Wednesday, March 11, 2020

அன்பே சிவம்

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்

#அன்பு எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே யாரே என்னினும் இரங்குகின் றார்க்குச் சீரே அளிக்கும் சிதம்பர சிவமே. - மகான் இராமலிங்க சுவாமிகள்-அருட்பெருஞ்ஜோதி அகவல் அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. - திருமந்திரம் - அன்புடைமை அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. - திருக்குறள் - அன்புடைமை https://www.facebook.com/groups/305917699863621 ஒரு மனிதன் கடவுள் தன்மை அடைகிறான் என்று சொன்னால், அவன் அன்பு உணர்ச்சி உள்ளவனாக இருக்க வேண்டும். அன்பு உணர்ச்சி இருந்தால் அங்கே சுயநலம் இருக்க முடியாது. அன்பு உணர்ச்சி இருந்தால் பிறர் பசி உணருவான். அன்பு உணர்ச்சி இருந்தால் பிறர் முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்வான். அன்பு தான் மூலதனம். அன்புக் கடலாக அன்புக்கு தலைவனாக இருக்கக் கூடிய கருணைக்குத் தலைவனாக இருக்கக்கூடிய ஞானிகள் திருவடியை வணங்கினால் அன்றி ஒருவனுக்கு அன்பு உணர்ச்சி வராது. ஞானிகள் திருவடியினை, பூசித்து நாயினும் கடைகெட்ட என்னையும் ஏற்று அருள் செய்யணும் என்று கேட்கணும். நான் பாவிதான் தாயே, நீங்களெல்லாம் புண்ணியவான் என்னையும் ஏற்று அருள் செய்ய வேண்டும் என்று கேட்டால் நிச்சயம் அருள் செய்வார்கள். நான் பெரிய மனுசன் என்று நினைத்தால் போடா! என்று போய்விடுவார்கள். ஆக அவங்ககிட்ட கேட்கணும் நான் தினமும் உன் திருவடியை நினைத்துப் பூசித்து ஆசி பெற நீர் அருள் செய்ய வேண்டும். உனது ஆசி இல்லாமல் உன் திருவடியை பூஜை செய்ய முடியாது. நான் கேட்டேன், அகத்தியரை. பூரண ஆசி தரவேண்டும் என கேட்டேன். எந்த அளவிற்கு நீ பணிகிறாயோ, எந்த அளவிற்கு நீ கனிகிறாயோ அந்த அளவிற்கு நான் கனிவேன் என்பார்.

 kudil
Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

No comments:

Post a Comment