைச் சேர்ந்து வேலை புரிகின்றன. கையில் கட்டுவதால் எவ்வாறு வேலை செய்யும் புரியவில்லையே.. இங்குதான் முன்னோர்களின் சூட்சுமம் வெளிப்படுகின்றது. அந்த காலத்தில் எந்த ஆராய்ச்சி கூட வசதிகளும் இல்லை அவ்வாறு இருக்க மாபெரும் உண்மை ஒன்றை எவ்வாறு கண்டுபிடித்திருப்பார்கள் என்பது வியப்பிற்குரியது. இப் பெருங்காயத்தில் Vanillin, leuteolin, feluric acid, alphapinene, diallyl disulfide(ect.) போன்ற இரசாயன பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இவற்றில் volatile essential oil போன்றவை காற்றில் எளிதில் ஆவியாக கூடியவை மேலும் Vanillin மற்றும் leuteolin. இவை நீரில் எளிதில் கரையக்கூடியவை. மேலும் மேற்கூறிவை அனைத்திற்கும் Antiviral activity உள்ளமை ஆராய்ச்சி பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இப்பொழுது சற்று புரிய வாய்ப்பு ஏற்படுகின்றது. காரணம் கையிலோ இடுப்பிலோ கட்டும் போது நாம் கை கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ அது நீரில் கரைந்து இப்போது WHO இனால் பரிந்துரைக்கப்படும் (sanitizer-alcohol contain) கிருமிநீக்கி போல தொழிற்படுகின்றது. அத்துடன் காற்றில் ஆவியாகும் போது பெருங்காயத்தில் இருந்து எழும் வாசனை பலருக்கு பிடிப்பதில்லை இதனால் இது கையின் மணிக்கட்டில் கட்டி இருப்பதால் கையை நாம் முகத்திற்கு கிட்டே கொண்டு செல்லமாட்டோம். மறதியில் கையை முகத்திற்கு கிட்டே கொண்டு சென்றால் கூட நம் மூக்கு கையை விலத்தச் செய்யும். இதெல்லாம் இப்போது தான் WHO இனால் கூறப்படுகின்றன.
மணிக்கட்டில், கழுத்தில், இடுப்பில் நூல் கட்டுவது வர்மப்புள்ளிகளுடனும் தொடர்பு உடையது. இவை எல்லாவற்றையும் ஆய்வு செய்ய எமது ஆயுள் போதாது.
மணிக்கட்டில், கழுத்தில், இடுப்பில் நூல் கட்டுவது வர்மப்புள்ளிகளுடனும் தொடர்பு உடையது. இவை எல்லாவற்றையும் ஆய்வு செய்ய எமது ஆயுள் போதாது.
இருவகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ்சிவப்பான பிசினும் கருப்பு வகையில்தான் சேர்க்கப்படும். வெள்ளை நிறமாக உள்ள பால் பெருங்காயம் நல்ல மணமும் மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டதுமாகும்.
கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. இந்தப் பெருங்காயத்தைத் தண்ணீரில் போட்டால் கரையாமல் கோந்து போலக் காணும். அந்தக் கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ்சும். கலப்படமில்லாத சுத்தமான பெருங்காயமானால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக்குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம் போலப் பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும். பெருங்காயத்திலுள்ள "ஓலியோ ரெஸின்" மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டது.
பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்.
பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்.
கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்). ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப் பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு), பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத் தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம், அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப் போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று கூறுகிறார்.
ஸும்ருத சம்ஹிதை எனும் நூல், பெருங்காயத்தைப் பற்றி மேலும் சில வர்ணனைகளைச் சேர்க்கிறது. சுவை மற்றும் ஜீரண இறுதியில் காரமானது, எளிதில் செரித்துவிடும். தீபனம் (பசித்தீயைத் தூண்டிவிடும்), ஸ்நிக்தம்(உடல் உட்புற நெய்ப்பைத் தரும்), ஸரம் (மலக்கட்டை உடைத்து மலத்தை வெளியேற்றும்).
சரகஸம்ஹிதை வாதகபாபஹம் என்கிறது. அதாவது வாதகபநோய்களை நீக்குகிறது. பெருங்காயத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதில் விட காது வலி தீரும். இத்துடன் உளுந்து சேர்த்துத் தணலிலிட்டுப் புகைத்து அந்தப் புகையை உள்ளிழுக்க வயிற்று உப்புசத்துடன் ஏற்படும் மூச்சிரைப்பு மற்றும் இருமல் தணியும். பெருங்காயத்தைத் தண்ணீர் விட்டரைத்து மேல்பூசிச் சூடு காட்ட தேள்கடி வேதனை குறையும்.
பெருங்குடல் காற்று நீக்கி:
*******************************
*******************************
பெருங்காயம் குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் குறைக்கின்றது. வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.
சளிக்காய்ச்சல் எதிர்ப்பு:
****************************
****************************
1918 ஆம் ஆண்டில் பெருங்காயம் பானிசு இன்புளுயன்சா தொற்று நோயை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. https://www.facebook.com/groups/305917699863621
தைவான் நாட்டிலுள்ள கயோஹ்சியூங் மருத்துவப் பல்கலைக்கழகத்திலுள்ள விஞ்ஞானிகள், பெருங்காயத்தின் வேர்கள் சுவைன் புளு வைரசு H1N1 ஐ கொல்லும் இயற்கையான வைரஸ் எதிர்ப்பு மருந்து சேர்க்கைகளை உற்பத்தி செய்வதாக அறிக்கை வெளியிட்டனர்.
தைவான் நாட்டிலுள்ள கயோஹ்சியூங் மருத்துவப் பல்கலைக்கழகத்திலுள்ள விஞ்ஞானிகள், பெருங்காயத்தின் வேர்கள் சுவைன் புளு வைரசு H1N1 ஐ கொல்லும் இயற்கையான வைரஸ் எதிர்ப்பு மருந்து சேர்க்கைகளை உற்பத்தி செய்வதாக அறிக்கை வெளியிட்டனர்.
அமெரிக்க கெமிக்கல் சொசைட்டியின் நேச்சுரல் புராடக்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் இந்த சேர்மங்கள் இந்த வகையான ப்ளூ காய்ச்சலுக்கு எதிரான "புதிய மருந்து உருவாக்கத்திற்காக உறுதியளிக்கும் முன்னணி சேர்மங்களாகப் பயன்படுத்தப்படலாம்" என்று கூறினர்.
செரிமானம்:
***************
***************
தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றில் இது செரிமான ஊக்கியாகப் பயன்படுகின்றது மற்றும் இது "மஹாஹிங்" என்று அறியப்பட்ட ஆல்கஹால் அல்லது நீர் டிஞ்சரில் வயிற்றின் மீது பூசப்படுகின்றது
ஆஸ்த்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி:
****************************************************
****************************************************
இது ஆஸ்த்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி ஏற்படும் சமயங்களில் உதவிகரமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது
குழந்தைகளின் சளிக்கான சுற்றூர்ப்புற மரபுத் தீர்வு:
*******************************************************
*******************************************************
இது நெடியுடைய பசையாகக் கலக்கப்பட்டு ஒரு பையில் அல்லற்படும் குழந்தையின் கழுத்தினைச் சுற்றிலும் தொங்கவிடப்படுகின்றது.
நுண்ணுயிர்க் கொல்லி:
*****************************
*****************************
பெருங்காயம் நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் கக்குவானிருமல் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக நன்கு ஆவணமாக்கப்பட்டதுடன் பாரம்பரிய மருந்துகளில் நுண்ணுயிர்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.
அதே போன்று வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.
அதே போன்று வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.
கருத்தடைப் பொருள்/கரு சிதைப்பான் :
பெருங்காயம் கருத்தடைப் பொருள்/கரு சிதைப்பான் நடவடிக்கையைக் கொண்டிருப்பதாகவும் அறிக்கையிடப்படுகின்றது.
பெருங்காயம் கருத்தடைப் பொருள்/கரு சிதைப்பான் நடவடிக்கையைக் கொண்டிருப்பதாகவும் அறிக்கையிடப்படுகின்றது.
உண்மையில் இந்த விடயம் இந்த கால கட்டத்தில் அனைவரும் அறிய வேண்டிய ஆச்சர்யமான தகவல்கள்....
https://www.facebook.com/groups/305917699863621
💐*சித்தர் அறிவியல்*
https://www.facebook.com/groups/305917699863621
💐*சித்தர் அறிவியல்*
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
||<3 Aum Muruga ஓம் மு௫கா
.
.#ஓங்காரக்குடில் #Ongarakudil
ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010
எம்மை கீழுள்ள இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம். நன்றி
You may contact us on the following numbers. Thanks.
தொடர்பு : https://t.co/gatUoX0waL
.
.#ஓங்காரக்குடில் #Ongarakudil
ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010
எம்மை கீழுள்ள இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம். நன்றி
You may contact us on the following numbers. Thanks.
தொடர்பு : https://t.co/gatUoX0waL